கதைக்கு உதவாத ஜென்
கதைக்கு உதவாத ஜென்
--------------------------------
நரசுஸ் காபிக் கடையின் படியில் அந்த அறுபது வயது அம்மாள் கையில் வயர் கூடை, உள்ளே எவர்சில்வர் சாப்பாட்டுக் தூக்குமாய் , இவ்வகைப் பொடி வாங்குபவரின் எவ்வித இலக்கணமும் இல்லாமல் நின்றார்.
கடைக்காரப் பெண் காப்பிக் கொட்டைகளை இயந்திரத்தில் அரைத்தபடி , ' அம்மா, உங்களுக்கு என்ன வேணும்?' என்று கேட்டார்.
'ஒரு தாக்கல் மட்டும் கேக்கணும், கை வேலைய முடிச்சுட்டு வா தாயி' என்று சொல்லிக் காத்திருந்தார்.
பின்னர் மகள் வயதிருந்த அப்பெண் வந்ததும், 'தாயீ , நாலு நாளா வேல செய்யுற சமையல் வேலையும் போயிருமோன்னு தலை வேதனையா இருக்கு...வேல பாக்க இடத்துல பில்டர் காப்பி போடச் சொல்லுதாக, காலேல நல்ல பில்டர் காப்பி போடனும் ....'
அப்பெண், வேலைக்குப் புதிதென்றும், இதுவரை வாழ்வில் பில்டர் காபி குடித்ததில்லை என்றும் சொல்லிக் கைவிரித்து விட்டார்.
அருகில் இருந்த ஒரு பெரியவர் இரக்கப்பட்டு, பொடியின் அளவு, கொதி அளவு, கீழ் பில்டர், மேல் பில்டர், மேல் வடிகட்டி, பால் அளவு, கவனிக்க நிறமாற்றம் என்று எல்லாம் அம்மாவிடம் சொல்லி முடித்தார்.
'நீங்க சொன்ன மாதிரியே தான் நாலு நாளா போடுறேன், டாக்டர் தம்பி தண்ணியா இருக்கு...கொளகொளன்னு இல்லேங்காரு '
பெரியவர் உங்க டாக்டர் எஜமானர் வீடு எங்க என்று கேட்க நினைத்து, 'நாளைக்கு காபி சரியா வரும் ' என்று சொல்லிச் சென்றார்.

புதிதாக அரைத்த காபிப் பொடியின் வாசனை தனி.
ReplyDeleteநாளை உமக்கு நல்ல காப்பி அமைய வாழ்த்துகள்
DeleteHe he
Delete