Skip to main content

Posts

கல்பொரு சிறுநுரை - வெண்முரசு நாவல் 25 - நூல் பதிவு

கல்பொரு சிறுநுரை - வெண்முரசு நாவல் 25 - நூல் பதிவு  இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து பின் இன்னொரு நாவலையும் தற்செயலாகப்  படிக்க நேர்ந்தது. சிவராம காரந்த் எழுதி சிவலிங்கையா தமிழ் மொழி பெயர்ப்பில் வெளி வந்துள்ள அழிந்த பிறகு என்னும் நாவல்.( https://ia802706.us.archive.org/11/items/AzhinthaPiraguKaranth/Azhintha-Piragu-Karanth.pdf ) காரந்த் எதேச்சையாக யசவந்தர்  என்னும் பின்னாளில் நெருக்கமா நண்பராகப்போகும் சக பயணியை ரயிலில் சந்திக்கிறார்.இக்கதை எழுத்தாளர் காரந்த் அவர்களின் பார்வையிலே சொல்லப்படுகிறது. இவ்வாறு ரயிலில் அரைநாள் பார்த்து பின் அதிக பட்சம்  ஆண்டுக்கொருமுறை சந்தித்த ஒருவரின் மேல் பற்று வளர்ந்து ஒரு நாவலே எழுதியது ஆச்சர்யமாய் இருக்கிறது.  யசவந்தர் தான் இறப்பதற்குள் காரந்தை சந்தித்து தன் உயிலையும் பணத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைக்க நினைக்கிறார். ஆனால் இறந்து விடுகிறார். காரந்திடம் தன்னுடைய 15000 ரூபாயும், குறிப்பிடும் மூன்று  பேருக்கு கடைசிவரை மாதம் 25 ரூ அனுப்பும் பொறுப்பையும் எழுதி வைத்து விட்டு இறக்கிறார்.  தான் உச...

Why We Sleep - Matthew Walker - சில குறிப்புகள்

Why We Sleep - Matthew Walker - சில குறிப்புகள் சமீபத்தில் ஜக்கி வாசுதேவ் 6 மணி நேர தூக்கமும் தேவை இல்லை என்றும் , தாம் மூன்று மணி நேரமே தூங்குவதாகச்  சொல்லக் கேட்டேன்.நானும்  இவ்வாறே நினைத்து கொண்டிருந்தேன் .தூக்கம் என்பது அவ்வளவு முக்கியம் இல்லை. அது நம்மைத் தேடிக் கண்டடையும் . இதை பற்றி பெரிய கவலை இல்லாமல் இருப்பதே நாம் செய்ய வேண்டியது. ஆனால் சரியான தூக்கம் இல்லாத நாட்களில் கண் இமைகள் தூங்கும் வரை வலிப்பதையும் , எழுத்துகள் சற்று தெளிவில்லாமல் இருப்பதையும் உணர்கிறேன். முன்னை விட இப்போது ஆள், ஊர் பெயர்கள் வேண்டும் போது நினைவில் வருவதில்லை. இந்நிலையில் கடந்த வாரம் crossword புத்தகக் கடையில் இப்புத்தகம் காண நேர்ந்தது. Mathew Walker நரம்பியல் விஞ்ஞானி , தூக்கத்தைப் பற்றி 20 வருடங்களாக ஆராய்ந்து வருபவர், பேசி வருபவர். இங்கிலாந்தில் பிறந்து அமெரிக்காவில் வாழ்கிறார்.  இனி புத்தகத்தைப் பற்றி... இந்திய ஆன்மிக அறிதலின் உச்சம் என்று  அத்வைதத்தையே பலரும் சொல்வார்கள். அதன் சாராம்சம் என்பது ஆழ்ந்த தூக்கத்தை (சுஷுப்தி) உயர்ந்த அனுபவமாக்கி , விழித்திருப்பதை(ஜாக்ரத்) பிறழ்வு நிலை எ...

கல்வி

 கல்வி  இன்று இது எனக்கு வித்தியாசமாகப் பட்டது.  இவர்கள் இருவரும் கூட்டாகச்  சேர்ந்து பிச்சை எடுக்கிறார்கள். இருவருக்கும் பொதுவாக ஒரே திருவோடு . நாலைந்து பேர் கும்பலில் இளையவர் வயதானவரை 'அந்த  அய்யாகிட்ட கேளு' என்றார்  , தான் ஒருவரிடம் கேட்டார். கிடைத்ததை வாங்கி இளையவர் வைத்து கொண்டார். அடுத்த இருவரிடம் வயதானவர் கேட்டு கிடைக்காமல் போனதும் ' நல்ல சத்தமா கேக்கணும் என்றார்' இளையவர்.  அடுத்து நின்ற ஆட்டோகாரரை பார்த்து அவர் கொடுக்க மாட்டார் என்றார் . இவர் எதுக்கும் கேட்டு பாரு என்றார். அவர் கொடுத்து விட்டார்.  நான் இருவரையும் பார்க்காமல் நின்றிருந்தேன்.  என்னைப்  பார்த்து அவரெல்லாம்  தர மாட்டார் என்றார் முதியவர். அவரை  என்னை நோக்கிப்  போகச் செய்தார் இளையவர் . சில்லறை இல்லையே என்று சொல்லி கொண்டே பின் பையில் இருந்த இரண்டு ரூ காயினை கொடுத்தேன். கொஞ்சமும் திருப்தி இல்லாதவராக முதியவர் இளையவரை பார்த்தார் .  இளையவர் என் ரூவாயை திருவோட்டில் வாங்கியவாறு ' நமச்சிவாய ! நன்றி சாமி ,  பரவால்ல மிச்சத்த நாளைக்கு கொடுங்க ' என்றவாறு ம...

இரு நியூட்டன் ஆப்பிள் தருணங்கள்

 இரு  நியூட்டன் ஆப்பிள் தருணங்கள்  கடந்த வாரம் வேலையில் கொஞ்சம்  மன உளைச்சல் அதிகம் . அகால நேர மீட்டிங்குகள், மயிர் பிளக்கும் திட்டமிடல்கள் , உள்ளே  உள்ள சதுரங்க விளையாட்டுகள், வலை விரிப்புகள் . குறிப்பாக நம்மவராயிருந்த அயலவர்கள் - நன்றாக விளையாடுகிறார்கள், எங்காவது எதிர் வரிசை கிடைக்கும்போது  கைகோர்த்து கும்மியடிக்கிறார்கள் .  இவ்வாறு அவ்வப்போது ஆவது வெயில் , மழை போல் தான் என்றாலும் org change (நிர்வாக மாற்றம் ?) ஆகும்போது வரும் ஒரு சில மாதங்கள் இப்பிடித்தான் இழுபறியாக இருக்கின்றன .  எப்போதுமே புதிதாய் வரும் மேனேஜர் நம்மை கீழே விழ விட்டு  தான் தூக்கி விடுவார். இவர் இப்போது முயற்சிக்கின்றார். விழாமல் , விழுந்தாலும் அடி விழாமல், பார்த்து சமாளித்து எழுந்து கொள்ளத் தெரிய வேண்டும். அவரும் இதைக் கடந்து தான் வந்திருக்க வேண்டும். அவரும்  ஒரு சில படிகள் கீழே இறக்கப்பட்டு  இப்போது மேலே வந்து கொண்டிருக்கிறார்.   இது இப்படித்தான்  தான் இருக்கிறது . இவைகளை ஒரு விளையாட்டாக எடுத்து கடந்து போக முயற்சிக்கிறேன் . கசப்பு , வெறுப்பு ஒன்றும் ...