உடல் நலம் / மருத்துவம் - சில சார்வாக சிந்தனைகள் - 1
தாமஸ் கோவன் Four Fold Path To Healing என்னும் நூலில் இதயம் ஏன் ஒரு மோட்டார் பம்ப் இருக்க முடியாது என்பதற்கான வலுவான கேள்விகளை எழுப்புகிறார். இந்த ஊகத்தை முதலில் முன்வைத்தவராக ருடோல்ப் ஸ்டெய்னர் என்பவரைக் குறிப்பிடுகிறார்.
நம் உடலின் ரத்த ஓட்டம் என்பது ஒரு வட்டப் பாதையில் ( closed loop ) நடப்பது. இதயத்தின் நீளம் 12 செமீ , அகலம் 6 செமீ, சுமார் 300 கிராம் எடை உள்ளது. ஒட்டுமொத்த உடலை வைத்துப் பார்க்கையில், குறுக்குவெட்டில் இந்த இடம் மிகச்சிறியது. இந்தச் சிறிய இடத்திற்குள்ளிருந்துதான் ரத்தம் மேலேயும் , கீழேயும் கடைசி வரை செல்வதற்குமான அழுத்தத்தைப் பெற வேண்டும். இதயத்தில் இருந்து வெளிவரும் ரத்தம், சிரைகளில் கீழ்நோக்கி பயணிக்கிறது. இங்கு இவை பல கிளைகளாக பிரிந்த வண்ணம் சென்று இறுதியில் ரத்த நாளங்களாய் முடிந்து பிராணவாயுவையும் , உணவின் சத்துக்களையும் திசுக்களுக்கு கடத்துகின்றன. ரத்த நாளங்களின் குறுக்கு வெட்டு பரப்பு இதயத்தை விடப் பெரிது. ஒரு மூன்று கால்பந்து மைதானமாக நாளங்களை விரிக்கலாம்.
சத்துக்களைக் கடத்தியபின் உடலின் மேல்நோக்கி ரத்தத்தின் பயணம் ஆரம்பமாகிறது. பிரிந்த ரத்தநாளங்கள் ஒன்றாய் சேர்ந்து சிரைகளாய் உருவெடுத்து, அளவில் பெரிதாய் ஆகிய வண்ணம் மேலே செல்கின்றன. இறுதியில் மேல்பெருஞ்சிரை , கீழ்பெருஞ்சிரை வழியாக இதயத்திற்குள் சுத்திகரிக்க வேண்டிய ரத்தத்துடன் நுழைகின்றன.
பின்வருவன அவர் எழுப்பும் முக்கியமான வினாக்கள்.
1. இயற்பியல் விதிகளின் படி , மூடிய பாதையில் பயணிக்கும் திரவம், குழாயின் பரப்பு குறையும் போது வேகமாகவும், பரப்பு அதிகமாகும் போது வேகம் குறைந்தும் செல்லும். ஆனால் இங்கு இருக்கும் முதல் புதிர் என்னவென்றால் , ரத்த நாளங்களில் ரத்தம் ஒரு கணம் நின்று பின் சிரைகளில் பயணிக்கிறது. இது விதிகளின் படி சாத்தியமில்லை.
2. இதயத்தில் நுழையும் போது இருக்கும் வேகம் அதிகமாயும் , அதே ரத்தம் வெளியேறும் போது அதே வேகத்துடன் வெளிவருகிறது. கவனிக்க , வெளிவரும் இடத்தில் அதே வேகம் என்றால் எல்லா கொள்கைகளும் அடி வாங்குகின்றன. இதயம் பம்ப் செய்யும் உறுப்பு என்றால் வெளிவரும் வேகம் இந்த இடத்தில் பல மடங்கு இருக்க வேண்டும்.
