நல்லார் இருவர் உளரேல் (புனைவு) -------------------------------------------- கூற்றுவன் யமன் செய்யும் கொடுமைகள் இல்லை; ஏனென்றால் குற்றமே இல்லை; யாரிடமும் கோபமும் இல்லை ; ஏனென்றால் எல்லாரிடமும் மேலான எண்ணங்கள் இருப்பதால்; நல்லறம் அன்றி செய்ய ஏதும் இல்லாததால் , நற்செயலின்றி தீய செயல் இல்லை; மேலே சொன்னது கம்பனின் பின்வரும் பாடலுக்குப் பொருள். 'கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இலாமையால்; சீற்றம் இல்லை, தம் சிந்தையின் செம்மையால்; ஆற்ற நல் அறம் அல்லது இலாமையால், ஏற்றம் அல்லது, இழிதகவு இல்லையே.' இதை அயோத்தி நகர் மக்களைப் பற்றி கம்பன் சொல்லும் போது வரும் பாடல். இது போல் கம்பன் எங்கு பார்த்து எழுதியிருப்பான் என்று தெரியவில்லை. இல்லை செய்ய வேண்டியதன் உச்சத்தைச் சொல்லும் பாடலா ? அவர் பார்த்த உண்மை என்னவாக இருக்குமோ கடவுளுக்கு மட்டும் வெளிச்சம். ஆனால் இன்று நடந்த அனுபவம் போல் கடைசியில் என்று நடந்தது என்று நினைவில் இல்லை. ஒளியை விளக்க இருள் தேவை, இல்லையா? அடுத்த சிறு பத்திகளில் எனக்கு ஏற்பட்ட ஒரு அடர் இருள் சம்பவத்தை உதாரணமாக விளக்கி மீண்டும் விஷயத்திற்கு வருகிறேன். பதினைந்து வருடங்களுக்கு...