Posts

Showing posts with the label சைக்கிள்

Translate

சைக்கிள் பதிவுகள் 15- ஏகாந்தம் , ஒரு காற்புள்ளி

Image
சைக்கிள் பதிவுகள் 15- ஏகாந்தம் , ஒரு அரைப்புள்ளி இன்று திரும்பிப் பார்க்கும்போது இரண்டு வருடங்களுக்கு மேலாக சைக்கிள் குறிப்புகள் எழுதி வந்திருக்கிறேன். என்னுடைய எழுதும் பழக்கத்தை துவக்கி வைத்தது இந்த மிதிவண்டி.  இந்த வார இறுதியில் வீடு மாற வேண்டியிருக்கிறது. அலுவலகம் இன்னும் தூரம் ஆகிறது, ஒரு பக்கம் 30 கிலோமீட்டர். ஆகவே சைக்கிளை நிறுத்த வேண்டியிருக்கிறது, வேறு வழி கண்டுபிடிக்கும் சில நாட்களுக்காகவாது.  மிதிவண்டிக்கும் ஆறு வருடம் ஆகிவிட்டது. ஓய்வு கேட்கிறது என்று நினைக்கிறேன், சர்வீஸ் முடிந்து சில நாட்களில் பால்ரஸ் குண்டுகள் ஓடும் சத்தம் வர ஆரம்பிக்கிறது. வீடு மாறுவதில் எனக்குத் தோன்றும் இழப்பாகத் தெரிவது இந்த சைக்கிள் பயணமே. நம் வழியில் நாமாக சலனப் படாமல் போக முடிந்தது. பெரிய போட்டி ஒன்றும் இல்லை.நேரம் ஒரு ஐந்தோ பத்தோ நிமிடங்கள் அதிகம் ஆகலாம் , அவ்வளவே. பாடல்கள் கேட்கலாம், பதிகங்கள் கேட்கலாம், பேச்சுக்கள் கேட்கலாம். வேடிக்கை பார்க்கலாம். எல்லாமும் மேலே எதவாது உடற்பயிற்சி உடம்பை ஆட்டும் முயற்சி. என் பார்வையில் இது பெரிதல்ல. இது உடற்பயிற்சி என்பது சில நாட்கள் விட்டுச் செய்யும்பொ...

சைக்கிள் பதிவுகள்- 13 - டிசம்பர் 31

Image
சைக்கிள் பதிவுகள் - டிசம்பர் 31 வீட்டுக்கும் அலுவலகத்திற்குமான பதினைந்து கிலோமீட்டர்களை , மூன்று ஐந்தாக பிரித்துக் வீட்டுக்கும் அலுவலகத்திற்குமான பதினைந்து கிலோமீட்டர்களை , மூன்று ஐந்தாக பிரித்துக் கொண்டால் மனத்தை பிடியில் வைக்கலாம். முதல் ஐந்து முடிந்ததும் ஒரு தேநீர், இது மனதிற்கு கேரட்.  இரண்டாவது ஐந்தின் முடிவில் நிறுத்தி  உண்மையான கேரட் வாங்குவது  , இது உடலுக்கு என நினைத்துக் கொள்கிறேன். மூன்றாவதில் முடிவில் முகத்தைக் கழுவி மீண்டும் ஒரு கோப்பை  காபி. இன்று டிசம்பர் 31.  இப்போது மின்னஞ்சல்களை நுண்ணறிவு செயலி வழியாக வடிகட்டி வைத்திருக்கிறேன். கடந்த ஒரு சில நாட்களாக , செயலாய் வரும் மின்னஞ்சல்கள் நாளில் ஒரு சில மட்டுமே வருகின்றன. இதற்கு மேல் பெரிய மெயில்களை அதுவே வாசித்து ஓரிரு வரிகளில் சுருக்கித் தருகிறது. இதற்க்கு நீங்கள்  ஒரு பதில் மெயில் அனுப்பினால் , சருகாய் திரும்பி அவுட் ஆப் ஆபீஸ் மெயில்களை கூட்டி  அள்ள வேண்டியிருக்கிறது. எதிர்காற்று என்பார்கள், டிசம்பர் 31 என்பதும் அதுதான் .  காலையில் வார இறுதிக் கூடுகைக்காக கிளி சொன்ன கதை முதல் அத்தி...

சைக்கிள் பதிவுகள் 12- Breath, James Nestor , மூச்சைப் பற்றி...

