Skip to main content

Posts

கீழ் நோக்கி வளர்தல்

கீழ் நோக்கி வளர்தல்  மாலை இருள் வர ஆரம்பிக்கும் வேளையில் வீட்டிற்குள் இருப்பது ஏனோ  எப்போதும் ஒரு சிறு சோர்வை அளிக்கிறது . நேற்றும் அப்படித்தான். ஜன்னல்களின் கண்ணாடிகள் வழியே அடுத்த வீட்டு ட்யூப் லைட்டின் ஒளி கண்ணில் பட ஆரம்பித்திருந்தது  . அடுத்த வீட்டு டிவி-கள் தெளிவாய் தெரிய ஆரம்பித்தன . எங்கிருந்தோ கடைசிப் பறவை வானத்தைக் கடந்தது. அதை எதிர்த்து ஒரு பெரிய வௌவால் கூட்டம் அதைப் பார்த்தபடி கடந்து சென்றது .சில தெரு நாய்கள் தூங்க ஆரம்பித்திருந்தன. குழந்தைகள் அடுத்த நாள் தேர்வை எண்ணி படிக்க ஆரம்பித்து இருந்தனர் . ஒருவர் சத்தத்துடன் தெருவெங்கும் கொசுமருந்து அடித்தபடி சென்றார். மேகமே கீழ் இறங்கி வந்தது போல் இருந்தது. சாலையில் வண்டிகளின் விளக்குகள் தெரிய ஆரம்பித்தன. புத்தகம் ஒட வில்லை.  எங்காவது வெளியில் சென்று வருவது  என்று நீலாவைக் கூட்டி வெளியில் வந்தேன்.  வேறு எங்கு செலவில்லாமல் செல்ல முடியும்- கோவில்தான். அன்று ஒருவர் கேட்டார், இப்போதெல்லாம்  ஏன் கோவில்களில் கூட்டம். இடம் தான் பிரச்சனை. நேற்று 2 மணி நேரம் உட்கார இடம் இல்லாமல் ரோட்டில் நடந்தபடி, நின்றபடி ...

யுகாதி

இன்று யுகாதி , அப்பா யுகாதி அன்றுதான் பிறந்தார். இன்று கூடவே என்னுடைய பிறந்த நாளும் சேர்ந்து விழுகிறது. சென்ற ஜனவரி 21 அப்பாவின் நினைவு நாள். இரண்டு வருடங்கள் கடந்து விட்டன.  அன்று வீட்டிலிருந்தே வேலை பார்த்தேன். அன்று பள்ளிக்கூடத்தை விட்டு வந்த ஸ்ரீ 'அப்பா இன்னைக்கு ஜனவரி 21, என்ன நாள்னு தெரியும்ல'  என்றபடி , பின்னால் புத்தகப் பை , ஒரு கையில் நீளமான உறுமி  மேளக்காரர்கள் சுமக்கிற மாதிரி ஒரு வகை  புட்பால் பையும், மறு கையில் சாப்பாட்டு பையோடு படியில் ஏறினான். 'ஆமாடா , ஞாபகம் இருக்கு' என்றேன். ' அன்னைக்கு நீ அழுகவே இல்ல...நான் வந்ததும் பாத்து சிரிச்ச...இன்னைக்கும் கன்ட்ரோல் பன்னிக்கோ.. ' . வேறு யாராவது அன்று அப்பாவைப் பற்றி வீட்டில் பேசினால்  உஷ் என்று கை காட்டி 'டோன்ட் மேக் ஹிம் க்ரை' என்று பல முறை சொல்லிக் கொண்டே இருப்பான். ஒரு முறையேனும் நான் அழுவதை பார்க்க காத்துக்கொண்டிருக்கிறான்.  நான் அன்றிலிருந்தே அப்பாவைப் பற்றிய நினைவுகளை தொகுத்து எழுதி வைக்க வேண்டும் என்று நினைத்தபடி இருந்தேன். மேடமோர்போசிஸ்-ல் வருவது போல் , நாம் இல்லாத இடத்தில் நம்மைப் பற்றிய நி...

