Posts

Showing posts with the label ஜெயமோகன்

Translate

நேரத்தைக் கையாள நடைமுறை வழிகள் - ஜெயமோகன்

நேரத்தைக் கையாள வழிகள் - ஜெயமோகன் எழுத்தாளர் ஜெயமோகன் காணொளி உரை கீழே இறுதியில் இருக்கிறது. இரண்டு முறை (80%-20%)  பார்த்து எழுதியது. செயல் என்பது காலத்துடன் இணைந்தது. காலத்தைக் கையாளுவதற்குப் பெயர் தான் செயல் எனப்படுவது. காலத்தைப் பற்றிய பிரக்ஞை இல்லாதவனால் செயலாற்ற முடியாது, செயல் என்பது நேரத்தைச் செலவழிப்பது மட்டுமே.  காலத்தை எப்படி நடைமுறையில் கையாளுவது?.  சில பொன்விதிகள். 1. இது காலத்தை வீணாக்குகிறதா? தொலைக்காட்சி, சமூக ஊடகம் போன்றவை நேரம் உறிஞ்சவே வடிவமைக்கப் பட்டுள்ளன. நம் நேரத்தை பிக் பாக்கெட் செய்கின்றன. நாளின் நேரத்தை இதில் விரயம் செய்கிறோமா என்ற கேள்வி பலமுறை கேட்டுக்கொள்ள வேண்டும். 2. செயலில் குவிதல். ஒதுக்கிய நேரத்தில் ஒதுக்கிய செயலை மட்டுமே செய்ய வேண்டும். முழுமனதுடன், முழு கவனத்துடன் அந்த ஒரே செயலை மட்டும் ஆற்ற வேண்டும். இரண்டு வேலை செய்யலாகாது. இந்த நேரத்தில் வேறு எதுவும் நடுவில் குறுக்கிடக் கூடாது.  3. கோல்டன் டைம் :  காலை நேரம் ஆற்றல் உள்ளது. அதை முக்கியமான செயல்கள் செய்ய உபயோகம் செய்ய வேண்டும். கற்பனை உச்சத்தில் இருக்கும் நேரம். மாலை நேரங்களை ...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

Image
தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

Image
தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

Whip your brain

Image
இன்று நான் மொழிபெயர்த்த மூளையை சாட்டையலடியுங்கள் என்ற கட்டுரை ஜெயமோகன் unified wisdom தளத்தில் வெளிவந்திருக்கிறது. மீண்டும் ஒரு முறை படித்தேன் , சரளமாகவே இருந்தது, ஒரு சில இடங்களில் இன்னும் நன்றாய் வந்திருக்கலாம் என்றும் தோன்றியது.  எனினும் உற்சாகமாய் இருந்தது. https://www.jeyamohan.in/214403/ https://unifiedwisdom.today/2219-whip-your-brain

Can we manage our brain? - மொழிபெயர்ப்பு

சென்ற வாரம் சனிக்கிழமை காலை , இந்தக் கட்டுரை படித்தவுடன் , மொழிபெயர்க்க வேண்டும் (ஹர்ஷிதாவுக்கு) என்று தோன்றியது. முதல் மொழிபெயர்ப்பு ... மனதை வழிக்குக் கொண்டுவரும் பிடி வெளி உலகத்திலேயே இருக்கிறது என்பது ஒரு பெரிய திறப்பு என்று தோன்றியது. வெளியை ஒழுங்கு செய்வதே , உள்ளத்தை சரி செய்ய ஒரே வழி.   மொழிபெயர்ப்பு:   https://www.jeyamohan.in/213969/  மூலம் இங்கே : https://www.jeyamohan.in/213214/

மனக்குகை ஓவியம்

Image
மனக்குகை ஓவியம்  சென்ற முறை இந்திராநகர் Atta Galatta வில் நடந்த கதை வாசிப்புக் கூடுகையைப் பற்றி முக்கால் எழுதியது இருக்கிறது. கூடுகை இரண்டு குறுநாவல்கள் பற்றியது 1) கிளி சொன்ன கதை 2) தீ அறியும்.  கூடுகைக்குப் பின், எவ்வளவு மனங்கள் உண்டோ அவ்வளவு பார்வைகள் உண்டு என்று மட்டுமே சொல்ல முடியும். எனக்கும் வாசிப்பில் சில திறப்புகள் கிடைத்தன. கேட்டல் இனிது. அதற்குள் நாளை அடுத்த கூடுகை வந்துவிட்டது.  Atta Galatta இடத்தைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். இந்த புத்தகக் கடையில் ஒரு மேஜையை கலந்துரையாட நமக்கென்று ஒதுக்குகிறார்கள். புத்தகத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். உள்ளேயே காபி டீயெல்லாம் கிடைக்கிறது. எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கிறார்கள். உட்கார்ந்து பேச மிக அழகான இடம். வசதியான இருக்கைகள், சிலபேர் லேப்டாப் , டேப்லட் போன்றவைகளை மேஜையில் வைத்துப் பேசினார்கள். இந்த முறை குகை என்ற குறுநாவல். https://www.jeyamohan.in/115739/ https://www.jeyamohan.in/115744/ https://www.jeyamohan.in/115752/ https://www.jeyamohan.in/115763/ இந்தக் கதை கடந்...

