இயற்கையை அறிதல் - எமர்சன் -3 மொழி
இயற்கையை அறிதல் - எமர்சன் -3 மொழி ------------------------------------------------------ இயற்கை மனிதனுக்கு அளிக்கும் மூன்றாவது உபயோகம் மொழி. 1. சொற்கள் இயற்கை நிகழ்வுகளின் குறியீடுகள் 2. ஒவ்வொரு இயற்கை நிகழ்வும் மனதில் நிகழும் ஆன்மீக நிகழ்வின் குறியீடு 3. இயற்கை ஆன்மாவின் குறியீடு 1. சொற்கள் இயற்கை நிகழ்வுகளின் நேரடிக் குறியீடுகள் இயற்கையின் வெளிப்புறத் தோற்றத்தை அறிவது , அதன் பின்னிருந்து இயக்கும் அதீத ஒன்றையும் அறிய உதவும். படைப்பில் இருக்கும் பொருள்கள், மொழி வழியாக , நம் உள்ளிருக்கும் படைப்பாக உருமாறுகின்றன. ஒரு பொருளின் தோற்றத்தில் இருந்தே நாம் அறிவையும், ஒழுங்கையும் குறிக்கும் சொற்களைப் பெறுகிறோம். சரி என்பது நேராக இருப்பது. தவறு என்பது கோணலானது. ஆத்மா என்பது காற்று. மீறல் என்பது ஒரு கோட்டைத் தாண்டுவது. இதயம் என்றால் உணர்ச்சி. தலை சிந்தனையைக் குறிக்கும். சிந்தனை , உணர்ச்சி போன்ற சொற்கள் பொருளைக் குறிப்பதில் இருந்து , மனதைக் குறிப்பதாக ஆன்மீக உலகிற்கு வந்தன. குழந்தைகள் இதையே செய்கின்றன. குழந்தைகளும், பழங்குடியினரும் பெயர்ச்சொற்களையே செயலைக் குறிக்கவும், மனதைக் குறிக்கவும் பயன் ப...