Posts

Translate

குழாயைத் திறந்தால் ஆகாயமும் காற்றும் வருகின்றன (ஜென் கதை -2)

Image
குழாயைத் திறந்தால் ஆகாயமும் காற்றும் வருகின்றன ------------------------------------------------------------------- 'எனக்கு, எப்போ 'என்று கேட்டதும், 'பிளம்பிங் சரியா இருந்தா எல்லாம் ஸ்மூத்தா இருக்கும்' என்று மேலாளர் மதிய ஏப்பத்தை வெளியேற்ற முடியாமல் கண்ணாடி அறையில் சொன்னது நினைவில் வந்தது. இந்த வருஷமும் பதவி உயர்வு தள்ளிப் போகும் என்று பால்-வண்ணன் எதிர் பார்த்திருந்தாலும் அவனுக்கு ஏன் என்று பிடிபடவில்லை. பிளம்பிங் பற்றித்தான் ஆபீஸ்-புத்தரிடம் பேச நினைத்தான். வழியில் பார்த்த தூண்கள் , விளக்குகள், கட்டிடங்கள் எல்லாமும் , இலைகளில் ஓடிய நரம்புகள், மரங்களின் ஓங்கிய கிளைகள், வேர்கள் என எல்லாமும் , தன் உடலின் நரம்புகள், எலும்புகள், மூடிய தோல் என்று எல்லாமும் வெறும் குழாய்கள் மட்டுமே என்றே அவனுக்குத் தோன்றின. எப்போதும் யாரோ, எங்கோ ஏதோ ஒரு குழாயைத் தோண்டிப் , பிரித்துப் , புதைத்து என ஏதேனும் செய்து கொண்டே இருந்தார்கள். பிரபஞ்சமே குழாய்களால் கட்டப்பட்டது என்று தோன்றியது. இதில் தான் ஒரு குழாயா இல்லை, அதைப் பிரிப்பவனா என்று அவனுக்குப் புரியவில்லை. 'குருவே , நான் குழா...

பட்டதாரிகளின் சண்டமாருதம்- மெட்ராஸ் பேப்பர் கட்டுரை

பட்டதாரிகளின் சண்டமாருதம்- மெட்ராஸ் பேப்பர் கட்டுரை -------------------------------------------------------------------------- நேற்று அலுவலகத்தில் சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் பகுதியாக வேலை பார்க்கும் இடத்தை அலங்கரித்தார்கள். இந்தியாவின் நுழைவாயில் என்ற மையக் கருத்தென ஒரு குழுவின் அலங்கரிப்பு இருந்தது. நுழைவாயிலில் பறக்கும் கொடி, அதை நோக்கி இருந்த ஏவுகணைகள், விமானங்கள். இதன் நடுவில் இருந்த துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர். சுதந்திரத்தின் படிமம் இவ்வாறு தான் நம்மில் பதிந்துள்ளது. அது இதுமட்டும் தானா?, உண்மையில் இந்தியாவின் வெளிநோக்கிய அந்த நுழைவாயில் கல்வி இல்லையா? அன்றும் இன்றும் பட்டம் என்பதும் டிகிரி என்பது நம்முடைய வாழ்வை திருப்பிப் போடுவதாக இருக்கிறது. படித்தால் வேலை கிடைக்காது என்ற ஒரு செய்தித் துணுக்கு இதை எழுத வைத்தது. பெங்களூரின் அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வுகளை ஒட்டி எழுதிய எனது கட்டுரை. இந்த வார மெட்ராஸ் பேப்பரில் வெளியாகியுள்ளது. https://madraspaper.com/unemployment-graduates/  

மொழிக்குருடும் தொண்ணூறாயிரம் சப்பாத்திகளும் - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை

