Skip to main content

Posts

அறுசுவை அரசர்

அறுசுவை அரசர்  --------------------- நல்ல உணவு என்பது எப்போதும் எஞ்சி நிற்கும் அதன் நினைவு மட்டுமே. எப்போதோ ஒரு முறை கிருஷ்ணகிரி முன்னால் இருக்கும் முருகன் இட்லிக்கடையில் ஒரே ஒரு பொடி தோசையை தின்று விட்டு இப்போது அந்த வழியில் போனாலும் வண்டியை அங்கு நிறுத்த முடியுமா என்று கேட்கிறார். இப்போது ஏழாவது படிக்கிறார், மேலே சொன்ன சம்பவம் நடந்தது ஒரு ஐந்து வருடம் முன்பு. அந்த ஒரு தோசை வாழ்நாளில் அவருக்கு மறக்காது என்றே நினைக்கிறேன்.  அதே போல் இந்த ஒரே ஒரு தோசை சொல் வழியாகவும் பெருகும். நாலு பேர் சேர்ந்து , எல்லோர் வயிற்றிலும் பசியும் இருந்து விட்டால் ஆண்ட தோசை சிறகு முளைத்துப் பறக்கும். பேசிப் பேசி பெருக்குவார்கள். வயிற்றில் பசி இருக்கும்போது உணவைப் பற்றிய பேச்சு அவ்வளவு ஏக்கமும், இனிதாகவும் ஆகி விடுகிறது. வயிற்றில் இருக்கும் நீர் உறிஞ்சி கனலாய், கொழுந்தாய் , தனலாய் எரிந்து முடியும் வரை. பேச்சு அதன் ஊதுகுழல் போல, இல்லை உடன் வரும் பாடல் போல, அதை இன்னும் கனன்றெழச் செய்கிறது. பெங்களூர் வந்த புதிதில், சனி ஞாயிறுகளில் நண்பர்களுடன் சேர்ந்து உண்பது மறக்க முடியாத அனுபவம். ஐந்து பேர் core மெம்பர...

திக்குத் தெரியாத காட்டில்

திக்குத் தெரியாத காட்டில் ---------------------------------- கடந்த சில வாரங்களாக வேலை அதிகம். மேலிட வருகை, நன்றி காட்டும் தினம் (தேங்க்ஸ் கிவிங் டே)  வரும் எதிர்பார்ப்பில் ஆட்கள் வேலையை பொட்டணம் கட்டி முடிச்சை மட்டும் போடாமல் விட்டிருப்பார்கள். கேட்டால் கீழே அடியில் கிடக்கிறது, பையை நோண்டி எடுக்க முடியாது, மடிப்பைக் குலைக்க முடியாது , வேற ஆளைப் பார்க்க முடியுமா என்று கேட்பார்கள். லீவுக்கு முன் டேபிள்களை சுத்தமாய் பார்த்துக்கொள்வார்கள். மொத்தத்தில் வேலை பார்ப்பவர்கள் வேலை பார்ப்பார்கள் , லீவில் போவார் லீவில் போவார், அவ்வளவே. வேலை ஜாஸ்தி என்று சொல்லிக்கொண்டிருந்தேன். சுற்றியுள்ளவர்கள் வேலை, நமக்கு பொறுப்பு என்றாகிறது. வேலையில் அழுத்தம் என்பது இப்போதெல்லாம் பல மடங்கு என எண்ணத் தோன்றுகிறது. நான் முதலில் வேலைக்குச் சேர்ந்த போது , எவ்வளவு வேலை இருந்தாலும் வேலையை அங்கேயே முடித்துவிட்டே வர வேண்டும். என்னுடைய முதல் கம்பெனியில் மதியமும் , இரவும் இரண்டு நேரம் உணவுண்டு. இரவில் கட்டணம் கிடையாது. இருந்து வேலையை இழுத்து சாப்பிட்டுவிட்டுப் போவார்கள். என்னுடன் படித்து முடித்து வேலையில் சேர்ந்த இரண்...

