Translate

மன உளைச்சலுக்கான காரணங்கள்

கீழ் வருபவை மன உளைச்சல் ஏற்படும் காரணங்கள்.

இதைச் சொல்பவர் மூளைச் செயல்பாட்டை வாழ்க்கை முழுதும் ஆய்வு செய்பவர். Behvae என்று மூளையைப் பற்றிப் புத்தகம் எழுதியிருக்கிறார். பெயர் ராபர்ட் சபோல்ஸ்கி, ஸ்டான்போர்ட் விரிவுரையாளர்.

1. நடந்த உரையாடல்களை மனதில் மீண்டும் மீண்டும் நிகழ்த்திப் பார்ப்பது. முதல் முறை நடந்த சம்பவம் மனதில் எவ்வளவு உளைச்சலை ஏற்படுத்தியதோ, அதுவே மீண்டும் மீண்டும் அதை மீட்டிப் பார்க்கையில் நிகழ்கிறது. நிகழ்ந்த அவமானங்கள், சரியாக நடக்காத செயல்கள், சிறிய, பெரிய துரோகங்கள் போன்றவை. 

2. நடக்கப்போகும் சம்பவங்களை எண்ணிக் கவலைப் படுவது. பள்ளியில் சேர்ப்பது, வயதாவது, வேலை கிடைப்பது போன்ற பின்னால் வரும் சம்பவங்களுக்காக கவலைப் பட்டு பிரயோஜனம் இல்லை. ஏதாவது உடனே, சீராக செய்ய இருந்ததால் செய்து கவலையைத் தள்ளி வைக்க வேண்டும்.

3. தொடர்ந்து செய்திகள் பார்ப்பது . 

4. துன்பமான, வன்முறையான நிகழ்ச்சிகளை, வீடியோக்களை பார்ப்பது.

கற்பனைக்கும் நிஜத்திற்குமான வித்தியாசம் நரம்பு மண்டலத்திற்குத் தெரியாது. அடுத்தவர்க்கு நடப்பதைப் பார்ப்பதும், தனக்கு நடப்பதும் மனதளவில் ஒன்றுதான்.

 5. நம்மால் சரி செய்யவே முடியாத விஷயங்களுக்கு கவலைப் படுவது. டிராபிக், ரோடு கண்டிஷன், கூட்ட நெரிசல் போன்ற விஷயங்கள்.

6. நெருக்கமானவர்களுடன் நேரம் செலவிட முடியாமல் போவது. வேலையைப் போல் இதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். பலமான உறவுகள், தேய்ந்து இல்லாமல் போவது நேரமின்மையால் மட்டுமே.

7. வார இறுதியில் ரிலாக்ஸ் பண்ணலாம் என்று ஒத்தி வைப்பது. இது தினமும் செய்ய வேண்டியது, வீக் என்ட் சமாச்சாரம் இல்லை.

உளைச்சலில் இருக்கும் போது செய்ய வேண்டியது :

8. தியானம், பிடிக்கவில்லையானாலும் செய்ய வேண்டியது.

9. சோர்வுண்டாக்கும் ஆட்களிடம் இருந்தும், இடங்களில் இருந்தும் தள்ளி இருப்பது.

10. கார் சுவரில் முட்டி நிற்கும்போது ஆக்சிலரேட்டர் கொடுக்காதீர்கள். பின்னே இழுங்கள், இல்லை காலை எடுத்து நிதானம் கொள்ளுங்கள்/


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2