Posts

Showing posts with the label சிறுகதை

Translate

நீரின்றி (சிறுகதை)

Image
நீரின்றி (சிறுகதை) ----------------------- காயத்ரி வீட்டின் பின் கதவைத் திறந்து கொல்லையில் நின்று நெற்றியில் கை வைத்து கிழக்கே பார்த்தாள். சூரியன் பார்வையை இன்னும் மறைத்தது. நீல வானில் ஒரு துண்டு மேகம் தெற்குப் பக்கம் இருந்தது. வெள்ளைத் தனித் துண்டு. காற்றே இல்லாததால் ஸ்தம்பித்து நின்றிருந்தது. அவள் இங்கிருந்து பார்க்க வேண்டிய ஊரின் நல்ல தண்ணீர்க் கிணறு அவள் நிற்கும் இடத்தில் இருந்து ஒரு மைலுக்கு மேலே இருக்கலாம். அவளுக்கு கிணற்றில் கூட்டம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் .ஒரு அரிசி மணியை பத்து எறும்புகள் திசைக்கு ஒன்றாய் இழுப்பது போல் மனதில் ஒரு பிம்பம் வந்து போனது. முள்ளுக் காடுகளாய் மண்டியிருந்த கிடங்கைத் தாண்டி ஓங்கிய இரட்டைப் புளிய மரம் தெரிந்தது. அதை ஒட்டிய மஞ்சள் பள்ளிக் கூடக் கட்டிடம் பார்வைக்குப் பிடி கொடுத்தது. கிணற்றைச் சுற்றி நிறைய தலைகள் தெரிந்தன. அவள் நிற்கும் தரையின் அனல் கழுத்துக்கும் தாடைக்கும் தலைக்கும் ஏறி ஓடு என்றது. இன்னும் கொஞ்சம் நேரம் போகட்டும் என்று உள்ளே போய் விட்டாள். நேற்று தான் காயத்ரி அம்மா ஊரில் இருந்து வந்திருந்தாள். அப்பா தவறிப் போய் ஒரு மா...

எதிர்பாராத சீர்திருத்தம் (சிறுகதை)

எதிர்பாராத சீர்திருத்தம் ---------------------------------- 'நேரமாச்சு ஆரம்பிச்சுரலாமா...இத முடிச்சு அவரு இன்னொரு இடத்துக்குப் போனும் ' மலர்விழி கையில் ஒரு பேப்பரை பிடித்து மைக்கை ஆன் செய்து மேடை முன் வந்தார். தி.க அலுவலகத்தில் பெரியார் மணியம்மை திருமணப் பிரிவுக்கு பொறுப்பாய் இருப்பவர்.  முன்னெல்லாம் கருப்புச் சேலை அணிவார். இன்று கருப்பு சுடிதார் அணிந்திருந்தார். இதுவரை இப்படி பல ஆயிரம் கல்யாணங்கள் நடத்தி வைத்திருப்பார். இது மரபான கல்யாணம் இல்லை. விரும்பிச் செய்தது என்று அங்கு இருந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் இது இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 'சுப்பிரமணியன் சங்கரநாராயணன் மற்றும் சோபியா கிரேஸ் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இந்தக் கல்யாணம் பத்து நிமிஷத்துல முடிஞ்சுரும்.  மூத்த பத்திரிகைத் துறை நண்பர் அறிவழகன் சுயமரியாதைக் கல்யாணம்னா என்னன்னு சொல்லுவாரு...அப்புறம் கல்யாண ஒப்பந்தம்...அவ்வளவுதான்..திரு அறிவழகன் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்...' மேடையில் ஒரு சோபாவும் , அதை ஒட்டி இருபுறமும் ரெண்டு ஜோடி நாற்காலிகள் இருந்...

தத்துவமாதல்

Image
தத்துவமாதல் -------------------------------  அப்பா, நாளைக்கு காலேல நாலே முக்காலுக்கு அங்க இருக்கனும். அவன் அம்மா தூங்கிவிட்டிருந்தாள். மாடிப்படியில் இருந்து இறங்கியபடி சொன்னான். படித்துக் கொண்டிருந்த அக்காவின் பேனா நோட்டில் ப்ரேக் போட்டு நின்றது. 'எத்தனை தடவை, சொன்னதேயே சொல்லுவடா ..டயரிங் ஸ்ரீ'. சொல்லியபின்  பேனா திரும்பப் பாதையில் பயணித்தது.  அவனை ஊன்றிப்  பார்த்தேன்.  அப்போது இரவு பதினோரு மணி. காலையில் செல்வதற்கு அரை மணி. கிளம்ப அரை மணி. மொத்தத்தில் தூங்கி எழுவதற்கு மூணே முக்காலைக் குறி வைக்க வேண்டும்.  அவனுக்கு  இப்போதைய ஆசை கால்பந்து வீரனாக வேண்டும் என்பது . கனவு காணும் வயது. அவனே தேடிப் பிடித்த  பைச்சுங் பூட்டியாவின்  பயிற்சி நிறுவனத்தில் அவனைச் சோதிப்பதற்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். இப்போது ஆடும்  இடத்தில் அவனுக்குத் திருப்தி இல்லை.  நம்ம விட திறமையானவங்களோட விளையாடனும்பா..நம்ம கத்துக்கமுடியும்...கோச் சொன்னாரு  குடியிருப்பில் சுற்றி வரும் நடைபாதையில் தனியே இரவில் பயிற்சி செய்வான். அவனே உதைத்து, திரும்பி  எடுத்து வந...

