Skip to main content

Posts

ஒரு சனிக்கிழமை காலை

ஒரு சனிக்கிழமை காலை இப்போதெல்லாம் சனிக்கிழமை காலை, வாரநாட்களைவிட இன்னும் முன் எழ வேண்டியிருக்கிறது. வேறு என்ன, ஸ்ரீக்கு கால்பந்து பயிற்சி. ஐந்தே முக்காலுக்கு பள்ளியில் இருக்க வேண்டும். எலீட் கோச்சிங் என்று சொல்கிறார்கள். கிளம்புவதற்கு முன் கோச் நரம்பு புடைக்க 15 நிமிடங்கள் நின்றபடி பேசிக்கொண்டு இருந்தார். கீழே பையன்கள் பெரும்பாலும் கைகள் முட்டியை கட்டியபடி படி இருந்தனர். சிலர் நெளித்துக் கொடுத்து, அடுத்து படுக்க வழி பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் வண்டியில் திரும்பி வரும்போது,  'கோச்சு ரொம்ப நேரமா பேசினாரே , என்னப்பா சொன்னாரு ?" 'அது தியரிப்பா ' 'அதான்ப்பா என்ன சொன்னாரு ?' 'டி பிரீபிங் ப்பா'  '...' 'என்ன நல்லா நடந்துச்சு , என்ன ட்ரபாக்ன்னு  டிஸ்கஸ் பண்ணனும்...நான் போன மேட்சுல எல்லாரும் உயரமா ஒருத்தன பாத்து பயந்தோம்ன்னு சொன்னேன்..அதான் தோத்தோம்ன்னு சொன்னேன்...கோச் ஆமான்னு சொன்னாரு   ' 'பேச்சு சரி ...நல்லா ஓடி விளையாடணும்ப்பா...இடுப்புல கை வைச்சு நடுவுல நின்னுக்கிட்டே இருக்கக்  கூடாது... ' 'ஆமப்பா ...தியரிய விட ப்ராக்டிகல் த...

புளியுப்புக் கரைசல்

வெண்முரசு நீர்க்கோலம் படித்துக்கொண்டிருக்கிறேன். பாண்டவர்களின் விராட பருவமும் , நள தமயந்தி கதையும் பிணைந்து சென்று கொண்டிருக்கிறது.  நளனை பீமன் பாதி , தருமன் பாதி என்று எண்ணிக்கொண்டேன். எவ்வாறு பிறர் அறியாமல் மாறுவேடம் பூணுவது என்றபோது , தமனர் அவர் முனிநிலையில் பாண்டவர்க்கு சொல்லும் சொற்கள் மிக ஆழமானவை. மாற்றுருவை வெளியே இருந்து கொண்டுவர முடியுமா? உள்ளம் மாறாமல் உடல் மட்டும் மாறினால் ஆகுமா?  நம் ஒவ்வொருவரிலும் பல ஆளுமைகள் குடிகொண்டுள்ளன. நாம் நாமாகவே ஒன்றை மட்டும் எழுப்பி முன்னதாக வைக்கிறோம். மற்றவைகளின் மேல் அது ஏறி அமர்ந்து கொள்கிறது. நம் உடலும் உள்ளமும் அதுவாகவே ஆகிறது. எனவே , மாறுவேடம் பூண வேண்டியபோது, நமக்குள் பின்னால் இருக்கும் ஆளுமையை முன்னால் எழச்செய்தால் நடிக்க வேண்டியதில்லை. அது உள்ளே இருப்பதால்  பயிலவும் வேண்டியதில்லை.  இன்னும் மேலே சென்று , அடுத்தவரை தனக்குள் கீழே ஆழத்தில் புதைபட்டுக்கிடக்கும்  ஆளுமையை வாயால் சொல்ல வைக்கிறார். பீமன் விராடபுரியில் அரண்மனைத்  அடுமனைத் தலைவனாகிறான்.  திரௌபதி தருமனை சகுனி என்கிறாள் . தருமன் அவளைச் சேடி என்கிறான...