நல்லார் இருவர் உளரேல்

நல்லார் இருவர் உளரேல் (புனைவு) -------------------------------------------- கூற்றுவன் யமன் செய்யும் கொடுமைகள் இல்லை; ஏனென்றால் குற்றமே இல்லை; யாரிடமும் கோபமும் இல்லை ; ஏனென்றால் எல்லாரிடமும் மேலான எண்ணங்கள் இருப்பதால்; நல்லறம் அன்றி செய்ய ஏதும் இல்லாததால் , நற்செயலின்றி தீய செயல் இல்லை; மேலே சொன்னது கம்பனின் பின்வரும் பாடலுக்குப் பொருள்.  'கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இலாமையால்; சீற்றம் இல்லை, தம் சிந்தையின் செம்மையால்; ஆற்ற நல் அறம் அல்லது இலாமையால், ஏற்றம் அல்லது, இழிதகவு இல்லையே.' இதை அயோத்தி நகர் மக்களைப் பற்றி கம்பன் சொல்லும் போது வரும் பாடல். இது போல் கம்பன் எங்கு பார்த்து எழுதியிருப்பான் என்று தெரியவில்லை. இல்லை செய்ய வேண்டியதன் உச்சத்தைச் சொல்லும் பாடலா ? அவர் பார்த்த உண்மை என்னவாக இருக்குமோ கடவுளுக்கு மட்டும் வெளிச்சம். ஆனால் இன்று நடந்த அனுபவம் போல் கடைசியில் என்று நடந்தது என்று நினைவில் இல்லை. ஒளியை விளக்க இருள் தேவை, இல்லையா? அடுத்த சிறு பத்திகளில் எனக்கு ஏற்பட்ட ஒரு அடர் இருள் சம்பவத்தை உதாரணமாக  விளக்கி மீண்டும் விஷயத்திற்கு வருகிறேன்.  பதினைந்து வருடங்களுக்கு...

மனிதன் நடக்க வேண்டியது அவசியமா ?

மனிதன் நடக்க வேண்டியது அவசியமா ? நம் எல்லோருக்கும் இருக்கும் ஒரு கேள்வி. காலால் நடந்து என்ன ஆகி விடப் போகிறது? தினமும் பத்தாயிரம் அடிகள் நடக்க வேண்டும் என்கிறார்கள். சிலர் ஏழாயிரம் என்கிறார்கள். இது அவசியமா? எதாவது உடல் வேலை செய்வது முக்கியமா? ஆரோக்கியத்திற்கும் , கையையும் காலையையும் அசைப்பது சம்பந்தம் உண்டா ? அதிலும் தினமும் நடப்பது அவசியமா? அண்மையில் ஹுபெர்மன் வலையொலி மூலம் மனிதனின் நிணநீர் மண்டலம் குறித்து அறிய நேர்ந்தது. இது எனக்கு கண்திறப்பாய் அமைந்தது. எனவே அதைப்பற்றிய சிறு குறிப்பு.  நான் என்னுடைய பாட்டியின் ஊருக்கு முழுப்பரிட்சை விடுமுறையில் செல்லும் போது, காலை ஆறரை மணிக்கு வெளியே தெரு பார்த்து போடப் பட்டிருக்கும் திண்ணையில் முதுகு சாய்த்து உட்கார்ந்து பேப்பர் படித்தபடி , தெருவை வேடிக்கை பார்ப்பது எனக்குப் பிடித்த விஷயம். ஊர் கண் விழிக்கும் அந்த வேளையில், மணிகள் லேசாக குலுங்க, கன்றுகள் முன்னாலும் பின்னாலும் ஓட , அவ்வப்போது கம்பு மாட்டின் முதுகில் உறையும் ஓசையுடன் , எருமையும் , பசுவும், காளைகளும் தெருவில் சாணியும், மூத்திரமுமாய் ஒரு பக்கம் ஊரணி பார்த்துச்  செல்லும். மறு...