3. வாய்க்கால் வழியாக இறங்கி ஓடி குளத்தில் சேரும் நீரை மறுபடி வெளியேற்றி அதே குளத்தில் விட வேண்டுமானால் மோட்டாரை எங்கே வைக்க வேண்டும். ஏற்கனவே வேகமாய் போய்க் கொண்டிருக்கும் இடத்தில் மோட்டார் ( இதயம் ) இருப்பது ஒரு கட்டுமானப் பிழையல்லவா? உண்மையில் வேகம் குறையும், மேல்நோக்கி பயணிக்கும் பாதையில் அல்லவா இதயம் இருக்க வேண்டும்?
4. மகா தமனி உடலின் எல்லா பகுதிகளுக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கியமான ரத்தக்குழாய். ஆனால் இது தாறு மாறாக வளைந்து பிரிகிறது, மேலே சென்று பின் கீழே இறங்குகிறது. மிக வளைந்த பகுதிகளில் இருந்து தோள்களுக்கும் , கழுத்துக்கும் செல்லும் நரம்புகள் பிரிகின்றன. நீரின் வேகம் கூட்ட வேண்டுமானால் குழாய் வளையாமல் இருப்பது அவசியம். எடுத்த எடுப்பிலே இருக்கும் வளைவுகள் பம்ப் என்பதை கேள்வியாக்குகின்றன.
5. மகா தமனியில் சிஸ்டாலிக் பிரஷர் மிக அதிகமாகும் போது , அது இன்னும் வளைகிறது. குழாயில் செருகிய தோட்ட பைப்பின் வளைசல்களை நீர் சென்று நிமிர்த்தும், இன்னும் வளைக்காது . இது நீரின் விதிகளுக்கு புறம்பானது.
இந்த மாதிரி ஒரு பம்ப்பை நிஜ உலகில் பார்க்க முடியாது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது , ரத்த நாளங்கள் முடியும் இடமெங்கும் இதயம் இருக்க வேண்டும், அல்லவா ?
அடுத்த கேள்வி, இதயம் பம்ப் இல்லை என்றால் , ஏற்கனவே ரத்தம் பாய்ந்து கொண்டிருக்கும் இடத்தில் அதன் வேலை தான் என்ன? இதயத்தை ஒரு மடைபோல் பார்க்க வேண்டும். இதைச் சொன்னவர் ருடால்ப் ஸ்டெய்னர். மேல் பெரும்சிரையில் நுழையும் ரத்தம், இதய வலது மேலறையை அடைந்தவுடன் ஈர்ப்பு விசையினாலேயே கீழ் நோக்கி, கீழறைக்குள் பாய்கிறது. அழுத்தம் அதிகரிக்கும் போது , இதயம் சுருங்குவதனால் , மூவிதழ் வால்வு மூடி, ரத்தம் நுரையீரல் தமனியில் ஏறுகிறது, சுத்திகரிக்க நுரையீரலை அடைகிறது . ஒரே நேரத்தில் இடது மேல் புறம் தூய்மையான ரத்தம் ஏறி , இதயம் அழுத்தும் போது மகா தமனி வழியே உடலை அடைகிறது. மின்னேற்றத்தின் வழியே இதயம் துடித்து பிரஷர் உண்டு பண்ணுகிறது. மேலறைகளில் கொடுக்கப்பட்ட மின்னழுத்தம் ('லப்'), அதே கரண்ட் கீழறைகளில் அடிக்கும் போது ('டப் '). மின்விசை இல்லாத போது அவை விரிகின்றன. மேலறைகள் சுருங்க கீழறைகள் விரியும். அதே போல் அடுத்த சுற்றில் தலைகீழ். தடுக்கிதழ்கள் இரண்டு இரண்டாக சேர்ந்து எழுப்பும் ஓசையே ஹார்ட் பீட். முதல் ஜோடி ஈரிதழ், மூவிதழ் , இரண்டாவது மகா தமனி, நுரையீரல் சிரை எழுப்புவது. இதில் உருவாகும் அழுத்தம் என்பது உடல் முழுதும் ரத்தம் கடத்த உதவாது.