ஒரு தொழில்நுட்ப உரசல்

 ஒரு தொழில்நுட்ப உரசல் தொடுதிரை என்னும் கல்பற்றா நாராயணன் கவிதை. ஒரு அப்பா டச் ஸ்கிரீன் திரையில் தடுமாறுவதையும் , அவர் பையன் நீரில் நடக்கும் கிறிஸ்துவைப்போல் தொடக்கூட இல்லாமல் திரையில் கைகளால் நடந்து செல்கிறான். அழுந்தக் கால்பதித்தே நடந்து பழகிய அவர் வாழ்வு நம் கண்முன் வருகிறது. பலமே தேவையில்லாத ஒரு வாசலின் முன் தனியனாய் வந்து நின்று இருக்கிறார்.     "காய்த்துப்போன விரலிருந்தும் எத்தனை அழுத்தியபோதும் செயல்படவில்லை. இது தொடுதிரை அப்பா மெல்ல தொட்டாலே போதும் அழுத்தவே வேண்டியதில்லை சொல்லப்போனால் தொடக்கூடவேண்டியதில்லை இதோ இப்படி அவன் விரல் நீரின்மேல் ஏசு போல நடந்தது அவன் விரும்பியபடி செயல்பட்டன எல்லாம் உலகம் எனக்கு வசப்படாமலிருந்தது இதனால்தானா? நான் தேவைக்குமேல் அழுத்திவிட்டேனா? " ... மேல்தளத்தில் எடையில்லாமல் நகர என்னால் இயலவில்லை முதல் அடியிலேயே நான் மூழ்கினேன் பூ விரிவதை கண்டதில்லையா செடி அழுத்துகிறதா என்ன? ஆனால் நான் பழுதடைந்த மின்விசிறிபோல ஓசையிட்டபடி மலர்ந்தேன் நெற்றி வியர்வையை கொதிக்கவைத்து என் அப்பங்களை வேகவைத்தேன் அது ஐந்தாயிரம்பேருக்கல்ல ஐந்துபேருக்கே போதவில்லை. என் ...

மஹாலயம்

சில வருடங்களுக்கு முன் ஏனோ எங்காவது மஹாளயம் என்ற வார்த்தை கேட்டால்  , எனக்கு உடனே பிரளயம் என்ற சொல் மனதில் ஓடும். ஜெயகாந்தன் பிரளயம் என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். 'சென்னையில் ஒருமுறை வந்த வெள்ளத்தின் போது நிகழ்ந்த அலங்கோலங்களை, மனிதனின் சிறுமைகளை, 'கொடைவள்ளல்'களின் மான வெட்கமற்ற தற் பெருமைச் சவடால்தனங்களைக் கண்டபோது என் மனத்தில் ஏற்பட்ட கைப்பு உணர்ச்சியில் எழுந்தது' என்று அவரே சொல்கிறார். ஆரம்பமே அம்மாசிக் கிழவனுடைய வளர்ப்பு மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் முதலாளியின் பையன். மாப்பிள்ளை சின்னான் அவர் வீட்டில் பிரைவேட் ரிக்சா ஓட்டுபவன். 20 ரூபாய் பணம் , ரெண்டு நாள் லீவு , அடுத்த நாள் கல்யாணம். அம்மாசிக் கிழவன் இந்தச் சேரியில் விதி விலக்கு, மனிதர்களுடன் ஒட்டவில்லை. குழந்தைகளுடன் தான் அவனுக்கு மகிழ்ச்சி இருக்கிறது. ஆனாலும் அவன் செல்லும் வழியெல்லாம் மனிதர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். குழாயடியில் , பாயை விரித்து படுக்கும் இடத்தில் ,பாயை கையில் எடுத்து படுக்கப் போகும் வழியில் மனிதர்கள் முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். எல்லோரிடமும் பெரியவர் பேசியபடியே செல்கிறார், கடைச...

சைக்கிள் பதிவுகள் - 7 - வெள்ளிவீழ்த் தாரைகள்

வெள்ளிவீழ்த் தாரைகள் கடந்த சில நாட்களாக சொல்லி வைத்தாற்போல் மாலை ஐந்தரை ஆறு மணிக்கு மழை பெய்கிறது. ஏரியைச்  சுற்றி  நடைப்பயிற்சி ஆரம்பிக்கும் போது எல்லாம் சரியாய் இருப்பது போல் இருக்கிறது. பாதி சுற்றில் இருக்கும் பாலம் அருகில் நின்று பார்த்தால், மழைக்கடவுளுக்கு வயிறு கலங்குவது போல் வடமேற்கு  மூலையில் கரு மேகங்கள் திரள ஆரம்பிக்கும் - வீறு அணிந்தவன் மேனி நிற மேகங்கள். தென் கிழக்கு மூலையில் இன்னும் வெள்ளை மேகங்கள் இருக்கும் - நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்.  இன்னும் கால்வாசி முன்னகரும் முன், ஒரு சில கனமான துளிகள் உடம்பில் தெறித்து விழும். கண்டிப்பாக புது வழுக்கையில் ஒரு சில துளிகள் படும். பட்டதும் காதில் ஒரு தகர ஒலி அதிர்வுகள்  ஏற்பட்டு, மூக்கினுள் எதோ இறங்குவது போல் இருக்கும். நடு வழியில் இருக்கும் முதியவர்கள் 'அரே , பாப்ரே...' என்று  முன்னால் போவதா , பின் வாங்குவதா என்று பேசிக்கொள்வார்கள். கொஞ்சம் மழை கியரை மாற்றியபின் அங்கிருக்கும் ஒரு பத்து இருபது பேர் ஓட ஆரம்பிப்பார்கள். ஒரு நாய்க்கூட்டம் நிதானமாய் ஓட ஆரம்பிக்கும். கழுத்தில் கட்டப்பட்ட நாய்கள் சிலரை பிடித...