Image
மொழிக்குருடும் தொண்ணூறாயிரம் சப்பாத்திகளும் ------------------------------------------------------------------- இன்று ஒரு நொடி இடைவெளியின்றி செய்திகள் 360 பாகையில் நம்மைத் துளைத்துக் கொண்டிருக்கிறது. நம் உறங்கும் போதும் இரவில் வந்து நமக்காய்த் தேங்கிக் கிடக்கின்றன. நாம் நாளெல்லாம் குறுஞ்செய்திகளில் பேசியபடி இருக்கிறோம்.  தகவல்களை வடிகட்டுவதும், தடுத்து நிறுத்துவதும், அவை கவனத்தைச் சிதறடிப்பதும் பேசப் படுகின்றன. ஆனால் ஐம்பது வருடம் முன்னர், செய்தித் தொடர்பும், சுதந்திர கால வெகுஜனத் தொடர்பும் எப்படி இருந்ததன என்பதை ஆராயும் எனது கட்டுரை. இக்குறிப்பை எழுதத் தூண்டியது இதில் இருந்த சில மனிதர்களின் கதைகள். இந்த வார மெட்ராஸ் பேப்பரில் வெளியாகியிருக்கிறது. https://madraspaper.com/indian-freedom-struggle/

இன்றைய தியானம்

Image
இன்றைய தியானம் -------------------------------- இன்று வழக்கம் போல சைக்கிள் இடது ப்ரேக் தேய்ந்தது. அதற்கு இதுவரை பத்து உறுப்பு மாற்றுச் சிகிச்சைகள் ஆகியிருக்கிறது. ஆகவே உடலில் எப்போதும் ஒட்டாது. போய்ச் சரி செய்தால் ஒரு மாதம் தாக்குப் பிடிக்கும். அப்புறம் இது போல் ஒவ்வாமை. சரி செய்ய மேலும் கீழும் 12 கிலோமீட்டர் போக வேண்டும். சைக்கிள் வேர்ல்ட் அம்மாள் , எப்பவும் போல 'புல் சர்வீசா ' என்று கேட்பார். இப்போதெல்லாம் சைக்கிள் சர்வீஸ் ஆயிரம் என்கிறார்கள். சர்வீஸ் வேண்டாம், ப்ரேக் மட்டும் வேலை என்பேன். சிறு வேலை என்றால் மெக்கானிக் பிசியாக இருப்பார். சிறு பிள்ளைகளின் அப்பாக்களிடம் போட்டியிட முடியாது. வீடு காலி பண்ணி மனைவி சகிதம் , சைக்கிளை காரில் போட்டு வந்திருப்பார்கள். அப்பா பேபி சைக்கிளில் மணி கட்டுவது, துணைச் சக்கரம் மாட்டுவது, வாட்டர் பாட்டில் சொருகுவது போல் இப்படி இடம் திருவிழா போல் இருக்கும். நமக்கு ஹிந்தி வராது. பேசாமல் வேடிக்கை பார்த்து நிற்க வேண்டியது தான். 'பையா, தோடா காம் ஹை..கித்னி பார் போல்த்திஹு' என்று சொல்லியோ, அம்மாளிடம் எஸ்கலேட் செய்து கவனத்தைப் பெற வேண்டும். அப்ப...

நானும் (குறுங்கதை)

Image
நானும் (குறுங்கதை) -------------------- அந்த நகரத்தில் அண்ணனும் தம்பியும் சில மாத இடைவெளிக்குப் பின் அன்று சந்தித்தார்கள். தம்பி வீட்டின் கூடத்தில் புத்தகங்கள் சிதறிக் கிடந்தன. பிள்ளைகள் ஆளுக்கொரு நாற்காலியில் இருந்தனர். காப்பி குடித்ததும் மேற்கொண்டு பேச ஒன்றும் இல்லை. தம்பி வெளியில் எங்கோ பார்த்தார். தினம் வரும் தையல் குருவி அன்றும் சுவரில் ஆசுவாசமாய் இருந்தது. சுவரில் இருந்து குதித்துத் தாவி நடந்து நிதானமாய் பூமியைத் தேட ஆரம்பித்தது. 'பொண்ணு நல்லா படிக்கிறாளா?, என்ன ஸ்ட்ரீம் ...ஏ ஐ , மேத்ஸ் இல்ல ?' அண்ணன் கேட்டார். 'ஏதோ படிக்கறா ' தம்பிக்கு அதற்கு மேல் தெரியாது. தம்பியின் மகள் ஏதோ பேச வந்தாள். பேசவில்லை. 'இவளுக்கும் ஏ ஐ அப்பவே இருந்துச்சு..நீ ஒன்பதாவதிலேயே ஏ ஐ , படிச்ச இல்ல" வேலைக்குப் போகும் அண்ணன் மகள் தலையை ஆட்டினாள். தலை குனிந்திருந்த தம்பி பையனைப் பார்த்துக் கேட்டார். 'இவன் ஒழுங்கா படிக்கிறானா..இன்னும் விளையாடிட்டுத்தான் திரியிறானா? அடுத்த வருஷத்தில இருந்து விளையாட்ட மூட்டை கட்டி வைச்சுரனும்...என் பிள்ளைகளுக்கு ஸ்போர்ட்ஸ்ன்னா என்னன்னு தெரியாது....

