Posts

Showing posts with the label இயற்கை

Translate

இயற்கையை அறிதல் - எமர்சன் -3 மொழி

இயற்கையை அறிதல் - எமர்சன் -3 மொழி ------------------------------------------------------ இயற்கை மனிதனுக்கு அளிக்கும் மூன்றாவது உபயோகம் மொழி. 1. சொற்கள் இயற்கை நிகழ்வுகளின் குறியீடுகள் 2. ஒவ்வொரு இயற்கை நிகழ்வும் மனதில் நிகழும் ஆன்மீக நிகழ்வின் குறியீடு 3. இயற்கை ஆன்மாவின் குறியீடு 1. சொற்கள் இயற்கை நிகழ்வுகளின் நேரடிக் குறியீடுகள் இயற்கையின் வெளிப்புறத் தோற்றத்தை அறிவது , அதன் பின்னிருந்து இயக்கும் அதீத ஒன்றையும் அறிய உதவும். படைப்பில் இருக்கும் பொருள்கள், மொழி வழியாக , நம் உள்ளிருக்கும் படைப்பாக உருமாறுகின்றன. ஒரு பொருளின் தோற்றத்தில் இருந்தே நாம் அறிவையும், ஒழுங்கையும் குறிக்கும் சொற்களைப் பெறுகிறோம். சரி என்பது நேராக இருப்பது. தவறு என்பது கோணலானது. ஆத்மா என்பது காற்று. மீறல் என்பது ஒரு கோட்டைத் தாண்டுவது. இதயம் என்றால் உணர்ச்சி. தலை சிந்தனையைக் குறிக்கும். சிந்தனை , உணர்ச்சி போன்ற சொற்கள் பொருளைக் குறிப்பதில் இருந்து , மனதைக் குறிப்பதாக ஆன்மீக உலகிற்கு வந்தன. குழந்தைகள் இதையே செய்கின்றன. குழந்தைகளும், பழங்குடியினரும் பெயர்ச்சொற்களையே செயலைக் குறிக்கவும், மனதைக் குறிக்கவும் பயன் ப...

இயற்கையை அறிதல் - எமர்சன் - 2 - அழகு

Image
  இயற்கையை அறிதல் - எமர்சன் - 2 - அழகு மனிதனின் ஆத்மார்த்தமான இன்னொரு தேவையை இயற்கை நிரப்புகிறது. அது அவனுடைய அழகுணர்ச்சி. லத்தீனில் உலகம் எனும் சொல்லுக்கு அழகு என்று பொருள். இங்கிருக்கும் எல்லாம் அப்படி இருப்பதாலோ , இல்லை மனிதனின் கண்கள் தான் அப்படியோ , இயற்கையின் முதன்மை வடிவங்கள்- நீல வானும், ஓங்கிய மலையும், மரமும், விலங்கும் நம்மை அப்படியே உவகை கொள்ளச் செய்கின்றன. அவற்றின் கோட்டு வடிவம், வண்ணம் , நகர்வு, சேர்ப்பு எல்லாமும். இது பாதி நம் கண்களால் ஏற்படலாம். கண் ஓர் உன்னதமான கலைஞன். வேறுபட்ட பொருள்களின் அளவையும், ஒளியையும், ஒருங்கே இணைத்து வண்ணமும், நிழலும் கொண்ட கோளமாய் கண்ணில் தோன்ற வைக்கிறது. சிறிதாயும், பெரிதாயும் உள்ள பொருள்கள் உருண்டையாகவும், ஒருமையுடனும் எப்படித் தெரிகின்றன? கண் மாபெரும் ஒருங்கிணைப்பாளன் என்றால், ஒளி ஒரு சிறந்த ஓவியன். ஒளியால் அழகாக்க முடியாத கெட்ட பொருள் என ஒன்றுமே இல்லை. பொருள்கள் ஒளியால் தான் கால வெளியில் எல்லையற்றவை எனத் தோன்றுகின்றன. நம் உணர்வுகளை எழுப்பி மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. பிணமும் ஒளியில் அழகாகும். ஒட்டுமொத்தக் காட்சி இன்பம் தருவது போ...

