மூக்குக்கு மூன்று துவாரங்கள்
மூக்குக்கு மூன்று துவாரங்கள்
--------------------------------------
மூக்குக்கு மூன்று துவாரங்கள்
----------------------------
அவன் ஓடும் பலகையில் அதி தீவிர இடைவெளி ஓட்டம்(HIIT) ஓடிக் கொண்டிருந்தான்.
30 நொடிகள் குதிரையாய் தலை தெறிக்கும் ஓட்டம்.
தொடர்ந்து 60 நொடிகள் யானை போன்ற ஓட்டம்.
இப்படிப் பத்து முறை.
நான்காவது ரவுண்டில் குதிரைக்கு வாயில் எச்சில் கொட்டியது.
யானையை நினைத்து மனது ஏங்கியது.
எட்டாவது சுற்றில் கால்கள் தளர்ந்து, வயிறு இறுகிப் பிடித்தது.
ஒன்பதாவதில் நரம்புகள் புடைத்து தலை நோக விசையை நிறுத்தி முடியாமல் யானையும்,குதிரையும் வெளியேறியது.
இறங்கி மூச்சு நிதானமானபின், அவன் மனதில் தலை கால்கள் உள்ளிழுத்த ஆமை தோன்றியது.
பரவெளி என்ற நாசி அவனையும் காற்றாய் உள்ளிழுத்துக் கொண்டது.

Comments
Post a Comment