Skip to main content

Posts

பிரம்ம வித்தை - கீதை குறிப்புகள் 1

மறுபடியும் இதையெல்லாம் ஏன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கடந்த சில மாதங்களில் திரும்பவும் வந்தபடியே  இருந்தது. வார இறுதி நாட்களில் கணினி திறப்பதை அறவே நிறுத்திப் பார்த்தேன். குறுஞ்செய்திகள் குறிப்பிட்ட ஒருவரிடம் இருந்து வருவது தெரிந்து , செயலியை திறப்பதையே குறைத்தேன். இருந்தும் எல்லாம் இருபுறமும் குமுறி நெருங்கியபடியே வருவது தெரிந்தது. மேலே கேட்டால் சொல்வதற்காக, என் பக்கத்தை கோர்வையாக சில பக்கங்கள் கோர்வையாக எழுதி வைத்தேன். அவருடன் வரப்போகும் மீட்டிங்குகளுக்கு என இரவெல்லாம் கத்தியை கூர்  தீட்டியவாறு முழித்து இருந்திருக்கிறேன். கூடே வேலை பார்ப்பவர்களை என் முனைக்கு தயார் செய்ய நெருக்கடியில் செலுத்தியிருக்கிறேன். அன்று அப்படி சனி ஞாயிறு இரண்டு நாட்கள் கூர்தீட்டிய முனையுடன், அவருடன் பேச தயார் செய்து சைக்கிளை மிதித்து மேலும் யோசித்தபடி சென்று கொண்டிருந்தேன். வேறு எங்காவது படகில் ஓட்டை இருக்க்கிறதா, அவரது எல்லா நகர்த்தலுக்கும் நம்மிடம் பதில் உள்ளதா , சொல்லியே ஆக வேண்டிய குறிப்பிட்ட பஞ்ச் வாக்கியங்கள் ...இவையெல்லாம். ஆபீஸ் கண்ணில் தெரியும் அந்த சிக்னலுக்கு முன்னால் இடது ஓரத்தில் இருந்தா...

சம்பக தாமா

சம்பக தாமா ஒன்று கூடி படிக்கவோ எழுதவோ மனம் சிதறாமல் இருக்க வேண்டும். வேலை தான் காரணம் என்று சொல்லிச் செல்லலாம். ஆனால் அதிலும் அருகிலிருக்கும் ஆட்கள் தான் காரணம். இவர்களை நம்மால் தேர்வு செய்ய முடியாது, எல்லாம் தானாக அமைவது தான். அதிலும் ஒரு சிலர் காற்று துளியே ஆனாலும் அறை முழுதும் பரவுவது போல், நம்மை முழுதும் ஆக்கிரமிக்கிறார்கள். நம்மை அறியாமல் சிந்தனை ,செயல் எல்லாம்,  ஆக்கிரமிக்கிறார்கள். இது நேர்மறையாய் இருந்தால் ஒன்றும் இல்லை. எதிர்மறையாய் ஆகும்போது இன்னும் சிக்கல் வருகிறது.  ஒரு கட்டிடம் கட்டும் போது மண்வெட்டியும், கைக்கரண்டியும்  அவசியமே. ஆனால் மண்வெட்டி கொத்துவது, கைக்கரண்டி கட்டுவது. ஒரே கொத்திக் கொண்டிருந்தால், கட்டிடம் தானாய் எழாது. ஒரு இடத்தில் கொத்துபவர்கள் நிறுத்தி விட வேண்டும். கட்டுபவர்கள் அன்று மிகுதி  இருந்தால் வேலையும் ஆகிறது.   ஏன் இதெல்லாம் சொல்ல வேண்டும் என்றால், இப்படி கொத்துபவர் ஒருவர் சில வாரங்கள் லீவில் இருக்கும் போது அலுவலகத்திலும்  கோடை அனல் போய், வள்ளலார் சொல்வது போல் ஆகிறது.  நிழலும், மலர் பூத்த தெள்ளிய ஓடை நீரும், மெல்லிய பூ...

