மன உளைச்சலுக்கான காரணங்கள்
கீழ் வருபவை மன உளைச்சல் ஏற்படும் காரணங்கள். இதைச் சொல்பவர் மூளைச் செயல்பாட்டை வாழ்க்கை முழுதும் ஆய்வு செய்பவர். Behvae என்று மூளையைப் பற்றிப் புத்தகம் எழுதியிருக்கிறார். பெயர் ராபர்ட் சபோல்ஸ்கி, ஸ்டான்போர்ட் விரிவுரையாளர். 1. நடந்த உரையாடல்களை மனதில் மீண்டும் மீண்டும் நிகழ்த்திப் பார்ப்பது. முதல் முறை நடந்த சம்பவம் மனதில் எவ்வளவு உளைச்சலை ஏற்படுத்தியதோ, அதுவே மீண்டும் மீண்டும் அதை மீட்டிப் பார்க்கையில் நிகழ்கிறது. நிகழ்ந்த அவமானங்கள், சரியாக நடக்காத செயல்கள், சிறிய, பெரிய துரோகங்கள் போன்றவை. 2. நடக்கப்போகும் சம்பவங்களை எண்ணிக் கவலைப் படுவது. பள்ளியில் சேர்ப்பது, வயதாவது, வேலை கிடைப்பது போன்ற பின்னால் வரும் சம்பவங்களுக்காக கவலைப் பட்டு பிரயோஜனம் இல்லை. ஏதாவது உடனே, சீராக செய்ய இருந்ததால் செய்து கவலையைத் தள்ளி வைக்க வேண்டும். 3. தொடர்ந்து செய்திகள் பார்ப்பது . 4. துன்பமான, வன்முறையான நிகழ்ச்சிகளை, வீடியோக்களை பார்ப்பது. கற்பனைக்கும் நிஜத்திற்குமான வித்தியாசம் நரம்பு மண்டலத்திற்குத் தெரியாது. அடுத்தவர்க்கு நடப்பதைப் பார்ப்பதும், தனக்கு நடப்பதும் மனதளவில் ஒன்றுதான். 5. நம்...