'புத்தருக்கு பட்டர் ஸ்காட்ச்சில் தோய்த்து பஜ்ஜி தின்னப் பிடிக்கும்'
'புத்தருக்கு பட்டர் ஸ்காட்ச்சில் தோய்த்து பஜ்ஜி தின்னப் பிடிக்கும்'
-----------------------------------------------------------------
வெண்மேகமென பனி மலையை முழுதும் மூடியிருந்தது.
அந்த மடாலயத்தில் இருந்து பள்ளத்தாக்கின் வீடுகளின் விளக்கொளி தெரிந்தது.
ஒரு முகடில் அஸ்தமனச் சூரியன் பொன் தகடை இன்னும் பரப்பியிருந்தது.
சடைமாடு ஒன்று முதுகில் நின்ற பனியைச் சிலிர்த்து உதறியது.
புத்தர் உத்தரசங்கத்தை மட்டும் போர்த்தியபடி இமைக்காமல் நெடுநேரமாய் முகட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
நின்றிருந்த மாணவர்கள் உதடுகள் நடுங்கியபடி, கைகளை உடையினில் மடித்திருந்தனர்.
அவர்களைப் பார்த்துச் சொன்னார்:
'முதல் அம்பைத் தடுக்க முடியாது.
ஆனால் இரண்டாவதைத் தடுக்கலாம்.
அதன்பின், ஸ்காட்ச்சில் பஜ்ஜியைத் தோய்த்துத் தின்னலாம்.'

Comments
Post a Comment