ஆதித் தாய் முதல் ஆடி அம்மன் வரை - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை

Image
நம் மரபில் தாய் வழிபாடு எங்கு ஆரம்பித்தது. இன்று நாம் காணும் இதன் எச்சங்கள் என்ன என்பதை ஆராயும் என் கட்டுரை - இந்த மெட்ராஸ் பேப்பர் இதழில் https://madraspaper.com/matriarchy-tamils/ 

மதுரைப் பயணம் - கண்ட சில மாற்றங்கள்

Image
மதுரைப் பயணம் - கண்ட சில மாற்றங்கள் ----------------------------------------------- வருடத்திற்குப் பல முறை மதுரை செல்கிறேன். பல வருடங்கள் இப்படிச் செல்கிறேன். இந்த முறைதான் தெரு விளக்குகள் எரிவதைப் பார்க்கிறேன். நான் சொல்வது பிரதான சாலையில் அல்ல. வீட்டுப் பகுதிகளில், மனிதர்கள் இரவில் நடமாடும் இடங்களில் விளக்கு எரிகிறது. முன்னெல்லாம் நம் வீட்டு குழல் விளக்கை தெருவுக்காகப் போட்டு வைக்க வேண்டும். எனக்கு எல்லா தெரு விளக்குகளும் ஒரே நேரத்தில் எரிவது பேரதிசயம். மாணிக்கம் தாகூர் இப்பகுதியில் வசிக்கிறார், அவரே எம்பி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் .அதுவாக இருக்குமோ என்று நினைத்தேன். இதன் முன்னாலும் அவர் தான் என்ற மறு சிந்தனை வந்தது. இரண்டாவது, சாலையின் மேல் ஒரு ஸ்கூல், குறுக்குச் சாலையில் இன்னொன்று என்று வீட்டின் அரைக் கிலோமீட்டரில் இரண்டு கல்விக் கூடங்கள். ஒரு கிலோமீட்டரில் இன்னும் சில பாட சாலைகள் உள்ளன. இதன் நடுவில் தான் முள்ளென டாஸ்மாக் இருந்தது. சிலர் ஒதுங்கிப் போவார்கள். சிலர் சாஸ்வதம் போல் ஏற்றுக் கொண்டு நடமாடுவார்கள். இந்த டாஸ்மாக் அரசின் விதிகளின் படி மூடப் பட்டிருக்கிறது. குடியை ஒழித்தால் உ...