Image
சைக்கிள் பதிவுகள் 12-  Breath, James Nestor , மூச்சைப் பற்றி...  நாம் நினைத்துப் பார்க்க முடியாத சிறிய விஷயங்களையும் வியக்கும் அளவு பெரிதாக்கிச் செய்யும் கலை வெளி நாட்டவர்களுக்கு எப்படியோ உடம்பில் ஊறி இருக்கிறது. என்றோ ஒரு நாள் வியந்து, பின்னர் அதைப்போலத்தான் இது என்று அடுக்கி , அதற்குப் பெயர் கண்டு பிடித்து  மிகச்சாதாரணமாக  கடந்து செல்லும் விஷயம்தான் இதுவும். உதாரணமாக இப்போது இங்கு பிராணாயாமம் என்று ஒரு வார்த்தை எழுதினால், அடுத்த நொடி  நீங்களும் இதை ஒரு முழு நீள ஸ்குரோல் செய்து கீழே முட்டியதும் மூடி வைத்துவிட்டுப் போகலாம். ஏனென்றால் அதிலிருக்கும் வியப்பைப்  பிதுக்கி எப்போதோ வெளியில் எடுத்தாயிற்று.  சில வருடங்களுக்கு முன் முதலில் ஒருவர் மூச்சை வைத்து பிழைப்பை நடத்துகிறார் என்பது எனக்கு பெரிய ஆச்சரியமாய் இருந்தது. இந்தப் புத்தகத்தை வாசித்ததும் மீண்டும் அந்தக் கம்பெனி இருக்கிறதா என்று தேடினேன். அமோகமாய் இருக்கிறது. அவரும் ஒரு புத்தகம் எழுதிவிட்டார். அண்ட்ராய்டு , ஐபோன் ஆப் இருக்கிறது. பேட்ரிக் மெக்கேன் , Oxygen Advantage என்பது அவருடைய நிறுவனத்தின் பெயர்...

சைக்கிள் பதிவுகள் - 10- கார்காலப் படலம்

Image
கார்காலப் படலம்  கொஞ்சம் பழைய வீடாய் இருந்தால் பாத்ரூம் கதவை கொஞ்சம் ஓங்கி மூடினால், வெளிக்கதவு  தானாக திறப்பதை  நீங்கள் பார்த்திருக்கலாம். மெட்ரோ ரயில் நிறுத்தத்தில் வண்டி நிற்கும் முன், அதைவிட முன்னே  வரும் ஒரு வலுத்த குளிர் காற்றைப்போல. ரியர் என்ஜின் வோல்வோ வண்டிகளில் டிரைவர் பிரேக்கை அழுத்தியதும் , நங்கூரம் பாச்சிய கப்பல் போல, முழுதும் முன்னாலே போய் , பின் அந்தக்கணமே பின்னால் வந்து , கீழே உள்ள தூசியெல்லாம் எல்லாம் சுழற்றி நம் மேல் அடிப்பதைப் போல. இதேபோலத்தான் வங்கமோ , அரேபியாவோ, இல்லை இரண்டும் சேர்ந்து இந்தியப் மகா சமுத்திரத்தில் வந்தாலும் அந்தப் புயல், காற்றழுத்தம்   , பெங்களூரில் தெரியாமல் போகாது. மூன்று நாள் முடிந்து இன்று நாலாவது, வெய்யில் இன்னும் இல்லை.  மழையை விட மழை என்னும் குரல்கள் எங்கும் அடை மழையாய்ப் பொழிகின்றன. ரோடு ,தெரு, வீடுகள், எல்லாம் வார்த்தைகளாய்ப் புகுந்து , நிழலாய் கூடவே இருக்கின்றன.  எல்லா செயல்களும் , திரை விலக்கி ஒரு வெளிச்சத்தில் பார்ப்பது போல, மழை மேல் உரசிப் பார்க்கப்படுகின்றன. ஒரு கரகரப்பான குரல் , எங்கோ ஒரு சிறு இருமல்,...

