Translate

வரலாறு சிலருக்கு அன்றாட வேலை - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை

வரலாறு சிலருக்கு அன்றாட வேலை - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை

----------------------------------------------------------------------------------



வரலாற்றை வருடங்களின் கோர்வையாகப் பார்ப்பது சலிப்பூட்டும். யார் யாருக்கு மகன், எப்பொழுது பிறந்தார், எங்கே என்னென்ன சண்டைகள் , ஜெயித்தது, தோற்றது போன்றவை தகவல் அடுக்குகள் என்று தோன்றும்.


ஒரு வகையில் வரலாறு என்பது மாபெரும் தொங்கும் போட்டோ பிரேம்கள் தானோ என்ற எண்ணம் வருகிறது. ஸ்டாம்ப் அளவில் இருந்து, கட் அவுட் அளவு வரை தொகுத்துச் சேர்த்த போட்டோ ஆல்பம். அக்கால ஜமீன் வீடுகளில், மான் வேட்டைக்குப் போய் வந்த ஆதாரமாய், தோலை உருவி வைக்கோலில் அடைத்து, கொம்பு சொருகி சுவற்றில் அறைந்திருப்பார்கள். வரலாறும் இப்படித்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது.


ஆனால் எல்லாமும் அப்படி இல்லை. ஒரு சொல்லோ, வரியோ நம்மை எழுந்து அமர வைக்கிறது. ஒரு பொறி.


வரலாற்றில் இடம் பிடித்த ஒருவர் பின்வருமாறு சொன்னால் அவரை என்னவென்று நினைப்பது?


"வேலை செய்வதற்கான வாய்ப்பை மட்டுமே நான் விரும்பினேன். தனிப்பட்ட முன்னேற்றம் குறித்த எண்ணங்கள் எனது செயல்களைத் தீர்மானிக்கவில்லை. இப்படி நான் கூறினால், அது என் தரப்பிலிருந்து அடக்கத்தைக் காட்டுவதற்காகச் செய்யப்படும் போலி பாவனை என்று எண்ணக் கூடாது. ...இந்த முக்கியமான பொறுப்புகளின் மூலம், நான் என்றென்றும் ஏங்கிய பணி செய்வதற்கான முழுக் களமும் எனக்குக் கிடைத்துள்ளது. இதற்குமேல் நான் எந்தப் பிரதிபலனையும் விரும்பவில்லை. "


மோட்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா வாழ்வைப் பற்றிய எனது மெட்ராஸ் பேப்பர் கட்டுரை


https://madraspaper.com/mokashagundam-visveswaraya/ 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஆப்பிளின் கதை - Dr. கே எஸ் குப்புசாமி