Posts

Showing posts with the label வாசிப்பு

Translate

ஆப்பிளின் கதை - Dr. கே எஸ் குப்புசாமி

Image
ஆப்பிளின் கதை - Dr. கே எஸ் குப்புசாமி  -------------------------------------------------- பேராசிரியர் குப்புசாமி பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கணிப்பொறித் துறையில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஆப்பிள் நிறுவனத்தின் கதை மெட்ராஸ் பேப்பரில் தொடராக ஐம்பது வாரங்கள் வந்திருக்கிறது. இப்போது ஜீரோ டிகிரி பதிப்பகத்தின் வழியே புத்தகமாக வெளியாகி இருக்கிறது. சென்னையில் ஏறி பெங்களூரு இறங்குவதற்குள் நாற்பத்தியேழு அத்தியாயங்களையும் படித்து முடித்தேன். இரவுப் பயண இருட்டில் செல்போன் கைவிளக்கின் வெளிச்சத்தில் படிக்கும் அளவுக்கு விரைவான நடையும் மொழியும். எனக்கு ஆப்பிளோடு பத்து வருடப் பரிச்சயம் இருக்கிறது. இப்போதைய வேலையில் சேர்ந்து ஏழு வருடங்கள் ஆகப்போகின்றன. இன்டெல் பக்கம் சப்ளையராக சில வருடங்கள் இருந்த அனுபவமும் உண்டு. புத்தகம் ஆப்பிள் நிறுவனத்தின் அடையாளமான வெள்ளை நிறத்தில், சாம்பல் நிற எழுத்துக்களில் பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்டிருக்கிறது. புத்தகத்தில் ஒரு இடத்தில் ஸ்டீவ் ஜாப்ஸின் வெள்ளை நிற அப்செஷன் (Obsession) பற்றியும் வருகிறது. இந்தப் புத்தகத்தில் என்னைக் கவர்ந்தது அதன் துல்லியம். கண்ணை விழ...

'மறக்க முடியாத மனிதர்கள்' - வண்ண நிலவன் - சென்ற தலைமுறை ஆடம்பரம்

Image
சில நாட்களாக வண்ணநிலவன் எழுதிய 'மறக்க முடியாத மனிதர்கள்' வாசித்துக் கொண்டிருந்தேன். மாம்பழந்தானே என்றாலும் எல்லோருக்கும் அதை லாவகமாய் நறுக்க வருவதில்லை. அப்பா நன்றாக ரசித்து மாம்பழம் வெட்டுவார். என் மாமனார் அதன் தோலை ஒரு பச்சைத் தடமில்லலாமல் சீவி எடுப்பார். அவருக்கு அது குழந்தை மென்மை. குழந்தைக்கு தலை மழிப்பது. அது எல்லா நாவிதர்களுக்கும் கை வருவதில்லை. என் பையன் முதல் தலைமழிப்பு, முடியெல்லாம்  ரத்தத்தில் ஒட்டி, கண்ணிலும், மூக்கிலும் நீர் கொட்டி போராய் முடிந்தது நினைவில் வருகிறது. ஒவ்வொரு தோலுக்கும் தனிக் குணம் இருக்கிறது. மேலும் எல்லாக் கத்திகளும் எல்லா வேலைகளையும் செய்வதற்கில்லை. கத்தியின் கூறும், தோலின் பதமும் அறிந்தவர் கை தேர்ந்த திருத்துநர் ஆகிறார். அப்படி மாம்பழம் வெட்டுவது போன்ற எழுத்து வண்ண நிலவனுடையது. அவரால் மறக்க முடியாத பத்து எழுத்தாளரகளைப் பற்றிய தொகுப்பு. படித்து முடித்தால் அவருடைய வாழ்வின் கோட்டுச் சித்திரம் மிக அழகாக வெளிப்படுகிறது. தன்னைச் சிறிதும் நடுவில் நிறுத்தாமல் எழுதிய தன் வரலாறு போல் தோன்றியது. யார் நெருக்கம், யாரிடம் வியப்பு, யார் சக எழுத்தாளர்கள் என்று ...