சைக்கிள் பதிவுகள் -4 - வசந்த ராணி

இன்று திங்கள் கிழமை, கொஞ்சம் கடினமான நாள். எழுந்தவுடன் வேலையைப் பற்றிய நினைப்பு வந்து மனதை மிரட்டும். அடுத்து சரியாக தூங்கி முடித்தோமா என்ற கவலை. ஒன்பதரை மணிக்கு மீட்டிங், அப்போ எவ்வளவு முன்னால் கிளம்ப வேண்டும், அதற்குப் பின் நாளில் என்ன செய்து முடிக்க வேண்டும் போன்ற எண்ணங்கள் தலகாணியிலேயே துவங்கி விடும். ஜன்னல் வழி நூலாய் வர ஆரம்பிக்கும் பகலாகும் இருட்டைப் பார்த்து , இது இன்னமும் கொஞ்சம் நீளாதா என்றே நினைக்கத்  தோன்றும். அன்றைய தினம் உங்கள் தலையணை அடியில் உங்களுக்காக மடித்து வைக்கப் பட்டுள்ளது, இன்று புதிதாய் பிறந்தோம் போன்ற சிந்தனைகள் வரவே வராது. இப்படி இன்றைய நினைப்பு போய்க் கொண்டு இருக்கும் போதுதான், 1000-ம் மணி படிப்புக்காக புத்தகத்தை எடுக்கச்  சென்றேன். (தினம் ஒரு மணி காலைப் படிப்பு முயற்சி). ஸ்ரீ தனது படுக்கையில் இருந்து புரண்டு இருந்தான் . இரவில் இவன் தூங்குவதற்கு எல்லோரையும் அமட்டுவது என் வேலை. நேற்றும் அவ்வாறே நடந்தது . அம்மாவும் , அக்காவும், சிரித்து அவனை எழுப்பிய வண்ணம் இருந்தார்கள். இவனும் தலையைத்  தூக்கிப்  பார்த்த வண்ணம் இருந்தான். பொதுவாக முகம் இழுத்த...

மறுபிறவி

ஏனோ இரன்டு நாட்களாக புனர்ஜன்மம் என்ற வார்த்தை வந்து கொண்டே இருந்தது. இந்த வார்த்தை ஒரு கணம் தோன்றும் , புளகாங்கிதமாய் ஆகி, கொஞ்சம் நெஞ்சு கனத்தது போல் மறையும். ஆனால் இது இவ்வாறே முடியவேண்டியதாய் இருந்திருக்கிறது. இவ் வார இறுதி நாட்கள் மதுரையில் . ஏனோ பெங்களூரை விட்டு வெளியே வந்தால், மக்கள் கஷ்டப் படுவது போலேயே தோன்றும். எல்லோரும் நன்றாகவே இருக்கிறார்கள் என்று உள்குரல் மட்டுப்படுத்தும். இந்தக் குரல் இல்லையென்றால் பை காலியாகிவிடும் .  இன்று மாலை நேர ஒரு சிறு ஊர் சுற்றல்.  நிறுத்தம் 1 முதல் 8 வரை , வட்டப்பாதை.  டீ பார்சல் வாங்கி கொண்டிருந்த இளைஞர்  மொபைல் போன் கடை வைத்து இருக்க வேண்டும். டீ மாஸ்டர் பத்தாயிரத்துக்குள் ஒப்போ  கிடைக்குமா என்றார். இளைஞர் உதட்டைப் பிதுக்கினார், ரியல் மீயாச்சும் வருமா என்றார். டீயை குடித்துவிட்டு கடையைக் கடந்து போகும் போது, ஒரு தாய் மடியில் குழந்தையுடன் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். பொதுவாக இங்கு அனுமதிக்க மாட்டார்கள். குழந்தையின் இரு கால்களிலும் தடித்த மாவுக்கட்டு போட்டு கட்டப் பட்டிருந்தது.  குழந்தை தூங்கிக் கொண்ட...

வரலாறு - மதுரையின் ஊடாக...

பூமணியின் அஞ்ஞாடியில் வந்த தென் மாவட்டங்களின் வரலாற்றுச்  சித்திரம் என்னை மதுரையைப் பற்றி இன்னும் படிக்கச் செய்தது. கடந்த ஒரு மாத காலமாக படித்த, கீழே வரும் வரலாற்று புனைவு  நூல்களின் collage என்றுதான் இப்பத்தியைச் சொல்ல வேண்டும்.  தகவல் போல சொல்லப்படும் வரலாறு எப்போதுமே என்  ஆர்வத்தைத் தூண்டுவதில்லை. ஒரு சங்கிலித் தொடர் போல் வரலாற்றை கதைகளாய்  வாசிப்பது இனிய அனுபவமாய் இருக்கிறது. வழி மதுரை என்று போர்டு போட்டு வரும் பேருந்து ஊரெல்லாம் செல்வது போல் தான் இதுவும். கிழக்கு கோபுரம்  மஹால் ராயர் கோபுரம் , பாதியில் நிற்பது  புதுமண்டபம் கோட்டை முகப்பு, இன்றைய அரசு மருத்துவமனை இருக்கும் இடம்  விளக்குத்  தூண்  திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் ஒன்றில் ஒரு வரியாய் வருவது, இன்னொருவரால் மிக விரித்து சொல்லப்படுகிறது. கணவன் இறந்ததும் உடனே சாவதும் , மன்னர்கள் படையெடுப்பின் விளிம்பில் மொத்த அந்தப்புரத்தையும் வெடியால் தகர்ப்பதும் மிக எளிதாக வரலாற்றில் சொல்லப்படுகிறது. ஆனால் தானே உயிரை மாய்ப்பது என்பது எவ்வளவு பெரிய தருணம். தாஸ்தாவெஸ்கி சைபீரிய முகாமில் அ...