சைக்கிள் பதிவுகள் - 9. செயல் தொடர்

சைக்கிள் பதிவுகள் - 9. செயல் தொடர் 'நாங்கள் அனைத்து இருப்பையும் அங்கீகரிக்கிறோம். ஆனால் ...' 'ஆனால் என்ன..'  'அவை இல்லாமல் இருக்கும் நிலையும் அவற்றில் அடங்கியுள்ளது.' மேலே உள்ளது விஷ்ணுபுரம் நாவலில் வரும் ஞானசபை விவாதத்தில் சமண தீர்த்தங்கரர் கூறும் வரி. தலைப்பை மீறி இந்தப் பதிவும் சைக்கிள் இல்லாத கடந்த சில நாட்களில் நடந்த குறிப்பாய் அமைகிறது. இதை ஒட்டி என்னுடைய பள்ளி ஆசிரியர் சொல்லும் இன்னொரு சம்பவமும் நினைவில் வருகிறது. பையன் படித்தது பசுமாடு கட்டுரை. தேர்வில் கேட்கப்பட்டது தென்னை மர கட்டுரை. இந்த இடத்தில் மேலும் வரப்போவது உங்களுக்குத் தெரிந்தாலும் சொல்கிறேன். பையன் பதில் எழுத ஆரம்பித்தான். மாட்டுக்கு இரு கண்கள் , இரு காதுகள்,  ஒரு மூக்கு, நான்கு கால்கள், ஒரு மடு மற்றும் ஒரு வால். புல் , வைக்கோல் , புண்ணாக்கு என்ற உணவுப் பட்டியல். அப்புறம் பால், தயிர், வெண்ணெய், சாணி, எரு என நீட்டி, பால் , தயிர்  சாப்பிட்டால் மனிதனுக்கு வரும்  நன்மைகள், அதீதத்தில் வரும் கெடுதல்கள் என கட்டுரை எழுதி முடித்தால் கை வலித்தது. கடைசியில் கேட்ட கேள்விக்கு நியாயமாய் , இவ்வாறான பசுமாடு ,...

முதல் மழை

முதல் மழை எனக்கு எட்டு ஒன்பது வயது இருந்தபோது உள்ளூர் கிராம பஞ்சாயத்து பள்ளியில் இருந்து நிறுத்தி வெளியூர் பள்ளியில் சேர்த்தார்கள். இரண்டிலுருந்து மூன்றாவது வகுப்பு செல்ல வேண்டும். வீட்டில் எதிர்வீட்டில் 1 வது வகுப்பு டீச்சர் இருந்தார். ஒன்பது மணிக்கு வேலைக்குச் செல்லும் முன், கிழக்கே பார்த்து நடுத்த தெருவில் நின்று ராஜகோபாலப் பெருமாளை 'பெருமாளே ' என்று சிரம் உயர்த்திக் கும்பிட்டு, என்னையும் ஒரு குரல் கொடுத்து பள்ளிக்கு கூட்டிச் செல்வார். தினமும் கை பிடித்து கூட்டிச் செல்வார் என்று எழுதலாம், ஆனால் உண்மையில் மிக வேகமாய் நடப்பார் , ஓடித்தான் பின்னால் சென்றாக வேண்டும். மிக நீள ஜடை  , ஆனால் வெள்ளை. பிறந்த நாள் அன்று சென்று காலில் விழுந்து வணங்கினால் , ஒரு ஸ்பூன் சக்கரையும் , ஒரு ரூபாயும் கொடுப்பார் . நிற்க, முழுத் தெருவையும் கடந்து , அதாவது, மொத்த வீடுகள் 66, எங்கள் வீட்டின் எண்  2/63, பின்னோக்கி எதிர் எதிராய் 60 வது வீடுகள் , உள்ளே வெளியே பார்த்தபடி நடந்தால் , நூலகம் தாண்டி , ரோட்டின் மேலேறினால் பள்ளிக்கூடம் வரும். ஒரே சத்தம் தான் நினைவில் இருக்கிறது. ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை,...

உயர்ந்தோர் மாட்டே உலகம் -2

உயர்ந்தோர் மாட்டே உலகம் -1 சனிக்கிழமையன்று இப்போதெல்லாம் போக்குவரத்து நெரிசல் வாரநாட்களை விட அதிகமாய் இருக்கிறது. ஒட்டுமொத்த அவுட்டர் ரிங் ரோடும் , ஸ்டெண்டுகளால் தூக்கி நிமிர்த்தப்பட்ட ஒரு ரத்தக்குழாய் போல் காட்சி தருகிறது. மேலே மெட்ரோ எனும் இதய சிகிச்சை  நடந்து கொண்டிருக்கிறது. கீழே நகரம் ஒரு மாதிரி வளைந்து கசிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. நானும் ,இரண்டு நண்பர்களும் இணைந்து செல்வதாகத் திட்டம்.  ஒரு வழியாக பத்துநிமிட முன்னதாக சென்று சேர்ந்தோம். வெளியே புத்தகக் கடை வைக்கப்பட்டிருந்ததது. புத்தகம் விற்கும் பெண்மணி , 'எல்லாம் வாங்குற புத்தகத்தையே திரும்பி வாங்குறாங்களா?' என்றார். ஒரு கணம் முன் நம்மிடம் எந்த புத்தகம் இருக்கிறது இல்லை என்று தடுமாறிக் கொண்டிருந்தேன். உள்ளே சென்று ஒரு தேநீர் குடித்து அமர்ந்ததும் ஜெயமோகன் உள்ளே நுழைந்தார். மிக மெல்லிய சலசலப்பு, பலர்  நாற்காலியில் இருந்து எழுந்து, அவரைப் பார்த்து அமர்ந்தனர். சளைக்காமல் கையெழுத்துப் போட்டபடியே  இருந்தார்.  சரியாக ஆறு மணிக்கு உரை தொடங்கியது.  வாழ்நாள் முழுதும் தொடர்ச்சியாய் இடைவிடாமல் எழுதிக்கொண்டிருப்பதா...