அசோகமித்திரனின் சைக்கிள்

Image
அசோகமித்திரனின் சைக்கிள் இந்த மாத விஷ்ணுபுரம் சொல்லாழி  கூடுகைக்கு முன் 18வது அட்சக்கோடு வாசித்தேன். அசோகமித்திரன் சைக்கிளில் போகும் பிம்பம் ஏனோ என் மனதில் வந்துகொண்டே இருந்தது. அசோகமித்திரன் பிற கதைகளில் வரும் சைக்கிள்களை தேடிப் பார்த்துக்கொண்டிருந்தேன். இது ஏனென்றால் நானும் ஒரு ஏழு வருடங்களாக, இங்கிருக்கும் போக்குவரத்து நெரிசலை நினைத்து தினமும்  போவதும் வருவதும் பதட்டமாகி உள்ளே பொறுமுவதை விட, சைக்கிளில் சென்று பார்க்கலாம் என்று ஒரு நாள் தோன்றியது. அலுவலகத்திற்கு சைக்கிள் மிதிக்க ஆரம்பித்தேன். ஒரு பக்கம் 15 கிமீ.  முதலில் மணி நேர உடற்பயிற்சி என்று நினைத்தேன். பின்னர் சில வாரங்களில் மனம் போட்டியில்லாததால் அமைதியடைய ஆரம்பித்தது என நினைத்தேன். பின்னர் அதில் ஏறினால் சிந்தனை ஒன்று படுவது போல் தோன்றியது. பின்னர் தெருவில் வேடிக்கை பார்த்து ஒரு சிறு விளையாட்டும் ஆனது. பின்னர் இந்த சைக்கிள் அனுபவங்களை எழுதிப் பார்த்திருக்கிறேன் சாம்பிள்கள் சில ).   கடந்த ஞாயிறு கூடுகைக்குப் பின், நேற்று அசோகமித்திரனை மீண்டும் தேடிப் படித்தேன். சாகித்திய அகாடெமி காணொளியில் லான்சர் பார்க்...

கவனித்தலின் அடிப்படைகள் : : ஒரு சுய பரீட்சை :-)

Image
கவனித்தலின் அடிப்படைகள்: ( https://www.jeyamohan.in/203824/ ) இது ஒரே ஒருமுறை மேற்கண்ட காணொளியை கண்டு, அதை என்னால் கவனிக்க முடிந்ததா என்று சந்தேகத்தில்,  செய்த சுயபரிசோதனை. பதினைந்து நிமிடம் தான் ஆனாலும் சிறு முயற்சி. எது கவனித்தல் இல்லை? சொல்பவர் சொல்வதை கேட்டு அதிலிருந்து நாம் புரிந்துகொண்டதை சுருக்கிச் சொல்வது கவனித்தல் ஆகாது. நீங்கள் புரிந்துகொண்டது சொன்னவர் சொல் கிடையாது. அதற்க்கு அவர் பொறுப்பேற்க முடியாது. பெரும்பாலும் கவனித்தல் என்று சொல்லப்படுவது இதுவே. ஆனால் இது கவனித்தல் ஆகாது. இரண்டாயிரம் வருடங்களை வேதாந்த குருமரபுகளில் சொல்லப்படும் கவனித்தல் வேறு. இந்தப் பிழையை சுட்டிக்காட்ட நித்யாவின் குருகுலத்தில் ஒரு முறை அசைந்து உட்காரும் போது தனக்கு நிகழ்ந்த அனுபவத்தை விளக்குகிறார். நித்யா ஜேயை அவர் பாடம் கவனிக்கவில்லை என்கிறார். இவர் கவனித்தேன் என்கிறார். பின்னர் சொல்லக் சொல்கிறார். இவர் அவர் சொன்னதை சுருக்கித் தான் எடுத்துக் கொண்டதைச் சொல்கிறார். குரு இதுவல்ல தான் சொன்னது என்கிறார். சாராம்சத்தை மட்டும் சொல்ல வேண்டும் என்றால் அவரே சொல்லியிருக்க மாட்டாரா? தான் ஏன் இவ்வளவு சொல்ல வேண...

