Posts

Translate

இயற்கையை அறிதல் - எமர்சன் - 1

Image
இயற்கையை அறிதல் ---------------------------- இது இயற்கையை அறிதல் என்ற எமர்சனின் ஏழு கட்டுரைகளை அடைப்படையாகக் கொண்டது. பல முறை வாசித்த பின், சமீபத்தில் புரிந்தது என எண்ணினேன். பின்னர் புரிதலுக்காகத் தமிழில் மொழிபெயர்த்தேன். வரிக்கு வரி இல்லாமல் , நிறையவும் குறுக்காமல், புரியும் வகையில் எழுதப்பட்டது. [அடைப்புக் குறிக்குள் வருபவை நான் எழுதியவை, எமர்சன் மேல் பழி சேராது ] இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு, கலை என்றால் என்ன, படைத்தல் என்றால் என்ன, மொழி என்பது என்ன போன்ற அடிப்படைக் கேள்விகளை கேட்டு விடை சொல்கிறது. இயற்கை மனிதனை மேம்படுத்தவே இருக்கிறது, ஒவ்வொரு நாளும் வெளிப்படுகிறது. அதுவே நம் இருப்பின் குறிக்கோள் என்று எமர்சன் சொல்கிறார். அவர் சொல்லும் இயற்கை என்பது வேதாந்த மரபின் பிரம்மம் எனும் சொல்லாகவே எனக்குப் பட்டது. ஒவ்வொரு நாளும் நம் செவியில் விழும் சொல்லும் பொருளும் இயற்கையில் இருந்தே எழுகிறது. விசும்பு தோய் பசுங்களை, யானை வளைத்த மூங்கில் அது விடுகையில் விசும்பென எழுந்தது. இது குறுந்தொகை வரி. வானும் மண்ணும் ஒட்டிக்கொண்டதே; வானின் நீலம் அதில் ஒட்டிக் கொண்டதே. இது இன்று காலை...

வானில் பறக்கும் புள்ளெலாம்

Image
வானில் பறக்கும் புள்ளெலாம் ------------------------------------- இன்று காலையில் இருந்து ஏனோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. ஐந்து மணிக்கு விழிப்புத் தட்டி விட்டது. முதல் வெளிச்சத்தில் காபித் தம்ளருடன் வெளி வாசலுக்கு வந்தேன். எப்போதும் கண்கள் அந்தப் பட்ட மரத்தை நோக்கியே போகும். ஒற்றை மைனா சிறகை நெளித்து , காலை அறிவிப்பை பல முறை செய்தது, 'நான் இங்கு இருக்கிறேன்..நான் இங்கு இருக்கிறேன்'. ஒளி இன்னும் அந்த மரத்தை வரைந்து கொண்டிருந்தது. நீல வானத்தில் கருப்புக் கோட்டு ஓவியம். மரம் ஒளியால் கைகள் முளைத்து விண்ணைத் துழாவ ஆரம்பித்தது. உறைந்த கருப்பு மின்னல். மைனா அலகை இரண்டு முறை மரத்தில் தீட்டி, அடி வயிற்றில் உரசி மீண்டும் ஒரு முறை 'நான் இருக்கிறேன்'.நடத்துனர் ரிவர்ஸ் விசில் எழுப்பும் ஒலி...ரைட் ரைட் ..ரைட் ரைட் எதிர் வீட்டு அம்மாள் தென்னை விளக்கமாரை நீரில் பலமுறை கிழித்தார். இரண்டு முறை தரையில் தட்டி மீண்டும் நீரூற்றிய கல்லை உரசினார். கல்லும் துடைப்பமும் வாய் கொப்பளித்துச் சுத்தம் செய்து கொண்டன. ஒரு தையல் குருவி கட்டுச் சுவரின் பின்னால் புதரில் இருந்து பறந்து சுவரில் அமர்ந்தது. தீ...

