Posts

Showing posts with the label கவிதை

Translate

சில கவிதைகள்

Image
 மரணத்தை நடித்தல்  -------------------------- அற்ப வயதில் ஒருவரைப்   பறிகொடுத்த அந்த  வீட்டிற்கு வந்தவர்கள் எல்லோரும்  முடிவின்மையின் சுவரில் மோதி   செய்ய ஒன்றும் இல்லாமல்  நடித்துப் பார்க்கிறார்கள்  கணவர்கள்  கணவராய்  மனைவிகள் மனைவியாய்  அன்னைகள் அன்னையாய்  தந்தையர் தந்தையாய்  அந்த உடலாய்   அதன் நோயாய்  ஒத்திகை முடிந்து  இழப்பின் அருகில்  இருக்கும் அவர் கை பிடித்து ஓரிரு சொல்லில் மற்றோர் முறை  சொல்லிற்கு அப்பால்  மற்றுமோர் முறை அவ்வுடல்  உச்சிக் கிளையின் பறவை  ----------------------------- அந்தப் பறவை  உச்சிக் கிளையில்  அமர்ந்திருந்தது  கீழிருந்து  நீரில் மிதக்கும் பறவைகள்    உற்றோர் உறவோர்  வங்கி கடன்  கூடல் பிரிவு பயம் துணிவு   தயவு தாட்சண்யம் உண்டு இல்லை  என இன்னும் பல  நாளும் பொழுதும்  கூறிய படி இருந்தன  கிளையில் இருந்த பறவை பெரும்பாலும் மொழியில்லாமல்  தலையை மட்டும் ஆட்டிக் கேட்டது  பின் ஒரு கணம்  வி...

சில கவிதைகள்

சில கவிதைகள்  Potholes  ========= எங்கும் இல்லாத குண்டும் குழியுமான  நீளமான சாலையில்  பல கார்களைப் பின் தொடர்ந்து செல்கிறேன்  நேற்று நடை வந்த குழந்தையாய்  ஒரு கால் தரையிலும்  மறு கால் காற்றிலுமாய்  ஒரே சத்தமும் கும்மாளமுமாய்  எதிரும் புதிருமாய்  தத்தித் தாவி  வீதியில் அசைந்தாடிச்  செல்கின்றன    ஒரு ரவுடிக் குழந்தையாய்  டேங்கர் லாரி  எல்லோரையும் முந்தியவாறே  'க்ளக் க்ளக்' என  வழியெல்லாம்  நீரை எல்லோர் மேலேயும்   பீச்சியடித்துக் கடந்து  செல்கிறது  உள்ளே இருக்கும் டிரைவர்கள்  பெற்றவர்களாய்   பல் கடித்துப் பார்க்கிறார்கள் ஒற்றைத்  தாமரை  ============== இந்தப் புதுக் குடியிருப்பில்  தனித் தாமரையாய் அவள்  தனிமை என்கிறாள்  ஏகாந்தம் என்று சொல்லி  தப்பித்துப்  போகிறேன் தணலும் நீரும்  ========== ஓரிரு நாளாய்  உள்ளே தணலும்  வெளியே குளிருமாய் இவ்வுடல்  வழியெங்கும் கனலாய் எரியும்  தாமிர இலைகள்  அதன் மடியைப் பற்றி விழா...

