Skip to main content

Posts

ஒரு நேர்முகம் (புனைவு)

ஒரு நேர்முகம் (புனைவு) கார் ஓட்டுவது எனக்கு மிகப் பிடித்த விஷயம். நெடுந்தூர பயணம் என்றால் ஏறியவுடன் FM ஆன் செய்து விடுவேன்.  ஓட்டியபடியே கூர்ந்து கேட்டுச் செல்வது எனக்கு சுகானுபவம். மிக சாதாரணமாணவர்கள், எளிய மனிதர்கள், ஏன் இந்த FM -ஐ அழைக்க வேண்டும், பேச வேண்டும். ஒருவர் சந்திரசேகர் என்பவர், ஏன் ஒவ்வொரு முறையும் அவர் குரல் கேட்கிறேன், தெரியவில்லை. எல்லா ஸ்டேஷன்களும் அல்ல , சேணம் கட்டப்பட்ட ஸ்டேஷன்களை கேட்பதுதான் எனக்குப் பிடிக்கும். சூரியன் FM போன்றவை சுவாரசியம் இல்லாதவை, TV , youtube போல் காதுக்கும் எதாவது செய்கின்றன. காலையில் ஒரு கோவில் மணி அடித்து திருக்குறள் எதாவது கேட்கலாம். இல்லை மாலை ஒரு ஏழு மணியானதும் கரகரப்பான(ஹஸ்கி)  குரல் உள்ள ஒரு பெண்ணை பேச வைக்கின்றனர்.  இவை நமக்குப் புதிது அல்ல. பின் எல்லாம் டிவி தான் , ஆனால் கண் தேவை இல்லை. இப்போது ரேடியோ வேண்டும் என்றால், நீங்கள் அரசாங்கம் நடத்தும் சேனல்களை கேட்க வேண்டும். இவர்கள் தான் சற்று இன்னும் உறைந்து, திகைத்து இருக்கிறார்கள். இங்குதான் எதோ ஒன்று நீங்கள் ஜன்னலைத் திறந்ததும் பார்க்கும் சூரியன் இல்லை காற்று  போல் ...

இரு கோடுகள்

அன்றும் என்றைக்கும் போல் வண்டி ஓட்டும் வேலை தான் என்று நினைத்துத் தான் சென்றேன். எங்கேயாவது ஒரு ஹரியானா பவன் போன்ற இடத்திற்கு தெரிந்த இடம்  வரை ஓட்டி , தெரியாத இடத்திலிருந்து மேப் போட்டு இறக்கி விட வேண்டும். பின் கண்ணால், என்ன நடக்க இருக்கிறது  ஒரு சர்வே மாதிரி செய்து விட்டு,   சரி இதுவும் தெரிந்த அச்சுக்குள் தான் என்று தெரிந்த உடன், ஒரு பேக்கரி இருக்குமா டீ குடிக்க என்று தேட ஆரம்பித்து, அப்படியே  ஒரு புளோவில் ஒன்று இரண்டு சிக்னல் தூரம் நடந்து , திரும்பி வருவதற்குள் பாதி விழா முடிந்து இருக்கும். பெரிய கூட்டமாய் இருந்தால் எங்காவது ஒரு இடத்தில் ஒதுங்கி , கை தட்டும் போது நாமும் தட்டி வோட் ஆப் தேங்க்ஸ் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். எங்காவது நம் பிள்ளை மேடையில் தோன்றும் போது நூற்றுக்கணக்கான செல் போன் மேலே கொடிபோல் அசைய , அடித்து பிடித்து நாமும் ஒரு வீடியோ எடுக்க வேண்டும். 'அப்பா எங்கப்பா இருந்த? ' என்றால் 'அங்கதான்ப்பா இருந்தேன் '  என்றால் முடிந்தது, வீடியோ சாட்சி . ஒன்றிரண்டு வருடம் முன்னால் ரஹ்மானின்  'ஜெய் கோ' என்ற பாட்டோ , ஷங்கர் மஹாதேவன் 'ஏக தந்த...

அவையத்து முந்தி இருப்ப...