ஒரு ஸ்டம்ப் சிக்கியது

ஒரு ஸ்டம்ப் சிக்கியது ஒரு ஸ்டம்ப் சிக்கியது   நேற்று முன்தினம் இரவு சரியாக மூன்று  மணி நேரம் முழு நெட்ஒர்க் இல்லாத ஒரு வருட முடிவு கொண்டாட்டத்தில் இருக்கும் போது அம்மா கால் தவறி கீழே விழுந்து ஆளாளுக்கு தொடர்புகொள்ள முயற்சித்திருக்கிறார்கள். நானாய் திரும்ப அழைக்கும் போது அருகிலிந்தவர்கள் ஆம்புலன்ஸில் கூட்டிச்சென்று திரும்ப வீட்டில் விட்டிருந்தார்கள். கடவுள் செயலால் பெரிதாய் ஒன்றும் இல்லை. இது இப்படி இருக்கும் போது அடுத்த நாள் கடையில் இருந்தபோது A/C யில் ஏன் நெற்றியில் வேர்க்கிறது என்று கடைப்பெண் கேட்பதாக மனைவி கேட்டார்.  ஜெயமோகன் தளத்தில் நான் எழுதியது வந்திருப்பதாகச்  சொன்னார்கள், அதைத்தான் படித்துக் கொண்டிருந்தேன். திரும்பிப் படிக்கும்போதும் நன்றாய் இருப்பதாகவே நினைத்தேன். https://unifiedwisdom.guru/200415 https://www.jeyamohan.in/208506/ கிரிக்கெட்டில் ஜெயித்த வேகத்தில் ஸ்டம்புகளை ஆளுக்கொன்றாய் உருவி எடுத்துச் செல்வார்கள். ஒரு ஸ்டம்பு கையில் கிடைத்தது இன்று.

கோயிலுக்காக ஒரு பயணம்

Image
கோயிலுக்காக ஒரு பயணம் ஜெயக்குமார் அவர்களின் அடுத்த வகுப்பு அறிவிப்பு வந்ததும், ஒரு நண்பரையும் (உடன் படித்தவர்) உடனே பெயர் பதிவு செய்துவிட்டேன். இது மூன்றுநாள் வகுப்பு, முந்தைய நாள் பயணம் சேர்த்து நான்கு நாட்கள்.  அடுத்த சிக்கல் என்னவென்றால் அக்கம் பக்கம் என்ன சொல்லிவிட்டுச் செல்வது.  எங்காவது இமயமலைப் பக்கம் ஷேத்ராடனம் போல் இருந்தால், சொல்லிக்கொண்டு போவது எளிது. அண்மையில் நீம் கரோலி பாபா பார்க்க என்று சொல்லிவிட்டு ஒருவர் அமெரிக்காவிலிருந்து வந்ததாகச் சொன்னார்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் , மார்க் ஸுக்கர்பர்க் இருவரையும் கூடச் சேர்த்தால் ஒர்க் அவுட் ஆகிவிடும். ஆனால் இது வெள்ளிமலை. ஒருவர் ஜெயமோகன் , மற்றொருவர் ஜெயக்குமார். அண்ணன் தம்பியா , இல்ல அப்பா புள்ளையா என்ற ஒரு கேள்வி வந்தது.  ஒரு கோயிற்கலைக்கென்று  ஒரு  செமினார் என்று ஒரு சிலரிடம் சொன்னேன்.முகங்கள் நிமிர்ந்தன , விழிகள் அகன்றன, முகக் கண்ணாடிகள் கழன்று கையில் வந்தன. முடிவில் 'சாமி கும்புடறதா , இல்ல ?'  'இல்ல , இது எப்படி கும்புடுறதுனு சொல்லிகொடுக்கற ஒரு வகுப்பு'.  டெம்பிள் ஆர்ட் என்று சொல்லிப்பார்த்தேன். ஹாபி...

பெங்களூர் இலக்கியவிழா, மொழி -கடிதம்

Image
  பெங்களூர் இலக்கியவிழா, மொழி -கடிதம் December 6, 2022 அன்புள்ள ஜெயமோகன், தங்கள் தளத்தில் நீங்கள் பெங்களூர் இலக்கிய விழாவிற்கு வருவதாக வெளியானவுடன், கண்டிப்பாக இந்த தடவை தயக்கங்களை மீறி எப்படியாவது நேரில் பார்த்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். நான் இங்கு கணிப்பொறி துறையில் (ஆப்பிள் நிறுவனத்தில்) பணி புரிகிறேன். உங்கள் எழுத்துக்களையும், தளத்தையும் கடந்த பதினைந்து  வருடங்களுக்கும் மேலாக நாள் விடாமல் படித்து வருகிறேன். என்னுடைய புத்தக சேகரிப்பில் பாதிக்கு மேல் நீங்கள் எழுதிய புத்தகங்களே உள்ளன. அல்லது நீங்கள் எங்காவது குறிப்பிட்ட வேறு புத்தகமாவே இருக்கும். உங்கள் புத்தகங்கள் இல்லாமல் என் வேலையையோ, வாழ்க்கையையோ இப்போது இருக்கும் ஒரு தெளிவுடன் எதிர் கொண்டிருக்க முடியாது. நன்றி சார். தங்களை இன்று நேரில் பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. என் பையன், பெண், மனைவியையும் தங்களைப் பார்க்க கூட்டி வந்திருந்தேன். அவர்கள் எல்லோருக்கும் உங்களை நேரில் சந்தித்தது மிக மகிழ்ச்சி. குறிப்பாக நீங்கள் பேசி முடிந்தவுடன், எல்லோருக்கும் பொறுமையாக மகிழ்வுடன் கையெழுத்திட்டத்தையும்,  அரை மணி நேரத்திற...