Posts

Showing posts with the label பயணம்

Translate

எல்லோரும் இந்நாட்டு...

Image
எல்லோரும் இந்நாட்டு...  ------------------------------- பலவருடங்கள் முன் படித்த தேசாந்திரி புத்தகத்தில் எஸ் ராமகிருஷ்ணன் சிட்டி பஸ் மாறி மாறி சென்னை வரை போய் வந்ததை ஒரு அனுபவமாக எழுதியிருப்பார். இவ்வகைப் பயணம் எனக்கு மிக இஷ்டம். இப்போது என்றாவது தோன்றி கட் ஜர்னீ  செய்வதுண்டு. வேடிக்கை பார்த்தபடி போகலாம்.  மெட்ரோவில் நேற்று ஒரு குடும்பம். குட்டி அக்கா, கைக் குழந்தை தம்பி, அவர் அம்மா. தம்பி விரல் சூப்பி இரு கைகளிலும் வார்னிஷ் பண்ணி வைத்திருந்தார். இன்னும் வாய்க் கூழின் மீதம் வாயில் ஒட்டி இருந்தது. அக்கா அம்மாவிடம் தம்பியை வாங்கி, ரயில் கண்ணாடி பார்க்க திருப்பி நிறுத்தினார்.தம்பி கன்றென பலமுறை அவள் கைமீறிச்  சந்தோஷத்தில் எம்பிக் குதித்தார். நீல வானமும், சுழலும் மரங்களும், உயர்ந்த கட்டிடங்களும் அவரை ஆச்சரியப் பட வைத்தன. அக்கா 'சூடு, சூடு, எட்ல போசுந்தி சூஸ்திவா....சூஊஊஊ அட்ல..எட்ல எட்ல சொப்பு..' என்றார். தம்பி பல  முறை அவர் வாய் பார்த்து முடிவில் 'சூஊஊஊ' என்றார். விஷயம் என்னவென்றால் நேற்று சென்னை வரை பேருந்துகளில் போய் திரும்பி வந்தேன். சந்தாபுரா, அத்திப்பள்ளி, ஒசூர...

உள்ளிருக்கும் காடு

Image
உள்ளிருக்கும் காடு ------------------------ ஒரு வாரமாக காடு மனதினுள்ளே இருந்து கொண்டிருக்கிறது. சென்ற வார குடகுப் பயண எச்சம். இதை எழுதியெடுக்க இன்னும் உள்ளே உருட்டித் திரட்ட வேண்டியிருக்கிறது. இப்படி எழுத நினைப்பது முதல் நாள்களில் கொழுந்து விட்டு எரிந்து, அதன் பல நூறு நாவுகள் வாய் மூடி மௌனமாகி கனலாய்க்  கரியாய்ப் போவது புதிதல்ல. வேலையையும் பொழுதையும் குறை சொல்லிகொண்டே இருக்கலாம். விஷயம் அதுவல்ல. மனதின் உள்ளே ஒருங்க வேண்டும். அது வேறு ஒரு காடு. கிளை பிரிந்து பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. காலையோ, கையோ, கழுத்தையோ பற்றி வெளியிருக்கும் வனத்திற்கு வர நினைத்தேன்.  எனவே கானுலா செல்லும் வீடியோக்களை பார்த்தபடி இருந்தேன்.  ஒருவர் பங்களுரில் இருந்து மைசூர் தாண்டிப் போகும் காவி என்னும் காட்டு வழியைப் பதிவு செய்திருந்தார்.  நாற்பத்தைந்து நிமிடமும் பெரிய திரையில் பார்த்தேன். ஒரு வழிப் பாதையில் அரசாங்கப் பேருந்தில் செல்லும் பயணம். மரங்களில் உரசி பேருந்தின் கண்ணாடியில் இலைகள் பயணித்தபடி வந்தன. ஏதோ ஒரு பறவையின் எச்சம் ஒட்டியிருந்தது. ஒரு காட்டெருமை அழகிய ப்ராக்கெட் போன்ற கொம்புகளை ...