இது ஒரு anti-thesis. ஆகவே சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளக் கூடாதது, குறிப்பாக கடைபிடிக்கக் கூடாதது.  அதிகாரத்தை அடைய 48 வழிகள் - ராபர்ட் க்ரீன் போன்ற ஒரு முயற்சி( https://www.oberlo.com/blog/48-laws-of-power-robert-greene-summary ).  பெரிய அளவில் வெளியே சொல்லப்படாதது, எழுதப்படாதது. ஆனால் எல்லா தியரிகளை மீறி  மீண்டும் மீண்டும் உலகில் நடப்பது அதுவே. எடுத்துக்காட்டு, இதில் உள்ள விதி 7 : "அடுத்தவர்களை வேலையைச் செய்ய வை, நற்பெயரை நீ எடுத்துக்கொள்" . அல்லது விதி 45 : "நிறைய மாற்றம் தேவை என்று சொல்லிக்கொண்டே இருங்கள்; ஆனால் சீக்கிரமாய் நிறைய மாற்ற முயலாதீர்கள்; ". புதிதாய் ஒரு குழுவில் அதிகாரத்திற்கு வரும் ஒருவர் , தன்னை முழுதாய் பெரும்பாலோனோர் ஏற்கும் வரை ஏற்கனவே இருக்கும் பிழைகளைக் காட்டி இருப்பவர்களை பணிய வைக்கிறார். அவர்கள் பணிந்தபின் எல்லாம் சரிதான் , கொஞ்சம், கொஞ்சமாய் செய்யலாம் என்று சொல்ல ஆரம்பிக்கிறார். குனிந்தவர்கள் நிமிர ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுப்பார்.  டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் நெப்போலியனின் ருஷ்யப் படையெடுப்பைப் பற்றிச் சொல்லும் நாவல். (இன்னும் கால் ...

கீழ் நோக்கி வளர்தல்

கீழ் நோக்கி வளர்தல்  மாலை இருள் வர ஆரம்பிக்கும் வேளையில் வீட்டிற்குள் இருப்பது ஏனோ  எப்போதும் ஒரு சிறு சோர்வை அளிக்கிறது . நேற்றும் அப்படித்தான். ஜன்னல்களின் கண்ணாடிகள் வழியே அடுத்த வீட்டு ட்யூப் லைட்டின் ஒளி கண்ணில் பட ஆரம்பித்திருந்தது  . அடுத்த வீட்டு டிவி-கள் தெளிவாய் தெரிய ஆரம்பித்தன . எங்கிருந்தோ கடைசிப் பறவை வானத்தைக் கடந்தது. அதை எதிர்த்து ஒரு பெரிய வௌவால் கூட்டம் அதைப் பார்த்தபடி கடந்து சென்றது .சில தெரு நாய்கள் தூங்க ஆரம்பித்திருந்தன. குழந்தைகள் அடுத்த நாள் தேர்வை எண்ணி படிக்க ஆரம்பித்து இருந்தனர் . ஒருவர் சத்தத்துடன் தெருவெங்கும் கொசுமருந்து அடித்தபடி சென்றார். மேகமே கீழ் இறங்கி வந்தது போல் இருந்தது. சாலையில் வண்டிகளின் விளக்குகள் தெரிய ஆரம்பித்தன. புத்தகம் ஒட வில்லை.  எங்காவது வெளியில் சென்று வருவது  என்று நீலாவைக் கூட்டி வெளியில் வந்தேன்.  வேறு எங்கு செலவில்லாமல் செல்ல முடியும்- கோவில்தான். அன்று ஒருவர் கேட்டார், இப்போதெல்லாம்  ஏன் கோவில்களில் கூட்டம். இடம் தான் பிரச்சனை. நேற்று 2 மணி நேரம் உட்கார இடம் இல்லாமல் ரோட்டில் நடந்தபடி, நின்றபடி ...

யுகாதி

இன்று யுகாதி , அப்பா யுகாதி அன்றுதான் பிறந்தார். இன்று கூடவே என்னுடைய பிறந்த நாளும் சேர்ந்து விழுகிறது. சென்ற ஜனவரி 21 அப்பாவின் நினைவு நாள். இரண்டு வருடங்கள் கடந்து விட்டன.  அன்று வீட்டிலிருந்தே வேலை பார்த்தேன். அன்று பள்ளிக்கூடத்தை விட்டு வந்த ஸ்ரீ 'அப்பா இன்னைக்கு ஜனவரி 21, என்ன நாள்னு தெரியும்ல'  என்றபடி , பின்னால் புத்தகப் பை , ஒரு கையில் நீளமான உறுமி  மேளக்காரர்கள் சுமக்கிற மாதிரி ஒரு வகை  புட்பால் பையும், மறு கையில் சாப்பாட்டு பையோடு படியில் ஏறினான். 'ஆமாடா , ஞாபகம் இருக்கு' என்றேன். ' அன்னைக்கு நீ அழுகவே இல்ல...நான் வந்ததும் பாத்து சிரிச்ச...இன்னைக்கும் கன்ட்ரோல் பன்னிக்கோ.. ' . வேறு யாராவது அன்று அப்பாவைப் பற்றி வீட்டில் பேசினால்  உஷ் என்று கை காட்டி 'டோன்ட் மேக் ஹிம் க்ரை' என்று பல முறை சொல்லிக் கொண்டே இருப்பான். ஒரு முறையேனும் நான் அழுவதை பார்க்க காத்துக்கொண்டிருக்கிறான்.  நான் அன்றிலிருந்தே அப்பாவைப் பற்றிய நினைவுகளை தொகுத்து எழுதி வைக்க வேண்டும் என்று நினைத்தபடி இருந்தேன். மேடமோர்போசிஸ்-ல் வருவது போல் , நாம் இல்லாத இடத்தில் நம்மைப் பற்றிய நி...

