Posts

Showing posts with the label கோவில்

Translate

சொல்லில் அடங்காத வலி

Image
சொல்லில் அடங்காத வலி கடந்த சில தினங்களில் மீண்டும் தேவாரப் பாடல்கள் ஒன்றிரண்டு காணொளி பார்த்து கற்றுக் கொண்டேன்.  நாவுக்கரசரின் வீரட்டானதுறைப் பதிகம். குறிப்பாக கீழே உள்ள மூன்று.  'கூற்றாயினவாறு விலக்ககலீர் கொடுமை பல செய்தன  நானறியேன்  ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்  தோற்றதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி  முடக்கியிட  ஆற்றேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்துறை அம்மானே ' 'சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடுயிசை பாடல் மறந்தறியேன்  நலம்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் என்நாவில் உன்நாமம் மறந்தறியேன்  உலந்தார்தலை யில்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருள்வாய்  அலந்தேன் அடியேன் அதிகைக் கடில வீரட்டானத்துறை அம்மானே ' 'போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய் ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய் வேர்த்தும்புரண் டும்விழுந் தும் எழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய் ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே." திருவதிகை கடலூர் பண்ருட்டி வழ...

'கண் இலான் பெற்று இழந்தான் '- பரங்குன்றம் சிட்டி சென்டர்

Image
'கண் இலான்  பெற்று இழந்தான் '- பரங்குன்றம் சிட்டி சென்டர்  மேலை நாடுகளில் சிட்டி சென்டர் அல்லது ஸ்கொயர் என்று ஊரில் ஒரு இடம் இருக்கும். ஊரின் மிகப் பெரிய சர்ச் , அதை ஒட்டிய கடைத் தெருக்கள் நாலாபுறமும் இருந்து அந்த பெரிய சதுர சதுக்கத்தில் முடியும். சதுக்கத்தில் நடுவில் நூற்றுக் கணக்கான புறாக்கள் சாட்டையை வீசியது போல ஒன்றாய் எழுந்து பறந்து மீண்டும் அமர்ந்து தத்தித் தத்தி  கொத்தித் தின்ன ஆரம்பிக்கும். சிலர் உள்ளங்கையில்  சோளத்தை வைத்துக் காட்டினால் , முழங்கையில் உட்கார்ந்து கொத்தி உண்ணும். ஆண்களும் பெண்களும் சதுக்கத்தை ஒட்டி அமைந்த பிஸ்சாரியாக்கள் , கஃபே , பார்களில் மணிக்கணக்காய் அமர்ந்து  வேடிக்கை  பார்த்திருப்பார்கள். சதுக்கத்தில் நடுவில் ஓவியம்  வரைபவர்கள், வயலின் வாசிப்பவர்கள் போன்று எவரையாவது பார்க்க முடியும்.  சதுக்கம் சுற்றி நாற்காலிகள் போட்டிருக்கும். துளி மண்ணைக் காண முடியாத , பாறைகளை பதித்துக் கட்டப்பட்ட கல்பாதைகள். இப்படி வேடிக்கை பார்க்க மதுரையில் சிட்டி சென்டர் என்று சொல்லத்தக்க பல இடங்கள் இருக்கின்றன. முதலில் வருவது அன்னை மீனாட்சியைச் ச...

"பரன் சென்று சேர் திருவேங்கட மாமலை" - திருப்பதி பயணக் குறிப்புகள் -2

Image
"பரன் சென்று சேர் திருவேங்கட மாமலை" - திருப்பதி பயணக் குறிப்புகள் -2 தமிழ் இலக்கியத்தில் திருமலை பற்றிய குறிப்பு தொல்காப்பியத்தில் இருக்கிறது. பின்னர் சங்கப் பாடல்களிலும் ஒரு சில குறிப்புகள் வருகின்றன.இதன் பின்னர் சிலப்பதிகாரத்தில் திருவேங்கடத்தை சுட்டும் பாடல் வரிகள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் ஒருவர் தவிர மற்ற எல்லோரும் பாடியிருக்கிறார்கள். மொத்தம் 204 பாசுரங்கள். திருவரங்கத்தை அடுத்து பாடல் எண்ணிக்கையில்  இரண்டாவது. கம்பரும் வேங்கடத்தானை குறித்திருக்கிறார். சிலப்பதிகாரத்தில் மூவரும் (கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள்) மதுரை நோக்கி வரும்போது உறையூரில் தங்கி மதுரைக்கு வழி கேட்க, வழி சொல்பவர் குறிப்பதாக திருமலை வருகிறது. மதுரைக் காண்டம், காடு காண் காதை, வழி சொல்பவன் மாங்காட்டு மறையோன். இது இரண்டாம் நூற்றாண்டுக் குறிப்பு. கம்பராமாயணத்தில் கிட்கிந்தா காண்டத்தில், நாடவிட்ட படலத்தில் திருமலையைப் பற்றிய சான்றுகள் வருகின்றன. இதுவும் சுக்ரீவன் சீதையைத்  தேடிச் செல்லவேண்டிய இடங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. கம்பராமாயணம் பன்னிரண்டாம் நூற்றாண்டு எழுதப் பட்டது. சிலப்பதிகாரத...

