Translate

பிக்காசோவுக்கு பியானோ வாசிக்கத் தெரியாது

பிக்காசோவுக்கு பியானோ வாசிக்கத் தெரியாது

-------------------------------------------------------------------------



அவன் விசைப் பலகையில் கைவைத்தான்.

ஏனோ ஒரு சொல்லும் வெளியில் வரவில்லை.


எழுந்து போய் மேற்கூரையற்ற வானின் கீழ் நின்றான்.


எங்கிருந்தோ வந்த காற்று விசைப் பலகையென மரத்தின் இலைகளைத் தொட்டு இசைத்தது.

ஒரு பவள மல்லி மண்ணில் வீழ்ந்து பிரபஞ்ச யாழ் சிறிது அதிர்ந்தது.

பின்னர் ஒரு கண நேர அடை மழையென பவள மல்லிகள்.


பின்னர் விசைப் பலகையில் அவனுக்கு முதல் சொல் திறந்தது. 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஆப்பிளின் கதை - Dr. கே எஸ் குப்புசாமி