ஊர் சுற்றி ஒழுக்கம் - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை

ஊர் சுற்றி ஒழுக்கம் - மெட்ராஸ் பேப்பர் கட்டுரை பல வருடங்கள் முன்பு முதல் முறை வெளிநாடு சென்றது நினைவில் வந்தது. அன்றாடத்தை எப்படிச் சமாளிப்பது என்பதே கலவரத்தை உண்டு பண்ணியது. முதலாவது விமான நிலையம், அடுத்தது விமானம், போன்ற இடங்களில் கடைபிடிக்க வேண்டிய ஆசாரங்கள். பிராங்க்பர்ட் ஏர்போர்ட்டில் இந்தியா செல்லும் டெர்மினல்களை எளிதில் அடையாளம் காண முடியும். பைகளை இருக்கையில் வைத்து அமர்ந்திருப்பவர்கள் , உரக்கப் பேசுபவர்கள், ஓரத்தில் கீழே படுத்து பையை தலையடியில் வைத்து உறங்குபவர்களையும் பார்த்திருக்கிறேன். போர்டிங் துவங்கும் போது இருக்கை வரிசையாய்க் கூப்பிடுவார்கள். நம்மவர்கள் அதைக் காதில் வாங்க மாட்டார்கள். ஒரு வழியாக உள்ளேபோனால், நம்முடைய பை வைக்கும் இடம் களவு போயிருக்கும். நானும் இதையெல்லாம் இளவயதில் செய்திருக்கிறேன். சமைக்கும் போது ஸ்மோக்கிங் சென்சார் புகையடித்து தீயணைப்புத் துறை கதவை உடைத்து, நான் MTR புளியோதரை மிக்ஸ் கருக்கியதைப் பார்த்து ஆச்சர்யமானர்கள். 800 யூரோ தண்டம் போட்டார்கள். இதைப் பற்றிக் குழுவில் பேசும்போது, இது ஏற்கனவே நடந்திருக்கிறது. தீர்க்க வழியும் இருக்கிறது என்றார்கள். அத...

பாரதியார் - ஒரு ஆவணப் படம்

Image
பாரதியார் - ஒரு ஆவணப் படம் -------------------------------------- வீட்டில் தொலைக்காட்சி வந்த புதிதில் , சியோலில் ஒலிம்பிக் நடந்து கொண்டிருந்தது. பையனாய் எனக்குப் பார்க்கவேண்டியதெல்லாம் கிரிக்கெட் மட்டுமே. எனக்கு திரைப்படங்களில் அப்போதும் ஆர்வம் இருக்கவில்லை. அவர்கள் துயரங்களை எதற்கு நாம் பார்ப்பது என்ற எண்ணம். நமக்கு நாமே நிறையப் படுவதற்கு இருக்கையில் எதற்கு வீணாய் என்ற என் புரிதல். பார்த்தாலும் சரியாக சோகம், துயரம் ஆரம்பிக்கையில் எழுந்து போய் விடுவது என் வழக்கம். இன்றும் அதே கொள்கை தான். கிரிக்கெட் தாண்டி நான் விரும்பிப் பார்த்த விஷயம் கிருஷ்ணசுவாமி எடுத்த ஆவணப் படங்கள். எப்போதாவது Nat geo டேவிட் அட்டன்பரோ படங்கள் மதியங்களில் காண்பிப்பார்கள். இதற்கும் கலர் டிவி இருந்தால் நல்லது. பெரும்பாலும் கருப்பு வெள்ளையே இருக்கும். ஆவணப் படங்களில் வரும் பேசுபவரின் குரல் இன்றும் வசீகரிக்கிறது. உதாரணமாக கிருஷ்ணஸ்வாமியின் ரமணர் பற்றிய ஆவணப் படம் திருவண்ணாமலையை தூரத்தில் இருந்து காட்டுவதில் துவங்குகிறது. ஊரின் வீடுகள் மலையின் கீழ் சிறு கற்கள் என மண்டிக் கிடக்கின்றன. நகரம் செங்கல் குமியலாய் தெரிக...

அன்னத்திலிருந்து அன்னம் (குறுங்கதை)