மனக்குகை ஓவியம்

Image
மனக்குகை ஓவியம்  சென்ற முறை இந்திராநகர் Atta Galatta வில் நடந்த கதை வாசிப்புக் கூடுகையைப் பற்றி முக்கால் எழுதியது இருக்கிறது. கூடுகை இரண்டு குறுநாவல்கள் பற்றியது 1) கிளி சொன்ன கதை 2) தீ அறியும்.  கூடுகைக்குப் பின், எவ்வளவு மனங்கள் உண்டோ அவ்வளவு பார்வைகள் உண்டு என்று மட்டுமே சொல்ல முடியும். எனக்கும் வாசிப்பில் சில திறப்புகள் கிடைத்தன. கேட்டல் இனிது. அதற்குள் நாளை அடுத்த கூடுகை வந்துவிட்டது.  Atta Galatta இடத்தைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். இந்த புத்தகக் கடையில் ஒரு மேஜையை கலந்துரையாட நமக்கென்று ஒதுக்குகிறார்கள். புத்தகத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். உள்ளேயே காபி டீயெல்லாம் கிடைக்கிறது. எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கிறார்கள். உட்கார்ந்து பேச மிக அழகான இடம். வசதியான இருக்கைகள், சிலபேர் லேப்டாப் , டேப்லட் போன்றவைகளை மேஜையில் வைத்துப் பேசினார்கள். இந்த முறை குகை என்ற குறுநாவல். https://www.jeyamohan.in/115739/ https://www.jeyamohan.in/115744/ https://www.jeyamohan.in/115752/ https://www.jeyamohan.in/115763/ இந்தக் கதை கடந்...

வெண்முரசு வண்ணக்கடல் - சில அழகியல் குறிப்புகள் -1

Image
 வெண்முரசு வண்ணக்கடல் - சில அழகியல் குறிப்புகள்  இந்தப் பதிவு கடந்த ஒரு சில வாரங்களின் அழகியல் பற்றிய நூல்களின் மீள் வாசிப்பும் , பின் மேலான புரிதலுக்குப் பின் எழுதும் குறிப்புகள். வண்ணக்கடல் முதல் 15 அத்தியாயங்களை மறுவாசிப்பு செய்யும் போது எடுத்த குறிப்புகள். இளநாகன் இருக்கும் சிற்றூர் நிலச்சித்திரம் , மனிதர்களின் தோற்றம் குறித்த பகுதி, வேகத்தைக் குறைக்காமல் கதைக்குள் அழகாக வருகிறது. ஒரு அத்தியாயம் பெரும்பாலும் ஒரு சிறுகதையாக படிக்க முடிந்தது. ஒன்றை நோக்கிச் செல்லும் வேகம், ஓரிரு மையப் பாத்திரம், அவர்களை ஒட்டிச் செல்லும் ஒரு குறுங்கதை என்ற கட்டமைப்பு உள்ளதாகவே நினைக்கிறேன்.  , அதை ஆளும் குறுநிலமன்னன் சித்தரிப்பு கதையின் போக்கில் அழகாகச் சொல்லப்படுகிறது, அவர்களது சேலை தலைப்பாகையாக  , விசிறி சுவடியாவது, அவர்கள் வயது, அவர்களை பையன்கள் அழைத்து வந்திருப்பது, அவர்களுக்கு உணவின் மேலிருக்கும் குறி போன்றவை கதையின் வேகத்தைக் குறைக்காமல் வருகின்றன.கண்முன்னே நிகழ்த்திக் காட்ட வேண்டும் , ஆனால் வேகம் குறையாமல்  , துருத்தலும் இல்லாமல் இருக்க வேண்டும். சொல்லவேண்டியது என்ன என்ப...

