Translate

வாசிப்பது எப்படி - செல்வேந்திரன் - நூல் பதிவு



vasippathu eppadi/வாசிப்பது எப்படி? 

நாம் பொதுவாக புத்தகங்களைப் படிப்பது என்பது 'ஒரு' புத்தகத்தை எவ்வாறு படித்து புரிந்து கொள்வது என்று எண்ணி கொண்டிருக்கிறோம். ஆனால் என்னைப் பொறுத்தவரை வாசித்தல் என்பது ஒரு process - செயல் முறை ஆகும். இதை செய்து பார்த்து , படித்துப் பார்த்து, பேசிப் பார்த்து  refine செய்து கொள்ளலாம் என்பது இந்தப் புத்தகத்தில் இருந்து நான் புரிந்து கொண்டது. 

முக்கியமாய் syllabus, வேலைப்  புத்தகங்களுக்கு மேல் ஏன் படிக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆசிரியர் கல்லூரி மாணவர்களையும் இளம் வாசகர்களையும் இலக்கியத்திற்குள் ஏன் வர வேண்டும் என்று படிப்படியாக விளக்குகிறார். compelling ஆக இருக்கிறது. ஒரே அமர்வில் படித்து முடித்தேன்.

புத்தகத்தை கையில் வைத்துள்ள ஒருவரை போலீஸ் சந்தேகிப்பதில்லை என்கிறார். இது உண்மை என்றே நினைக்கிறேன்.இவர் செல்லும் பேருந்தில் இவருக்காக லைட்டை இரவில் எரிய விடும் ஓட்டுநர் இருக்கிறார். ஒரு நல்ல சூழியல் புத்தகம் படித்தவர் பீர் போத்தலை காட்டில் உடைக்க மாட்டார் என்கிறார். ஜெயலலிதாவுக்கும் செம்மீன் கதாநாயகிக்கும்(ஷீலா ) உள்ள வித்தியாசம் வாசித்தல் என்கிறார். இரண்டு பேரும் நண்பர்கள். பட வெற்றிக்குப் பின் இருவரும் தனி வீடு கட்டுகிறார்கள். ஷீலா பவுண்டைன் வைத்து கட்டுகிறார். ஜெயலலிதா வேதா இல்லத்தில் 2000 சதுர அடி நூலகம் அமைக்கிறார். ஜெயலலிதா கையில் Jeffrey Archer புத்தகத்துடன் MGR உடன் நிற்கும் புகைப்படம் உள்ளது. மித்தாலி ராஜ் பேட்டிங் செய்ய காத்திருக்கும்போது புத்தகம் வாசிக்கிறார். விராட் கோலி படிக்கிறார்.

விடியோக்கள் பார்த்தும் , ஆடியோ கேட்டும் கற்று கொள்ள முடியாதா? இதுவரை பார்த்தோ கேட்டோ மட்டுமே பெரிய ஆள் ஆனவர் இல்லை. விடீயோக்கள் செல்லும் வேகத்தில் எண்ணங்கள் தோன்ற முடியாது. கற்பனை சாத்தியம் குறைவு.

வாசிப்பை மூன்றாய் பிரிக்கிறார். 

1. வாழ்க்கைக்கு உதவும் படிப்பு -   பாட புத்தகங்கள், வேலை, துறை சார்ந்த புத்தகங்கள், தினசரிகள் - பேப்பர்களை தூக்கி பிடிக்கிறார். நான் சில வருடங்களாக பேப்பர் படிப்பதில்லை. தகவல்களுக்கு உதவும் தான்.

2.வாழ்க்கையை புரிந்த கொள்ள உதவும் வாசிப்பு - இதையே இலக்கிய வாசிப்பு என்கிறோம்.

3.பொழுது போக்கு வாசிப்பு - சினிமா,வார இதழ்கள் போன்றவை. குறைக்க வேண்டியவை.

பெரும்பாலும் விடாமல் படிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் படிக்க வேண்டும். ஒரு புத்தகம் முடித்து அடுத்தது - இது என் பிரச்சனை. சரியாக தொகுக்க முடியாது. குறிப்பு எடுக்க வேண்டும். device குறுக்கீடு இல்லாமல் படிக்க வேண்டும். ஒரு நாள் 30 நிமிடம் படித்தால் , ஒரு வருடத்தில் 20 பக்கம் உள்ள  65 புத்தகங்கள் படிக்க முடியும். இது ஒரு சாதனையாகவே இருக்கும்.

50 இலக்கிய நூல்களின்  பட்டியல் இணைத்துள்ளார். சவால் தான்.

என்னுடைய ஆரம்பப் பள்ளி வகுப்பு ஆசிரியர் திரு.ராமராஜ்  தினம் பள்ளி முடியும் முன் 30 நிமிடம் ஒரு கதைப்  புத்தகத்தை தினமும் மாணவர் மத்தியில் உரக்கப் படிப்பார். விட்ட இடத்தில் மறுநாள் தொடர்வார். அவரும் படிப்பது எப்படி என்றுதான் சொல்லி இருக்கிறார்.

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2