Skip to main content

Posts

பிரம்ம வித்தை - கீதை குறிப்புகள் 3 - இந்திய ஞான மரபில் கீதை - ஒரு கோட்டுச் சித்திரம்

தமிழில் கீதையைப் பாடலாக மொழி பெயர்த்தவர் ஆயன் பட்டனார் என்பவர் கிபி 12-ம் நூற்றாண்டில் என்கிறார்கள். இது இப்போது கூகிளிலும் சிக்கவில்லை. ஒரு விக்கிபீடியா பக்கம் இவர் பெயரில் இருக்கிறது அவ்வளவே. அடுத்த தமிழ் மொழிபெயர்ப்புக்கு பாரதியார் பிறந்தாக வேண்டும். இவர் பாண்டிச்சேரியில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தலைமறைவாய் இருந்தபொழுது, அரவிந்தர் போன்றோரின் உந்துதலால் எழுதியிருக்க வேண்டும். 1912-ல் எழுதி முடித்திருக்கிறார். இரண்டுக்கும் இடையில் 700 வருடங்கள் இருக்கின்றன.  1885-ல் வாரன் ஹேஸ்டிங்ஸ் இந்தியாவின் கவர்னர் ஜெனெரலாக இருந்தபோது , சார்லஸ் வில்கின்ஸ் என்பவரை கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க பணிக்கிறார். இதுவே முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு. இதையே காந்தி லண்டனில் பாரிஸ்டர் பயிலும் போது படிக்க நேர்கிறது. இதுவே அவருக்கு கீதையின் நேரடி அறிமுகம், 1890 வாக்கில் , இது ஆங்கிலம் வழியே என்பதை கவனிக்க வேண்டும். (இந்த கீதை என்கவுண்டர் நடக்கும் போது காந்திக்கு 20 வயது, பாரதிக்கு 30, மொழி பெயர்த்து முடித்து விட்டார்).  இதன் பின்னர் பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் வர ஆரம்பிக்கின்றன. இந்த ஆங்கிலப் பதிப்புக...

இது வேறு ஒரு சக்கரம்

2063 என்று சொல்லிப்பார்த்தால் பெரிதாக ஏதும் தோன்றவில்லை. இந்த நம்பரை நாட்கள் என்று எண்ணி  365 -ல் வகுத்து 5.8 வருடங்கள் என்றால் நீளம் தெரிகிறது. 2063-ஐ  ஐந்தால் பெருக்கினால் இன்றிலிருந்து வாழ்நாள் கடைசிக்கு வந்து விடும். இப்போது மீண்டும் சிறிதாகத் தோன்றுகிறது. ஆறேழு  வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் ஒரு விழாப் பந்தலில், என்னையும் சேர்த்து மூன்று நண்பர்களுடன் உட்கார்ந்து, நாலாவது நண்பரின் விழாவில் என்ன செய்வது என்பது என்று தெரியாமல், சாப்பாடு நேரம் எப்ப வரும் என்று எதிர்பார்த்து சேரைத் தேய்த்து, கால் மாற்றி மாற்றி உட்கார்ந்து எல்லாம் செய்து, மேற்கொண்டு செய்வதறியாமல் இருக்கும் போது தான் , அருகிலிருந்த நண்பரின் கையிலிருந்த ஆப்பிள் வாட்சை முதலில் அருகில் கண்டேன்.  (அவர் அப்போது தான் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி பண்ணி கையில் கட்டி இருந்தார். அதையே இன்னும் கட்டியிருக்கிறார்...இங்கு பொருத்தம் இது தான் : அவர் பெயர் மணி , ஆனால் அவர் கை மணி மாறாதது ) .   அது இதயத் துடிப்பைக் காட்டும் என்று சொன்னார். வாங்கி கையில் கட்டிப் பார்த்தேன். அறிவியலின்படி எதையும் நீங்கள் அளக்க ஆரம்ப...