சைக்கிள் பதிவுகள் -4 - வசந்த ராணி

இன்று திங்கள் கிழமை, கொஞ்சம் கடினமான நாள். எழுந்தவுடன் வேலையைப் பற்றிய நினைப்பு வந்து மனதை மிரட்டும். அடுத்து சரியாக தூங்கி முடித்தோமா என்ற கவலை. ஒன்பதரை மணிக்கு மீட்டிங், அப்போ எவ்வளவு முன்னால் கிளம்ப வேண்டும், அதற்குப் பின் நாளில் என்ன செய்து முடிக்க வேண்டும் போன்ற எண்ணங்கள் தலகாணியிலேயே துவங்கி விடும். ஜன்னல் வழி நூலாய் வர ஆரம்பிக்கும் பகலாகும் இருட்டைப் பார்த்து , இது இன்னமும் கொஞ்சம் நீளாதா என்றே நினைக்கத்  தோன்றும். அன்றைய தினம் உங்கள் தலையணை அடியில் உங்களுக்காக மடித்து வைக்கப் பட்டுள்ளது, இன்று புதிதாய் பிறந்தோம் போன்ற சிந்தனைகள் வரவே வராது. இப்படி இன்றைய நினைப்பு போய்க் கொண்டு இருக்கும் போதுதான், 1000-ம் மணி படிப்புக்காக புத்தகத்தை எடுக்கச்  சென்றேன். (தினம் ஒரு மணி காலைப் படிப்பு முயற்சி). ஸ்ரீ தனது படுக்கையில் இருந்து புரண்டு இருந்தான் . இரவில் இவன் தூங்குவதற்கு எல்லோரையும் அமட்டுவது என் வேலை. நேற்றும் அவ்வாறே நடந்தது . அம்மாவும் , அக்காவும், சிரித்து அவனை எழுப்பிய வண்ணம் இருந்தார்கள். இவனும் தலையைத்  தூக்கிப்  பார்த்த வண்ணம் இருந்தான். பொதுவாக முகம் இழுத்த...

மறுபிறவி

ஏனோ இரன்டு நாட்களாக புனர்ஜன்மம் என்ற வார்த்தை வந்து கொண்டே இருந்தது. இந்த வார்த்தை ஒரு கணம் தோன்றும் , புளகாங்கிதமாய் ஆகி, கொஞ்சம் நெஞ்சு கனத்தது போல் மறையும். ஆனால் இது இவ்வாறே முடியவேண்டியதாய் இருந்திருக்கிறது. இவ் வார இறுதி நாட்கள் மதுரையில் . ஏனோ பெங்களூரை விட்டு வெளியே வந்தால், மக்கள் கஷ்டப் படுவது போலேயே தோன்றும். எல்லோரும் நன்றாகவே இருக்கிறார்கள் என்று உள்குரல் மட்டுப்படுத்தும். இந்தக் குரல் இல்லையென்றால் பை காலியாகிவிடும் .  இன்று மாலை நேர ஒரு சிறு ஊர் சுற்றல்.  நிறுத்தம் 1 முதல் 8 வரை , வட்டப்பாதை.  டீ பார்சல் வாங்கி கொண்டிருந்த இளைஞர்  மொபைல் போன் கடை வைத்து இருக்க வேண்டும். டீ மாஸ்டர் பத்தாயிரத்துக்குள் ஒப்போ  கிடைக்குமா என்றார். இளைஞர் உதட்டைப் பிதுக்கினார், ரியல் மீயாச்சும் வருமா என்றார். டீயை குடித்துவிட்டு கடையைக் கடந்து போகும் போது, ஒரு தாய் மடியில் குழந்தையுடன் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். பொதுவாக இங்கு அனுமதிக்க மாட்டார்கள். குழந்தையின் இரு கால்களிலும் தடித்த மாவுக்கட்டு போட்டு கட்டப் பட்டிருந்தது.  குழந்தை தூங்கிக் கொண்ட...