Skip to main content

Posts

முதல் மழை

முதல் மழை எனக்கு எட்டு ஒன்பது வயது இருந்தபோது உள்ளூர் கிராம பஞ்சாயத்து பள்ளியில் இருந்து நிறுத்தி வெளியூர் பள்ளியில் சேர்த்தார்கள். இரண்டிலுருந்து மூன்றாவது வகுப்பு செல்ல வேண்டும். வீட்டில் எதிர்வீட்டில் 1 வது வகுப்பு டீச்சர் இருந்தார். ஒன்பது மணிக்கு வேலைக்குச் செல்லும் முன், கிழக்கே பார்த்து நடுத்த தெருவில் நின்று ராஜகோபாலப் பெருமாளை 'பெருமாளே ' என்று சிரம் உயர்த்திக் கும்பிட்டு, என்னையும் ஒரு குரல் கொடுத்து பள்ளிக்கு கூட்டிச் செல்வார். தினமும் கை பிடித்து கூட்டிச் செல்வார் என்று எழுதலாம், ஆனால் உண்மையில் மிக வேகமாய் நடப்பார் , ஓடித்தான் பின்னால் சென்றாக வேண்டும். மிக நீள ஜடை  , ஆனால் வெள்ளை. பிறந்த நாள் அன்று சென்று காலில் விழுந்து வணங்கினால் , ஒரு ஸ்பூன் சக்கரையும் , ஒரு ரூபாயும் கொடுப்பார் . நிற்க, முழுத் தெருவையும் கடந்து , அதாவது, மொத்த வீடுகள் 66, எங்கள் வீட்டின் எண்  2/63, பின்னோக்கி எதிர் எதிராய் 60 வது வீடுகள் , உள்ளே வெளியே பார்த்தபடி நடந்தால் , நூலகம் தாண்டி , ரோட்டின் மேலேறினால் பள்ளிக்கூடம் வரும். ஒரே சத்தம் தான் நினைவில் இருக்கிறது. ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை,...

உயர்ந்தோர் மாட்டே உலகம் -2

உயர்ந்தோர் மாட்டே உலகம் -1 சனிக்கிழமையன்று இப்போதெல்லாம் போக்குவரத்து நெரிசல் வாரநாட்களை விட அதிகமாய் இருக்கிறது. ஒட்டுமொத்த அவுட்டர் ரிங் ரோடும் , ஸ்டெண்டுகளால் தூக்கி நிமிர்த்தப்பட்ட ஒரு ரத்தக்குழாய் போல் காட்சி தருகிறது. மேலே மெட்ரோ எனும் இதய சிகிச்சை  நடந்து கொண்டிருக்கிறது. கீழே நகரம் ஒரு மாதிரி வளைந்து கசிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. நானும் ,இரண்டு நண்பர்களும் இணைந்து செல்வதாகத் திட்டம்.  ஒரு வழியாக பத்துநிமிட முன்னதாக சென்று சேர்ந்தோம். வெளியே புத்தகக் கடை வைக்கப்பட்டிருந்ததது. புத்தகம் விற்கும் பெண்மணி , 'எல்லாம் வாங்குற புத்தகத்தையே திரும்பி வாங்குறாங்களா?' என்றார். ஒரு கணம் முன் நம்மிடம் எந்த புத்தகம் இருக்கிறது இல்லை என்று தடுமாறிக் கொண்டிருந்தேன். உள்ளே சென்று ஒரு தேநீர் குடித்து அமர்ந்ததும் ஜெயமோகன் உள்ளே நுழைந்தார். மிக மெல்லிய சலசலப்பு, பலர்  நாற்காலியில் இருந்து எழுந்து, அவரைப் பார்த்து அமர்ந்தனர். சளைக்காமல் கையெழுத்துப் போட்டபடியே  இருந்தார்.  சரியாக ஆறு மணிக்கு உரை தொடங்கியது.  வாழ்நாள் முழுதும் தொடர்ச்சியாய் இடைவிடாமல் எழுதிக்கொண்டிருப்பதா...