Image
அன்னத்திலிருந்து அன்னம் (குறுங்கதை) -------------------------------------------------- அந்த இடம் எனக்கு ஹோமகுண்டம் என்றே தோன்றும். அதுவும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில். இடத்திற்கு ராமேஸ்வரம் என்ற பெயரும் பொருத்தமே. இறுதியாய் உடல் மண் நீரில் கரையும் இடம். ராமேஸ்வரக் கடல் அலைகளற்றது. ஆனால் இது அப்படியல்ல. சதுரமாய் செங்கற்களை அடுக்கி நிறுத்தப்பட்ட இடுப்பு உயரச் சுவர்கள். அதற்குள் ஒரு சதுரமான உள்க்கூடு. மரக் கரண்டிகள், சில்வர் கிண்ணங்கள், ஓயாமல் பாத்திரங்கள் வைக்கப் படும், எடுக்கப் படும், , கழுவிச் சுத்தமாய் கவிழ்க்கப் படும் சத்தம். வெளியே சதுர மேஜைகளில் நின்றிருப்போர், இடம் தேடி அலைபவர்கள், எதுவும் அறியாமல் அமர்ந்து ஹோதாவில் மூழ்கியிருப்போர். இடைவிடாமல் உள்ளே நுழைந்தபடி இருக்கும் கார்கள், இறங்கியதும் பதறி அடித்து வரிசைக்கு ஓடுபவர்கள், கோதாவில் இடம் தேடச் சுற்றுபவர்கள். பல்லாயிரம் பேச்சொலிகள் கலந்து புது மொழியாய் விண்ணில் ஏறி கூரையை முட்டி, கீழே இறங்குகின்றன. அங்கே நடுவில் வயிறென இருக்கும் இடத்தில் கிழக்கே, மேற்கே, வடக்கே, தெற்கே என்று பக்கமெல்லாம் கிளைத்து எழும் நெருப்பு. நெருப்பை ஏற்...

பஷீரின் பசியும் , என்னுடைய பசியும்

Image
பஷீரின் பசியும் , என்னுடைய பசியும் ------------------------------------------------ சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு தாமதமாகி விட்டது. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். சாப்பிட்டது செரித்தது தெரிந்த பின் அடுத்த வேளை உண்பவன் உடலுக்கு மருந்து வேண்டாம். செரித்ததா என்று எப்படி அறிவது? காலை எழுந்ததும் முதல் ஏப்பம் உணவின் மணத்துடன் வராமல் இருப்பது என்னுடைய அறிகுறி. மறுநாள் அப்படி ஆகி விட்டது. பல்லைத் தேய்த்துப் பின் அரை மணி மெதுவாய் ஓடினால் சரியாகும். ஆனால் நேரமில்லை. குற்ற உணர்ச்சியில் நேற்று பகலில் உண்ண வேண்டாம் என்று முடிவு செய்தேன். வண்டி போய்க் கொண்டிருக்கும் போது இரண்டு நாள் பட்டினி போடலாம் என்று தோன்றியது. திங்கள் கிழமைகளில் பொழுது வேகமாக ஓடிவிடும். அன்று ஒரு மணியில் இருந்து மூணு வரை தொடர் மீட்டிங்காகப் போனது. ஒரு மணி வரை எப்போதும் போல் கடுங் காப்பியில் உப்புப் போட்டுக் குடித்தேன். மூன்று மணிக்கு மேல் கொஞ்சம் நிதானமாய், பட்டினியைப் எப்படி சரியாகச் செய்வது என்று படித்துப் பார்த்தேன். தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். உப்புகள் குறையும்போது மூட்டுகள் உளைய...

படிக்காத புத்தகங்கள் - tsundoku

Image
படிக்காத புத்தகங்கள் - tsundoku ------------------------------------------ வீடு ஓசூர் முனைக்கு நகர்ந்து ஒரு வருடம் முடிந்து விட்டது. நேற்று எல்லோருமாய்ச் சேர்ந்து ஓசூர் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றோம் . பத்து நாள் நடக்கும், நேற்று இரண்டாவது நாள். கேரட் & ஸ்டிக் பாலிசி இல்லை, கேரட் பாலிசி. போன வருடம் போனதும், சாப்பிட்டதும் பையனுக்கு நினைவிருந்தது. இந்த வருடம் அவனே 'எப்பப் போலாம்' என்று கேட்டான். கால்பந்து புத்தகம் தேடிப் பார்த்தான். சிக்கவில்லை. இரண்டு மணி நேரம் சுற்றி பத்துப் புத்தகங்களுக்கு மேல் வாங்கினேன். பாராவின் கதைசொல்லலில் மயங்கி பஷீரின் தொகுப்பு ஒன்று. என்னுடைய குறிப்பு எழுதும் திறமையைக் கூர்படுத்த, அனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகள், வியாசனை அறிதல் போன்ற எப்போ படித்து நழுவிவிட்ட கட்டுரைகளின் புத்தக வடிவம், போன்றவை நினைவில் வருகின்றன. அவளும் ஒன்றிரண்டு வாங்கினாலும் , வைக்க எங்க இடம் இருக்கு என்று கேட்டுக் கொண்டே வந்தாள். இந்தக் கேள்வியில் மறைந்திருப்பது, எல்லாம் என்று படித்து முடிப்பது என்பதும். இது எனக்கும் இப்போதெல்லாம் குத்தலாகவே இருக்கிறது. பாதிக்கு மேல் பட...

