Skip to main content

ஒரு குறைநிரப்பி (supplement)

 Creatine Monohydrate

----------------------------

ஒருவாரமாக creatine என்ற ஒரு பௌடரை நீரில் பத்து கிராம் போட்டுக் குடித்து வருகிறேன்.

ஒரு சில வாரமாய் புத்தகம் படிக்கையில் முன்னை விட வெளிச்சம் தேவை இருக்கிறது. வரவேற்பறையில் நாற்காலியில் அமர்ந்து வலது புறம் இருந்து வரும் அறை வாசல் வெளிச்சத்தில் முன்பெல்லாம் படிக்க முடியும். முன்னைவிட சற்று அதிகமாக கான்ட்ராஸ்ட் வைக்க வேண்டியிருக்கிறது. ஒரு காலத்தில் நான் ஜீரோ கான்ட்ராஸ்ட் வைத்து வேலை பார்ப்பது வழக்கம். பக்கத்தில் வந்து நின்றாலும் திரையைப் படிக்க முடியாது. இன்றைய அடைமழை மேகம் கவ்வியது  போன்று இருக்கும்.

கண் இமை இரண்டும், எப்போதும் இல்லையென்றாலும் நாள்களில் சிலமுறை , பாரமாய் இருந்தது. மேலே தூக்கி வைத்தால் சிறு வலி. தசைகளை வலுக்கூட்டி உன்னிப்பாக பார்த்தால் வலி. அப்போது எழுத்துக்கள் தண்ணீர் தெளித்தது போல் ஆகி விடுகின்றன. கேரட்டுகள் குறைந்தது காரணம் என்று , அவைகளை அதிகம் சாப்பிட்டுப் பார்த்தேன். தலைகீழ் ஒரு சில நாள் நின்று பார்த்தேன். முன்பு பக்கத்தில் வைத்துப் படிக்க முடிந்த எழுத்துக்கள், இப்போது கண்ணை பின்னால் நிறுத்து என்கின்றன. கண்ணின் சதைகள் குறுக சிரமப் படுகின்றன என்று நினைத்தேன். சுருக்கி விரித்து பலமுறை செய்தால் , இமைகள் வலிக்கும். இதில் இருக்கும் இன்னொரு சிக்கல் , இது கண் வலியா , இல்லை தலை வலியா என்பதின் குழப்பம். படிக்கும்போது, கணினி வைத்து வேலை பார்க்கும் போது மட்டும் வருவதால் கண் வலி என்று எடுத்துக் கொள்கிறேன்.

கால், கை போன்ற மற்ற உறுப்புக்களைப் போல், கண்ணுக்கும் வலியில் ஓய்வு அவசியம்.  ஓய்வு என்பது முதலில், கண்ணை வலிக்கும் வகையில் பயன்படுத்தாமல் இருப்பது. இரண்டாவது தூக்கம். போன சனி , ஞாயிறு வீட்டில் அல்லோல கல்லோலப் படும்போது , அதிகாலை விழிப்புகள் , அதை எதிர்பார்த்து தூக்கம் பறிபோவது போன்ற தனியே  எழுதி மட்டுமே தீர்வு காணப்பட வேண்டிய சிக்கல்கள் வரும் நாள்களில், கண்ணும் இப்போதெல்லாம் வெளிப்படையாக சேர்ந்து கொள்கிறது. முன்பு தூக்கம் இல்லாத போது,  கால்கள் எப்போதும் இல்லாமல்  அதிகம் உளையும், அவ்வளவே.

