வெண்முரசு வண்ணக்கடல் - சில அழகியல் குறிப்புகள் இந்தப் பதிவு கடந்த ஒரு சில வாரங்களின் அழகியல் பற்றிய நூல்களின் மீள் வாசிப்பும் , பின் மேலான புரிதலுக்குப் பின் எழுதும் குறிப்புகள். வண்ணக்கடல் முதல் 15 அத்தியாயங்களை மறுவாசிப்பு செய்யும் போது எடுத்த குறிப்புகள். இளநாகன் இருக்கும் சிற்றூர் நிலச்சித்திரம் , மனிதர்களின் தோற்றம் குறித்த பகுதி, வேகத்தைக் குறைக்காமல் கதைக்குள் அழகாக வருகிறது. ஒரு அத்தியாயம் பெரும்பாலும் ஒரு சிறுகதையாக படிக்க முடிந்தது. ஒன்றை நோக்கிச் செல்லும் வேகம், ஓரிரு மையப் பாத்திரம், அவர்களை ஒட்டிச் செல்லும் ஒரு குறுங்கதை என்ற கட்டமைப்பு உள்ளதாகவே நினைக்கிறேன். , அதை ஆளும் குறுநிலமன்னன் சித்தரிப்பு கதையின் போக்கில் அழகாகச் சொல்லப்படுகிறது, அவர்களது சேலை தலைப்பாகையாக , விசிறி சுவடியாவது, அவர்கள் வயது, அவர்களை பையன்கள் அழைத்து வந்திருப்பது, அவர்களுக்கு உணவின் மேலிருக்கும் குறி போன்றவை கதையின் வேகத்தைக் குறைக்காமல் வருகின்றன.கண்முன்னே நிகழ்த்திக் காட்ட வேண்டும் , ஆனால் வேகம் குறையாமல் , துருத்தலும் இல்லாமல் இருக்க வேண்டும். சொல்லவேண்டியது என்ன என்ப...