சில கவிதைகள்

சில கவிதைகள்  ஒரு மறுசுழற்சி  ============ வெள்ளை வெய்யில் அடிக்க ஆரம்பிக்கும்  இந்தக் காலையில் அந்த மாபெரும் குப்பைத் தொட்டியை  ஒருவர் கிளறிக் கொண்டிருக்கிறார்  நான்கைந்து பாட்டில்களை குப்பைத் தொட்டியின்  சுவரில் தலைகீழாய் வடிய வைத்து  சுத்தப் படுத்திக் கொண்டிருக்கிறார்  இன்னும் ஆழமாய் கிளறி பாட்டில்களை மட்டும்  தோளில் தொங்கும் கோணிப்பையில்  ஒவ்வொன்றாய் சேர்க்கிறார் அன்றைக்கு தேவைப்படும் அளவு சேர்ந்தபின்  எடை மதித்து குப்பையை  வாங்கும் கடையில்  அதை பணமாய் மாற்றுகிறார்  அதே மாபெரும் குப்பைத் தொட்டிக்கு எதிர் கடையில்  வேறொரு பாட்டிலை கூண்டின் வழியே  வலது கைவிட்டு வாங்குகிறார்  தலை மேலே தட்டி  டம்ளர் நீர் சேர்த்து  ஒரு வாயில் உள்ளே ஊற்றுகிறார்  காலி பாட்டிலை  அந்த மாபெரும் குப்பைக் தொட்டியில்  வீசியபடி நிழலில் மறைகிறார் அந்த ஒரு முடிவின் மேல் உள்ள சுமை   ============================== இப்போது  இந்த நேரத்தின் பிற எல்லா முடிவுகளும்  அந்த ஒரே ஒரு முடிவின் மேல் ஏறி நிற்...

சில கவிதைகள்

பாட்டிலும் மூடியும்  -------------------- அவரவர் பாட்டில்கள்   அவரவர் மூடிகள்   அவருடைய ஒரு  பாட்டிலை  என் மூடியை  வைத்தும் மூடலாம்  என்கிறேன்  என்னுடைய ஒரு பாட்டிலை எப்போதும்  ஒருவர்  மூடியை மாற்று  என்கிறார்  எனவே என்  எல்லா பாட்டில்களும்  கசிந்து கழுத்து நடுங்கியபடியே   இருக்கின்றன  ஓர்  கணத்தில்  எல்லா மூடிகளையும்  கழற்றி  விண்  பார்க்க  பாட்டில்களை வைத்தேன்   கையில் இருந்தது பெரும்பாலும்  காலி பாட்டில்கள் என்றறிந்தேன்  மேலும் சிலவற்றை ஒளி வற்றியது  சிலவற்றை காற்று இல்லாமல் ஆக்கியது  கடைசியில்  ஒன்றை  நானே ஓர்  மிடறாய்   குடித்துக் கவிழ்த்தேன் பாடபேதம் ------------- தொலைபேசிக் கூடுகையில்  அந்தச் சீனாக்கார பெண்மணி  இன்னொருவரை  லகுவாய் மதம் மாற்றினார்  ரவி என்ற ஒரே சொல்லை  ரஃபி என்று மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லி எதிர்காலம் என்பது  --------------------- இளமையின்  எட்டுத் திசையும் அவரை  உள்ள...

கவிதை - ஒரு சுய புரிதல்

Image
கவிதை ஒரு சுய புரிதல்  மரபு இலக்கியம் வாசிக்கும்போது நம்மாலும் இப்படி எழுத முடியுமா என்று ஆசை எழுகிறது. மனுஷ்ய புத்திரன் , விக்ரமாதித்யன் , கல்யாணி, கலாப்ரியா போன்றவர்களின் கவிதைகளை விரும்பிப் படிப்பேன். முன்னெல்லாம் தேவ தேவன் பிடிபடக் கடினமாக இருந்தன. இப்போதெல்லாம் பரவாயில்லை. ஆனால் அவர் சொல்லும் வால்ட் விட்மன் போன்ற ஆங்கிலக் கவிஞர்கள் படித்ததில்லை. இப்போது ஒரு ஆர்வம் வருகிறது, இதற்கெல்லாம் காரணம் கம்ப ராமாயணம் படிக்க ஆரம்பித்ததே என நினைக்கிறேன்.கம்பன் என்றால் கற்பனை, காட்சிப் படுத்துதல், மொழி அழகு, நாடகத் தருணங்கள், நாலு வரிக்குள்ளும் இருக்கும் மிக நுண்ணிய விவரணைகள் என்று சொல்வேன். இதை ஏன் (இன்னும் முதல் புத்தகம் மட்டுமே ) எனக்குப் படிக்கத் தோன்றுகிறது என்றால் 'செஞ்சொற் கவி இன்பம்' என்பதே. படித்ததும் ஒரு உவகை ஏற்படுகிறது. இதையே தேவதேவன் தன்னுடைய கவிதை பற்றி என்ற நூலில் கவி அனுபவம் என்கிறார். ஏனோ சில நாட்களாக இதிலேயே மனம் செல்கிறது. இப்போதெல்லாம் வண்டியில் செல்லும் போதும் வரும் போதும் பெரும்பாலும் கிண்டிலில் கவிதையே படிக்கிறேன். கவிதை படித்துப் பின் வருவதை இது ஒரு போதை போல என்...