பிரம்ம வித்தை - கீதை குறிப்புகள் 2 - கீதை ஒரு புறவய வரலாறு

The Bhagavad Gita - A Biography என்ற தனது நூலில் கிறிஸ்டோபர் டேவிஸ் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதை சொன்ன இடம் என்று ஜோதிசர் என்ற இடத்தைச் சொல்கிறார். இது இன்றைய ஹரியானா மாநிலத்தில் , குருஷேத்திரத்திற்கு நான்கு மைல் தொலைவில் உள்ளது. கீதை உபதேசம் செய்ததாக சொல்லப்படும் ஒரு ஆலமரம் இருக்கிறது. இதில் இறப்பே இல்லாத மரம் என்று எழுதப்பட்ட ஒரு போர்டு தொங்குகிறது. ஒரு இலை கூட தரையில் விழாதவாறு வலை போட்டு மரமே கட்டப்பட்டுள்ளது. மரநிழலில் ஒரு மார்பிள் பெட்டியில்  கிருஷ்ணர் திரும்பி உட்கார்ந்து பின்னால் தேரினுள் கைகூப்பி அமர்ந்திருக்கும் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். காண்டீபம் தேரின் வெளியே கீழே கிடக்கிறது. உள்ளே ஒரு கீதைப் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது.  எந்த ஒரு கோவிலிலும் எளிதாக நாம் காண்பது ஒரு அகவய வரலாறு , தல புராணம். அதைத் தொடர்ந்தே அதே பலகையில் எழுதப்பட்டிருக்கும், எந்த  அரசர் காலத்தில் கோயில் எழுப்பப்பட்டது, எப்போது யார் எடுத்துக் காட்டினார்கள் என்ற புறவய வரலாறு. உதாரணமாக கீதையில் கீழ்க்கண்ட வரிகள் வருகின்றன. "இந்த அழிவற்ற யோகத்தை நான் முன்னர் விவஸ்வானுக்கு சொன்னேன். விவஸ்வான் மனுவுக...

பிரம்ம வித்தை - கீதை குறிப்புகள் 1

மறுபடியும் இதையெல்லாம் ஏன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கடந்த சில மாதங்களில் திரும்பவும் வந்தபடியே  இருந்தது. வார இறுதி நாட்களில் கணினி திறப்பதை அறவே நிறுத்திப் பார்த்தேன். குறுஞ்செய்திகள் குறிப்பிட்ட ஒருவரிடம் இருந்து வருவது தெரிந்து , செயலியை திறப்பதையே குறைத்தேன். இருந்தும் எல்லாம் இருபுறமும் குமுறி நெருங்கியபடியே வருவது தெரிந்தது. மேலே கேட்டால் சொல்வதற்காக, என் பக்கத்தை கோர்வையாக சில பக்கங்கள் கோர்வையாக எழுதி வைத்தேன். அவருடன் வரப்போகும் மீட்டிங்குகளுக்கு என இரவெல்லாம் கத்தியை கூர்  தீட்டியவாறு முழித்து இருந்திருக்கிறேன். கூடே வேலை பார்ப்பவர்களை என் முனைக்கு தயார் செய்ய நெருக்கடியில் செலுத்தியிருக்கிறேன். அன்று அப்படி சனி ஞாயிறு இரண்டு நாட்கள் கூர்தீட்டிய முனையுடன், அவருடன் பேச தயார் செய்து சைக்கிளை மிதித்து மேலும் யோசித்தபடி சென்று கொண்டிருந்தேன். வேறு எங்காவது படகில் ஓட்டை இருக்க்கிறதா, அவரது எல்லா நகர்த்தலுக்கும் நம்மிடம் பதில் உள்ளதா , சொல்லியே ஆக வேண்டிய குறிப்பிட்ட பஞ்ச் வாக்கியங்கள் ...இவையெல்லாம். ஆபீஸ் கண்ணில் தெரியும் அந்த சிக்னலுக்கு முன்னால் இடது ஓரத்தில் இருந்தா...

சம்பக தாமா

சம்பக தாமா ஒன்று கூடி படிக்கவோ எழுதவோ மனம் சிதறாமல் இருக்க வேண்டும். வேலை தான் காரணம் என்று சொல்லிச் செல்லலாம். ஆனால் அதிலும் அருகிலிருக்கும் ஆட்கள் தான் காரணம். இவர்களை நம்மால் தேர்வு செய்ய முடியாது, எல்லாம் தானாக அமைவது தான். அதிலும் ஒரு சிலர் காற்று துளியே ஆனாலும் அறை முழுதும் பரவுவது போல், நம்மை முழுதும் ஆக்கிரமிக்கிறார்கள். நம்மை அறியாமல் சிந்தனை ,செயல் எல்லாம்,  ஆக்கிரமிக்கிறார்கள். இது நேர்மறையாய் இருந்தால் ஒன்றும் இல்லை. எதிர்மறையாய் ஆகும்போது இன்னும் சிக்கல் வருகிறது.  ஒரு கட்டிடம் கட்டும் போது மண்வெட்டியும், கைக்கரண்டியும்  அவசியமே. ஆனால் மண்வெட்டி கொத்துவது, கைக்கரண்டி கட்டுவது. ஒரே கொத்திக் கொண்டிருந்தால், கட்டிடம் தானாய் எழாது. ஒரு இடத்தில் கொத்துபவர்கள் நிறுத்தி விட வேண்டும். கட்டுபவர்கள் அன்று மிகுதி  இருந்தால் வேலையும் ஆகிறது.   ஏன் இதெல்லாம் சொல்ல வேண்டும் என்றால், இப்படி கொத்துபவர் ஒருவர் சில வாரங்கள் லீவில் இருக்கும் போது அலுவலகத்திலும்  கோடை அனல் போய், வள்ளலார் சொல்வது போல் ஆகிறது.  நிழலும், மலர் பூத்த தெள்ளிய ஓடை நீரும், மெல்லிய பூ...