ஓட்டுநரின் இருக்கை -2 - பச்சை விளக்கு

Image
ஓட்டுநரின் இருக்கை -2 - பச்சை விளக்கு --------------------------------------------------- ஓட்டுநரின் இருக்கை -1 பச்சை விளக்கு படம் ஒரு ரயில் டிரைவரின் கதை. சிவாஜி நடித்து, பீம்சிங் இயக்கியது.  ஏ.வி.எம் சரவணன் ரயில் டிரைவரை மையமாக்கி ஒரு கதை எடுக்க விரும்புகிறார். பெயர் அகப்படாமல் தலைக்குள் ஓடிக்கொண்டிருக்கும் போது, தி.நகர் ரயில்வே ஸ்டேஷனைக் கடக்கிறார். அங்கு பச்சை சிக்னலைப் பார்த்ததும் டைட்டில் தோன்றி விடுகிறது, பச்சை விளக்கு.  சிவாஜி , SSR,  அண்ணன் தம்பிகள். சௌகார் , விஜயகுமாரி. இந்த வரிசையில் யாருக்கு யார் ஜோடி தெரிந்திருக்கும். கதைச் சுருக்கம் இப்படிப் போகும். அம்மா நோய் வாய்ப்பட்டு இறந்து விடுவார். வளர்ப்பு அம்மாவும் இறந்து விடுவார். அவருக்கு மகள் விஜயகுமாரி. நாயகன் ஏழ்மையும் நோயும் கூடப் பிறந்ததா என்ற கேள்வி எழுந்து, தங்கையை டாக்டர் ஆக்க  அண்ணன்  சபதம் செய்கிறார். அண்ணன் ரயில் டிரைவர். சூழ்ச்சிகளுக்கு, இன்னல்களுக்கு நடுவில் படித்து ஒரு ஏழை டாக்டராகிறார். ஒளிமயமான எதிர் காலம். தங்கைக்கு எம்.பி.பி.எஸ் இடம் கிடைத்ததும் அவர் பாடும் பாட்டு இது. கண்ணதாசன் வரிகள்....

கேரி சோபர்ஸ்- மெட்ராஸ் பேப்பர் கட்டுரை

Image
கேரி சோபர்ஸ்- மெட்ராஸ் பேப்பர் கட்டுரை   நல்ல எழுத்தாளன் எருமை மாடாய் இருக்க வேண்டும் என்று பாரா சொல்வார். என் அப்பா வார்த்தைகள் இல்லாதபோது எருமைப் பால் குடிச்சியா என்று திட்டுவார். இன்றும் பிள்ளைகளை அவள் எருமை என்றே திட்டுகிறாள். எருமையைக் காலன் என்றனர் பெரியவர்கள். பொறுமை, பலம், காலம் என சொல்லனைத்தும் ஏற்று ஒன்றும் தெரியாதது போல் நிற்பது எருமை. மேற்கிந்தியத் தீவு அணியை எருமைகளின் கூட்டம் என்றே சிறுவயதில் பட்டிருக்கிறது. அவ்வாறென்றால் அதன் மேல் அமர்பவன் காலன். அவர்தான் கேரி சோபர்ஸ். எதிராளிகளுக்கு காலத்தை உணர்த்தியவர். ஒரு காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் என்னும் கால விரிப்பில் எதிரணியினரை சுருட்டி மடக்கியவர்கள் இவர்கள் பவுலர்கள். தூக்கிய காலரும், கழற்றிய பட்டன்களுமாக, பேட்ஸ்மேன் களத்தில் இறங்கும் போதே, எதிரணி பந்து வீச்சாளருக்கு கிலி ஏறி விடும். சோபர்ஸ் பற்றிய என் மெட்ராஸ் பேப்பர் கட்டுரை இங்கே. https://madraspaper.com/cricket-gary-sobers/