நீர்மடையின் வேலை நீரை ஒழுங்கு செய்வது, வேகத்தை கட்டுப்படுத்துவது, கூட்டுவது அல்ல. உதாரணமாக நாம் வேகமாய் ஓடும்போது கால் கைகள் அதிக ஆற்றலைக் கோருகின்றன. ரத்தம் அங்கு விரைவாகச் சென்றாக வேண்டியிருக்கிறது. மேலும் மேலும் இது அதிகரிக்கும் போது ஆச்சிஜன் உள்ள தமனியில் சுத்த ரத்தம் அதிகரித்து, சிரைகள் வழியாக உள்வரும் ரத்தமும் கூட வேண்டியிருக்கிறது. இது இரண்டும் ஒரே நேரத்தில் சம விகிதத்தில் நிகழ வாய்ப்பில்லை . தமனிகளில் ரத்தம் மிக அதிகமாகும் பொழுது , சிரைகளில் ரத்தம் இல்லாமல் பின் வாங்கி உடல் நிலை குலைய வேண்டியிருக்கும். இது நிகழாமல் சமநிலைப்படுத்துவது இதயமே ஆகும். ஒருவர் ஓடும்போது , இதயத் துடிப்பு கூடுவதனால் ரத்தஓட்டம் அதிகரிப்பதில்லை. சிரைகளில் எவ்வளவு ரத்தம் திரும்பி வருகிறதோ அதை ஒட்டியே உடலில் ரத்தஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் தான் இதயம் தமனிக்கும் சிரைகளுக்கும் இடையே பொருந்தி நிற்கிறது. இதை ஒரு ரெகுலேட்டர் என்று கொள்ளலாம்.
ரத்தத்தை உந்தித் தள்ளுவது இதயமில்லையென்றால் , எவ்வாறு ரத்தம் கடைசி நுனி வரை பயணிக்கிறது? எப்படி ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல் உள்ள பாகங்களில் ஓடுகிறது ?
இதற்குமுன் நாம் ஜெரால்ட் பொல்லாக் பற்றி அறிந்து கொள்ளவேண்டும். இவர் நீரைப் பற்றி மட்டும் பல வருடங்களாய் ஆராய்ச்சி செய்துவருபவர். இவர் எழுதிய Fourth Phase of Water என்ற புத்தகம் மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது.
நமக்குத் தெரிந்து நீரின் நிலைகள் மூன்று - ஆவி, பனிக்கட்டி, நீர். இதை மீறிய கேள்விகள் உள்ளன. ஜெல் போல் உள்ள diaper எவ்வாறு 50 மடங்கிற்கும் அதிகமான நீரை தேக்கி வெளியே விடாமல் வைக்கிறது? செடிகளின் வேர்களில் நீரே உள்ளது. எவ்வாறு வேர்களால் , கட்டப்பட்ட கான்க்ரீட் செங்கலையும் பெயர்த்து வெளியில் வர முடிகிறது?. ஜீசஸ் கிறிஸ்ட் பல்லிகள் என்றொருவகை பல்லிகள் நீரில் நடப்பது எவ்வாறு? மேகங்கள் நீரின் வடிவம் என்றால் , ஏன் திரண்டு கொத்தாக உள்ளன? ஏன் பரவலாக இருப்பதில்லை?
அருகருகே உள்ள இரண்டு நீர்க்குடுவைகளில் முழுதும் நீர் நிரப்பி அவற்றில் எலெக்ட்ரோடை விட்டு மின்னூட்டம் செலுத்தினால், ஒரு குடுவையில் உள்ள நீர் குதித்து அடுத்த குடுவையுடன், நீரால் ஒரு பாலம் அமைக்கிறது. இப்போது நாம் குடுவையை ஒரு சில சென்டிமீட்டர்கள் நகற்றினாலும் பாலம் உடைவதில்லை, ஏன் ?