அறியாமை (சிறுகதை)

Image
அறியாமை   (சிறுகதை) ------------------------------ சிறிய இடைவெளி விட்டுக் கட்டப்பட்ட கம்பி வலை. கீழே ஆழமான குழி . வலையின் நடுவில் சிவந்த பாறை  என அசைவற்ற ஆட்டின் இறைச்சி . ஒரு  புலி முன்னங்காலைத் சற்று தூக்கி, தலை தாழ்த்தி அதைப் பார்க்க நின்றது.  கண்கள் மாமிசத்தை ஊழ்கமென நோக்கின.மாயவலையென அறிந்து பின்னகரும் என நினைத்த பொழுதில், இறைச்சியை நோக்கி முழு உடலும் பாய்ந்தது. காதடைக்கும் சப்தத்துடன் கம்பி அறுந்து, வேங்கை படுகுழியில் விழுந்தது. படுக்கையில் ராமச்சந்திரன் அப்பா என அலறினான். குரல் கேட்டு மனைவி ராமச்சந்திரனை பலமுறை தட்டியபடி எழுப்பினாள்.  இடுங்கிய பற்களுடன் கண் விழித்தான். கைகள் அழுத்தமாய் கட்டிலின் விளிம்பைப் பற்றியிருந்தன. அப்பா இறந்து ஒரு மாதம் இன்னும் முடியவில்லை.  ராமசந்திரனுக்கு பொறுப்பு என்ற சொல்லின் அர்த்தம் விளங்க ஆரம்பித்திருந்தது. மாதத் தவணை முதல், வட்டிக் கடன் வரை எல்லாம் நினைவு படுத்திக் கொண்டே இருப்பார். இனிமேல் இல்லை. படிக்கும் பிள்ளைகள் வளர்ந்து விடும். பொறுப்பு அதிகமாகப் போவதை எண்ணினான். தன்னில் பாதி விட்டுப் போயிருப்பதை உணர்ந்தான்....

விடையேறி நங்கள் பரமன், IBM 1620(சிறுகதை)

Image
how about விடையேறி நங்கள் பரமன், IBM 1620 ----------------------------------------------- ஜூலை 19 1963. 'புரொபஸர் ஹாரி ஹஸ்கி சார்ட்டர்ட் பிளைட் டெல்லி வந்தாச்சு..கஸ்டம்ஸ்ல சின்னச் சிக்கல்ன்னு காலம்பற ட்ரங்க் கால்'  பேராசிரியர் ராஜாராமன் கேசவனிடம் சொல்லிக்கொண்டிருக்கையில் நான் அறையில் நுழைந்தேன்.. 'டாக்குமெண்ட்ஸ் ஷிப் பண்ண மறந்துட்டாராம்...பைனான்ஸ் செக்ரடரிய லைன்ல பிடிங்கோ ... அவா சப்போர்ட் கமிட் பண்ணிருக்கா' நாக்பூர் IIT ஆசிரியர்களின் அறை வெள்ளிக்கிழமை அன்று விழித்துக்கொண்டது. ராஜாராமனும் அவரது மாணவர்கள் நாங்கள் எதிர்பார்த்திருப்பது IBM 1620. நான் அதில் மின்பொறித்துறையின் மாணவன். 'சார் , நீங்க சொன்ன மாதிரி இருபது பேர் டீம் ரெடி' என்றேன். இன்று இந்தியாவில் மொத்தம் பத்து கணிப்பொறிகள் இருந்தால் அதிகம்.  இந்தக் கதையை ராஜாராமன் வகுப்பில் சொல்லியிருக்கிறார். 'நாம இன்னிக்கு கம்ப்யூட்டர் பாக்கணும்னா கல்கத்தா இந்தியன் ஸ்டாடிஸ்டிக்ஸ் இன்ஸ்டிடூட் போகணும்..மஹலனோபிஸ் டீம்ல BTM HEC-2M மெஷின் ...1954 பிரிட்டிஷ் இம்போர்ட்டட்...அப்புறமா நாலு வருஷம் கழிச்சு வந்த URAL-1 ரஷ்யன்...