சைக்கிள் பதிவுகள் -6 - இருகால் புரவி

அன்று மாலையில் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தேன் , அன்றே கிளம்பி ஊர்ப்பக்கம் செல்வதாகத் திட்டம். நம் சைக்கிளைப் பற்றி நமக்கு எப்பவுமே உயர்ந்த எண்ணம் தான். அவ்வப்போது பிரேக்கை முறுக்கி விட்டுக் கொண்டால் போதும். காற்று கூட இரண்டு மாதம் ஒரு முறை அடித்தால் போதும். ஆனால் இந்த மெக்கானிக்குகளிடம் இருந்து வண்டியைப் பாதுகாக்க வேண்டும். சென்ற முறை, சர்வீஸ் செய்யலாம் என்று போனேன். பொதுவாக கழுவிக்கொடுப்பார்கள். முதல் இரண்டு நாள் லகுவாக செல்வது போல் தோன்றும், அப்புறம் நினைப்பு சரியாகி விடும்.  ஆனால் அம்முறை  அவர் மின்கலத்தை நீரில் தோய்த்து , காயும் முன் சார்ஜ் செய்திருக்கிறார். உள்ளிருந்த அமிலக் கரைசல்  வெல்லமாய் வெளியே வந்து  ஒட்டி இருந்தது.  பழியை நம்மேல் மாற்றி, மின்கலத்தை மாற்றிகொள்ளுமாறும்,  அடுத்த முறை சர்வீஸ் ஓசியில் தருவதாகச் சொன்னார்.  வேறுவழி இருக்கவில்லை, தமிழ்நாட்டுக்காரர், ஒரு சண்டை, இறுதியில் இருவரும் பாதி வழி இறங்கி வந்து முடிந்தது. மெக்கானிக்கை வேலையில் இருந்து நிறுத்தி விட்டதாகச் சொல்லி, என் குற்ற உணர்வை இன்னும் அதிகப்படுத்தினார்.  பக்க...

சிறியன செய்தல்

சிறியன செய்தல்  எப்போதும் சுற்றி இருப்பவர்கள் செய்யும் வேலையை கவனிப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. காரணம், உடல் உழைப்பு மனதளவில் எளிதாய் தோன்ற ஆரம்பித்து  பல வருடங்கள் ஆகி விட்டன. நான் வேலை பார்த்த இடங்கள் எல்லாம் தொழில்நுட்ப வேலைகள். வேலை பார்க்கும் நால்வரில் அல்லது ஐவரில் ஒருவர் வேலையை மேற்பார்வை செய்பவர். கீழே இருப்பவர்கள் வேலையை  விளக்குவது, அவர்கள் செய்வதை பிறருக்கு விளக்குவது, தம் வேலை ஊடுபாவும் இடங்களை சரியாகத்  தெரிந்து, அறுபடாமல் அவற்றை இணைப்பது, முடிவில்லாத திட்டமிடல்கள், ஆயத்தங்கள் . ஆக வேலையைப் பற்றி பேசியே பெரும்பாலும் நேரம் கழிகிறது. ஒரு தளத்தில் எல்லாமே ஒன்று போல் தெரிய ஆரம்பிக்கிறது. இதை எழுதும் முன் , ஒரு வேலையைப் பற்றி  , இரு  குறுஞ்செய்திகள் ,  இரண்டு போன் கால், ஒரு  மெயில் செய்ய வேண்டி இருந்தது.   ஆனால் இதில் இருக்கும் காலக்கெடுவும்,  சாதாரணமான தன்மையும் தான் நமக்குள் சலிப்பாகவும் , மனப் போராட்டமாகவும் மாறி விடுகிறது. சுந்தர ராமசாமியின் இந்த கவிதை அடிக்கடி மனதில் வந்து போகும். கொட்டி மட்டும் தான் தீர்க்க முடியும், அடுத்தந...