பிறந்த நாள் குறிப்புகள் [1] (முன்னறிவிப்பு : இது ஒரு படத்தொகுப்பு போலவோ , இல்லை உதிர்ந்த பூக்கள் போலவோ இருக்கலாம். அப்படி இருந்தால் என் மனநிலையை சரியாய் பிரதிபலித்தது என்று கொள்வேன்) 'முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ...' https://www.youtube.com/watch?v=I2f66z7dUU0 இன்று இந்தப் பாட்டு காதில் படுவது தற்செயல் என்று கடந்து போகலாம். இப்போது இது காதில் விழ ஒரு சங்கிலித் தொடர் இருக்கிறது. அதை ஒதுக்கித் தள்ள மனம் இல்லை. இரண்டு நாள் பின்னோக்கிப் போக வேண்டும். நடை பாதையில் செர்ரிப் பூக்கள் நுரை போல் இன்னும் பூத்துக் கொண்டிருக்கின்றன. செங்கொன்றைகள் தலை காட்ட ஆரம்பித்துள்ளன. குடியிருப்பின் மாந்தோட்டம் பூத்துத் தள்ளுகிறது. வண்டுகள் அமர்ந்த இலைகள் கரும்புள்ளிகள் கொண்டிருக்கிறது. இரண்டு நாள் முன் பெய்த மழையில் மாவடுக்கள் நிலத்தில் உதிர்ந்திருக்கிறன்றன. சிறு சேவலோ கோழியோ போல கிளிமூக்கு மாங்காய் தோன்றும் எனக்கு. 'அம்மா இருந்தா பொறுக்கி மாவடு போடுவாங்க ' என்றாள் அவள். 'சரி , பொறுக்குவோம் ' என்றேன். இருவ...