உயர்ந்தோர் மாட்டே உலகம் -1

சென்ற சனியன்று ஒரு சிறு நேர மோதல். அன்று ஸ்ரீயின் பிறந்த நாள். அதே நாளில் ஜெயமோகன் பெங்களூர் கட்டண உரை. இருவரும் நடுவே  ஒரு சில வாரங்களாக  திட்டமிடல். ஒரு வழியாக நட்சத்திரம் காட்டி முந்தய நாள் கொண்டாட முடிவெடுத்தோம். கொண்டாடுவது என்றால், அவனுடைய நண்பர்கள் கூட்டமாய்ச்  சென்று கால்பந்து ஆடுவது, பின்னர் ஒரு சிறு ஸ்னாக்ஸ் பார்ட்டி என்று திட்டம். பாட்டி, தாத்தாக்கள் குடுத்த பணமெல்லாம் எடுத்து புழக்கத்தில் விடுவதாகவும், நடத்தித் தருமாறும் நாளும் வேண்டினார். வேறு வழியில்லை. அவர் காட்டிய மாற்று வழி இன்னும் கடினமானது. காகிதத்தில் பெயர்களை எழுதி , இரு அணிகளாக்கி என்னையும் ஒரு பக்கம்  கோல் கீப்பர் ஆக்கி , ஏழுக்கு நாலு என்று நம் பக்கம் சரியாக தோல்வியில் முடிந்தது. கோலை நான் விடுவதை அவர் அம்மா படம் எடுத்திருந்தார்கள். பந்தை தடுத்து எறியும் பொழுது, ஒரு நாலு பேர் ஓடி வந்து ' வாட் அங்கிள் , யூ ஷுட் நாட் த்ரோ நௌ..யூ ஷுட் புட் இட் டௌன் , கிக்'  ...என்றனர். கீழே வைத்து உதைக்கும் முன் , எறிய வேண்டும் என்றனர். சரியாய் எட்டு மணிக்கு ஆட்டம் முடிந்ததும், ஒரு அலுவலக அழைப்பு , காரில் போட...

சைக்கிள் பதிவுகள் -8 - சருகின் எடை

சருகின் எடை  இப்போதெல்லாம் காலையில் எழுந்து கீழே கால் வைத்து, முதலடி தரையில் படும்போது ஒரு வெம்மை வர ஆரம்பித்திருக்கிறது. இரண்டொரு நிமிடங்களில் நெற்றியில் பூத்து விடுகிறது. கதவைத் திறந்து சிறு  உப்பரிகையில் நின்றால் இப்போதும் பிரிட்ஜை திறந்து நிற்பது போல், இனிய சொல் போல இன்னும் மிதமாய் குளிர். ‘அண்டம் முற்றும் திரிந்து அயர்ந்தாய், அமுது உண்டு போதி’ என்று வரும் கதிரவனை எதிர்பார்த்து காத்திருக்கும். இப்போதெல்லாம் அவர் சரியாய் வந்து விடுவார். மேகம் ஊர்ந்து, மேல் ஏறிச் செல்லும் விண்ணவன் இல்லை. தனியாய் வருகிறார். உலகைக் காக்க அவரன்றி யார் உளார்  ? இதைப் புரியவைக்க வேறு சரியான நேரம்தான் உண்டா ?   //  ‘வானே புக்கான் அரும் புதல்வன்’  மக்கள் அகன்றார்; வரும் அளவும் யானே காப்பென், இவ் உலகை’ தசரதன் இறந்துபட்டவுடன், சூரியன் வேறு எவர் வேண்டும், என்றும் நான் இருக்கிறேன் மக்களைக் காக்க, என்று தேரில் ஏறித்  தோன்றியதாக  கம்பர் எழுதுகிறார்.  மார்ச் மாத காலை பொழுது வேறு தான்.  நாய்கள் காலையிலே நிழல் தேடிக் கண்டு இன்னும் கொஞ்சம் உறங்குகின்றன. ஒரு இலையுமன்றி ...