Translate

பெங்களுரு கட்டண உரை - கூட்டத்துடன் தனித்திருத்தல் - ஜெயமோகன்

பெங்களுரு கட்டண உரை - கூட்டத்துடன் தனித்திருத்தல் https://www.jeyamohan.in/பெங்களூரு-கட்டண-உரை-ஜனவ/ 

முதல் முறையாக கட்டண உரையைக் கேட்கும் வாய்ப்பு அமைந்தது. இதைப் பற்றி தங்கள் தளத்தில் கடிதங்கள் படித்திருக்கிறேன். இப்போது இதை இங்கே மொத்தமாக தொகுத்துக் கொள்கிறேன். மிக மிக அடர்த்தியான உரை, ஜெயமோகன் கொடுத்த மேற்கோள்களையும் , புத்தகங்களையும் இனிமேல் தான் படிக்க வேண்டும். 

 பகுதி 1: நாம் இங்கே புது சிந்தனைகளை எவ்வாறு உருவாக்குவது, ஏன் இப்போது உருவாக்கமுடிவதில்லை, ஏன் மேற்கத்திய சிந்தனை புதியதை உருவாக்குகிறது என்பது முதல் பகுதி உரையின் சுருக்கம். 

எடுத்துக்காட்டாக ஆத்மா/soul மற்றும் பிரக்ஞை/consciousness என்ற இரு சொற்களை எடுத்து ஐரோப்பிய சிந்தனை முறையை , அதில் மெட்டாபிசிக்ஸ்(மீபொருண்மை) வெளியேறியதை விளக்கினார். ஆத்மா என்பது ஒரு கற்பனை,மூட நம்பிக்கை, நிரூபணம் இல்லாதது. இது soul /existence என்று ஒரு ஐரோப்பிய மனம் மொழி பெயர்ப்பதினால் வருவது . இங்கே ஆத்மா ஒரு உருவகம், existence இல்லை. Logical positivism, pragmaticism , objectivism - புறவயவாதம் இவை யாவும் ஐரோப்பிய சிந்தனை முறையின் படிகள். ஐரோப்பிய சிந்தனையில் மெட்டாபிசிக்ஸ் இல்லாமல் ஆகி விட்டது. மெட்டாபிசிக்ஸ் என்பது 90% கற்பனை, ஓடிச்சென்று ஈட்டி எறிவது போன்றது, அபத்தமான தவறுகளை உள்ளடக்கியது . 
ஆனால் இந்த ஈட்டி எறிவது என்பது அவசியம். இது இல்லாமல் எந்த துறையிலும் பாய்ச்சல், கற்பனை இருக்காது, இறந்த கால தொடர்பு இருக்காது. கூரையில் ஜன்னல் வைப்பது, இறந்தவர்களை புதைப்பது போன்ற உதாரணங்களை சுட்டிக் காட்டினார். பழங்குடி சிந்தனை, மத சிந்தனை, என்பது கற்பனை சார்ந்தே இருக்கும். அறிவியலுக்கும், நவீன சிந்தனைக்குமான உறவு மெட்டாபிசிக்ஸ் வழியாகவே இருக்க முடியும். இது அன்றி தேக்கமே அமையும். 
இப்போது ஆத்மா என்னும் (மெட்டாபிசிக்ஸ்) சொல்லை பிரஞை/consciousness என்ற சொல்லால் ரத்து செய்யும் போது என்ன ஆகிறது என்று விளக்கினார். இதற்க்கு consciouness என்பதன் ஐந்து முக்கியமான ஐரோப்பிய வரையறைகளை எடுத்துரைத்தார். உளவியல்(consiousness/subconsciousness/unconsciousness/collective/bio/cosmic/gaia ... ) , உயிரியல் (இருத்தல் /வளர்த்தல் விருத்தி ),சமூகவியல், இயற்பியல் (observer principle, quantum physics ) , இலக்கியம் (மொழியியல், subjectivity என்பதே பிரக்ஞை, neurolinguistics ). பிரக்ஞை என்ற சொல்லை "உடல் கொல்லப்படுகிறது , நான் கொல்லப்படுவதில்லை " என்ற கீதையில் ரத்து செய்யப்படும்போது கீதையின் அர்த்தமே புதுப்பிக்கப் படுகிறது. இன்னொரு உதாரணம் பிரபஞ்ச ரூபன் பிரஞையால் ரத்து செய்யும் போது உண்டாவது. 