நெய் தவழ் வயிரப் பாறை - ஒரு ரயில் பயணம்

Image
நெய் தவழ் வயிரப் பாறை  எப்பொழுதும் தனியாய்ச் செல்லும்பொழுது பேருந்தில் செல்வதே என் வழக்கம். நான் செல்லவேண்டியது ஈரோடு அந்தியூர் பக்கம். சென்றமுறை மேட்டூர் வழியாக , முந்தய நாள் இரவும் அல்லாத பகலும் அல்லாத அந்தியில் வேலை முடித்து ஆரம்பித்து , சரியாய் நள்ளிரவின் பின் சென்று சேர்ந்தேன்.  சென்று சேர்ந்தது மேட்டூர், செல்ல நினைத்திருந்ததோ அந்தியூர். இந்த ஊர்களெல்லாம் நள்ளிரவில் எப்படி இருக்கும் என்ற நல்ல அனுபவம் கிடைத்தது. இருட்டில் மூத்திரம் பெய்பவர்கள், மப்ளர் அணிந்து வான் வெளியில் நிற்பவர்கள், உட்கார இடமில்லாமல் குத்த வைத்திருப்பவர்கள், வரும் ஒரே வண்டிக்காக காத்திருக்கும் எல்லோரும் போல் அந்த வண்டிக்காக அவர்களில் ஒருவராய் நானும் நின்றேன். கடைசியில் இருட்டில் மூத்திரம் பெய்து முடித்த அந்த ஒரு பெரியவரிடம் 'அந்தியூர் அடுத்த வண்டி எப்ப  வரும்' என்றேன். 'இந்த இப்ப வந்துரும்' என்றார். 'எத்தனை மணிக்கு' என்றேன். 'அஞ்சரைக்கு' என்று என்றார். மணி இரவு பன்னிரெண்டே முக்கால். பின்னர் ஒரு விடுதியில் தங்கி காலையில் வயலில் வேலைக்குப் போகும் பெண்களுடன் மீண்டும் பயணம் ஆரம்பித்த...

சொல்லில் அடங்காத வலி

Image
சொல்லில் அடங்காத வலி கடந்த சில தினங்களில் மீண்டும் தேவாரப் பாடல்கள் ஒன்றிரண்டு காணொளி பார்த்து கற்றுக் கொண்டேன்.  நாவுக்கரசரின் வீரட்டானதுறைப் பதிகம். குறிப்பாக கீழே உள்ள மூன்று.  'கூற்றாயினவாறு விலக்ககலீர் கொடுமை பல செய்தன  நானறியேன்  ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்  தோற்றதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி  முடக்கியிட  ஆற்றேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்துறை அம்மானே ' 'சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடுயிசை பாடல் மறந்தறியேன்  நலம்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் என்நாவில் உன்நாமம் மறந்தறியேன்  உலந்தார்தலை யில்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருள்வாய்  அலந்தேன் அடியேன் அதிகைக் கடில வீரட்டானத்துறை அம்மானே ' 'போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய் ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய் வேர்த்தும்புரண் டும்விழுந் தும் எழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய் ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே." திருவதிகை கடலூர் பண்ருட்டி வழ...

"பரன் சென்று சேர் திருவேங்கட மாமலை" - திருப்பதி பயணக் குறிப்புகள் -2

Image
"பரன் சென்று சேர் திருவேங்கட மாமலை" - திருப்பதி பயணக் குறிப்புகள் -2 தமிழ் இலக்கியத்தில் திருமலை பற்றிய குறிப்பு தொல்காப்பியத்தில் இருக்கிறது. பின்னர் சங்கப் பாடல்களிலும் ஒரு சில குறிப்புகள் வருகின்றன.இதன் பின்னர் சிலப்பதிகாரத்தில் திருவேங்கடத்தை சுட்டும் பாடல் வரிகள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் ஒருவர் தவிர மற்ற எல்லோரும் பாடியிருக்கிறார்கள். மொத்தம் 204 பாசுரங்கள். திருவரங்கத்தை அடுத்து பாடல் எண்ணிக்கையில்  இரண்டாவது. கம்பரும் வேங்கடத்தானை குறித்திருக்கிறார். சிலப்பதிகாரத்தில் மூவரும் (கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள்) மதுரை நோக்கி வரும்போது உறையூரில் தங்கி மதுரைக்கு வழி கேட்க, வழி சொல்பவர் குறிப்பதாக திருமலை வருகிறது. மதுரைக் காண்டம், காடு காண் காதை, வழி சொல்பவன் மாங்காட்டு மறையோன். இது இரண்டாம் நூற்றாண்டுக் குறிப்பு. கம்பராமாயணத்தில் கிட்கிந்தா காண்டத்தில், நாடவிட்ட படலத்தில் திருமலையைப் பற்றிய சான்றுகள் வருகின்றன. இதுவும் சுக்ரீவன் சீதையைத்  தேடிச் செல்லவேண்டிய இடங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. கம்பராமாயணம் பன்னிரண்டாம் நூற்றாண்டு எழுதப் பட்டது. சிலப்பதிகாரத...