சைக்கிள் பதிவுகள் - 9. செயல் தொடர்

Image
சைக்கிள் பதிவுகள் - 9. செயல் தொடர் 'நாங்கள் அனைத்து இருப்பையும் அங்கீகரிக்கிறோம். ஆனால் ...' 'ஆனால் என்ன..'  'அவை இல்லாமல் இருக்கும் நிலையும் அவற்றில் அடங்கியுள்ளது.' மேலே உள்ளது விஷ்ணுபுரம் நாவலில் வரும் ஞானசபை விவாதத்தில் சமண தீர்த்தங்கரர் கூறும் வரி. தலைப்பை மீறி இந்தப் பதிவும் சைக்கிள் இல்லாத கடந்த சில நாட்களில் நடந்த குறிப்பாய் அமைகிறது. இதை ஒட்டி என்னுடைய பள்ளி ஆசிரியர் சொல்லும் இன்னொரு சம்பவமும் நினைவில் வருகிறது. பையன் படித்தது பசுமாடு கட்டுரை. தேர்வில் கேட்கப்பட்டது தென்னை மர கட்டுரை. இந்த இடத்தில் மேலும் வரப்போவது உங்களுக்குத் தெரிந்தாலும் சொல்கிறேன். பையன் பதில் எழுத ஆரம்பித்தான். மாட்டுக்கு இரு கண்கள் , இரு காதுகள்,  ஒரு மூக்கு, நான்கு கால்கள், ஒரு மடு மற்றும் ஒரு வால். புல் , வைக்கோல் , புண்ணாக்கு என்ற உணவுப் பட்டியல். அப்புறம் பால், தயிர், வெண்ணெய், சாணி, எரு என நீட்டி, பால் , தயிர்  சாப்பிட்டால் மனிதனுக்கு வரும்  நன்மைகள், அதீதத்தில் வரும் கெடுதல்கள் என கட்டுரை எழுதி முடித்தால் கை வலித்தது. கடைசியில் கேட்ட கேள்விக்கு நியாயமாய் , இவ்வாறான பசுமாடு ,...

சைக்கிள் பதிவுகள் -8 - சருகின் எடை

Image
சருகின் எடை  இப்போதெல்லாம் காலையில் எழுந்து கீழே கால் வைத்து, முதலடி தரையில் படும்போது ஒரு வெம்மை வர ஆரம்பித்திருக்கிறது. இரண்டொரு நிமிடங்களில் நெற்றியில் பூத்து விடுகிறது. கதவைத் திறந்து சிறு  உப்பரிகையில் நின்றால் இப்போதும் பிரிட்ஜை திறந்து நிற்பது போல், இனிய சொல் போல இன்னும் மிதமாய் குளிர். ‘அண்டம் முற்றும் திரிந்து அயர்ந்தாய், அமுது உண்டு போதி’ என்று வரும் கதிரவனை எதிர்பார்த்து காத்திருக்கும். இப்போதெல்லாம் அவர் சரியாய் வந்து விடுவார். மேகம் ஊர்ந்து, மேல் ஏறிச் செல்லும் விண்ணவன் இல்லை. தனியாய் வருகிறார். உலகைக் காக்க அவரன்றி யார் உளார்  ? இதைப் புரியவைக்க வேறு சரியான நேரம்தான் உண்டா ?   //  ‘வானே புக்கான் அரும் புதல்வன்’  மக்கள் அகன்றார்; வரும் அளவும் யானே காப்பென், இவ் உலகை’ தசரதன் இறந்துபட்டவுடன், சூரியன் வேறு எவர் வேண்டும், என்றும் நான் இருக்கிறேன் மக்களைக் காக்க, என்று தேரில் ஏறித்  தோன்றியதாக  கம்பர் எழுதுகிறார்.  மார்ச் மாத காலை பொழுது வேறு தான்.  நாய்கள் காலையிலே நிழல் தேடிக் கண்டு இன்னும் கொஞ்சம் உறங்குகின்றன. ஒரு இலையுமன்றி ...

சைக்கிள் பதிவுகள் -8 - ரயிலேறி ...

Image
சைக்கிள் பதிவுகள் -8 - ரயிலேறி ... சென்ற வாரம் இருந்த மாலை நேர சந்திப்பால் சைக்கிளை அலுவலகத்தில் நிறுத்திவிட்டு வீடு வர வேண்டியதாகிவிட்டது. திரும்ப வந்து இன்னும் கொஞ்சம் இழுவல் இருப்பதால் பொட்டல் கடந்து, புழுதி கடந்து, தரிசு கடந்து வந்து சேர நேரமாகிவிடும். கார் ஆட்டோ என்றால் பரவாயில்லை. சரி ,  இதுவும்  சில நாள்களில் நடப்பதுண்டு.   ஆனால் திரும்ப வாகனம் இல்லாமலே அடுத்த  நாள் சென்று, சைக்கிளை எடுத்து மாமூலாக்க வேண்டும். காலையில் பொதுவாக ஆட்டோ , கார் கிடைக்காது. இன்றும் அப்படித்தான்.  வீட்டில் இருந்து  கொஞ்சம் நடந்து சென்று MG ரோடு செல்லும் புதிதான வோல்வோ பஸ் பிடித்து , வழியெல்லாம் விட்ட இடத்தில் புத்தகத்தைப் படித்து, மாயோ ஹால் வந்ததும் இறங்கி , அங்கிருந்து கப்பன் பார்க் ஓரமாய் ஒரு அழகிய காலை நடை நடந்தால் நன்றாய் இருக்குமென தோன்றியது. காதல் தேசம் அப்பாஸ், வினீத் போல , கல்லூரி சாலை  என்று ஒரு நோட்டு மட்டும் இருந்தால் , வானில் சுழற்றி கீழே வரும் போது பிடித்து நடக்கலாம். (இன்றைய நிலவரம் யார் எப்படி எனத் தெரியவில்லை.  இன்றைய கல்லூரி ட்ரெண்ட் கப்பன் ப...