விசும்பின் துளி

Image
விசும்பின் துளி  ஒவ்வொரு பொங்கல் சங்கராந்தியிலும் இந்த இரண்டு விஷயங்களை தவறாமல் நினைவு கூர்கிறேன். இன்னும் இங்கு சூரியன் வரவில்லை. இடையில் நெடுநாளாய் எண்ணி இருந்த இந்தப் பதிவு. ஒன்று வெண்முரசில் வண்ணக்கடலில் வரும் இளநாகன் அர்க்கபுரிக்குச் செல்லும் இடம். மஹாபாரத அர்க்கபுரி இன்றைய ஒரிஸ்ஸாவின் கோனார்க். பாரதத்தில் சூரியனின் முதல் ஒளிக்கதிர் விழும் இடம் என்று சொல்லப்படுவது. இளநாகனுக்கு சூரியனின் கதையை சொல்லும் இப்பகுதி , கர்ணன் துரியனால் அங்க மன்னனாக முடிசூட்டபின் அவன் மாபெரும் கொடையாளியாக உருவெடுக்கும் இடமும் கூட.  https://venmurasu.in/vannakkadal/chapter-49 காசியபருக்கு தட்சனின் மகளான அதிதியில் ஆதித்யர்களும் வசுக்களும் ருத்ரர்களும் பிறந்தார்கள். அவர்களில் முதன்மையானவர்கள் பன்னிரு ஆதித்யர்கள்.  விவஸ்வாவின் மைந்தனே உயிர்த்துளியாக முளைத்த வைஸ்வாநரன். சூரியனின் தேர் ஒன்பதாயிரம் யோஜனை நீளமுள்ளது. பன்னிரு தேர்ச் சக்கரங்களே கால வடிவங்கள். அறிவென்ற வேதங்கள் அவன் மார்பில் கவசங்கள். பெருநாகங்கள் கடிவாளங்கள். அவன் அழிவற்ற பிரம்மத்தின் வடிவம். சூரியக் குழந்தை இதே போல் என்றென்றும் புகழோ...

The Psychology of Money - Morgan Housel - பணத்தின் உளவியல் ,சில குறிப்புகள்

Image
Psychology of  Money - Morgan Housel -  பணத்தின் உளவியல் ,சில குறிப்புகள் எனக்கு தினமும் வரும் டைஜஸ்ட்(வடிக்கப்பட்ட, பொறுக்கப்பட்ட, செரிக்கப்பட்ட  ? ) மெயில்களில்  quora-வில் இருந்து தவறாமல் சில வரும். நான் அவைகளைப் படிப்பதால் , அவை இன்னமும் வருகின்றன. அழகாய்த் தொகுக்கப்பட்ட நான்கைந்து கேள்விகள். எல்லாமும் இந்த இரண்டு கேள்விகளுள் அடங்கும், என்றோ ஒரு நாள் நான் தேடியவையாக இருந்திருக்க வேண்டும். ஒன்று, பணமிருந்தால் எங்கு முதலீடு செய்து அதை பெருக்குவது. இரண்டாவது, என்றோ வேலையில் இருந்து ஓய்வு பெற இன்று என்ன செய்ய வேண்டும், எவ்வளவு சேமிக்க வேண்டும்.  'நாற்பது வயது, இரண்டு குழந்தைகள்,58 வயதில் ஐந்து கோடி சம்பாதிக்க இன்று என்ன செய்ய வேண்டும்?' '60 வயது, ரிட்டயர்டு , கையில் எண்பது லட்சம் இருக்கிறது. இதை வைத்து 80 வயது வாழ என்ன செய்ய வேண்டும்'. எண்கள் மாறலாம் , ஆனால் இன்றும் இவை இரண்டும் மனதில் துருத்தி நிற்கும் கேள்விகள்.  இதற்க்கு வரும் பதில்களும் ஓரிரு மாதிரிகளில் அடங்கி விடும். ஏறத்தாழ ஜாதகம் மாதிரி இடத்திற்கு இவர்களும் இதை நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள்....

