Skip to main content

Posts

வெண்முரசு வண்ணக்கடல் - சில அழகியல் குறிப்புகள் -1

 வெண்முரசு வண்ணக்கடல் - சில அழகியல் குறிப்புகள்  இந்தப் பதிவு கடந்த ஒரு சில வாரங்களின் அழகியல் பற்றிய நூல்களின் மீள் வாசிப்பும் , பின் மேலான புரிதலுக்குப் பின் எழுதும் குறிப்புகள். வண்ணக்கடல் முதல் 15 அத்தியாயங்களை மறுவாசிப்பு செய்யும் போது எடுத்த குறிப்புகள். இளநாகன் இருக்கும் சிற்றூர் நிலச்சித்திரம் , மனிதர்களின் தோற்றம் குறித்த பகுதி, வேகத்தைக் குறைக்காமல் கதைக்குள் அழகாக வருகிறது. ஒரு அத்தியாயம் பெரும்பாலும் ஒரு சிறுகதையாக படிக்க முடிந்தது. ஒன்றை நோக்கிச் செல்லும் வேகம், ஓரிரு மையப் பாத்திரம், அவர்களை ஒட்டிச் செல்லும் ஒரு குறுங்கதை என்ற கட்டமைப்பு உள்ளதாகவே நினைக்கிறேன்.  , அதை ஆளும் குறுநிலமன்னன் சித்தரிப்பு கதையின் போக்கில் அழகாகச் சொல்லப்படுகிறது, அவர்களது சேலை தலைப்பாகையாக  , விசிறி சுவடியாவது, அவர்கள் வயது, அவர்களை பையன்கள் அழைத்து வந்திருப்பது, அவர்களுக்கு உணவின் மேலிருக்கும் குறி போன்றவை கதையின் வேகத்தைக் குறைக்காமல் வருகின்றன.கண்முன்னே நிகழ்த்திக் காட்ட வேண்டும் , ஆனால் வேகம் குறையாமல்  , துருத்தலும் இல்லாமல் இருக்க வேண்டும். சொல்லவேண்டியது என்ன என்ப...

விசும்பின் துளி

விசும்பின் துளி  ஒவ்வொரு பொங்கல் சங்கராந்தியிலும் இந்த இரண்டு விஷயங்களை தவறாமல் நினைவு கூர்கிறேன். இன்னும் இங்கு சூரியன் வரவில்லை. இடையில் நெடுநாளாய் எண்ணி இருந்த இந்தப் பதிவு. ஒன்று வெண்முரசில் வண்ணக்கடலில் வரும் இளநாகன் அர்க்கபுரிக்குச் செல்லும் இடம். மஹாபாரத அர்க்கபுரி இன்றைய ஒரிஸ்ஸாவின் கோனார்க். பாரதத்தில் சூரியனின் முதல் ஒளிக்கதிர் விழும் இடம் என்று சொல்லப்படுவது. இளநாகனுக்கு சூரியனின் கதையை சொல்லும் இப்பகுதி , கர்ணன் துரியனால் அங்க மன்னனாக முடிசூட்டபின் அவன் மாபெரும் கொடையாளியாக உருவெடுக்கும் இடமும் கூட.  https://venmurasu.in/vannakkadal/chapter-49 காசியபருக்கு தட்சனின் மகளான அதிதியில் ஆதித்யர்களும் வசுக்களும் ருத்ரர்களும் பிறந்தார்கள். அவர்களில் முதன்மையானவர்கள் பன்னிரு ஆதித்யர்கள்.  விவஸ்வாவின் மைந்தனே உயிர்த்துளியாக முளைத்த வைஸ்வாநரன். சூரியனின் தேர் ஒன்பதாயிரம் யோஜனை நீளமுள்ளது. பன்னிரு தேர்ச் சக்கரங்களே கால வடிவங்கள். அறிவென்ற வேதங்கள் அவன் மார்பில் கவசங்கள். பெருநாகங்கள் கடிவாளங்கள். அவன் அழிவற்ற பிரம்மத்தின் வடிவம். சூரியக் குழந்தை இதே போல் என்றென்றும் புகழோ...