குருதிப் பூ

Image
குருதிப் பூ வரலாறு என்பது சம்பவங்களில் இருந்து திரண்டு தானாய் எழுந்து வருவது. தனி மனிதர்களால் ஆனது. அவர்களின் மனங்களால் ஆனது. ஒவ்வொருவர் எண்ணமும் அடுத்தவரை நெய்து ஊடு பாவியிருக்கிறது. மேலும் மேலும் என மனிதர்கள் சிலந்தியைப் போல் பின்னிக் கொண்டே இருக்கிறார்கள். இப்பூமி மாபெரும் சிலந்தி வலை. பின்னுபவர்களும் மனிதர்களே, அதில் சிக்கிக் கொள்பவர்களும் மனிதர்களே. சிலந்திவலையைப் பற்றி இவ்வாறு எழுதுவது வரலாறு ஆகிறது—கல்லில், சுவடியில், தாளில், கல்லறையில், அப்புறம் முக்கியமாக உதிரத்தில்... எத்தனையோ மன்னர் (எ) மனிதர்களின் ஆணவமும், காமமும் தொடர்பில்லாதவர்களை ரத்தத்தில் நனைத்திருக்கிறது. அன்று துரியோதனன் என்றால் இன்று ட்ரம்ப், நேற்று யாரோ வேறொருவர். வேலையில் சில நாட்களாய் இப்படித்தான் சிந்தனை ஓடிக் கொண்டிருக்கிறது.  விஷயம் இதுதான்; இப்படிப் பின்னிப் போகிறது. சுருக்கிச் சொல்கிறேன். K-வுக்கு J-யைப் பிடிக்காது. K ஒரு குழுத் தளபதி. சிறு படை திரட்டி வைத்திருக்கிறார். இல்லை, வேண்டா வெறுப்பாகவும், வேறு வழியில்லாமலும் சிலர் அவருடன் இருக்கிறார்கள். காரணம், பிழைப்பு. K-வுக்கு வெளிக் கண்காணிப்பு வேலை. ...

எதிர்பாராத சீர்திருத்தம் (சிறுகதை)

எதிர்பாராத சீர்திருத்தம் ---------------------------------- 'நேரமாச்சு ஆரம்பிச்சுரலாமா...இத முடிச்சு அவரு இன்னொரு இடத்துக்குப் போனும் ' மலர்விழி கையில் ஒரு பேப்பரை பிடித்து மைக்கை ஆன் செய்து மேடை முன் வந்தார். தி.க அலுவலகத்தில் பெரியார் மணியம்மை திருமணப் பிரிவுக்கு பொறுப்பாய் இருப்பவர்.  முன்னெல்லாம் கருப்புச் சேலை அணிவார். இன்று கருப்பு சுடிதார் அணிந்திருந்தார். இதுவரை இப்படி பல ஆயிரம் கல்யாணங்கள் நடத்தி வைத்திருப்பார். இது மரபான கல்யாணம் இல்லை. விரும்பிச் செய்தது என்று அங்கு இருந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் இது இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 'சுப்பிரமணியன் சங்கரநாராயணன் மற்றும் சோபியா கிரேஸ் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இந்தக் கல்யாணம் பத்து நிமிஷத்துல முடிஞ்சுரும்.  மூத்த பத்திரிகைத் துறை நண்பர் அறிவழகன் சுயமரியாதைக் கல்யாணம்னா என்னன்னு சொல்லுவாரு...அப்புறம் கல்யாண ஒப்பந்தம்...அவ்வளவுதான்..திரு அறிவழகன் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்...' மேடையில் ஒரு சோபாவும் , அதை ஒட்டி இருபுறமும் ரெண்டு ஜோடி நாற்காலிகள் இருந்...

மெட்ராஸ் பேப்பர் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா - நினைவுப் பதிவுகள்

Image
மெட்ராஸ் பேப்பர் ஐந்தாம் ஆண்டு விழா - நினைவுப் பதிவுகள் ---------------------------------------------------------------------------- இரவுப் பயணம் முடிந்து, குளித்துவிட்டு நேரத்துடனேயே புறப்பட்டுவிட்டேன். தேவநேயப் பாவாணர் அரங்கம் எங்குள்ளது என்று விசாரித்தேன். 'டிஸ்ட்ரிக்ட் லைப்ரரி' என்று கேட்டுப் பார்த்தேன். டீக்கடை முதலாளி, மாஸ்டர், பேருந்தின் நடத்துநர் என்று யாருக்கும் அந்த இடம் தெரிந்திருக்கவில்லை. 'ஆனந்த் தியேட்டர்' என்றதும் நடத்துநரே, "ஆயிரம் விளக்கு நிறுத்தம்" என்றார். ஆறும் எட்டும் பதினான்கு ரூபாய் பயணக் கட்டணம். சந்தோஷமாக இருந்தது. வடபழனி சரவண பவனில் காபி குடித்தேன். ஊழியர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துச் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். கடைக்கு இது இறங்குமுகம் போல. பின்னால் தெரிந்த வடபழனி முருகனை எட்டி மட்டுமே பார்க்க முடிந்தது. நேரமில்லை. அரங்கில் நுழைகையில் விழா ஆரம்பிக்க இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. ரொம்ப சாதாரணமாக பாரா (பா.ராகவன்) நடமாடிக்கொண்டிருந்தார். அடையாளம் சொல்லி என்னை அறிமுகம் செய்துகொண்டேன். 'நினைவிருக்கு... நமக்கு ரெண்டு முத்து. நீங்...