இதை ஏன் இப்படி நீட்டி முழக்குகிறேன் என்றால் , கிரேட்டின் என்ற குறைநிரப்பி (supplement). இப்படி யாரவது ஒரு இரண்டு பாரா எழுதி வைத்தால் வாங்கி விழுங்குவது போலில்லை. நெடுநாள்கள் காதில் ஒலித்து அதன் பின்னர் ஒருநாள் சத்தியசோதனையில் பின்வரும் விளைவு உள்ளது. இதைப் போல் இன்னும் ஓரிரு டப்பாக்கள் செய்து போய் ஒதுங்கியிருக்கிறேன்.   அமெரிக்க ட்விட்டர் ஹாண்டில் போன்றவைகளில் இத்தகைய தகவல்கள் கிடைக்கின்றன என்று சொல்லவேண்டியதில்லை. இவர்கள் பெரும்பாலும் ஆராய்ச்சியாளர்கள், அல்லது ஆராய்ச்சியாளர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள். கிரேட்டின் மோனோ ஹைடிரேட் நம் உடம்பில் கணையம், கல்லீரல், சிறுநீரகங்களால் தயாரிக்கப் படுகிறது. நம் உடம்பு, ஓடுதல் போன்ற களைப்பூட்டும் செயல்களைச் செய்யும் போது இந்த  கிரேட்டின் சுரந்தால் மட்டுமே உடம்புக்குத் தேவையான ATP விரைவில் தயாராகும். ATP என்பது செல்லின் கரன்சி. ஒரு பாதி உடலில் தயாராகிறது. மீதி  உணவில் இருந்து  நம் உடலுக்குக் கிடைக்கிறது. பாலில், அசைவ உணவில் இது இருக்கிறது என்கிறார்கள். ஆக சைவ உணவுக்காரர் என்றால் கிரேட்டின் குறைய வாய்ப்பிருக்கிறது.

நமக்கு எதற்கு கிரேட்டின் அவசியம் என்றால் , உடம்பில் வேலை செய்யும் போது ATP உருவாக அது ரொம்ப அவசியம். ATP நம் உடம்பின் பெட்ரோல் என்று சொல்லலாம். பெட்ரோல் குறைவாய் இருந்தால் நிதானமாக ஓட்ட வேண்டும், கியர் போடுவதை, ரொம்ப அழுத்துவதை குறைக்க வேண்டும். வண்டி பவர் சேவ் நிலையில் தேக்கி ஓட்ட வேண்டும். ஏசியை அணைக்க வேண்டும். இல்லை என்றால் பெட்ரோல் போட்டு நிரப்ப வேண்டும்.

கிரேட்டின் உடல் சதைகளை ATP கிடைத்து அதிக நேரம் இயங்க வைக்கிறது. மூளையிலும் , கண்ணிலும் எங்கும் சதைகளே. ஆற்றல் வேண்டுமானால் அவை இயங்க வேண்டும். இந்த ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் சொல்லும் ஒரு குறைநிரப்பி கிரேட்டின். தூக்கம், கவனம் போன்ற மூளைப் பயன்களும் சேர்த்தே சொல்கிறார்கள். தினமும் ஐந்து கிராம் என்று சொல்கிறார்கள். எடைக்கு ஏற்றவாறு கொஞ்சம் அதிகமாகலாம். மேல் விபரம் லிங்குகளில் உள்ளது. 

https://examine.com/supplements/creatine/?show_conditions=true#how-does-creatine-work

https://www.hubermanlab.com/search-results?q=creatine

முதலில் இது சரியாகக் கிடைக்கவில்லை. இதை whey புரோட்டீன் டப்பாக்களுடன் குழப்பக் கூடாது. இரண்டாவது விலையை நினைத்தும் யோசித்துக் கொண்டிருந்தேன். 250கி ஆயிரம் ரூபாய். இப்படி எழுதி விளம்பரப் படுத்தினால் இன்னும் விலை ஏறிப்போகும். ஆனாலும் நாலுபேருக்கு சொல்லவேண்டும் போல் இருக்கிறது.

பிரயோகம் பண்ணி ஒரு வாரம்  ஆகிறது. ரொம்பநாளைக்குப் பின் புத்தக எழுத்து பழைய மாதிரி தெரிகிறது. மீட்டிங் போது ஜூம் பண்ணுவது குறைந்துள்ளது. கண் இமைகள் வலிப்பது குறைந்துள்ளது.

