Skip to main content

Posts

கவிதை - ஒரு சுய புரிதல்

கவிதை ஒரு சுய புரிதல்  மரபு இலக்கியம் வாசிக்கும்போது நம்மாலும் இப்படி எழுத முடியுமா என்று ஆசை எழுகிறது. மனுஷ்ய புத்திரன் , விக்ரமாதித்யன் , கல்யாணி, கலாப்ரியா போன்றவர்களின் கவிதைகளை விரும்பிப் படிப்பேன். முன்னெல்லாம் தேவ தேவன் பிடிபடக் கடினமாக இருந்தன. இப்போதெல்லாம் பரவாயில்லை. ஆனால் அவர் சொல்லும் வால்ட் விட்மன் போன்ற ஆங்கிலக் கவிஞர்கள் படித்ததில்லை. இப்போது ஒரு ஆர்வம் வருகிறது, இதற்கெல்லாம் காரணம் கம்ப ராமாயணம் படிக்க ஆரம்பித்ததே என நினைக்கிறேன்.கம்பன் என்றால் கற்பனை, காட்சிப் படுத்துதல், மொழி அழகு, நாடகத் தருணங்கள், நாலு வரிக்குள்ளும் இருக்கும் மிக நுண்ணிய விவரணைகள் என்று சொல்வேன். இதை ஏன் (இன்னும் முதல் புத்தகம் மட்டுமே ) எனக்குப் படிக்கத் தோன்றுகிறது என்றால் 'செஞ்சொற் கவி இன்பம்' என்பதே. படித்ததும் ஒரு உவகை ஏற்படுகிறது. இதையே தேவதேவன் தன்னுடைய கவிதை பற்றி என்ற நூலில் கவி அனுபவம் என்கிறார். ஏனோ சில நாட்களாக இதிலேயே மனம் செல்கிறது. இப்போதெல்லாம் வண்டியில் செல்லும் போதும் வரும் போதும் பெரும்பாலும் கிண்டிலில் கவிதையே படிக்கிறேன். கவிதை படித்துப் பின் வருவதை இது ஒரு போதை போல என்...

கலங்கும் பொழுது தெளியுஞ்சொல் - கலைவாணி

கலங்கும் பொழுது தெளியுஞ்சொல் -  கலைவாணி சரஸ்வதி அந்தாதி  அந்தாதி என்றால் ஆதி + அந்தம் , முதலும் , முடிவும் இரண்டுமானது என்று பொருள். சரஸ்வதி அந்தாதி என்றால் , முதலும் முடிவுமான சரஸ்வதி என்று பொருள்.  சிறுவயதில் பாட்டி  அபிராமி அந்தாதி சாத்திரத்திற்கு ரெண்டு மூன்று பாட்டு  சொல்லிக் கொடுக்கும்போது அந்தாதி என்றால் முடிந்த எழுத்தில் அடுத்த பாடல் ஆரம்பிக்கும் என்று சொல்லிக் கொடுத்தார். நூறு செய்யுளும் மாலை கோர்த்தது போல் நினைத்துக் கொள்ள வேண்டும். ஆரம்பித்த சொல்லில் திரும்ப முடியும். ஆனால் இதன் குறியீட்டுப் பொருள் முதலும் முடிவுமான கடவுளை மனதில் வைத்துப் பாடுவது. கம்பர் ராமாயணம் போக இயற்றிய நூல்களுள் ஒன்று சரஸ்வதி அந்தாதி. டூயட் படத்தில் மெட்டுப்போடு பாட்டுக்கு முன் ஒலிக்கும் , அவரது அம்மா மணி அடித்து ஆரத்தி காட்டிப் பாடும் துதிப் பாடல் கம்பர் அந்தாதியின் இரண்டு காப்புப் பாடலின் முதலாவது.  'ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்   ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய   உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே   இருப்பள் இங்கு வாராது இடர்'...