ஏற்றம் (சிறுகதை)

ஏற்றம்                                                                                          (1) சிவாவின் கார் கத்திப்பாரா மேம்பாலத்தை நெருங்கியிருந்தது. அழுத்திப் போய்க்கொண்டிருந்தான்.  ஐம்பது லட்சம் SUV. தோளில் சுமந்து போனால் விரைவில் போகலாம். இன்னும் நாலைந்து சிக்னல்கள். நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் பக்கத்தில் சக்தி பேசுகிறான் என்று படித்தான். எப்படியும் சக்தியை கூட்டம் ஆரம்பிப்பதற்குள் தனியாய்ப் பார்த்து விட வேண்டும். சக்தியும் அவனும் மூன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாய்ப் படித்தவர்கள்.  வண்டியை மண்டபத்தின் கீழ் தளத்தில் நிறுத்தி மேலே வந்தான். கோயில் போகும் தெரு பார்த்து கை உயர்த்திக் கும்பிட்டான். பணக்கவலை இல்லாமல் செய்ததற்கு ஒரு முறை. நடு வயதில் நீரிழிவு பிடிக்குள் இருக்கவேண்டி இன்னொன்று  என்று முனகினான். விழா முடிந்ததும் கோவில் பக்கம் போகவேண்டும...

சுந்தரிக்கு யார் பொறுப்பு? (சிறுகதை)

Image
சுந்தரிக்கு யார் பொறுப்பு? --------------------------------- 'இந்த நாய்க்கு ஏற்கனவே நியூட்ரலைஸ் பண்ணியிருக்கா , இல்லையா ' வேலை விட்டு வந்து சோபாவில் கால் நீட்டி அமர்ந்தேன். இந்த வாட்சப் கேள்வி தூக்கி வாரிப்போட்டது.  இரண்டு மூன்று ஸ்க்ரோலில் விஷயம் தெளிவாகியது. நியூட்ரலைஸ் என்றால் என்ன என்று மனைவியைக் கேட்டேன். விரைநீக்கம் என்றாள்.  கொஞ்சம் நிம்மதி. நான் நினைத்தது சுட்டுத் தள்ளுவது. சுந்தரி பெண் நாயல்லவா ? என்னுடைய சந்தேகம் இதற்கு எப்படி விரை நீக்கம்.  டெஸ்டோஸ்டெரோன் ஆண் தொடர்பான விஷயம் அல்லவா?. சுந்தரியை மனதில் நினைத்தால் எனக்கு ஒரு இளம் பன்றியின் நினைவு எழும், உடலின் சில இடங்களில் மேகம் போல் வெள்ளைத் தீற்றல். மற்றபடி பன்றியைப் போல் குனிந்தவாறு நடக்கும். பின்னால் கை கட்டி நடக்கும் ஒரு மூதாட்டியைப் போல். என் மகளைப் பார்த்து ஓடி வரும். CCTV -ல் படாமல் பிஸ்கட் துண்டு போடுவாள். பிரட் தின்பதில்லை. உணவு போட்டால் தரையில் சோற்றின் தடம் CCTV  காட்டிக் கொடுக்கலாம். அடுத்த அடுத்த கொத்து கொத்தாய் சுந்தரியைப் பற்றிய  வாட்சப்கள்.      'இந்த நாய ஒண்ணா வெளிய விரட...

குமிழி ஏறு வரிசை

Image
அருணாச்சலம் அன்று காலை ஒரு அட்டைப் பெட்டிக்கு மேல் வைக்கப் பட்டிருந்த விசைப்பலகைக்கு அருகில் சம்மணமிட்டு கீழே அமர்ந்தான். எதிரில் கணிப்பொறியின் செவ்வக கோபுரம் கருப்பாய் நின்றது. அதனருகே அதன் ஒளித்திரை அவனை வாய் திறந்து விழுங்க வருவது போல் பிளந்து நின்றது. இல்லை நெஞ்சைப் பிளந்து என்னிடம் இன்னும் ஒன்றும் மிச்சம் இல்லை, எல்லாம் உன் கையில் என்று சொல்வது போல் இருந்தது. அதுவே வசை பாடி என்னைத் தொடாதே என்பது போலும் அவனுக்குத் தோன்றியது. அவன் செவ்வக கோபுரத்தில் இருந்த வட்டமான மின் பொறியை அழுத்தினான். இதையும் ஓங்கி அழுத்தக் கூடாது என்று உள்ளே இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும் மனோகர் சொல்லியிருக்கிறான். ஆகவே எப்போதும் மெதுவாகவே அழுத்துவான். மேலும்அந்தக் கணிப்பொறி தன்னுடையதில்லை, அவனுடையது. KR மார்க்கெட்டில் ,துண்டுச் சீட்டில் காய் கறி , பலசரக்கு  பெயர்கள் போல் கணிப்பொறிக்கு வேண்டிய சாமான்கள், மதர் போர்டு , சி பி யூ , காற்றாடி , கோபுரம் எல்லாம் எழுதி வாங்கி வந்து அவனே அசெம்பிள் செய்தது. CD பிளேயர் , யமஹா சவுண்ட் கார்டு உள்பட தன் கையால் செய்து வைத்திருக்கிறான். சொன்னால் கேட்காமல் இருக்க முடியுமா?...