பாகூறிக் குண்டினைக் கொண்டு கொல் #3, ஒரு லட்டில் எத்தனை பூந்திகள் இருக்கலாம்? - #4 (ஜென் கதைகள்)
பாகூறிக் குண்டினைக் கொண்டு கொல் #3 ------------------------------------------------------ (பாகூறிக் குண்டு - குலாப் ஜாமூன்)
பால்வண்ணன் ஆபிஸ்-புத்தரிடம் கேட்டான். 'குருவே ! ஒரு இனிப்பில் கொல்வது எது ?' குரு சொன்னார் : 'பெருங்கொலைகள் அழகிற்கே. கொலை வாளும் அழகே. அழகு என்பது எண்ணம். எண்ணமும் கையிருக்கும் வாளே!'
ஒரு லட்டில் எத்தனை பூந்திகள் இருக்கலாம்? - #4 -------------------------------------------------------------------------------- பால்வண்ணன் பிள்ளைப் பிராயத்தில் இருந்தே வெளியுலகமே பாராமல், பொழுதெல்லாம் படித்தும், கிடைக்காத முதல் இடத்தை துரத்தித் துரத்தி , இரண்டாம் வகுப்புக் கல்லூரியும், இரண்டாம் வகுப்பில் வேலையும், இரண்டு கல்யாணமும், இரண்டு பிள்ளைகளும், கடனை வாங்கி எண்ணி இரண்டே முன்னேற்றமும், என்று வாழ்வே இரண்டாம் வகுப்பு ரிசர்வ் ரயில் பிரயாணம் போல் போய்க் கொண்டிருக்கும் போது, 'குருவே , இவ்வாறு முன்பதிவு செய்யும் வாழ்க்கை இன்னும் எவ்வளவு தூரம் 'என்று கேட்டான். 'இங்கே லட்டின் அளவு அவரவர் கைப்பிடி' என்றார் குரு.

Comments
Post a Comment