போகிற போக்கில் இவர் சொல்லும் இன்னொரு ஒரு தகவல் நீருக்கு நினைவு(memory ) உண்டு. நீரில் ஒரு பொருளைக் கரைத்து , அதை பாதியாகப் பிரித்து , அதில் பார்த்தால் அப்பொருள் அளவு குறைந்த நிலையில் கண்டிப்பாக இருக்கும். இது எத்தனை நூறு முறைகள் பிரித்தாலும் இல்லாமல் போகாது. இது எளிதாகத் தோன்றலாம், ஆனால் ஹோமியோபதியின் அடிப்படை இதில் உள்ளது. இதற்க்கு 2008-ல் நோபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
பூமியில் 2/3 பங்கு நீராலானது, நம் உடலும் அவ்வாறே. உடல் 99 விழுக்காடு நீர் மூலக்கூறுகளால் ஆனதே.
நீர் மின்னூட்டம் பெறும் போது இன்னும் நம்மால் புரிந்து கொள்ளாத செயல்கள் நடக்கின்றன என்பதே இவரின் வாதம்.
திரவ நிலைக்கும் (நீர்) , திட நிலைக்கும் (பனிக்கட்டி) இடையே ஜெல் போன்ற நான்காம் நிலை நீருக்கு உண்டென்று பொல்லாக் சொல்கிறார். இதை Exclusion Zone (EZ) என்கிறார். இதை விலக்கும் பகுதி அல்லது விலகும் பகுதி எனப் புரிந்து கொள்ளலாம். நீர் போகும் பாதையில் இதனுடன் நன்கு சேரும் ஜெலட்டின் (ஜெல்) போன்ற மேற்பரப்பு இருக்கும் போது நீருக்கு இந்த நான்காம் நிலை தானாக வருகிறது. hydrophillic = hydro (water ) + phililc(loving ).
விஷயம் இங்குதான் சுவாரசியம் எடுக்கிறது. எல்லா திசுக்களும் ஹைட்ரொபில்லிக் மேற்பரப்பு உடையவை. இதனால் தான் இவற்றிற்கு ஜெல் போன்ற பண்பு வந்து விடுகிறது. இது இல்லையென்றால் உடம்பில் இருக்கும் நீர் குனிந்தால் கொட்டும் நிலை ஏற்பட்டிருக்கும். நடமாடும் குடங்களாக மானிடர் இருந்திருப்பர். நிறைகுடம் தளும்பாது , குறைகுடம் கூத்தாடும் போன்ற பழமொழிகள் இல்லாமல் போயிருக்கும். திசுக்களில் இருக்கும் புரதங்களினால் , நீருடன் சேர்ந்து உடலில் நீருக்கு ஜெல் போன்ற பண்பு ஏற்படுகிறது. ரத்த நாளங்களின் உட்பகுதிகள் இந்த வகை நீர்பரப்பினால் ஆனவை. ரத்தமும் ஒரு வகை நீரே !
மேலும், இந்த மேற்பரப்பில் நீர் இரண்டாகப் பிரிகிறது. H2O என்பது HO + H என்றாகிறது. H2 பகுதியில் இருக்கும் நீர் அயனிகள் நேர்மின்னூட்டம் கொள்கின்றன. இன்னொரு H எதிர் மின்னூட்டம் கொண்டு தனியாகிறது. இவை இரண்டும் இரு தனிப் பகுதிகளாகப் பிரிகின்றன. இந்தப் பகுதியில் ஒளியோ, வெப்பமோ(radiant energy/கதிர்வீச்சு) விழும்போது நீர் தானாகவே ஓட ஆரம்பிக்கிறது. (இந்த கதிர்வீச்சு நம்மில் அனைவரிலும் உள்ளது. விமான நிலையங்களில் இருக்கும் தெர்மல் டிடெக்டர் இதையே காட்டுகிறது). இன்னும் குறிப்பாக அகச்சிவப்பு கதிர்கள்(infrared ) விழும்போது தனித்திருக்கும் H அயனிகள் ஒன்றை ஒன்று தள்ளி (repel) நீரை ஓட வைக்கின்றன. அக்கச்சிவப்புக் கதிர் கேமெராக்கள் உள்ளன. எடுத்த படங்கள் ஒருவகை சிவப்பு நெகடிவ் படம் போல் உள்ளன. NH சாலைகளில் பதிக்கப்பட்டிருக்கும் ஒளிரும் கற்கள் கதிர்வீச்சை வாங்கி வைத்துள்ளன. நம் வீட்டுச் சுவர்களையும் அகச்சிவப்பு படங்கள் எடுத்தால் சிவப்பு தெரிகிறது.