ஏன் இவ்வாறு ரத்து செய்ய வேண்டும்: 
இன்று வரை மேற்கத்திய சிந்தனை மரபை கற்று மேல் செல்கிறது. நமக்கு மதக் கலவரங்களால் மரபுக் கல்வி மதத்துடன் வெளியே தள்ளப் பட்டுவிட்டது. நாம் கற்கும் மேற்கத்திய சிந்தனை மேற்கத்திய சிந்தனையுடன் போட்டியிட முடியாது, புதிதாக சொல்ல இருக்காது . ஆகவே மெட்டாபிசிக்ஸ் , நவீன சிந்தனை முறை தொடர்பு அவசியம் ஆகிறது. இதில் இருக்கும் சிக்கல் இது ஒரு தரிசனம் (illogical பிளாஷ்) என்பதே . சாங்கிய தரிசனம் பழங்குடி தரிசனமே ஆகும். இவை பின்னர் தத்துவம், உருவகங்கள் (icons), சடங்குகள் ( rituals) இறுதியில் மதமாக ஆகின்றன. மதம் வழியே நமக்கு கிடைக்கிறது. 'வெள்ளிடை மலை' - சொந்த மின்னல் நிகழாமல் இருப்பது தான் பிரச்சனை. உருவகங்களை ரத்து செய்ய வேண்டியிருக்கிறது. ஆத்மா என்பது "load" செய்யப்பட்டுள்ளது(மதவாதிகள்/நவீனர்கள் இருவருமே மீமாம்சகர்கள் தான், நவீன மூட நம்பிக்கை ). இதே சுமை தான் பிரக்ஞை என்ற சொல்லுக்கும் உள்ளது. நம் வேலை கல்லில் இருந்து நம் தெய்வத்தை எழ வைப்பது. 

பகுதி 2: 
இந்த புதிய சிந்தனை முறையின் வழிமுறை : 

சிந்தனைகள் அலையாய் வந்த வண்ணம் உள்ளன, (இருத்தலியம் , பின் நவீனத்துவம்...) . மாறாமல் இருப்பது நம்முடைய தேடல், இது நம் வாழ்க்கைக்கு எப்படி தொடர்பு படுகிறது என்பதிலேயே இருக்கிறது. சிந்தனை என்பது உயிருடன் இருப்பது . கட்டிடம் விழுவதற்கே முயற்சிக்கிறது . சிந்தனை என்பது மரம் போன்றது, விழுவதில்லை. 
இருத்தலியம் என்பது சுய தண்டனை. வெறுமையில் முடிவது. ஏன் வேலை பார்க்க வேண்டும், ஏன் படைப்புகள் உருவாக்க வேண்டும். ஆகவே ஒன்றும் செய்வதற்கு இல்லை. இந்தக் அடிப்படை கேள்விகளை நான்கு சிந்தனை முறையில் உரசிப் பார்க்கலாம். கம்யூன்(ஒரு உற்பத்தி சக்தி, ஒரு விநியோக சக்தி ), பௌத்தம்(அனாத்மா) , வேதாந்தம்(அழிவற்ற ஆத்மா) , இருத்தலியல்(காமம் , குரோதம்,மோகம்). 
தத்துவம் என்பது சிலந்தி வலை. சிலந்தி மட்டுமே மாட்டாது. அங்குலப் புழு குயில் பாட்டை அளக்க முடியாது. தத்துவம் கலையிலேயே முடிய வேண்டும், தர்க்கத்தில் சிக்கக் கூடாது. தத்துவம் இரும்பிலே கட்டில் செய்வது போன்றது, செய்ய வேண்டியது பட்டு நூல் நெய்வது. allegory ஆகாது, படிமங்களே , image-களே சிந்தனையாளனுக்கு உரியது. image-ஐ எப்படி உருவாக்குவது: "நான் நீரில் சுவையை இருக்கிறேன்". நீருக்கு பல இயல்புகள் உண்டு. இன்னும் தெரியாதவை இருக்கலாம். அப்போது நெருப்பில் , காற்றில்?. 
இதே போல் நீர் உள்பட எல்லா பருப்பொருள்களும் எனக்கு கொடுக்கும் ஒரு துளியும் நான் தான். இது இரண்டும் சேர்ந்துமே நான். இது ஓயாத நெசவு - "stream of words " . 
இந்த தறி ஓசை என்பது மிகப் பெரிய சித்திரவதை ஆகலாம். மேற்கத்திய சிந்தனை சொல்லும் "நான் யார்" என்பதும் மரபு சொல்லும் " "நான் யார்" என்பதும் பிளவு பட்டிருக்கிறது. நமக்கென்ற வரையறையை நாமே கண்டறிய வேண்டி உள்ளது. ரொம்ப கடினமான கேள்வி, மாறிக் கொண்டே இருப்பது. ஒரே நாளில் பல்வேறு முகங்கள் , பல்வேறு அடையாளங்கள் நடுவில் இருக்க வேண்டி இருக்கிறது ("பலவேறு ஊர் சென்ற போஸ்ட் கார்டு போல் இருக்கிறேன் நான்"). இந்த அடையாளங்களை எதிர்த்து நிற்பவர்களே இந்த நூற்றாண்டில் மகிழ்ச்சியாக இருப்பார்கள் . 