"பரன் சென்று சேர் திருவேங்கட மாமலை" - திருப்பதி பயணக் குறிப்புகள் -1

Image
எல்லாமும் ரொம்ப ஈசியாக நடந்துகொண்டிருப்பது போல் இருந்தது. வேலைவிட்டு வந்து சரியாக மாலை ஏழு மணிக்கு டாக்ஸி ஒரே முயற்சியில் புக் ஆனது. அந்தப்பையன் புது வண்டியை (ஓனர்) ஒட்டிக்கொண்டு வந்தார். அவரே பஸ் வரும் இடத்தை அறிந்திருந்தார். வாழ்வாங்கு வாழட்டும். அப்பாவும் டிரைவராக ஊரில் இருக்க வேண்டும். போனில் இங்கிருந்து வழி சொல்லிக்கொண்டிருந்தார். தெலுங்கு தான் அவருக்கு வந்தது. நமக்கு தெலுங்கும் வராது. எதோ மைலேஜ் , CNG, டிராபிக்  போன்ற உதிரி வார்த்தைகளாய் போய்ச் இறங்கியதும் பஸ் சரியாக 8:50 என்ற குறித்த நேரத்திற்கு வந்தது. போன வாரம் திருப்பதிக்கு டிக்கெட் எடுக்கும் போதும் ஒரே நொடியில் நான்கு பேருக்கும் புக் ஆனது. ஒரு சிலரிடம் பேசி இதெல்லாம் சரியாகப் போகிறதா என்று விசாரித்தேன். சரிதான் என்றார்கள் பெரும்பாலும். டிக்கெட்டில் அடைப்புக்குறியில் பிரீ தர்ஷன் என்று இருந்தது. முன்னப் பின்ன சென்றால் தானே தெரியும், இதற்க்கு இன்னும் விளக்கம் பின்னால் வருகிறது. கடைசி நிமிடத்தில் ஆரம்பித்ததிலும் இவ்வளவு நேர்த்தியாய் எல்லாம் நடந்து கொண்டிருப்பது தான் நான் சந்தேகப்பட்டது. வோல்வோ வண்டி அலுங்காமல் சென்றது. அசோகம...

கோயிலுக்காக ஒரு பயணம்

Image
கோயிலுக்காக ஒரு பயணம் ஜெயக்குமார் அவர்களின் அடுத்த வகுப்பு அறிவிப்பு வந்ததும், ஒரு நண்பரையும் (உடன் படித்தவர்) உடனே பெயர் பதிவு செய்துவிட்டேன். இது மூன்றுநாள் வகுப்பு, முந்தைய நாள் பயணம் சேர்த்து நான்கு நாட்கள்.  அடுத்த சிக்கல் என்னவென்றால் அக்கம் பக்கம் என்ன சொல்லிவிட்டுச் செல்வது.  எங்காவது இமயமலைப் பக்கம் ஷேத்ராடனம் போல் இருந்தால், சொல்லிக்கொண்டு போவது எளிது. அண்மையில் நீம் கரோலி பாபா பார்க்க என்று சொல்லிவிட்டு ஒருவர் அமெரிக்காவிலிருந்து வந்ததாகச் சொன்னார்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் , மார்க் ஸுக்கர்பர்க் இருவரையும் கூடச் சேர்த்தால் ஒர்க் அவுட் ஆகிவிடும். ஆனால் இது வெள்ளிமலை. ஒருவர் ஜெயமோகன் , மற்றொருவர் ஜெயக்குமார். அண்ணன் தம்பியா , இல்ல அப்பா புள்ளையா என்ற ஒரு கேள்வி வந்தது.  ஒரு கோயிற்கலைக்கென்று  ஒரு  செமினார் என்று ஒரு சிலரிடம் சொன்னேன்.முகங்கள் நிமிர்ந்தன , விழிகள் அகன்றன, முகக் கண்ணாடிகள் கழன்று கையில் வந்தன. முடிவில் 'சாமி கும்புடறதா , இல்ல ?'  'இல்ல , இது எப்படி கும்புடுறதுனு சொல்லிகொடுக்கற ஒரு வகுப்பு'.  டெம்பிள் ஆர்ட் என்று சொல்லிப்பார்த்தேன். ஹாபி...

சம்பக தாமா

Image
சம்பக தாமா ஒன்று கூடி படிக்கவோ எழுதவோ மனம் சிதறாமல் இருக்க வேண்டும். வேலை தான் காரணம் என்று சொல்லிச் செல்லலாம். ஆனால் அதிலும் அருகிலிருக்கும் ஆட்கள் தான் காரணம். இவர்களை நம்மால் தேர்வு செய்ய முடியாது, எல்லாம் தானாக அமைவது தான். அதிலும் ஒரு சிலர் காற்று துளியே ஆனாலும் அறை முழுதும் பரவுவது போல், நம்மை முழுதும் ஆக்கிரமிக்கிறார்கள். நம்மை அறியாமல் சிந்தனை ,செயல் எல்லாம்,  ஆக்கிரமிக்கிறார்கள். இது நேர்மறையாய் இருந்தால் ஒன்றும் இல்லை. எதிர்மறையாய் ஆகும்போது இன்னும் சிக்கல் வருகிறது.  ஒரு கட்டிடம் கட்டும் போது மண்வெட்டியும், கைக்கரண்டியும்  அவசியமே. ஆனால் மண்வெட்டி கொத்துவது, கைக்கரண்டி கட்டுவது. ஒரே கொத்திக் கொண்டிருந்தால், கட்டிடம் தானாய் எழாது. ஒரு இடத்தில் கொத்துபவர்கள் நிறுத்தி விட வேண்டும். கட்டுபவர்கள் அன்று மிகுதி  இருந்தால் வேலையும் ஆகிறது.   ஏன் இதெல்லாம் சொல்ல வேண்டும் என்றால், இப்படி கொத்துபவர் ஒருவர் சில வாரங்கள் லீவில் இருக்கும் போது அலுவலகத்திலும்  கோடை அனல் போய், வள்ளலார் சொல்வது போல் ஆகிறது.  நிழலும், மலர் பூத்த தெள்ளிய ஓடை நீரும், மெல்லிய பூ...