எதிர்பாராத சீர்திருத்தம் (சிறுகதை)
எதிர்பாராத சீர்திருத்தம் ---------------------------------- 'நேரமாச்சு ஆரம்பிச்சுரலாமா...இத முடிச்சு அவரு இன்னொரு இடத்துக்குப் போனும் ' மலர்விழி கையில் ஒரு பேப்பரை பிடித்து மைக்கை ஆன் செய்து மேடை முன் வந்தார். தி.க அலுவலகத்தில் பெரியார் மணியம்மை திருமணப் பிரிவுக்கு பொறுப்பாய் இருப்பவர். முன்னெல்லாம் கருப்புச் சேலை அணிவார். இன்று கருப்பு சுடிதார் அணிந்திருந்தார். இதுவரை இப்படி பல ஆயிரம் கல்யாணங்கள் நடத்தி வைத்திருப்பார். இது மரபான கல்யாணம் இல்லை. விரும்பிச் செய்தது என்று அங்கு இருந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் இது இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 'சுப்பிரமணியன் சங்கரநாராயணன் மற்றும் சோபியா கிரேஸ் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இந்தக் கல்யாணம் பத்து நிமிஷத்துல முடிஞ்சுரும். மூத்த பத்திரிகைத் துறை நண்பர் அறிவழகன் சுயமரியாதைக் கல்யாணம்னா என்னன்னு சொல்லுவாரு...அப்புறம் கல்யாண ஒப்பந்தம்...அவ்வளவுதான்..திரு அறிவழகன் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்...' மேடையில் ஒரு சோபாவும் , அதை ஒட்டி இருபுறமும் ரெண்டு ஜோடி நாற்காலிகள் இருந்...