பெங்களுரு கட்டண உரை - கூட்டத்துடன் தனித்திருத்தல் - ஜெயமோகன்

பெங்களுரு கட்டண உரை - கூட்டத்துடன் தனித்திருத்தல் https://www.jeyamohan.in/பெங்களூரு-கட்டண-உரை-ஜனவ/  முதல் முறையாக கட்டண உரையைக் கேட்கும் வாய்ப்பு அமைந்தது. இதைப் பற்றி தங்கள் தளத்தில் கடிதங்கள் படித்திருக்கிறேன். இப்போது இதை இங்கே மொத்தமாக தொகுத்துக் கொள்கிறேன். மிக மிக அடர்த்தியான உரை, ஜெயமோகன் கொடுத்த மேற்கோள்களையும் , புத்தகங்களையும் இனிமேல் தான் படிக்க வேண்டும்.   பகுதி 1: நாம் இங்கே புது சிந்தனைகளை எவ்வாறு உருவாக்குவது, ஏன் இப்போது உருவாக்கமுடிவதில்லை, ஏன் மேற்கத்திய சிந்தனை புதியதை உருவாக்குகிறது என்பது முதல் பகுதி உரையின் சுருக்கம்.  எடுத்துக்காட்டாக ஆத்மா/soul மற்றும் பிரக்ஞை/consciousness என்ற இரு சொற்களை எடுத்து ஐரோப்பிய சிந்தனை முறையை , அதில் மெட்டாபிசிக்ஸ்(மீபொருண்மை) வெளியேறியதை விளக்கினார். ஆத்மா என்பது ஒரு கற்பனை,மூட நம்பிக்கை, நிரூபணம் இல்லாதது. இது soul /existence என்று ஒரு ஐரோப்பிய மனம் மொழி பெயர்ப்பதினால் வருவது . இங்கே ஆத்மா ஒரு உருவகம், existence இல்லை. Logical positivism, pragmaticism , objectivism - புறவயவாதம் இவை யாவும் ஐரோப்பிய ...

சாயாவனம் - சா.கந்தசாமி , அழித்தலின் கதை

அழித்தல் என்பது இப்போது இன்னும் பல மடங்கு வேகமாகி இருக்கிறது. சில நாட்கள் முன்பு ஒரே ஒரு தனி புல்டோசர்  தர்மபுரி நெடுஞ்சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு பள்ளம் தோண்டியிருந்தது. ஓட்டுநர் மட்டும் வேலை பார்க்கிறார். இரண்டாவது மனிதரே வேலையில் இல்லை. இதே வேலை பல நாட்களுக்கு நூற்றுக்கணக்கான ஆட்கள் செய்வதை சில வருடங்கள் முன் பார்த்திருக்கிறேன். ஒரு பக்கம் வண்டிகளை மறித்து , கடப்பாரை , மண்வெட்டிகளை வைத்து செய்த வண்ணம் இருப்பார்கள். ஒரு சில கிலோமீட்டர்கள் வாரக்கணக்கில் ஆகும்.  அதே நாள் ஒரு ஐம்பது கருத்து அறுக்கும் இயந்திரங்கள் படை போல் போய்க்கொண்டிருந்தன.  ஒரு வனத்தின் அழிவையும் , அதை அழிப்பவனுடைய மனநிலையையும் துல்லியமாகச் சித்தரிக்கும் நாவல் சாயாவனம்.இது 1969-ல் வெளிவந்திருக்கிறது. மிகை உணர்ச்சிகளே இல்லாமல் இப்படி ஒரு அழிவைச் சித்தரிக்க முடியுமா ? மிக மெதுவாக சூடேற்றுவது  போல், வருடக் கணக்கில் மாத்திரைகளை உற்சாகமாய் முழுங்கி கடைசியில் புது வியாதிகளால் உயிர் இழப்பது போல.  சிதம்பரம் வெளி நாட்டில் இருந்து கிராமத்திற்கு வருகிறான். அவனுடைய அம்மா இவனுக்கு இரண்டு வயது ஆகும்ப...