Translate

நேரத்தைக் கையாள நடைமுறை வழிகள் - ஜெயமோகன்

நேரத்தைக் கையாள வழிகள் - ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் காணொளி உரை கீழே இறுதியில் இருக்கிறது. இரண்டு முறை (80%-20%)  பார்த்து எழுதியது.

செயல் என்பது காலத்துடன் இணைந்தது. காலத்தைக் கையாளுவதற்குப் பெயர் தான் செயல் எனப்படுவது. காலத்தைப் பற்றிய பிரக்ஞை இல்லாதவனால் செயலாற்ற முடியாது, செயல் என்பது நேரத்தைச் செலவழிப்பது மட்டுமே. 

காலத்தை எப்படி நடைமுறையில் கையாளுவது?. 

சில பொன்விதிகள்.

1. இது காலத்தை வீணாக்குகிறதா? தொலைக்காட்சி, சமூக ஊடகம் போன்றவை நேரம் உறிஞ்சவே வடிவமைக்கப் பட்டுள்ளன. நம் நேரத்தை பிக் பாக்கெட் செய்கின்றன. நாளின் நேரத்தை இதில் விரயம் செய்கிறோமா என்ற கேள்வி பலமுறை கேட்டுக்கொள்ள வேண்டும்.

2. செயலில் குவிதல். ஒதுக்கிய நேரத்தில் ஒதுக்கிய செயலை மட்டுமே செய்ய வேண்டும். முழுமனதுடன், முழு கவனத்துடன் அந்த ஒரே செயலை மட்டும் ஆற்ற வேண்டும். இரண்டு வேலை செய்யலாகாது. இந்த நேரத்தில் வேறு எதுவும் நடுவில் குறுக்கிடக் கூடாது. 

3. கோல்டன் டைம் :  காலை நேரம் ஆற்றல் உள்ளது. அதை முக்கியமான செயல்கள் செய்ய உபயோகம் செய்ய வேண்டும். கற்பனை உச்சத்தில் இருக்கும் நேரம். மாலை நேரங்களை உரையாடல் போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தலாம். இந்த நேரங்களில் கடுமையான உடற்பயிற்சி ஆகாது. மனதை அயரச் செய்யும்.

4. வேலைக்கு நடுவே சிறிய மகிழ்சிக்கான இடைவெளிகள் அவசியம். பதினைந்து நிமிடம் போதுமானது. ஒரு டீ, சிறிய பேச்சுக்கான இடைவெளி. நேரப் பொழுதுபோக்கு என்பது நேர விரயம் மட்டுமே.

5. முக்கியமான எல்லாவற்றிற்கும் நேரம் இருக்க வேண்டும். ஒன்றைத் தவறவிட்டு இன்னொன்றை நன்றாகச் செய்ய முடியாது. குடும்பம், இலக்கியம், நண்பர்கள், குழந்தைகள் எல்லோருக்கும் நேரம் அவசியம். அளவு மாறலாம். எதுவும் இல்லாமல் போகலாகாது. அது உங்கள் முக்கியமான செயலை அழுத்தும்.

இப்படி நேரம் இருந்தும் பின்னர் ஏன் பயன் படாமல் போகிறது?

6. டொமட்டோ க்ளாக் (அ) தக்காளி கடிகாரம்  : தக்காளியின் அலைகள் போல, நாளின் நேரம் அலை அலையாக இருக்க வேண்டும். ஒரு நாளில் பல அலைகள் இருக்க வேண்டும். ஓங்கி எழுந்து, வீழ்ந்து, கரை தொட்டுப்  பின்னர் மீண்டும் எழ வேண்டும். உங்களுடைய ஆற்றலின் உச்சம்  நாளில் பலமுறை அலைபோல், வீழ்ந்து, எழுந்து வரவேண்டும். இல்லையெனில்  தரம் குன்றி, ஊக்கம் கெடும். தொடர்ந்து ஆறேழு மணி நேரம் எழுதுவது இயலாத காரியம். எழுதியதைத் திருத்த ஆரம்பித்தால் நீர்த்து படைப்பூக்கம் குன்றி விடும். ஒன்றரை மணி நேர எழுத்து, அரை மணி நேர இடைவெளி விட்டுச் செய்ய வேண்டும்.

7. அறிமுகம் இல்லாத, அவசியம் இல்லாத விஷயங்களில் நேரம் விரயமாகிறது. ஆப் இன்ஸ்டலேஷன், எலெக்ட்ரானிக் சாமான்களைக்  குடைவது போன்றவை விரயங்கள். நன்றாகச் செய்யும் ஆட்களை வைத்தோ, செய்யாமலோ பொழுதைச் சேமிக்கலாம்.

8. 90% நேரங்களில் வேலைக்கு எழுத்தைப் பயன்படுத்துங்கள். பேச ஆரம்பித்தால் நேரம் இழுக்கும். எழுதும் போது எண்ணம் கோர்வையாகிறது. SMS, வாஸ்டப், மின்னஞ்சல் போன்றவை நேர மிச்சம்.

9.ஏற்கனவே திட்டமிட்ட செயல் முடியாமல் அடுத்த செயலுக்கு போகக்கூடாது. முடிக்காத செயல் அடுத்த செயலை இறுதியில்  இரண்டும் முடியாமல் போகும். 

https://www.youtube.com/watch?v=YZqZls-6z6M&t=617s

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2