சில கவிதைகள்

சில கவிதைகள்  Potholes  ========= எங்கும் இல்லாத குண்டும் குழியுமான  நீளமான சாலையில்  பல கார்களைப் பின் தொடர்ந்து செல்கிறேன்  நேற்று நடை வந்த குழந்தையாய்  ஒரு கால் தரையிலும்  மறு கால் காற்றிலுமாய்  ஒரே சத்தமும் கும்மாளமுமாய்  எதிரும் புதிருமாய்  தத்தித் தாவி  வீதியில் அசைந்தாடிச்  செல்கின்றன    ஒரு ரவுடிக் குழந்தையாய்  டேங்கர் லாரி  எல்லோரையும் முந்தியவாறே  'க்ளக் க்ளக்' என  வழியெல்லாம்  நீரை எல்லோர் மேலேயும்   பீச்சியடித்துக் கடந்து  செல்கிறது  உள்ளே இருக்கும் டிரைவர்கள்  பெற்றவர்களாய்   பல் கடித்துப் பார்க்கிறார்கள் ஒற்றைத்  தாமரை  ============== இந்தப் புதுக் குடியிருப்பில்  தனித் தாமரையாய் அவள்  தனிமை என்கிறாள்  ஏகாந்தம் என்று சொல்லி  தப்பித்துப்  போகிறேன் தணலும் நீரும்  ========== ஓரிரு நாளாய்  உள்ளே தணலும்  வெளியே குளிருமாய் இவ்வுடல்  வழியெங்கும் கனலாய் எரியும்  தாமிர இலைகள்  அதன் மடியைப் பற்றி விழா...

சில கவிதைகள்

சில கவிதைகள்  ஒரு மறுசுழற்சி  ============ வெள்ளை வெய்யில் அடிக்க ஆரம்பிக்கும்  இந்தக் காலையில் அந்த மாபெரும் குப்பைத் தொட்டியை  ஒருவர் கிளறிக் கொண்டிருக்கிறார்  நான்கைந்து பாட்டில்களை குப்பைத் தொட்டியின்  சுவரில் தலைகீழாய் வடிய வைத்து  சுத்தப் படுத்திக் கொண்டிருக்கிறார்  இன்னும் ஆழமாய் கிளறி பாட்டில்களை மட்டும்  தோளில் தொங்கும் கோணிப்பையில்  ஒவ்வொன்றாய் சேர்க்கிறார் அன்றைக்கு தேவைப்படும் அளவு சேர்ந்தபின்  எடை மதித்து குப்பையை  வாங்கும் கடையில்  அதை பணமாய் மாற்றுகிறார்  அதே மாபெரும் குப்பைத் தொட்டிக்கு எதிர் கடையில்  வேறொரு பாட்டிலை கூண்டின் வழியே  வலது கைவிட்டு வாங்குகிறார்  தலை மேலே தட்டி  டம்ளர் நீர் சேர்த்து  ஒரு வாயில் உள்ளே ஊற்றுகிறார்  காலி பாட்டிலை  அந்த மாபெரும் குப்பைக் தொட்டியில்  வீசியபடி நிழலில் மறைகிறார் அந்த ஒரு முடிவின் மேல் உள்ள சுமை   ============================== இப்போது  இந்த நேரத்தின் பிற எல்லா முடிவுகளும்  அந்த ஒரே ஒரு முடிவின் மேல் ஏறி நிற்...

சில கவிதைகள்

பாட்டிலும் மூடியும்  -------------------- அவரவர் பாட்டில்கள்   அவரவர் மூடிகள்   அவருடைய ஒரு  பாட்டிலை  என் மூடியை  வைத்தும் மூடலாம்  என்கிறேன்  என்னுடைய ஒரு பாட்டிலை எப்போதும்  ஒருவர்  மூடியை மாற்று  என்கிறார்  எனவே என்  எல்லா பாட்டில்களும்  கசிந்து கழுத்து நடுங்கியபடியே   இருக்கின்றன  ஓர்  கணத்தில்  எல்லா மூடிகளையும்  கழற்றி  விண்  பார்க்க  பாட்டில்களை வைத்தேன்   கையில் இருந்தது பெரும்பாலும்  காலி பாட்டில்கள் என்றறிந்தேன்  மேலும் சிலவற்றை ஒளி வற்றியது  சிலவற்றை காற்று இல்லாமல் ஆக்கியது  கடைசியில்  ஒன்றை  நானே ஓர்  மிடறாய்   குடித்துக் கவிழ்த்தேன் பாடபேதம் ------------- தொலைபேசிக் கூடுகையில்  அந்தச் சீனாக்கார பெண்மணி  இன்னொருவரை  லகுவாய் மதம் மாற்றினார்  ரவி என்ற ஒரே சொல்லை  ரஃபி என்று மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லி எதிர்காலம் என்பது  --------------------- இளமையின்  எட்டுத் திசையும் அவரை  உள்ள...