சைக்கிள் பதிவுகள் - 9. செயல் தொடர்

சைக்கிள் பதிவுகள் - 9. செயல் தொடர் 'நாங்கள் அனைத்து இருப்பையும் அங்கீகரிக்கிறோம். ஆனால் ...' 'ஆனால் என்ன..'  'அவை இல்லாமல் இருக்கும் நிலையும் அவற்றில் அடங்கியுள்ளது.' மேலே உள்ளது விஷ்ணுபுரம் நாவலில் வரும் ஞானசபை விவாதத்தில் சமண தீர்த்தங்கரர் கூறும் வரி. தலைப்பை மீறி இந்தப் பதிவும் சைக்கிள் இல்லாத கடந்த சில நாட்களில் நடந்த குறிப்பாய் அமைகிறது. இதை ஒட்டி என்னுடைய பள்ளி ஆசிரியர் சொல்லும் இன்னொரு சம்பவமும் நினைவில் வருகிறது. பையன் படித்தது பசுமாடு கட்டுரை. தேர்வில் கேட்கப்பட்டது தென்னை மர கட்டுரை. இந்த இடத்தில் மேலும் வரப்போவது உங்களுக்குத் தெரிந்தாலும் சொல்கிறேன். பையன் பதில் எழுத ஆரம்பித்தான். மாட்டுக்கு இரு கண்கள் , இரு காதுகள்,  ஒரு மூக்கு, நான்கு கால்கள், ஒரு மடு மற்றும் ஒரு வால். புல் , வைக்கோல் , புண்ணாக்கு என்ற உணவுப் பட்டியல். அப்புறம் பால், தயிர், வெண்ணெய், சாணி, எரு என நீட்டி, பால் , தயிர்  சாப்பிட்டால் மனிதனுக்கு வரும்  நன்மைகள், அதீதத்தில் வரும் கெடுதல்கள் என கட்டுரை எழுதி முடித்தால் கை வலித்தது. கடைசியில் கேட்ட கேள்விக்கு நியாயமாய் , இவ்வாறான பசுமாடு ,...

முதல் மழை

முதல் மழை எனக்கு எட்டு ஒன்பது வயது இருந்தபோது உள்ளூர் கிராம பஞ்சாயத்து பள்ளியில் இருந்து நிறுத்தி வெளியூர் பள்ளியில் சேர்த்தார்கள். இரண்டிலுருந்து மூன்றாவது வகுப்பு செல்ல வேண்டும். வீட்டில் எதிர்வீட்டில் 1 வது வகுப்பு டீச்சர் இருந்தார். ஒன்பது மணிக்கு வேலைக்குச் செல்லும் முன், கிழக்கே பார்த்து நடுத்த தெருவில் நின்று ராஜகோபாலப் பெருமாளை 'பெருமாளே ' என்று சிரம் உயர்த்திக் கும்பிட்டு, என்னையும் ஒரு குரல் கொடுத்து பள்ளிக்கு கூட்டிச் செல்வார். தினமும் கை பிடித்து கூட்டிச் செல்வார் என்று எழுதலாம், ஆனால் உண்மையில் மிக வேகமாய் நடப்பார் , ஓடித்தான் பின்னால் சென்றாக வேண்டும். மிக நீள ஜடை  , ஆனால் வெள்ளை. பிறந்த நாள் அன்று சென்று காலில் விழுந்து வணங்கினால் , ஒரு ஸ்பூன் சக்கரையும் , ஒரு ரூபாயும் கொடுப்பார் . நிற்க, முழுத் தெருவையும் கடந்து , அதாவது, மொத்த வீடுகள் 66, எங்கள் வீட்டின் எண்  2/63, பின்னோக்கி எதிர் எதிராய் 60 வது வீடுகள் , உள்ளே வெளியே பார்த்தபடி நடந்தால் , நூலகம் தாண்டி , ரோட்டின் மேலேறினால் பள்ளிக்கூடம் வரும். ஒரே சத்தம் தான் நினைவில் இருக்கிறது. ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை,...