ஒரு யாசித்தல்
ஒரு யாசித்தல் ------------------ என்னுடைய நடைபாதையில் எனக்கு அது முக்கியமான இடம். நான் இருக்கும் இந்தச் சாலை பத்து வருடப் பழக்கம். சாலையே இல்லாமல் இருந்த காலம் தொட்டு, இப்போது இரண்டு வழிச் சாலை வரை. வழியில் ஒரே ஒரு டீக்கடை. ஐயங்கார் பேக்கரி. நானே பார்த்து எத்தனையோ கை மாறியிருக்கிறது. இப்போது எதிரில் ஒரு காம்ப்ளக்ஸ் வந்திருக்கிறது. கிழக்கே இருக்கும் கடையைப் பார்த்து முப்பது அடி உயர ஆஞ்சநேயர் சிலை இருக்கிறது. கடைக்குப் பின்னால் ஓடும் சாலையில் இறங்கினால் கோபசந்திரா கிராமம். சுரைக்காய் , திராட்சைத் தோட்டங்கள் பார்க்கலாம். அதுவே எனது வழிப்பாதை. நான் இங்கே போகும் மாலை வேளைகளில் , எதிர் நிற்கும் புளிய மரத்தின் பின்னால் முழு வானமும் தெரியும். இதைத் திரும்பச் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த இடத்தில் இருந்து பார்த்தால் தொடுவானம் வரை விண்முட்டும் கட்டிடங்கள் எதுவும் சூரியனுக்குக் குறுக்கே வராது. எல்லாம் தாண்டி பொன்னொளி புளியமரத்தில் விழும். இலைகள் நுனிகளில் தளிர் ஒளி கொள்ளும். நாளில் ஓரிரு முறையேனும் இங்கு வந்து போவது என் வாடிக்கை. தலை பின்னிக் கொண்டை முடிந்த பையன் பல வருடங்களாக ...