உயர்ந்தோர் மாட்டே உலகம் -1

சென்ற சனியன்று ஒரு சிறு நேர மோதல். அன்று ஸ்ரீயின் பிறந்த நாள். அதே நாளில் ஜெயமோகன் பெங்களூர் கட்டண உரை. இருவரும் நடுவே  ஒரு சில வாரங்களாக  திட்டமிடல். ஒரு வழியாக நட்சத்திரம் காட்டி முந்தய நாள் கொண்டாட முடிவெடுத்தோம். கொண்டாடுவது என்றால், அவனுடைய நண்பர்கள் கூட்டமாய்ச்  சென்று கால்பந்து ஆடுவது, பின்னர் ஒரு சிறு ஸ்னாக்ஸ் பார்ட்டி என்று திட்டம். பாட்டி, தாத்தாக்கள் குடுத்த பணமெல்லாம் எடுத்து புழக்கத்தில் விடுவதாகவும், நடத்தித் தருமாறும் நாளும் வேண்டினார். வேறு வழியில்லை. அவர் காட்டிய மாற்று வழி இன்னும் கடினமானது. காகிதத்தில் பெயர்களை எழுதி , இரு அணிகளாக்கி என்னையும் ஒரு பக்கம்  கோல் கீப்பர் ஆக்கி , ஏழுக்கு நாலு என்று நம் பக்கம் சரியாக தோல்வியில் முடிந்தது. கோலை நான் விடுவதை அவர் அம்மா படம் எடுத்திருந்தார்கள். பந்தை தடுத்து எறியும் பொழுது, ஒரு நாலு பேர் ஓடி வந்து ' வாட் அங்கிள் , யூ ஷுட் நாட் த்ரோ நௌ..யூ ஷுட் புட் இட் டௌன் , கிக்'  ...என்றனர். கீழே வைத்து உதைக்கும் முன் , எறிய வேண்டும் என்றனர். சரியாய் எட்டு மணிக்கு ஆட்டம் முடிந்ததும், ஒரு அலுவலக அழைப்பு , காரில் போட...

சைக்கிள் பதிவுகள் -8 - சருகின் எடை

சருகின் எடை  இப்போதெல்லாம் காலையில் எழுந்து கீழே கால் வைத்து, முதலடி தரையில் படும்போது ஒரு வெம்மை வர ஆரம்பித்திருக்கிறது. இரண்டொரு நிமிடங்களில் நெற்றியில் பூத்து விடுகிறது. கதவைத் திறந்து சிறு  உப்பரிகையில் நின்றால் இப்போதும் பிரிட்ஜை திறந்து நிற்பது போல், இனிய சொல் போல இன்னும் மிதமாய் குளிர். ‘அண்டம் முற்றும் திரிந்து அயர்ந்தாய், அமுது உண்டு போதி’ என்று வரும் கதிரவனை எதிர்பார்த்து காத்திருக்கும். இப்போதெல்லாம் அவர் சரியாய் வந்து விடுவார். மேகம் ஊர்ந்து, மேல் ஏறிச் செல்லும் விண்ணவன் இல்லை. தனியாய் வருகிறார். உலகைக் காக்க அவரன்றி யார் உளார்  ? இதைப் புரியவைக்க வேறு சரியான நேரம்தான் உண்டா ?   //  ‘வானே புக்கான் அரும் புதல்வன்’  மக்கள் அகன்றார்; வரும் அளவும் யானே காப்பென், இவ் உலகை’ தசரதன் இறந்துபட்டவுடன், சூரியன் வேறு எவர் வேண்டும், என்றும் நான் இருக்கிறேன் மக்களைக் காக்க, என்று தேரில் ஏறித்  தோன்றியதாக  கம்பர் எழுதுகிறார்.  மார்ச் மாத காலை பொழுது வேறு தான்.  நாய்கள் காலையிலே நிழல் தேடிக் கண்டு இன்னும் கொஞ்சம் உறங்குகின்றன. ஒரு இலையுமன்றி ...

கோடிக்கால் பூதம்

கோடிக்கால் பூதம்  சைக்கிள் மிதித்துச் செல்லும் போது காதில் எதாவது ஓடிக்கொண்டே இருந்தால் தூரம் தெரியாது. ஏதவாது போட்காஸ்ட் அல்லது பாடல்கள். ஒரு சில நாள்களில் வெறும் வேடிக்கை அல்லது அன்றைய யோசனை. பாடல் என்றால் ஒரு பன்னிரண்டு அல்லது பதிமூன்று பாடல்களுக்குள் இடம் வந்துவிடும். பொதுவாக ஒரு தேடல் போட்டு, வேறு யாரோ ஒருவர் பதிவிட்ட பிளே லிஸ்டை சீரற்ற வரிசையில் கேட்பது என் வழக்கம்கே. எதோ ஒரு பாடல் அல்லது ஒரு வரி நாளெல்லாம் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும்.   அன்று டி.எல். மகாராஜன் பாடிய காதல் யோகி யோகி என்ற பாடல் வந்தது ( https://www.youtube.com/watch?v=mwIS_fZ2mRc ). பரணில் ஏறி ஏதாவது எடுக்கும் போது , வேறு எதாவது தட்டுப்பட்டு நினைவுகளை இன்னும் பின் தள்ளுவது போல. தாளம் (taal ) 1999-ல் வெளிவந்தது. முதலில் ஹிந்தியில் , பின்னர் தமிழ் ஒலிச்சேர்க்கை செய்யப்பட்டு வெளி வந்தது. ரஹ்மானின் இசையில் பாடல்களுக்காவே பிரபலமானது. தமிழ் பாடல்களும் மிகப் பெரும் வரவேற்ப்பை பெற்றன. நான் கல்லூரி  படிக்கும் நேரத்தில் ஒன்று இதை விசிடி (திருட்டு) அல்லது ஊபர் கட்டிய ஒலிப்பெட்டிகளிலோ கூடிக் கேட்பார்கள். மேலும் ...

