Posts

Showing posts with the label கம்பன்

Translate

கலங்கும் பொழுது தெளியுஞ்சொல் - கலைவாணி

கலங்கும் பொழுது தெளியுஞ்சொல் -  கலைவாணி சரஸ்வதி அந்தாதி  அந்தாதி என்றால் ஆதி + அந்தம் , முதலும் , முடிவும் இரண்டுமானது என்று பொருள். சரஸ்வதி அந்தாதி என்றால் , முதலும் முடிவுமான சரஸ்வதி என்று பொருள்.  சிறுவயதில் பாட்டி  அபிராமி அந்தாதி சாத்திரத்திற்கு ரெண்டு மூன்று பாட்டு  சொல்லிக் கொடுக்கும்போது அந்தாதி என்றால் முடிந்த எழுத்தில் அடுத்த பாடல் ஆரம்பிக்கும் என்று சொல்லிக் கொடுத்தார். நூறு செய்யுளும் மாலை கோர்த்தது போல் நினைத்துக் கொள்ள வேண்டும். ஆரம்பித்த சொல்லில் திரும்ப முடியும். ஆனால் இதன் குறியீட்டுப் பொருள் முதலும் முடிவுமான கடவுளை மனதில் வைத்துப் பாடுவது. கம்பர் ராமாயணம் போக இயற்றிய நூல்களுள் ஒன்று சரஸ்வதி அந்தாதி. டூயட் படத்தில் மெட்டுப்போடு பாட்டுக்கு முன் ஒலிக்கும் , அவரது அம்மா மணி அடித்து ஆரத்தி காட்டிப் பாடும் துதிப் பாடல் கம்பர் அந்தாதியின் இரண்டு காப்புப் பாடலின் முதலாவது.  'ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்   ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய   உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே   இருப்பள் இங்கு வாராது இடர்'...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

Image
தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

Image
தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

மேதி கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த பால்

Image
மேதி கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த பால்  நேற்று வண்டியில் வேலைக்குச் செல்லும்பபோது ஒரு காட்சி. நல்ல கூட்ட மிகுதியான அகரா சிக்னல் தாண்டி U டர்ன் எடுக்கும் இடத்தில் எப்பவும் விட அதிக நெரிசல். நெரிசலான ஒரு சிக்னலைக் கடந்து இன்னொரு நெரிசலை நோக்கிப் போகும் வழியில் நெரிசல் . இங்கு எதிர் திசையில் வருவார்கள், இரண்டு திசைகளிலும் U டர்ன் செய்வார்கள்,  ஒரு பெரிய BMTC பேருந்து U டர்ன் செய்ய முடியாமல் நின்று கொண்டிருந்தது வெகு நேரமாய். எல்லோரும் ஒரு மாதிரி முடிந்த வரை நகர்ந்து கொண்டிருந்தார்கள். நானும் அவ்வாறு அருகில் வந்தததும் தான் இந்த ஸ்பெஷல் நெருக்கடி விஷயம் புரிந்தது. ஒரு தாய்ப் பசு அப்படியே U டர்ன் போடுமிடத்தில் நின்றுகொண்டிருந்தது விஷேஷமில்லை. அதன் மடியில் இளம் கன்று பால் குடித்துக் கொண்டிருந்தது. இரண்டு கால்கள் பின்னால் இழுத்து முட்டி முட்டி உறிஞ்சிக் குடித்தபடி இருந்தது. நடத்துனர் கீழே இறங்கி விரட்டிப் பார்த்தார். டிரைவர் மேலே இருந்து சிரித்தார். யாருக்கும் அது அசைந்து கொடுக்கவில்லை. அன்னை ஓரடி அசைய மறுத்தாள். கன்று யார் தள்ளுக்கும் விடவில்லை. எனது தாத்தா மாடுகள் பராமரிப்பவர...

விளிம்பில் வாழ்தல் அல்லது தாமரை உறங்கும் செய்யாள்

Image
கடந்த சில தினங்களாக கம்ப ராமாயணம் வாசிக்கும் ஒரு குழுவின் வழியாக ராமாயணப் பாடல்கள் வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாரம் ஒரு முறை சில பாடல்கள். இப்போது மீண்டும் இரண்டாவது முறை ஆரம்பித்துள்ளது என்கிறார்கள். ஒரு வாரத்தில் பத்துப்  பாடல்கள் என்றால் படித்து முடிக்க இருபது வருடங்கள் என்று ஒரு சிலர் பேசிக்கொண்டார்கள். நமக்கு வேலை ஒய்வு வந்திருக்கும் , இப்பிறவி  வாழ்வில் ஓய்வு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. ஆகவே இதைக் கடந்து போய்ப்பார்க்கலாம் என்று சிலபஸில் வராததை படித்துப் பார்க்கிறேன். இதன் முன் நாய் நுகர்வது போல் அங்கங்கு வாடை பிடித்துப் போய் கொஞ்சம் படித்திருக்கிறேன். இம்முறையாவது உருப்படும் என நினைக்கிறேன். கம்பர் கவிதை எழுத அவையடக்கம் என்று ஏழு பாடல்கள் எழுதி வைத்திருக்கிறார். அதில் தான் எழுத வந்ததை ஒரு  பூனை 'ஓசை பெற்ற உயர் பாற்கடல் , முற்றவும் நக்குபு புக்கவும் ' என்று சொல்லிக்கொள்கிறார். படிப்பதற்கே நமக்கு இதற்கு மேலும் , இன்னமும்  'நீங்கலா அலகிலா விளையாட்டுடையவர் ' அருள் வேண்டும். விக்ரமாதித்யன் 'சங்கம் படித்திருந்தால் சீரிய கவிஞன் ஆகலாம் / சிலம்பு படித்திருந்த...

தாழ்வது, தாழ்வு இல் கனக் கரியான் கை...

Image
 தாழ்வது, தாழ்வு இல் கனக் கரியான் கை...  நேற்று கிருபானந்த வாரியார் அவர்களின் பேச்சைக் கேட்டபடி வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வாரியார் சொன்ன கம்பனின் ஒரு உவமை  தலையில் இருந்தது. கற்பனை செய்து பார்க்கவே கிளர்ச்சியாய் இருந்தது. வாமனன் மூன்றடி மண் அளக்க ஆரம்பித்து அவன் , முதலில் உயர்ந்தான். அவன் எப்படி உயர்ந்தான் ? 'உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே' , உயர்ந்தவர் ஒருவருக்கு செய்த உதவி போல் வாமனன் உயர்ந்தான். இதைக் கேட்டு நான் வேள்விப் படலம் வாசித்துப், பின் அதை எழுத வந்த உந்தலை  எழுதும் முன் வாரியார் பேச்சு இப்போது இடையில் தடுக்கிறது. அதற்குள் போய் வெளியேறுவோம். இளையான்குடி மாறனார் கதையை சொல்லிக்கொண்டு வந்தார். பேசும்போது சிவனடியார்களுக்கு விருந்தோம்புவது வந்தது. மாறனார் வீட்டு சமையலை அப்படி விவரித்தார். பலாப்பழ பாயாசம், அன்னாச்சிப் பழ மோர்க்குழம்பு பின்னர் வாழ்வில் வறியவரானதும் கேப்பைக் களி , காசினிக் கீரை கூட்டு. புளித்த கீரை என்பார்கள், கீரையை மசித்து பெருங்காயமிட்ட தாளிதம் , இதற்குப் புளி கூட தேவையில்லை என்றார். கொஞ்சம் விழுதாக இருக்கும் என்றார், களிக்கு ...