ஆப்பிளின் கதை - Dr. கே எஸ் குப்புசாமி
ஆப்பிளின் கதை - Dr. கே எஸ் குப்புசாமி -------------------------------------------------- பேராசிரியர் குப்புசாமி பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கணிப்பொறித் துறையில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஆப்பிள் நிறுவனத்தின் கதை மெட்ராஸ் பேப்பரில் தொடராக ஐம்பது வாரங்கள் வந்திருக்கிறது. இப்போது ஜீரோ டிகிரி பதிப்பகத்தின் வழியே புத்தகமாக வெளியாகி இருக்கிறது. சென்னையில் ஏறி பெங்களூரு இறங்குவதற்குள் நாற்பத்தியேழு அத்தியாயங்களையும் படித்து முடித்தேன். இரவுப் பயண இருட்டில் செல்போன் கைவிளக்கின் வெளிச்சத்தில் படிக்கும் அளவுக்கு விரைவான நடையும் மொழியும். எனக்கு ஆப்பிளோடு பத்து வருடப் பரிச்சயம் இருக்கிறது. இப்போதைய வேலையில் சேர்ந்து ஏழு வருடங்கள் ஆகப்போகின்றன. இன்டெல் பக்கம் சப்ளையராக சில வருடங்கள் இருந்த அனுபவமும் உண்டு. புத்தகம் ஆப்பிள் நிறுவனத்தின் அடையாளமான வெள்ளை நிறத்தில், சாம்பல் நிற எழுத்துக்களில் பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்டிருக்கிறது. புத்தகத்தில் ஒரு இடத்தில் ஸ்டீவ் ஜாப்ஸின் வெள்ளை நிற அப்செஷன் (Obsession) பற்றியும் வருகிறது. இந்தப் புத்தகத்தில் என்னைக் கவர்ந்தது அதன் துல்லியம். கண்ணை விழ...