பிரம்ம வித்தை - கீதை குறிப்புகள் 5 - நூல் அமைப்பு

Image
பிரம்ம வித்தை - கீதை குறிப்புகள் 5 -  நூல் அமைப்பு  கீதையில் 18 அத்தியாயங்கள். இதில் ஒரு கட்டமைப்பு உள்ளது என்று இதற்க்கு உரை எழுதிய எல்லா முக்கியமான ஆசிரியர்களும் சொல்லியிருக்கிறார்கள். இதைப் புரிந்து கொள்ளவது நூலைப் புரிந்துகொள்வதற்கு மிக அவசியம் என்று சொல்லியிருக்கிறார்கள். கீழே வருவது சித்பவானந்தர், நித்ய சைதன்ய யதி, குரு முனி பிரசாத் மற்றும் அவர் வழி வந்தவர்களின் உரைகளில் படித்தது. சித்பவானந்தர் கீதை சொல்வதை ஞானயோகம் , பக்தியோகம் , கர்மயோகம்  என்ற மூன்றாய் வகுக்கலாம் என்கிறார். கீதை பறவை என்றால் ஞானயோகமும் பக்தியோகமும் அதன் இரு சிறகுகள். பறப்பதற்கு சிறகு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதன் வாலும் ஆகும். ஒரு பட்டத்தின் வாலும் , கயிறும் போல. பறவையின் வாலே அதை நிலையாய் விண்ணில் பறக்க வைக்கிறது. அதன் பறக்கும் திசை அதை நம்பியே இருக்கிறது. ஞானமும், பக்தியும் சிறகுகளென்றால் , கர்மயோகமே அதன் வால். உலகில் ஆற்றும் செயலே கீதை என்ற பறவையின் வாலென்றாகும். எந்த ஒரு இடத்திலும் செயலை நிறுத்து என்று கீதை சொல்லவில்லை. யோகநிலையில் இருந்து தீவிரமாக செயலாற்றவே சொல்கிறது. இகத்துக்கும...

பிரம்ம வித்தை - கீதை குறிப்புகள் 4 - கீதையின் Genre

Image
இளவயதில் சரஸ்வதி பூஜைக்கு எடுத்து அடுக்கிய புத்தகங்களில் தவறாமல் சித்பவானந்தர் எழுதிய கீதையும் இருக்கும். ஒரு நாள் முழுதும் எதுவும் படிக்காமல் இருக்க வேண்டும். படிக்கும் பிராயத்தில் வாழ்க்கையில் ஒரு நாள் எவ்வளவு மதிப்புடையது என்பது தெரியும், தவறவிட்ட நாட்கள் அவைகள்...இப்படி எழுதலாம். படிக்காமல் இருந்த எவ்வளவோ நாட்களில் இதுவும் ஒன்று. அங்கீகாரம் பெற்றது அவ்வளவுதான்.   அப்பா 'புத்தகத்தை திறந்து உட்காரமாட்டேங்காணே' என்று மட்டும் தான் சொல்வார். நானும் புத்தகத்தை மடியில் கிடத்தி , கீழ்த் திண்ணையில் உட்கார்ந்து விடுவேன். எங்கோ போய்க்கொண்டிருக்கிறது, ஆனால் இன்னும் விளக்கியே ஆக வேண்டும். நாங்கள் வாழ்ந்த தெருவின் எல்லா வீடுகளிலும் பெரிய திண்ணைகள் இருக்கும். ஒரு ஐந்து ஆறு மாமாக்கள்  பெரிய வட்டமாய் அமர்ந்து மூன்று கட்டு  ரம்மி விளையாடுவார்கள். ஒருவர் எண்ணிக்கை எழுதுவார். அக்காக்கள் மனைவிகள் மேல்திண்ணையில் இருந்து வந்தும் போயும் பார்த்து , மனதிற்குள் வைவார்கள். ஏனென்றால் இது நாள் பூராம் நடக்கும். மொத்தம் 320 எண்ணிக்கை ஆட்டத்தில் இருந்து வெளியேற. பல மாமாக்கள் 'ஸ்க்ரூட்' என்று சொல...