how about விடையேறி நங்கள் பரமன், IBM 1620 ----------------------------------------------- ஜூலை 19 1963. 'புரொபஸர் ஹாரி ஹஸ்கி சார்ட்டர்ட் பிளைட் டெல்லி வந்தாச்சு..கஸ்டம்ஸ்ல சின்னச் சிக்கல்ன்னு காலம்பற ட்ரங்க் கால்' பேராசிரியர் ராஜாராமன் கேசவனிடம் சொல்லிக்கொண்டிருக்கையில் நான் அறையில் நுழைந்தேன்.. 'டாக்குமெண்ட்ஸ் ஷிப் பண்ண மறந்துட்டாராம்...பைனான்ஸ் செக்ரடரிய லைன்ல பிடிங்கோ ... அவா சப்போர்ட் கமிட் பண்ணிருக்கா' நாக்பூர் IIT ஆசிரியர்களின் அறை வெள்ளிக்கிழமை அன்று விழித்துக்கொண்டது. ராஜாராமனும் அவரது மாணவர்கள் நாங்கள் எதிர்பார்த்திருப்பது IBM 1620. நான் அதில் மின்பொறித்துறையின் மாணவன். 'சார் , நீங்க சொன்ன மாதிரி இருபது பேர் டீம் ரெடி' என்றேன். இன்று இந்தியாவில் மொத்தம் பத்து கணிப்பொறிகள் இருந்தால் அதிகம். இந்தக் கதையை ராஜாராமன் வகுப்பில் சொல்லியிருக்கிறார். 'நாம இன்னிக்கு கம்ப்யூட்டர் பாக்கணும்னா கல்கத்தா இந்தியன் ஸ்டாடிஸ்டிக்ஸ் இன்ஸ்டிடூட் போகணும்..மஹலனோபிஸ் டீம்ல BTM HEC-2M மெஷின் ...1954 பிரிட்டிஷ் இம்போர்ட்டட்...அப்புறமா நாலு வருஷம் கழிச்சு வந்த URAL-1 ரஷ்யன்...