Skip to main content

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -3 - எழுத்தை முன்வைப்பது


எழுத்தாளர்  சமூக வலைத்தளங்களை பயன்படுத்தலாமா? 
ஆமெனில் எப்படிப் பயன் படுத்துவது?

பொதுவாக பெரிய எழுத்தாளர்கள் அந்தப் பக்கம் போகாதே என்று தான் சொல்கிறார்கள்.பாராவின்  இந்தப் பகுதி  பதிவர் ஆக எண்ணம் இருப்பவர்களுக்குச் சொல்வது என்று நினைத்தேன்.அவர் சொல்லியது தலைகீழ்.

கண்டிப்பாக சமூக வலைத்தளங்களை எழுதுபவர் பயன்படுத்த வேண்டும். 

ஆனால் நிபந்தனைகளுக்கு  உட்பட்டு.

என் அம்மாவிற்கு AI , LLM போன்ற இக்காலகட்ட முக்கிய வார்த்தைகள் தெரிகின்றன. மனிதமூளை ஆராய்ச்சி இல்லை என்றால் இன்றைய AI/LLM தொழில்நுட்பம் இருந்திருக்காது. ஆனால் மருத்துவத்துறையின் விளிம்பில் இருக்கும் ஆராய்ச்சிகள் பற்றி யாருக்கும் தெரிவதில்லை ஏன் இப்படி? . LLM ஆட்கள் சமூக வலைதளங்களில் ஓயாமல் பேசுகிறார்கள். கொண்டுபோய் சேர்த்திருக்கிறர்கள். மருத்துவத்துறையினர்  பேசுவதில்லை. அவர்கள் மொழியும் கவிதைபோல் இன்னும் எட்டாமல் நிற்கிறது. இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தங்கள் குறையாக இந்த பொதுவெளி  உரையாடல் அவர்களிடம் இல்லாமல் இருப்பது. டாக்டர்.Pal(ழனியப்பன் மாணிக்கம்)  என்றொரு டாக்டர் இதைச் செய்கிறார். அமெரிக்க பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர் பொதுமொழியில் காணொளி, வளையொலிகளை நடத்துகிறார்கள். இதை  எழுதுபவர்கள் செய்யக்கூடாதா?

பாரா கடைசியாக போஸ்டர் அடித்து நூல் வெளியீடு நடந்தது அவருடன் முடிந்தது என்றார். சவி ஷர்மா என்ற எழுத்தாளரின் புத்தக வெளியீட்டுக் கதை எப்படி நடக்கிறது என்ற புரிதல் கொடுத்தது. அவர் எப்படி ஆளுமையை முன்வைக்கிறார் என்று தெரிந்தது.

சில வருடங்கள் என்னுடன்  நெருங்கிப் பணி புரிந்தவர்  ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். 7 Steps to Joyful Living - 2nd Edition: The User Manual for Human Life. விற்பனைப்  பட்டியலில் பெரிய இடத்தில் இருக்கிறது என்கிறார். இது எப்படி விற்கிறது என்று தெரியவில்லை. போன மாதம் சாஹித்திய ஸ்பர்ஷ்  என்று விருது வாங்கிய செய்தி அனுப்பினார். நேற்று அவர் பகிர்ந்த சுட்டியில் பிசினஸ் ஸ்டாண்டர்ட் முதல் பத்து எழுத்தாளர்களில் அவர் பெயர்  இருக்கிறது. முதல் இடத்தில்  அருந்ததி ராய் பேர் இருக்கிறது. அவரைப் பற்றிய செய்திகள் நிறைய சொல்ல இருக்கிறது.  புத்தகத்தில் சொல்லிய எதையும் செய்தாரா என்று சொல்ல முடியவில்லை. உடனிருந்த ஐந்து வருடங்களில் ஒரு பத்தி  இவர் எழுதி நான் பார்த்ததில்லை. புத்தகம் உடம்பை ஹார்ட்வெர் என்றும், மனதை , எண்ணங்களை சாப்ட்வேர் என்று வெளிப்படையாக சொல்லிக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஹார்ட்வெர் தேய்ந்து  இறுதியில் வேலை செய்யாமல் போவது இறப்பு. இதெல்லாம் விஷயம் இல்லை. இவரும் தொட வேண்டியவர்களை(ஐ.டி)  வலைதளங்கள் மூலம் தொட்டிருக்கிறார். 

பாரா வகுப்பில் சொன்னதும் இதுதான். தயங்கினால் நஷ்டம் நமக்குத்தான். நம் பெயரும், முகமும் , நாம் செய்வதும் நம் அடையாளங்கள். அடையாளங்கள் வழி நம்மை யாரென்று முன் வைக்க முடிகிறது. யோசிக்கையில், ஒழுங்காக குட் மார்னிங் தினமும் போடும் ஒருவர் மேல் நல்ல பிம்பமே எழுகிறது. 

கவனம் சிதறி, ஸ்க்ரோல் செய்தே பொழுது  செல்வதால் , அந்தப் பக்கம் செல்வதை வருடக் கணக்கில் நிறுத்தியிருந்தேன் . வாட்சப் ஒன்றைத் தவிர. அவர் சொன்னபின்பு தான் வலைத்தளங்களில் எல்லா பெரிய எழுத்தாளர்களும் இருப்பதைப் பார்த்தேன். நேர விரயம் இல்லாமல், எழுத்தாளராக மட்டும் , தொடர்ச்சியாக முன் வைப்பது.  

திரும்ப கடவுச் சொல் புதிப்பித்து பேஸ்புக்கில் நுழைந்திருக்கிறேன். தொடர்ச்சியாக ஒருமணி நேரம் ஸ்க்ரோல் செய்து முடிந்தது. எழுத்தாளர்களின் பக்கங்கள் என்று நிதானப் படுத்திக் கொள்கிறேன். 

கற்றுக்கொள்ள, செய்ய நிறைய இருக்கிறது. செய்ய வேண்டியவை அழகான சிறிய ஒற்றை வாக்கிய பி.டி.எப் கோப்பில்.இதில் வேறொன்றும் மேலே சொல்ல இல்லை. (நிறைவு)

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...