சில கவிதைகள்

1. கடுமையான டிராபிக் ஜாமில்  ====================== கடுமையான டிராபிக் ஜாமில்  என்ன செய்யலாம்  நிறைய தண்ணீர் நிறைத்துவைத்து  இடையிடை அருந்தலாம்  யாருக்காவது போனை முடுக்கி  வலியப்  பேசலாம்  வண்டியை ஓரமாய் நிறுத்தி    ஆசுவாசமாய் சிறுநீர் கழிக்கலாம்  'துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க' கேட்கலாம்  இல்லை விக்ரமாதித்யனின்  ஆழித்தேர் கவிதை படிக்கலாம்  வீடு சேர்ந்ததும் வெந்நீரில் குளித்து  எல்லாம் மறக்கலாம் 2. சமரசம் உலாவும் இடம்  =================== சாம்பல் வெள்ளை சிவிகையில் (பென்ஸ்) செல்பவர்கள்  நிரந்தர சல்லியர்கள் ரதம் ஓட்ட செல்பவர்கள்  தேரையும் சல்லியர்களையம் சிறிது இரவல் வாங்கி செல்பவர்கள்  குளிரூட்டப்பட்ட பெரிய வண்டியில்  வெண்குடை சாமரங்களுடன் பலர்  கையில் தட்டுத் தாம்பாளங்கள் மங்கலங்கள்  வேதகோசமும் சாமகீதமும் விடாமல் ஒலிக்க  தேர் யானை குதிரை காலாட்படைகள்  எல்லாமும் விக்கித்து நிற்கின்றன  ஒரே ஒரு அடி நகர்வும்  எழுப்பும் ஒலியால் அடுத்தவர் உரைத்...

சில கவிதைகள்

வார் தளர்ந்த உள்ளாடை எப்போதும் ஜூம் அழைப்பில் முதலில் அவரே பேசத் தொடங்குகிறார் இடைநிறுத்தி எங்கும் மீண்டும் மீண்டும் பேசுகிறார் உள்ளோடும் பதட்டத்தை எதோ ஒரு சொல்லால் மீண்டும் வெளிப்படுத்துகிறார் எப்போதும்   தளர்ந்த   உள்ளாடை முதலில் போடும் போது   சரியாக நிற்கிறது பின்னர் நடக்கும் போது காலுக்குள்   அதுவும் என்னுடன்   நடக்க ஆரம்பிக்கிறது அப்புறம் சிறு பிள்ளை போல் மூடிய கதவில் முட்டி நிற்கிறது அதன் பின் அங்கேயே   பிள்ளையாய்   உறங்கி   விடுகிறது வார்   தளர்ந்த   உள்ளாடை   உள்ளே   இருப்பதால்   ஒரு   சௌகரியம்   இருக்கிறது பின் தேவைப் படும் போது இடம் மாற்றினால் போதும் வெளியில் வார்   போட்டு இறுக்க வேண்டாம் அடிக்கடி புதுப்பிக்கத் தேவையில்லை எதோ உள்ளே இருக்கிறது என்று அமைதி கிடைக்கிறது இது போல் எல்லாம் நாம் முன்னரே   செய்திருக்கிறோம் உங்களில் நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லி முடிக்கிறார் . வார் தளர்ந்த   உள்ளாடையும...