"பரன் சென்று சேர் திருவேங்கட மாமலை" - திருப்பதி பயணக் குறிப்புகள் -1

Image
எல்லாமும் ரொம்ப ஈசியாக நடந்துகொண்டிருப்பது போல் இருந்தது. வேலைவிட்டு வந்து சரியாக மாலை ஏழு மணிக்கு டாக்ஸி ஒரே முயற்சியில் புக் ஆனது. அந்தப்பையன் புது வண்டியை (ஓனர்) ஒட்டிக்கொண்டு வந்தார். அவரே பஸ் வரும் இடத்தை அறிந்திருந்தார். வாழ்வாங்கு வாழட்டும். அப்பாவும் டிரைவராக ஊரில் இருக்க வேண்டும். போனில் இங்கிருந்து வழி சொல்லிக்கொண்டிருந்தார். தெலுங்கு தான் அவருக்கு வந்தது. நமக்கு தெலுங்கும் வராது. எதோ மைலேஜ் , CNG, டிராபிக்  போன்ற உதிரி வார்த்தைகளாய் போய்ச் இறங்கியதும் பஸ் சரியாக 8:50 என்ற குறித்த நேரத்திற்கு வந்தது. போன வாரம் திருப்பதிக்கு டிக்கெட் எடுக்கும் போதும் ஒரே நொடியில் நான்கு பேருக்கும் புக் ஆனது. ஒரு சிலரிடம் பேசி இதெல்லாம் சரியாகப் போகிறதா என்று விசாரித்தேன். சரிதான் என்றார்கள் பெரும்பாலும். டிக்கெட்டில் அடைப்புக்குறியில் பிரீ தர்ஷன் என்று இருந்தது. முன்னப் பின்ன சென்றால் தானே தெரியும், இதற்க்கு இன்னும் விளக்கம் பின்னால் வருகிறது. கடைசி நிமிடத்தில் ஆரம்பித்ததிலும் இவ்வளவு நேர்த்தியாய் எல்லாம் நடந்து கொண்டிருப்பது தான் நான் சந்தேகப்பட்டது. வோல்வோ வண்டி அலுங்காமல் சென்றது. அசோகம...

சம்பக தாமா

Image
சம்பக தாமா ஒன்று கூடி படிக்கவோ எழுதவோ மனம் சிதறாமல் இருக்க வேண்டும். வேலை தான் காரணம் என்று சொல்லிச் செல்லலாம். ஆனால் அதிலும் அருகிலிருக்கும் ஆட்கள் தான் காரணம். இவர்களை நம்மால் தேர்வு செய்ய முடியாது, எல்லாம் தானாக அமைவது தான். அதிலும் ஒரு சிலர் காற்று துளியே ஆனாலும் அறை முழுதும் பரவுவது போல், நம்மை முழுதும் ஆக்கிரமிக்கிறார்கள். நம்மை அறியாமல் சிந்தனை ,செயல் எல்லாம்,  ஆக்கிரமிக்கிறார்கள். இது நேர்மறையாய் இருந்தால் ஒன்றும் இல்லை. எதிர்மறையாய் ஆகும்போது இன்னும் சிக்கல் வருகிறது.  ஒரு கட்டிடம் கட்டும் போது மண்வெட்டியும், கைக்கரண்டியும்  அவசியமே. ஆனால் மண்வெட்டி கொத்துவது, கைக்கரண்டி கட்டுவது. ஒரே கொத்திக் கொண்டிருந்தால், கட்டிடம் தானாய் எழாது. ஒரு இடத்தில் கொத்துபவர்கள் நிறுத்தி விட வேண்டும். கட்டுபவர்கள் அன்று மிகுதி  இருந்தால் வேலையும் ஆகிறது.   ஏன் இதெல்லாம் சொல்ல வேண்டும் என்றால், இப்படி கொத்துபவர் ஒருவர் சில வாரங்கள் லீவில் இருக்கும் போது அலுவலகத்திலும்  கோடை அனல் போய், வள்ளலார் சொல்வது போல் ஆகிறது.  நிழலும், மலர் பூத்த தெள்ளிய ஓடை நீரும், மெல்லிய பூ...