அன்றாடக் குறிப்புகள் - சிறு உடற்பயிற்சிகள்

Image
அன்றாடக் குறிப்புகள் - வேலையும் உடலும் ------------------------------------------------------ உடற்பயிற்சியும் செய்யும் வேலையும் ஒன்றாகி விட்டால் நேரம் மிச்சம். முன்னால் சைக்கிளில் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தேன். போக வர இரண்டு மணி நேரம். இப்போது தொய்வு விழுந்ததில் இருந்து திரும்ப ஆரம்பிப்பது மலைப்பாய் இருக்கிறது. இது மழைக் காலம், வழியில் விளக்குகள்,இல்லை நாய்கள் உண்டு. சைக்கிளில் ஜாமில் சிக்குவது இன்பமல்ல. சைக்கிளில் ப்ரேக் என்ன செய்தாலும் சரியாக வருவதில்லை. புதுசு தான் வழி போல் தெரிகிறது. இப்படி மனம் வழிக்கு வருவதாய் இல்லை. சைக்கிள் உடற்பயிற்சி என்பதை விட, எனக்கு யோசிக்கும் இடம். இது போகட்டும். வேலைக்கு மெட்ரோவில் போய் வீடு வந்தால் தானாக நடையளவு ஏழு கிலோமீட்டர் காண்பிக்கும். இடையில் இருக்கும் கப்பன் பார்க் மதிய நடை சேர்த்து இந்தக் கணக்கு. இது இரண்டரை கிமீ. காலையில் நேரச் சிக்கல் இல்லை என்றால், முந்தைய நிறுத்தத்தில் இறங்கி, விதான் சௌதாவின் வெண்கலக் குதிரைச் சிலைகளைப் பார்த்தபடி நடப்பது. இது ஒரு கிமீ. நல்ல காற்றும் வெயிலும் இலவசம். எல்லா நாளும் முடியாது. ஒரு சில நாள்களில் காலாற கமர்ச...

ஓட்டுநரின் இருக்கை -1

Image
ஓட்டுநரின் இருக்கை -1 --------------------------------- சிறு வயதில் இருந்தே ஓட்டுனர்கள் மேல் எனக்கொரு பித்து இருந்திருக்கிறது. ஊரின் கோயில் அருகில் மின்வாரிய அலுவலகம் இருந்தது. மூங்கில்த் தப்பை அழியுடன் அகலமான பண்ணையார் வீடு போல் இருக்கும். இரண்டு நீளமான சுவரால் பிரிக்கப்ட்ட தாழ்வாரங்கள் உண்டு. மேஜை நாற்காலிகள் போட்டு கிளார்க்குகள் அமர்ந்து இருப்பார்கள். இங்கு உச்சிமாகாளி என்று ஒரு வயர்மேன் வேலை பார்த்தார். இருட்டாய், கரடு முரடாக இருப்பார். அவரைக் கண்டால் எனக்கு பயம். பின்னர் அவர் சிறுவர்களிடம் விளையாட முயற்சிக்கிறார் என்று அறிந்தேன். அவர் விளையாட்டு என்பது விதையைப் பிடிக்க பையன்களை விரட்டுவது. அந்தக் கால கிராமங்களில் இப்படி ஒரு விதைப் புரட்சி இருந்தது. தெருவில் சிறுவர்கள் நடக்க முடியாது. இது ஒரு விளையாட்டு. இந்த அலுவலகத்திற்கு சாதனங்கள் ராஜபாளையத்தில் இருந்து ஜீப்பில் அல்லது லாரியில் வர வேண்டும். ஜீப்பில் J.E வந்திருக்கிறார் என்பார்கள். அன்று சிரிப்பே இல்லாமல் வேலை பார்ப்பார்கள். ஜீப் டிரைவர் எனக்குப் பிரியமானவர். அப்போதெல்லாம் டிரைவர் இருக்கையில் உட்கார முடிவது கடவுளைப் பார்த்த ம...

