Translate

அன்றாடக் குறிப்புகள் - இன்பத்தைத் தேடிச் செல்லுதல்.

அன்றாடக் குறிப்புகள் - இன்பத்தைத் தேடிச் செல்லுதல்.

-----------------------------------------------------------------------


ஜெயமோகன் தளத்தில் மது வித்யை என்னும் ஒரு சொல் படித்து முடித்து காலை நாலரை மணிக்குக் பையனுடன் கால் பந்து மைதானத்திற்குப் புறப்பட்டேன்.


'புது பிரெண்ட்ஸ் கிடச்சங்களாப்பா' என்று கேட்டேன்.

'காலேல அஞ்சு மணிக்கு பேச்சு யாருக்கும் வாரதுப்பா' என்றான்.

கொஞ்ச நேரத்தில சிரிப்பாங்க , அப்போ கிளாஸ் முடிஞ்சுரும்.'


உண்மைதான், அப்போது நான் பேசியதும் சம்பிரதாயமான பேச்சுத்தான் என்று தோன்றியது.


மது வித்யை என்றால் தேனைத் தேடிச் செல்லும் வித்தை என்று பொருள்.


உடற்பயிற்சிக் கூடத்தின் கண்ணாடிக்கு வெளியே , மூன்றாவது மாடியில் சிறு பூந்தோட்டம் இருக்கிறது.

கண்ணாடிக் கைபிடிச்சுவற்றையும் , உடற்பயிற்சிக் கூடத்தின் கண்ணாடிச் சுவரையும் இணைக்கும் இடத்தில் இரண்டடி அகல தொட்டி கட்டி,செம்மண் நிரப்பி ஓரம் முழுதும் பூச்செடிகள் இருக்கும்.

மஞ்சளும் சிவப்புமான முள்ளி மலர்கள். மேலே தெரியும் நீல வானம் கீழிருக்கும் நீச்சல் குளத்தில் இன்னும் துலங்கித் தெரியும். தொலைவில் தெரியும் வானை முட்டும் அந்த இரு அடுக்குக் குடியிருப்புகளும் , கீழே விளையாடும் குழந்தைகளும் மனதை உடலில் இருந்து அகற்றி விடும்.


மேலாக , கண்ணின் கீழே பூக்கள் இருக்கும். எப்போதாவது தவிட்டுக் குருவியும் , எப்போதும் வண்டுகளும், தேனீக்களும் பூக்களில் நுழைந்து வெளியில் வந்து கொண்டே இருக்கும். முள்ளியில் தேன் இருக்குமா தெரியாது. ஆனாலும் வண்டு அதன் குகைச் சுவர்களில் குடைந்து உள்ளே போய் வெளியே வரும். இது இருட் குகையல்ல. ஒளிக் குகை. மஞ்சளும் , சிவப்புமான ஒளிக்குகை. வெளியில் வருகையில் எங்கோ அந்த ஒளித்துளி அதனில் ஒட்டியிருக்கும். ,


ஆம் , அதன் பெயர் தான் அவர் சொல்லும் மது வித்யை. ஒளியை நோக்கிச் செல்லுதல். வண்ணத்தை நோக்கிச் செல்லுதல். தேனைத் தேடிச் செல்லுதல்.


காலையில் படிப்பதும் எழுதுவதும் எனக்கு மகிழ்ச்சியான விஷயம். இதற்கு முன் எப்போது ஐந்து மணிக்கு எழுந்து படிக்க முடிந்தது என்று யோசிக்கிறேன்.பன்னிரண்டாவது படிக்கும்போது என்று நினைவில் வருகிறது. பின்னர் எல்லாம் இரவில் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது, இப்போதெல்லாம் இரவில் விழிப்பது உவப்பதில்லை.


இவன் விளையாடும் இடம் பெரிய பள்ளி. காலையில் யாரும் இருப்பதில்லை.இரண்டு பெரிய கால்பந்து மைதானங்கள் ஒன்றாக இருக்கின்றன.

பெரிய கேன்டீன் இருக்கிறது. சோபாக்கள் போட்டு இருக்கும். முதல் சில நாட்கள் நாள், இங்கு எழுதப் படிக்கும் இடத்தை அமைத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் செக்யூரிட்டி பார்த்து அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார். அவர் ஹிந்தி எனக்குப் புரியவில்லை. எனக்காக ஒரு விளக்கு எரிந்தது, அவ்வளவே. காலி செய்து, அப்புறம் வெளியில் சில இருக்கைகள் போட்ட மேஜை இருக்கும். அதில் ஒரு வாரம் படித்தேன், எழுதினேன்.


இன்று ஒரு காவலர் அங்கு அமரக் கூடாது என்றார். இங்கு நடப்பது பரவாயில்லையா? உட்கார்ந்தால் என்ன நஷ்டம் என்று கேட்டேன்.மேனேஜருக்கு ஃபோன் போட்டார். இடத்தை விட்டு அகன்று விட்டேன். மேலும் கோபம் வந்தது, வேலை முடியாது என்பது போல் தோன்றியது. கொந்தளிப்பு இறங்காமல் எழுத முடியாது. தெரியாமல் கசப்பைத் தின்றால் துப்புவதா? இல்லை, வாயில் வைத்துச் சுவைப்பாதா? கசப்பு சூவிங் கம் காலையில் வேண்டாம் என்று முடிவு செய்தேன். அவரை மானசீகமாக மன்னித்தேன்.


நினைத்ததும் மனம் அடங்கியது, காரில் உட்கார்ந்து மெட்ராஸ் பேப்பருக்கு வேண்டியதை எழுதி முடித்தேன்.

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2