The Psychology of Money - Morgan Housel - பணத்தின் உளவியல் ,சில குறிப்புகள்

Psychology of  Money - Morgan Housel -  பணத்தின் உளவியல் ,சில குறிப்புகள் எனக்கு தினமும் வரும் டைஜஸ்ட்(வடிக்கப்பட்ட, பொறுக்கப்பட்ட, செரிக்கப்பட்ட  ? ) மெயில்களில்  quora-வில் இருந்து தவறாமல் சில வரும். நான் அவைகளைப் படிப்பதால் , அவை இன்னமும் வருகின்றன. அழகாய்த் தொகுக்கப்பட்ட நான்கைந்து கேள்விகள். எல்லாமும் இந்த இரண்டு கேள்விகளுள் அடங்கும், என்றோ ஒரு நாள் நான் தேடியவையாக இருந்திருக்க வேண்டும். ஒன்று, பணமிருந்தால் எங்கு முதலீடு செய்து அதை பெருக்குவது. இரண்டாவது, என்றோ வேலையில் இருந்து ஓய்வு பெற இன்று என்ன செய்ய வேண்டும், எவ்வளவு சேமிக்க வேண்டும்.  'நாற்பது வயது, இரண்டு குழந்தைகள்,58 வயதில் ஐந்து கோடி சம்பாதிக்க இன்று என்ன செய்ய வேண்டும்?' '60 வயது, ரிட்டயர்டு , கையில் எண்பது லட்சம் இருக்கிறது. இதை வைத்து 80 வயது வாழ என்ன செய்ய வேண்டும்'. எண்கள் மாறலாம் , ஆனால் இன்றும் இவை இரண்டும் மனதில் துருத்தி நிற்கும் கேள்விகள்.  இதற்க்கு வரும் பதில்களும் ஓரிரு மாதிரிகளில் அடங்கி விடும். ஏறத்தாழ ஜாதகம் மாதிரி இடத்திற்கு இவர்களும் இதை நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள்....

சைக்கிள் பதிவுகள்- 13 - டிசம்பர் 31

சைக்கிள் பதிவுகள் - டிசம்பர் 31 வீட்டுக்கும் அலுவலகத்திற்குமான பதினைந்து கிலோமீட்டர்களை , மூன்று ஐந்தாக பிரித்துக் வீட்டுக்கும் அலுவலகத்திற்குமான பதினைந்து கிலோமீட்டர்களை , மூன்று ஐந்தாக பிரித்துக் கொண்டால் மனத்தை பிடியில் வைக்கலாம். முதல் ஐந்து முடிந்ததும் ஒரு தேநீர், இது மனதிற்கு கேரட்.  இரண்டாவது ஐந்தின் முடிவில் நிறுத்தி  உண்மையான கேரட் வாங்குவது  , இது உடலுக்கு என நினைத்துக் கொள்கிறேன். மூன்றாவதில் முடிவில் முகத்தைக் கழுவி மீண்டும் ஒரு கோப்பை  காபி. இன்று டிசம்பர் 31.  இப்போது மின்னஞ்சல்களை நுண்ணறிவு செயலி வழியாக வடிகட்டி வைத்திருக்கிறேன். கடந்த ஒரு சில நாட்களாக , செயலாய் வரும் மின்னஞ்சல்கள் நாளில் ஒரு சில மட்டுமே வருகின்றன. இதற்கு மேல் பெரிய மெயில்களை அதுவே வாசித்து ஓரிரு வரிகளில் சுருக்கித் தருகிறது. இதற்க்கு நீங்கள்  ஒரு பதில் மெயில் அனுப்பினால் , சருகாய் திரும்பி அவுட் ஆப் ஆபீஸ் மெயில்களை கூட்டி  அள்ள வேண்டியிருக்கிறது. எதிர்காற்று என்பார்கள், டிசம்பர் 31 என்பதும் அதுதான் .  காலையில் வார இறுதிக் கூடுகைக்காக கிளி சொன்ன கதை முதல் அத்தி...

சைக்கிள் பதிவுகள் 12- Breath, James Nestor , மூச்சைப் பற்றி...

சைக்கிள் பதிவுகள் 12-  Breath, James Nestor , மூச்சைப் பற்றி...  நாம் நினைத்துப் பார்க்க முடியாத சிறிய விஷயங்களையும் வியக்கும் அளவு பெரிதாக்கிச் செய்யும் கலை வெளி நாட்டவர்களுக்கு எப்படியோ உடம்பில் ஊறி இருக்கிறது. என்றோ ஒரு நாள் வியந்து, பின்னர் அதைப்போலத்தான் இது என்று அடுக்கி , அதற்குப் பெயர் கண்டு பிடித்து  மிகச்சாதாரணமாக  கடந்து செல்லும் விஷயம்தான் இதுவும். உதாரணமாக இப்போது இங்கு பிராணாயாமம் என்று ஒரு வார்த்தை எழுதினால், அடுத்த நொடி  நீங்களும் இதை ஒரு முழு நீள ஸ்குரோல் செய்து கீழே முட்டியதும் மூடி வைத்துவிட்டுப் போகலாம். ஏனென்றால் அதிலிருக்கும் வியப்பைப்  பிதுக்கி எப்போதோ வெளியில் எடுத்தாயிற்று.  சில வருடங்களுக்கு முன் முதலில் ஒருவர் மூச்சை வைத்து பிழைப்பை நடத்துகிறார் என்பது எனக்கு பெரிய ஆச்சரியமாய் இருந்தது. இந்தப் புத்தகத்தை வாசித்ததும் மீண்டும் அந்தக் கம்பெனி இருக்கிறதா என்று தேடினேன். அமோகமாய் இருக்கிறது. அவரும் ஒரு புத்தகம் எழுதிவிட்டார். அண்ட்ராய்டு , ஐபோன் ஆப் இருக்கிறது. பேட்ரிக் மெக்கேன் , Oxygen Advantage என்பது அவருடைய நிறுவனத்தின் பெயர்...