சைக்கிள் பதிவுகள் -2 - ஒரு சிறிய கணக்கு & ஒரு உரசல்

Image
ஒரு சிறிய கணக்கு: வீட்டில் இருந்து ஆபீஸ் செல்லக் கடக்க வேண்டிய சிக்னல்கள் : 17 சிக்னல்கள் பெரும்பாலும் auto mode-ல் ஓடுகின்றன. டிராபிக் போலீஸ் அவரே இயங்கச் செய்தால் டிராபிக் கிழிந்தது என்று அர்த்தம். ஆகவே இதை விட்டு விடலாம். இந்த கணக்குக்காக ஆட்டோ மோட் என்று வைத்துக் கொள்வோம். ஆட்டோ மோட் சிக்னல் இயங்கும் விதத்தை இவ்வாறு கூறலாம். 24 மணி நேரத்தை 8 கூறாக பிரிக்கிறார்கள். இரவு 12லிருந்து 7 மணி வரை சிக்னல் கிடையாது. 1) 7-8 2) 8-11 3) 11-5 4) 5-6 5) 6-9 6) 9-10:30  7)10:30 - 11:30 8) 11:30 - 12:00 ஜங்ஷன்-ஐப் பொறுத்து ட்ராபிக்கை 4 அல்லது 5 கட்டமாக  (phase) பிரித்து இருக்கிறார்கள். இதை ஒரு திசையில் வண்டியில் உள்ளவர் ரோட்டைக் கடக்கும் வாய்ப்பு எனலாம்.  நடப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு. இந்த ஒரு வாய்ப்பு காலை 9 மணியில் இருந்து இரவு  9 மணிக்குள் கடந்தால் 40 - 60 நொடிகள் (பச்சை விளக்கு). அடுத்த வாய்ப்பு அடுத்த 3 லிருந்து 4 நிமிடங்கள் கழித்து. அதாவது சிகப்பு விழுந்த பின் காத்திருப்பு,  cycle time என்பது. சாம்பிளுக்கு ஒன்று கீழே. https://data.opencity.in/dataset/bengalu...

சைக்கிள் பதிவுகள் -1

Image
நான் பள்ளி செல்லும் பருவத்தில் எங்கள் ஊரின்  ஒரு ஆசிரியர் தினமும் ராஜபாளையம் டவுனில் இருக்கும் Board High ஸ்கூலுக்கு சைக்கிள் ஓட்டியே வேலைக்குச் செல்வார். மிகப் பின்னர் தான் அவர் பி.டீ ஆசிரியர் என்று தெரிந்தது.அப்போது அவருக்கு 45-50 வயது இருந்திருக்கலாம்.அவர் நான் படித்த பள்ளிக்கூடத்தையும் தாண்டிச் செல்ல வேண்டும். போய்வர 24 கிலோமீட்டர். நான் அவர் செல்வதை என் பள்ளி பேருந்தில் இருந்து பல முறை பார்த்திருக்கிறேன். கருப்பு frame உள்ள வெகு தடித்த கண்ணாடி அணிந்து இருப்பார். அதை விட தடித்த lens இருக்கவே முடியாது, உள்ளிருக்கும் கண்கள் கண்ணாடி வழியாக காலை நேர பனி போல் தெரியும்.  திரண்டு வலிமையான கைகளால் handle bar -ஐ இறுக்கிப் பிடித்து , மிகவும் குனிந்து,வேகமாக ஓட்டுவார். பஸ் சைடு வாங்கி சென்று இருக்கும். அடுத்த ஸ்டாப்பில் பஸ் நின்று குழந்தைகளை ஏற்றும் போது பெல் அடித்து பஸ்சை சைடு வாங்கி விடுவார். விடாமல் போட்டி போடுவார்.  ஆனால் அவர் இல்லாத போது அவர் சைக்கிள் விடுவதை எல்லோரும் கதைகளாகச் சொல்லிச் சிரிப்பார்கள். அவருக்கு நான்கு பெண் குழந்தைகள்.ஒரு நாள் அவர் தன் மகளை பின்னால...