நெடுநாள் நட்பும், ஒரு அழகிய கடற்கரையும் , முழுநிலவும் , எழு கதிரும்

நெடுநாள் நட்பும், ஒரு அழகிய கடற்கரையும் , முழுநிலவும் , எழு கதிரும் 'செயற்கரிய யாவுள நட்பின்' என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். அதாவது நட்பிற்கு மேல் செய்வதற்கு என்ன இருக்கிறது. எதுவுமில்லை. மேலே அடுத்த வரி அதைப் போல் செயல் காப்பது எதுவும் இல்லை என்பது. ஆனால் நடப்பில் அப்படி இல்லை. நட்புக்கு ஒரு பயணம் என்றால் பேச்சு அறுபட்டு டம்ளர் சொம்பு ஓசைகள் அதிகமாகும். இன்னும் நெடுநாள் நட்பு என்றால் செய்ய வேண்டிய வேலைகள் நினைவூட்டப் படும். ஆனால் இதற்கெல்லாம் வெளியே வர டெக்கினிக்குகள் இருக்கின்றன.  இதை எழுதிக் குலைக்க முடியாது. வருடம் செல்லச் செல்ல தடை மீறிய பயணம் ஆகிறது.  இதைப் போல என்ன ஆனாலும் கூட்டம் கூட்டுவது என்று ஒரு சிலர் இருப்பதனால் தான் இப்படி நடைமுறைச் சிக்கல்களின் நடுவிலும் கூட்டங்கள் நடக்க முடியும். 144 போட்டால் ஐந்து பேர் மேல் கூடக்கூடாது என்று சட்டத்தில் இருக்கிறது. இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வீட்டுக்குள்ளேயே யாரும் பேச முடியாது. இன்று அபார்ட்மெண்ட்கள் பொதுவிடம் இல்லாமல் தனியிடத்தில் சேருமா.  ஆக என்ன ஆனாலும் சேர்ப்பதுவும், என்ன ஆனாலும் செல்வதுவும் சேர்ந...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

சில கவிதைகள்

1. கடுமையான டிராபிக் ஜாமில்  ====================== கடுமையான டிராபிக் ஜாமில்  என்ன செய்யலாம்  நிறைய தண்ணீர் நிறைத்துவைத்து  இடையிடை அருந்தலாம்  யாருக்காவது போனை முடுக்கி  வலியப்  பேசலாம்  வண்டியை ஓரமாய் நிறுத்தி    ஆசுவாசமாய் சிறுநீர் கழிக்கலாம்  'துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க' கேட்கலாம்  இல்லை விக்ரமாதித்யனின்  ஆழித்தேர் கவிதை படிக்கலாம்  வீடு சேர்ந்ததும் வெந்நீரில் குளித்து  எல்லாம் மறக்கலாம் 2. சமரசம் உலாவும் இடம்  =================== சாம்பல் வெள்ளை சிவிகையில் (பென்ஸ்) செல்பவர்கள்  நிரந்தர சல்லியர்கள் ரதம் ஓட்ட செல்பவர்கள்  தேரையும் சல்லியர்களையம் சிறிது இரவல் வாங்கி செல்பவர்கள்  குளிரூட்டப்பட்ட பெரிய வண்டியில்  வெண்குடை சாமரங்களுடன் பலர்  கையில் தட்டுத் தாம்பாளங்கள் மங்கலங்கள்  வேதகோசமும் சாமகீதமும் விடாமல் ஒலிக்க  தேர் யானை குதிரை காலாட்படைகள்  எல்லாமும் விக்கித்து நிற்கின்றன  ஒரே ஒரு அடி நகர்வும்  எழுப்பும் ஒலியால் அடுத்தவர் உரைத்...

ஒரு இடமாற்றம்

ஒரு இடமாற்றம்  நாங்கள் பெங்களூர் வந்து சிலமுறையே  வீடு மாறியிருக்கிறோம். ஆனால் தற்போது பழைய இடமாகியிருக்கும் அந்த  இடத்தில் ஏறக்குறைய பதினைந்து வருட வாசம். அந்த இடத்திற்கு முதலில் குடி பெயர்ந்த போது , உள்புற சுற்றுச் சாலை மற்றுமே இருந்தது. வெளிப்புற சுற்றுச் சாலை போட்டிருக்கவில்லை.இன்று ரிங் ரோடில் இருக்கும் பெரும்பான்மையான கம்பெனிகள், மேம்பாலங்கள் எதுவும் இருக்கவில்லை. அப்பொழுது மால்கள் புது போக்காக இருந்தன. அங்கிருந்த டோடல் மால் பிரபலம். ஒரு முறை சென்றிருந்தது நினைவு. மற்றபடி அப்பகுதி என் நினைவில் இல்லாத பகுதி. அப்போது அதை ஊருக்கு வெளியே என்று சொல்வார்கள். ஓசூர் சாலையையும் , திருப்பதி/வேலூர் சாலையையும் , ஹைதராபாத் , மற்றும் இதர கர்நாடகப் பகுதிகளையும் இணைக்கும் சாலை. அன்று சொன்னால் யாரும் ஒப்ப மாட்டார்கள். அன்று என்றால் என்றோ இல்லை, பதினைந்து வருடம் முன்னால் அவ்வளவே.  இன்று அந்த வழி எல்லாம் கம்பெனிகள் கோலோச்சுகின்றன. ஹெப்பால் மேம்பாலம் தாண்டியும் நெருக்கடி.இந்தப் பக்கம் சில்க் போர்டு என்ற அடையாளம் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் அடுக்கு மேம்பாலங்கள், ரயில் பாதைகள் ...