மெட்ராஸ் பேப்பர் - AI யும் சிந்தனையும் - வெளியாகியிருக்கும் கட்டுரை

https://madraspaper.com/ai-lending-thought-process/ 

அன்றாடக் குறிப்புகள் - இன்பத்தைத் தேடிச் செல்லுதல்.

அன்றாடக் குறிப்புகள் - இன்பத்தைத் தேடிச் செல்லுதல். ----------------------------------------------------------------------- ஜெயமோகன் தளத்தில் மது வித்யை என்னும் ஒரு சொல் படித்து முடித்து காலை நாலரை மணிக்குக் பையனுடன் கால் பந்து மைதானத்திற்குப் புறப்பட்டேன். 'புது பிரெண்ட்ஸ் கிடச்சங்களாப்பா' என்று கேட்டேன். 'காலேல அஞ்சு மணிக்கு பேச்சு யாருக்கும் வாரதுப்பா' என்றான். கொஞ்ச நேரத்தில சிரிப்பாங்க , அப்போ கிளாஸ் முடிஞ்சுரும்.' உண்மைதான், அப்போது நான் பேசியதும் சம்பிரதாயமான பேச்சுத்தான் என்று தோன்றியது. மது வித்யை என்றால் தேனைத் தேடிச் செல்லும் வித்தை என்று பொருள். உடற்பயிற்சிக் கூடத்தின் கண்ணாடிக்கு வெளியே , மூன்றாவது மாடியில் சிறு பூந்தோட்டம் இருக்கிறது. கண்ணாடிக் கைபிடிச்சுவற்றையும் , உடற்பயிற்சிக் கூடத்தின் கண்ணாடிச் சுவரையும் இணைக்கும் இடத்தில் இரண்டடி அகல தொட்டி கட்டி,செம்மண் நிரப்பி ஓரம் முழுதும் பூச்செடிகள் இருக்கும். மஞ்சளும் சிவப்புமான முள்ளி மலர்கள். மேலே தெரியும் நீல வானம் கீழிருக்கும் நீச்சல் குளத்தில் இன்னும் துலங்கித் தெரியும். தொலைவில் தெரியும் வானை முட்...

அன்றாடக் குறிப்புகள் - திக்குத் தெரியாத காட்டில்

Image
திக்குத் தெரியாத காட்டில் -1 ------------------------------------ போன வாரம் அமேசானில் இரண்டு பொருட்கள் வாங்கினேன். ஒன்று எட்டாம் வகுப்பு கணிதப் புத்தகம். இரண்டாவது பள்ளிக்கூட சீருடைக் கருப்புக் காலணி. புத்தகம் அடுத்த நாள் வந்துவிட்டது. காலணி அன்றே வந்தது. புத்தகம் தப்பு என்று சொல்லி விட்டாள். அது வேறு RS அகர்வால். இதுவல்ல அது. (அவர் இன்னுமா எழுதிக் கொண்டிருக்கிறார்). தப்பானதை அவளும் மகளும் சேர்ந்து திருப்பி வெளியில் அனுப்பி விட்டார்கள். அதாவது வலையுலகில் மட்டும். ஒரு வாரமாக இன்னும் பொருள், பொருள் உலகில் , அதாவது அலமாரியில் இருக்கிறது. காலணி பிரித்ததும் தெரிந்தது அது குழந்தை அளவு. அதையும் வீட்டை விட்டு வெளியேற்றி உத்தரவு போட்டாயிற்று. ஆனால் பொருள் வெளியேறவில்லை. அமேசான் என்று காட்டின் பெயர் வைத்ததும் பொருத்தமே. துளாவிப் பார்த்து ஒரு ஃபோன், புகார் செய்யலாம் என்றால் சொடுக்க எதுவும் இல்லை. ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்துப் பின் பத்து நிமிடம் வளைத்து வளைத்து தேடினாலும் ஒன்றும் இல்லை. ஏற்கனவே ஐட்டம் ரிஜெக்டட் , ரிடர்ன் ரிசீவ்ட் என்று அதுவே வலையுலகில் குழி தோண்டிப் புதைத்து விட்டது. அடுத்த...