உடலை ஒரு பேட்டரி போல் உருவகம் செய்து கொள்ளவேண்டும். இயற்கையாய் சூரியனில் இருக்கும் அகச் சிவப்பு கதிர்களே இவ்வுடம்பை இடைவிடாது சார்ஜ் செய்யும் முக்கியமான வழியாகும்.
போன பகுதியில் இறந்த நாயின் உடலில் இதயம், நுரையீரல் உதவி இல்லாமல் பல மணி நேரம் ரத்த ஓட்டம் நடந்ததை குறிப்பிட்டுருந்தேன். அதே சோதனையை இப்போது அகச்சிவப்பு கதிர்களால் இறந்த உடலில் செய்து காட்டியுள்ளனர், 300% ரத்த வேகம் அதிகரித்தது.
ஆக ,
அ ) ரத்தம் வேகமாய் ஓடுவதற்கும் இதயத்திற்கும் சம்பந்தமில்லை.
ஆ ) நீரின் நாலாவது பண்பு , அகச்சிவப்பு கதிர்களுடன் இணைந்து ரத்த ஓட்டத்தை உண்டாக்குகிறது.
அப்படியானால், மாரடைப்பு, ரத்த அழுத்தம், இதய செயலிழப்பு , நீரிழிவு போன்ற நோய்களின் காரணமென்ன? இவை எல்லாவற்றிற்கும் நாலாவது நீரின் செயல் குறைவும், தானியங்கி நரம்பு மண்டலம் செயல் குறைபாடு, குறிப்பாக sympathetic nervous system ஓங்கி வேலை பார்ப்பதும் மிக முக்கிய இரண்டு காரணங்களாக உள்ளன. அடுத்த பகுதியில் இதை பற்றி எழுதுகிறேன்.
இதைப் படித்தபின் ஒரு அகச் சிவப்பு விளக்கு ஒன்று வாங்கி உபயோகித்துப் பார்த்தேன். அகச் சிவப்பு குளியல் நல்லது என்று படித்தேன். எங்குபோய்ச் செய்வது என்று தெரியவில்லை. இந்த விளக்கு ஒரு 20 நிமிடத்தில் ஒரு புத்துணர்ச்சியை அளிப்பதாகவே நினைக்கிறேன். ஓடி முடித்தபின் கொஞ்சம் காலில் காட்டினால் மறுநாள் வலி இருப்பதில்லை. கையில் உள்ள கடிகாரம், நாம் ஒளியில் எவ்வளவு நேரம் இருக்கிறோம் என்பதை அளக்கிறது என்று அறிகிறேன்.
இந்த இடத்தில் சூரிய மந்திரத்தை சொல்லி இப்போதைக்கு அப்போதே சொல்லி வைத்தான் என்று புல்லரித்து முடிக்கலாம். ஆனால் இந்த ஒரு அழகிய கவிதை. தாமஸ் கோவன் மேற்கோள் காட்டியது:
After the events of September 11, I reread “The Fairy Tale of the Green Snake and the Beautiful Lily” and was struck by the following passage:
உதவிய புத்தகங்கள்:
Understanding The Heart - Stephen Hussey
Fourth Phase Of Water - Gerald Pollack
Four Fold Path To Healing - Thomas Cowan
Human Heart , Cosmic Heart - Thomas Cowan
மருத்துவக் களஞ்சியம் தொகுதி - 9 இதய இரத்தநாள மண்டலம் - டாக்டர் கு. கணேசன், எம்.பி.பி.எஸ்.,
Comments
Post a Comment