வீட்டிற்குள் ஒரு அழுத்தம்

வீட்டிற்குள் ஒரு அழுத்தம் ஒன்றைக் கேட்பது என்பதும் ஒரு கலை தான். கேட்பது என்பது எப்போதும் எனக்கு ஒரு சிக்கல். ஆனால் நமக்கில்லாததை ஒருவாறு கேட்க முடிகிறது. குழந்தைகளுக்கு இந்தத் தடை இருப்பதில்லை. குழந்தைகளில் கொஞ்சம் நாசுக்காக கேட்பது என்பதை பார்ப்பது அரிது. ஸ்ரீ இதை எல்லாம் தாண்டியிருக்கிறார் இப்போது. ஒரு ஆறு ஏழு வயது வரை எதுவுமே கேட்க மாட்டார். இவரது அக்காவை வைத்துப் பார்க்கும் போது , இது எங்கிருந்து வந்தது என்று தோன்றும். ஏதாவது புத்தர் , ரமணர்  தோன்றியிருக்கிறாரா என்று நினைத்ததுண்டு. இவருக்கு ரமணர் என்று ரெண்டாவது பெயர் (என்னால் ) போடப்பட்டுள்ளது என்னை மேலும் சிந்திக்க வைத்ததுண்டு. ஆசையெல்லாம் விட்டுவிட்டு பூமியில் இறங்கியிருக்கிறாரோ என்று தோன்றும். எவ்வளவு பெரிய கடைக்குள்  சென்றாலும், பொம்மைகள், கார்களின் நடுவே நின்று கொண்டு ' எனக்கு எதும் வேண்டாம்ப்பா ' என்று சொல்லிவிடுவார். ஓட்டலில் யார் என்ன சாப்பிட்டாலும் இவர் இரண்டு இட்டிலி மட்டும் உண்பார். அந்த இனிக்கும் சாம்பார்க்ககவே உண்பார். பூச்சிகள் நழுவி தேனில் விழுந்து இறப்பது போல் , இட்டிலியெல்லாம் சாம்பார் கிண்ணத்தில் மரணம் ...

தொடக்கம் , அ.முத்துலிங்கம் சிறுகதை

பெங்களூர்- ஹைதராபாத் சாலையிலோ அல்லது பெங்களூர் -கிருஷ்ணகிரி சாலையிலோ இருக்கும் ஒரு பீடபூமியை  கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு நெடுஞ்சாலையின் மிக உயரமான மேடு தெரியும் வண்ணம் கேமரா நிற்கிறது. இப்போது மாதவன் ஒரு ஸ்ப்ளெண்டர் மோட்டார் வண்டியில் , கண்ணளவே உள்ள கறுப்புக் கண்ணாடியுடன் , நீல நிற டெனிம் சட்டை ,  காதுகளில் இயர் போனுடன் பிரேமுக்குள் நுழைகிறார். காதுகளுக்குள் ஒலிக்கும் இசை அவர் முகபாவங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறது. உதடு இரண்டும் குவிகிறது, பின் பல் காட்டி சிரிக்கிறது. நமக்கு கேட்குமாறு என்றென்றும் புன்னகை என்று பாடல் ஒலிக்கிறது . அடிக்கடி அவர் முகம் பிரேமில் இருந்து மறைந்து மீண்டும் உள்ளே வருகிறது. கேமரா நின்ற இடத்திலே நிற்கிறது. கானல் பிம்பம் தெரிவது போல் பிசுபிசுத்து மீண்டும் தெளிவாகிறது. நடுநடுவே டைட்டில் கார்டுகள் வந்து விழுகின்றன. இது மணி ரத்தினத்தின் ஒரு படத்துவக்கம். இவ்வாறு இன்றும் நினைவுகூறும் வகையில் இருக்க வேண்டியுள்ளது. இல்லையென்றால் கணக்கற்றவர்களின் கூட்டு உழைப்பால், மிகுந்த பொருள் செலவில் உருவாகும் ஒரு திரைப்படம், முதல் சில மணித்துளிகளில் , ஒரு ஸ்குரோல் செய்த...