இயற்கையை அறிதல் - எமர்சன் - 1

Image
இயற்கையை அறிதல் ---------------------------- இது இயற்கையை அறிதல் என்ற எமர்சனின் ஏழு கட்டுரைகளை அடைப்படையாகக் கொண்டது. பல முறை வாசித்த பின், சமீபத்தில் புரிந்தது என எண்ணினேன். பின்னர் புரிதலுக்காகத் தமிழில் மொழிபெயர்த்தேன். வரிக்கு வரி இல்லாமல் , நிறையவும் குறுக்காமல், புரியும் வகையில் எழுதப்பட்டது. [அடைப்புக் குறிக்குள் வருபவை நான் எழுதியவை, எமர்சன் மேல் பழி சேராது ] இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு, கலை என்றால் என்ன, படைத்தல் என்றால் என்ன, மொழி என்பது என்ன போன்ற அடிப்படைக் கேள்விகளை கேட்டு விடை சொல்கிறது. இயற்கை மனிதனை மேம்படுத்தவே இருக்கிறது, ஒவ்வொரு நாளும் வெளிப்படுகிறது. அதுவே நம் இருப்பின் குறிக்கோள் என்று எமர்சன் சொல்கிறார். அவர் சொல்லும் இயற்கை என்பது வேதாந்த மரபின் பிரம்மம் எனும் சொல்லாகவே எனக்குப் பட்டது. ஒவ்வொரு நாளும் நம் செவியில் விழும் சொல்லும் பொருளும் இயற்கையில் இருந்தே எழுகிறது. விசும்பு தோய் பசுங்களை, யானை வளைத்த மூங்கில் அது விடுகையில் விசும்பென எழுந்தது. இது குறுந்தொகை வரி. வானும் மண்ணும் ஒட்டிக்கொண்டதே; வானின் நீலம் அதில் ஒட்டிக் கொண்டதே. இது இன்று காலை...

வானில் பறக்கும் புள்ளெலாம்

Image
வானில் பறக்கும் புள்ளெலாம் ------------------------------------- இன்று காலையில் இருந்து ஏனோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. ஐந்து மணிக்கு விழிப்புத் தட்டி விட்டது. முதல் வெளிச்சத்தில் காபித் தம்ளருடன் வெளி வாசலுக்கு வந்தேன். எப்போதும் கண்கள் அந்தப் பட்ட மரத்தை நோக்கியே போகும். ஒற்றை மைனா சிறகை நெளித்து , காலை அறிவிப்பை பல முறை செய்தது, 'நான் இங்கு இருக்கிறேன்..நான் இங்கு இருக்கிறேன்'. ஒளி இன்னும் அந்த மரத்தை வரைந்து கொண்டிருந்தது. நீல வானத்தில் கருப்புக் கோட்டு ஓவியம். மரம் ஒளியால் கைகள் முளைத்து விண்ணைத் துழாவ ஆரம்பித்தது. உறைந்த கருப்பு மின்னல். மைனா அலகை இரண்டு முறை மரத்தில் தீட்டி, அடி வயிற்றில் உரசி மீண்டும் ஒரு முறை 'நான் இருக்கிறேன்'.நடத்துனர் ரிவர்ஸ் விசில் எழுப்பும் ஒலி...ரைட் ரைட் ..ரைட் ரைட் எதிர் வீட்டு அம்மாள் தென்னை விளக்கமாரை நீரில் பலமுறை கிழித்தார். இரண்டு முறை தரையில் தட்டி மீண்டும் நீரூற்றிய கல்லை உரசினார். கல்லும் துடைப்பமும் வாய் கொப்பளித்துச் சுத்தம் செய்து கொண்டன. ஒரு தையல் குருவி கட்டுச் சுவரின் பின்னால் புதரில் இருந்து பறந்து சுவரில் அமர்ந்தது. தீ...