வீட்டில் இப்படியெல்லாம் ஒன்றைப் புகழ்வது முதல் முறை அல்லவே என்று குரல்கள் ஒலிக்கின்றன. இதற்கு முன்னர் சிவப்பு ஒளிக்கற்றை விளக்கு.  ஆனாலும் எழுதி வைத்தால் பின்னால் என்றாவது திரும்பிப் பார்க்கலாம் என்ற எண்ணம். 



Creatine Monohydrate

For the past week, I’ve been drinking a powdered form of creatine — 10 grams mixed in water. Over the past few weeks, I’ve started needing more light than usual when reading books. I used to sit in the living room chair and read comfortably with just the ambient light coming from a doorway on the right. Now, I have to increase contrast to read well. There was a time when I used to work with zero screen contrast. Even if someone stood next to me, they wouldn’t be able to make out the screen. Now, it feels like my vision is covered by monsoon clouds.

My eyelids — not always, but on some days — feel heavy. Lifting them slightly causes a dull ache. If I tense the muscles and try to observe carefully, there’s some pain. At times, the letters blur like water has been splashed on them. I suspected it might be due to a lack of carrots, so I ate more of them. I even tried standing on my head for a few days. Letters I used to be able to read with ease now seem to ask my eyes to “move back.” I thought maybe the eye muscles are struggling to contract. If I squeeze and release them multiple times, my eyelids hurt. Another issue — is this eye pain, or a headache? Since it only shows up during reading or screen work, I assume it’s eye strain.

Just like other parts of the body — legs, arms — the eyes too need rest when they ache. Rest means first, not using them in ways that hurt; second, sleep. Last Saturday and Sunday were full of disruptions at home. Waking up early, anticipating what was to come — sleep was lost. These are issues that can only be resolved by writing them out. And now, my eyes clearly seem to be part of that equation. Previously, when I didn’t sleep well, my legs would ache — now, the eyes have joined in.

Why am I drawing this out? Because this is about creatine, a supplement. Unlike someone just writing two paragraphs and popping a pill, this was something that echoed in my ears for many days before I finally decided to test it. I’ve tried and shelved a few tubs like this before. Needless to say, such information is all over American Twitter handles — usually from researchers or people connected to researchers.

Creatine monohydrate is produced by our pancreas, liver, and kidneys. When we do physically exhausting tasks like running, only if creatine is secreted does our body produce the required ATP quickly enough. ATP is the currency of the cell. Half of it is produced inside the body; the rest comes from food. It’s said to be present in milk and meat. So vegetarians are more likely to be deficient in creatine.

Why do we need creatine? Because it helps generate ATP when the body is at work. ATP is like the petrol for our body. If petrol is low, you have to drive slowly, avoid aggressive gear shifts, and run the car in power-saving mode. You might even have to turn off the AC. Or — refuel.

Creatine helps muscle cells keep going longer by ensuring they get ATP. The brain and eyes are also made of muscles. If they need to function, they need energy too. All these researchers talk about creatine as a supplement for that. They even include benefits like better sleep and focus. Most say take 5 grams daily — a bit more depending on your weight. You’ll find more details at:

  • https://examine.com/supplements/creatine/?show_conditions=true#how-does-creatine-work

  • https://www.hubermanlab.com/search-results?q=creatine

At first, I couldn’t find the right product. It’s easy to confuse this with whey protein tubs. Second, the price made me pause — 250g for a thousand rupees. If I write about it like this and publicize it, the price may go even higher. Still, I feel like it’s worth sharing with a few people.

It’s been a week since I started experimenting. For the first time in a long time, I can see book text clearly again. My 'zoom' meetings have reduced. The heaviness in my eyelids has also come down.

Voices at home are saying, “This isn’t the first time you’ve praised something.” Before this, it was the red light lamp. Still, I think if I write it down, I can revisit it later and reflect.



Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...