Translate

வாழ்வின் மெய்யறிதல் : ஆர்தர் ஷோப்பனோவர் கட்டுரைகள் -1

ஆர்தர் ஷோப்பனோவர் என்னும் பெயரை கடந்த ஒரு சில மாதங்களாக அங்கங்கு கேட்டுக் கொண்டே இருந்தேன். அண்மையில் போரும் வாழ்வும் படிக்கும் போது , டால்ஸ்டாய் இவரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார் என்று அறிந்தேன். இவரும் ஒரு செல்வந்தராய் பிறந்து, தத்துவவாதியாய் ஆனார்.  ஒரு சில கட்டுரைகள் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இப்புத்தகத்தைப் படித்தவுடன் ஏனோ தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஒவ்வொரு அத்தியாயமாக மொழிபெயர்க்க ஆரம்பித்திருக்கிறேன். 



முன்னுரை 

வாழ்வில் மெய்யறிவு என்றால் என்ன என்பதை பின் வரும் பக்கங்களில் விளக்க முயற்சிக்கிறேன்.

வாழ்வின் மெய்யறிதல் என்பதை உச்சமான மகிழ்ச்சியையும், வெற்றியையும் வாழ்க்கையில் அடைவது என்று சொல்லலாம். மகிழ்ச்சியான இருப்புக்கு தேவையான ஒரு கோட்பாடு.  இதை eudaemonolgy - (eudaemonism) என்று அழைப்பேன்.

நம் இருப்பு புறவயமானது போல் தோன்றினாலும், மெய்யறிவு பற்றிய கேள்வி என்றுமே அகவயமானதாகும். ஒருவர் இவ்வுலகில் வாழ்வதற்கும், இறப்பைப் பற்றி அறியவும், எவ்வாறு சந்தோஷமான இருப்பு முடிவில்லாமல் இருக்க முடியும் என்பதற்கும் மெய்யறிவைப் புரிந்து கொள்வது அவசியம்.

தத்துவார்த்தமான அடிப்படையில் மனித வாழ்வு இக்கோட்பாட்டினுள் வரும் என்று என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் மகிழ்ச்சியான வாழ்வு இதனால் கிடைக்கும் என்று என்னால் சொல்ல முடியும். என்னுடைய முந்தைய முக்கியமான பணியில் (ch 49) இந்த இடத்தில் நான் பிழை செய்துவிட்டதாகவே எண்ணுகிறேன். இதனால் இப்போது மகிழ்ச்சியான வாழ்க்கையை ஆராயும்போது , என்னுடைய இந்த மெய்யியல் ,அறவியல் கோட்பாடுகளுக்கு நானே சரணடைய வேண்டியதாயிற்று.  ஒவ்வொரு நாளும் என்னுடைய முந்தைய பிழையை எண்ண வேண்டியிருந்தது.  ஆகவே , இதனுடன் குற்றம் சேர்த்தே நான் கூறும் மகிழ்ச்சி பற்றிய  இக் கருத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும். வாழ்வின் மகிழ்ச்சி என்பதே ஒரு மறை பொருள் ஆகும்.

இந்த கோட்பாடு தன்னளவில் முழுமையானது என்று சொல்ல மாட்டேன், ஏனென்றால், முன் சொன்ன எல்லாவற்றையும் திரும்பச் சொல்வது என் நோக்கம் அல்ல.

இதைப் போல நம் முன் உள்ள ஒரு புத்தக உதாரணம், “Cardan's De utilitate ex adversis capienda”, இதை இங்கு இணைத்துப் படிக்கலாம். அரிஸ்டாடில் வாழ்க்கையில் மகிழ்ச்சி பற்றி Rhetoric ஐந்தாம் அத்தியாயத்தில் எழுதியுள்ளார். ஆனால் இக்கட்டுரையை அதனுடன் ஒப்பிட முடியாது. இதற்கு முன்னால் இவ்விஷயத்தில் என்னவெல்லாம் கூறப் பட்டுள்ளது என தொகுப்பது என் நோக்கமல்ல. என்னுடைய தனிப் பட்ட கருத்தையே இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். பொதுவாக எப்போதுமே எல்லா மாபெரும் அறிவாளிகள் ஒரே விஷயத்தையே சொல்லி வந்திருக்கிறார்கள், எண்ணிக்கையில் அதிமாக உள்ள மூடர்கள் எப்போதும் சொல்லியதற்கு எதிராகவே நடந்திருக்கிறார்கள். இங்கும் அப்படித்தான் நடக்கும். வால்டர் சொல்லியது போல் "“we shall leave this world as foolish and as wicked as we found it on our arrival”


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2