மல்டி டாஸ்கிங் சாத்தியமா? - முழுமையறிவுக் காணொளி

கீழே வருவது இந்த முழுமையறிவுக் காணொளியைப் பார்த்ததும் எழுதிய மனப் பதிவு. எழுதி வைத்தாலாவது செய்யலாம் என்ற நம்பிக்கை. இல்லை, இதுவும் மனதைக் கடந்து காற்றாய்ப் போய்விடும். மல்டிடாஸ்கிங் என்பது கணிப்பொறிச் சொல். கணினியில் அப்போதெல்லாம் ஒரே ப்ரொசெஸர். விண்டோஸ் போன்ற செயலிகள் வந்தபோது, பல செயல்கள் செய்வது போல் பயனருக்கு தோற்றம் கிடைத்தது. ஆனால் உண்மையில் நேரத்தைச் சிறு கூறுகளாகப் பிரித்து, ஒன்றை சபையில் ஏற்றி, இன்னொன்றை இறக்கி செய்வதற்கு மல்டிடாஸ்கிங் என்று பெயர். இப்படி விரைவாக, நொடிக்கும் கீழே விரைவாய் , செயல்களை நிறுத்தி, பின்னால் இன்னொரு செயல் செய்து, பழசைத் தொடர காண்டெக்ஸ்ட் ஸ்விட்சிங் முக்கியம். அதை மட்டும் எழுத தனி நினைவிடங்கள் உண்டு. அந்த அளவு அது முக்கியம்.  பிடிபடாவிட்டால் மேலே படியுங்கள், கடைசியில் நிச்சயம் புரியும் என்று நினைக்கிறேன். https://www.youtube.com/watch?v=Wx80q18NbqM மல்டி டாஸ்கிங் சாத்தியமா? இல்லை. மல்டி டாஸ்கிங் அபத்தம். மனம் ஒன்றில் குவிதல் என்பதே செயல்.  மூளை திரவம் போன்றது. நாளில் பல வடிவம் எடுத்தே பயனுள்ளதாக ஆக முடியும். மூளையைக் குவித்து சாவியாய...

ஆப்பிளின் கதை - Dr. கே எஸ் குப்புசாமி

Image
ஆப்பிளின் கதை - Dr. கே எஸ் குப்புசாமி  -------------------------------------------------- பேராசிரியர் குப்புசாமி பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கணிப்பொறித் துறையில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஆப்பிள் நிறுவனத்தின் கதை மெட்ராஸ் பேப்பரில் தொடராக ஐம்பது வாரங்கள் வந்திருக்கிறது. இப்போது ஜீரோ டிகிரி பதிப்பகத்தின் வழியே புத்தகமாக வெளியாகி இருக்கிறது. சென்னையில் ஏறி பெங்களூரு இறங்குவதற்குள் நாற்பத்தியேழு அத்தியாயங்களையும் படித்து முடித்தேன். இரவுப் பயண இருட்டில் செல்போன் கைவிளக்கின் வெளிச்சத்தில் படிக்கும் அளவுக்கு விரைவான நடையும் மொழியும். எனக்கு ஆப்பிளோடு பத்து வருடப் பரிச்சயம் இருக்கிறது. இப்போதைய வேலையில் சேர்ந்து ஏழு வருடங்கள் ஆகப்போகின்றன. இன்டெல் பக்கம் சப்ளையராக சில வருடங்கள் இருந்த அனுபவமும் உண்டு. புத்தகம் ஆப்பிள் நிறுவனத்தின் அடையாளமான வெள்ளை நிறத்தில், சாம்பல் நிற எழுத்துக்களில் பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்டிருக்கிறது. புத்தகத்தில் ஒரு இடத்தில் ஸ்டீவ் ஜாப்ஸின் வெள்ளை நிற அப்செஷன் (Obsession) பற்றியும் வருகிறது. இந்தப் புத்தகத்தில் என்னைக் கவர்ந்தது அதன் துல்லியம். கண்ணை விழ...