சுந்தரிக்கு யார் பொறுப்பு? --------------------------------- 'இந்த நாய்க்கு ஏற்கனவே நியூட்ரலைஸ் பண்ணியிருக்கா , இல்லையா ' வேலை விட்டு வந்து சோபாவில் கால் நீட்டி அமர்ந்தேன். இந்த வாட்சப் கேள்வி தூக்கி வாரிப்போட்டது. இரண்டு மூன்று ஸ்க்ரோலில் விஷயம் தெளிவாகியது. நியூட்ரலைஸ் என்றால் என்ன என்று மனைவியைக் கேட்டேன். விரைநீக்கம் என்றாள். கொஞ்சம் நிம்மதி. நான் நினைத்தது சுட்டுத் தள்ளுவது. சுந்தரி பெண் நாயல்லவா ? என்னுடைய சந்தேகம் இதற்கு எப்படி விரை நீக்கம். டெஸ்டோஸ்டெரோன் ஆண் தொடர்பான விஷயம் அல்லவா?. சுந்தரியை மனதில் நினைத்தால் எனக்கு ஒரு இளம் பன்றியின் நினைவு எழும், உடலின் சில இடங்களில் மேகம் போல் வெள்ளைத் தீற்றல். மற்றபடி பன்றியைப் போல் குனிந்தவாறு நடக்கும். பின்னால் கை கட்டி நடக்கும் ஒரு மூதாட்டியைப் போல். என் மகளைப் பார்த்து ஓடி வரும். CCTV -ல் படாமல் பிஸ்கட் துண்டு போடுவாள். பிரட் தின்பதில்லை. உணவு போட்டால் தரையில் சோற்றின் தடம் CCTV காட்டிக் கொடுக்கலாம். அடுத்த அடுத்த கொத்து கொத்தாய் சுந்தரியைப் பற்றிய வாட்சப்கள். 'இந்த நாய ஒண்ணா வெளிய விரட...