சைக்கிள் பதிவுகள் - 10- கார்காலப் படலம்

கார்காலப் படலம்  கொஞ்சம் பழைய வீடாய் இருந்தால் பாத்ரூம் கதவை கொஞ்சம் ஓங்கி மூடினால், வெளிக்கதவு  தானாக திறப்பதை  நீங்கள் பார்த்திருக்கலாம். மெட்ரோ ரயில் நிறுத்தத்தில் வண்டி நிற்கும் முன், அதைவிட முன்னே  வரும் ஒரு வலுத்த குளிர் காற்றைப்போல. ரியர் என்ஜின் வோல்வோ வண்டிகளில் டிரைவர் பிரேக்கை அழுத்தியதும் , நங்கூரம் பாச்சிய கப்பல் போல, முழுதும் முன்னாலே போய் , பின் அந்தக்கணமே பின்னால் வந்து , கீழே உள்ள தூசியெல்லாம் எல்லாம் சுழற்றி நம் மேல் அடிப்பதைப் போல. இதேபோலத்தான் வங்கமோ , அரேபியாவோ, இல்லை இரண்டும் சேர்ந்து இந்தியப் மகா சமுத்திரத்தில் வந்தாலும் அந்தப் புயல், காற்றழுத்தம்   , பெங்களூரில் தெரியாமல் போகாது. மூன்று நாள் முடிந்து இன்று நாலாவது, வெய்யில் இன்னும் இல்லை.  மழையை விட மழை என்னும் குரல்கள் எங்கும் அடை மழையாய்ப் பொழிகின்றன. ரோடு ,தெரு, வீடுகள், எல்லாம் வார்த்தைகளாய்ப் புகுந்து , நிழலாய் கூடவே இருக்கின்றன.  எல்லா செயல்களும் , திரை விலக்கி ஒரு வெளிச்சத்தில் பார்ப்பது போல, மழை மேல் உரசிப் பார்க்கப்படுகின்றன. ஒரு கரகரப்பான குரல் , எங்கோ ஒரு சிறு இருமல்,...

ஒரு ஸ்டம்ப் சிக்கியது

ஒரு ஸ்டம்ப் சிக்கியது ஒரு ஸ்டம்ப் சிக்கியது   நேற்று முன்தினம் இரவு சரியாக மூன்று  மணி நேரம் முழு நெட்ஒர்க் இல்லாத ஒரு வருட முடிவு கொண்டாட்டத்தில் இருக்கும் போது அம்மா கால் தவறி கீழே விழுந்து ஆளாளுக்கு தொடர்புகொள்ள முயற்சித்திருக்கிறார்கள். நானாய் திரும்ப அழைக்கும் போது அருகிலிந்தவர்கள் ஆம்புலன்ஸில் கூட்டிச்சென்று திரும்ப வீட்டில் விட்டிருந்தார்கள். கடவுள் செயலால் பெரிதாய் ஒன்றும் இல்லை. இது இப்படி இருக்கும் போது அடுத்த நாள் கடையில் இருந்தபோது A/C யில் ஏன் நெற்றியில் வேர்க்கிறது என்று கடைப்பெண் கேட்பதாக மனைவி கேட்டார்.  ஜெயமோகன் தளத்தில் நான் எழுதியது வந்திருப்பதாகச்  சொன்னார்கள், அதைத்தான் படித்துக் கொண்டிருந்தேன். திரும்பிப் படிக்கும்போதும் நன்றாய் இருப்பதாகவே நினைத்தேன். https://unifiedwisdom.guru/200415 https://www.jeyamohan.in/208506/ கிரிக்கெட்டில் ஜெயித்த வேகத்தில் ஸ்டம்புகளை ஆளுக்கொன்றாய் உருவி எடுத்துச் செல்வார்கள். ஒரு ஸ்டம்பு கையில் கிடைத்தது இன்று.