மதுரைப் பயணம் - கண்ட சில மாற்றங்கள்
மதுரைப் பயணம் - கண்ட சில மாற்றங்கள் ----------------------------------------------- வருடத்திற்குப் பல முறை மதுரை செல்கிறேன். பல வருடங்கள் இப்படிச் செல்கிறேன். இந்த முறைதான் தெரு விளக்குகள் எரிவதைப் பார்க்கிறேன். நான் சொல்வது பிரதான சாலையில் அல்ல. வீட்டுப் பகுதிகளில், மனிதர்கள் இரவில் நடமாடும் இடங்களில் விளக்கு எரிகிறது. முன்னெல்லாம் நம் வீட்டு குழல் விளக்கை தெருவுக்காகப் போட்டு வைக்க வேண்டும். எனக்கு எல்லா தெரு விளக்குகளும் ஒரே நேரத்தில் எரிவது பேரதிசயம். மாணிக்கம் தாகூர் இப்பகுதியில் வசிக்கிறார், அவரே எம்பி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் .அதுவாக இருக்குமோ என்று நினைத்தேன். இதன் முன்னாலும் அவர் தான் என்ற மறு சிந்தனை வந்தது. இரண்டாவது, சாலையின் மேல் ஒரு ஸ்கூல், குறுக்குச் சாலையில் இன்னொன்று என்று வீட்டின் அரைக் கிலோமீட்டரில் இரண்டு கல்விக் கூடங்கள். ஒரு கிலோமீட்டரில் இன்னும் சில பாட சாலைகள் உள்ளன. இதன் நடுவில் தான் முள்ளென டாஸ்மாக் இருந்தது. சிலர் ஒதுங்கிப் போவார்கள். சிலர் சாஸ்வதம் போல் ஏற்றுக் கொண்டு நடமாடுவார்கள். இந்த டாஸ்மாக் அரசின் விதிகளின் படி மூடப் பட்டிருக்கிறது. குடியை ஒழித்தால் உ...