இதை எவ்வாறு செய்வது: 

குடகாசம் , மடகாசம் என்ற சங்கரர் உதாரணம். இதை ஜெயமோகன் ரத்து செய்தால், குடாகாசம் கடத்தப்படலாம் , அடுத்தவர்க்கு குடுக்கப்படலாம். இன்றைய நான் யார் என்பது ஒரு புற அக வரையறை ஆகலாம். அகத்திற்கும் புறத்திற்குமான இடையறாத சமநிலை. 
புறவயமான வரையறை நீதி உணர்ச்சிக்கு முக்கியம்.ஆசாரவாதிகள் புற உலகத்தை வெளியே தள்ளி விடுகிறார்கள், நீதியுணர்ச்சி இல்லாதவர்களாய் இருக்கிறார்கள். 
தைத்ரிய உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ள ஐந்து உடல்களும் , தனித்தனி மகிழ்ச்சிகள் கொண்டவை. அன்னமய கோசம்-உணவு, புணர்ச்சியில் ஈடுபடும் போது , பிராணமய கோசம் - ஆற்றல் வெளியிடும் போது கிடைப்பது ( 5 கிமீ ஓடி முடியும் போது ) , மனோமய கோசம் -மனதின் மகிழ்ச்சி, இசை , அழகில் கிடைப்பது , விஞ்ஞான மய கோசம் - அறிதலின் இன்பம் , காரண சரீரம்/ஆனந்தமய கோசம் - காரணமே இல்லாத இன்பம், ஒரு கணமேனும் நாம் எல்லோரும் அனுபவிப்பது, கன்று பிறந்தபின் மகிழ்ச்சியில் துள்ளுவது, பிரபஞ்சம் முழுவதும் பரவி இருப்பது. இந்த அந்தரங்கமான , காரணமே இல்லாத மகிழ்ச்சியை வைத்தே ஒரு வாழ்க்கையின் மதிப்பு உள்ளது. pole dance ஆடும் பெண் pole -ஐ கை விடாதது போல. எல்லோருக்குமான ஒரு அடையாள அட்டை வைத்திருக்கும் நேரம் , ஒரு தனி அந்தரங்கமான மகிழ்ச்சியான இடம் இருக்க வேண்டும். role play , switch over மூலம் இதை செய்ய முடியும். 
 சியமந்தக அருமணி புற வாழ்க்கை குறிப்பது. இன்னொரு அருமணி அஸ்வகந்தாம் விதுரர் கொண்டிருப்பது, நம்முடைய அக வாழ்க்கையை குறிப்பது .

Comments

  1. அழகாக சொல்லப்பட்டிருக்கிறது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2