Skip to main content

Posts

கம்பராமாயணம் - 3 - மாபெரும் கால்களின் கீழே

  டி.கே .சி எழுதிய கம்பர் தரும் ராமாயணம் மேல் நோக்கி கிளை விரித்து சென்ற வண்ணம் இருக்கிறது. கம்பராமாயணத்தில் வரும் பாடல்களை இடைச்செருகல் என்று பல பாடல்களை நிராகரிக்கிறார். இவர் மேலும் தொகுத்து எழுதியது இப்புத்தகம். எனவே சொல்ல வேண்டியதில்லை, பொறுக்கி எடுத்து இருக்கிறார் , நயம் சொல்லி விரித்து எழுதி இருக்கிறார்..  கம்ப நாடகமும், கம்ப சித்திரமுமே நம்மை உள்ளிழுத்துச் செல்கிறது என நினைக்கிறேன்( டி.கே .சி ). நாடகத்தை விட கம்பர் காட்டும் சித்திரமே எனக்கு உவப்பாய் இருக்கிறது.   சித்திர கூட படலத்தில் லட்சுமணன் காட்டில் குடிசை அமைக்கும் காட்சி வருகிறது. வளைவில்லாத, நேரான பக்கவாட்டு மூங்கில்களை நிறுத்தி, மேலாக குறுக்குக்கழிகளை தாளாமல் சேர்த்துக் கட்டி முடிந்தான். மேலே கூரையில் தேக்கின் இலைகளை பரப்பி, அதன் மேல் பூத்த நாணல் புற்களை வெய்து, கீழே நிறுத்திய கழிகளுக்கு இடையில் மண்ணை அடித்து , சுவர் எழுப்பி அதில் நீர் பூசி மெழுகினான்.     நெடுங் கழை குறுந்தறி     நிறுவி, மேல் நிரைத்து, ஒடுங்கல் இல் நெடுமுகடு     ஒழுக்கி, ஊழ் உற இடுங்கல் இல் கை விசித்து ...

கம்பராமாயணம் - 2 - புது வெள்ளம்

ஸ்ரீ குழந்தையாக, ஒரு இரண்டு மூன்று வயது இருக்கும் போது அவர் அழுவதைப் பார்ப்பது அவர் எனக்கு எப்போதுமே  அலுக்காது. வசதியாக உட்கார்ந்து கால்கள் இரண்டையும் அகட்டி வைத்து, கைகள் இரண்டையும் ஒன்றாக கோர்த்தபடி, கழுத்தை சிறிது வான் நோக்கி உயர்த்தி , உயர்ந்த ஒரு பிரார்த்தனை போல்  அழுவான். எதோ ஒரு நிமிடத்தில் முழு மூச்சை உள் வாங்கி, பலத்தையெல்லாம் திரட்டி, கைகளை அழுத்தி, கண்ணில் உள்ளிருக்கும் தண்ணீரை எல்லாம் வெளியில் பிதுக்கி கொண்டு வருவார். சத்தமும் பெரிதாக வரும்படி செய்வார். இந்த இடத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நின்று பார்ப்பார். முடிவில் அந்த உயர் அலைவரிசையில் இருந்து படியில்  இறங்குவது போல சத்தமே இல்லாமல் கீழே இறங்குவார் , மலையில் நீயூட்ரலில் இறங்கும் ஒரு ஜீப் போல. பின்னர் ஒரு இடத்தில் டிரைவர் கியர் போடும் போது விம்மும் வண்டி போல் விம்மி திரும்பவும் சம தளத்தில் ஆரம்பிப்பார். மூக்கில் இருந்து வரும் நீரை பிடிக்க நாக்கை ரெடியாக வைத்தே இருப்பார். ஒன்னும் முடியாத நேரத்தில் எழுந்து நடந்தபடியே கொஞ்சம் அழுது பார்ப்பார். முடிவில் பக்கத்து வீட்டு நாயைப் பார்த்து , ஸ்தம்பித்து , அழுகையை ...

கம்பராமாயணம் - 1 - காடு

கம்பராமாயணம் - 1 - காடு  சமீபத்தில் படித்த ஜெயமோகனின் காடு நாவல் தான் என்னை கம்பரைப் பற்றி எண்ணச் செய்தது. கதை முழுதும் கிரி என்பவனைச் சுற்றியே நடக்கிறது. முழுக்கதையும் காட்டிலேயே நடக்கிறது. வீட்டிலிருந்து பிழைப்பு தேடி மாமாவுடன் கால்வாய் (கல்வெர்ட்),  ரோடு போடும் கான்ட்ராக்ட் வேலைக்கு மேற்பார்வையாளராகச்  செல்கிறான். இதைப் படித்தபின் அருகில் இருக்கும் பெண்களில் எப்போது நீலி தோன்றுகிறாள் என்று தெரிகிறது. இவரையோ இன்னொரு நீலி காட்டிற்குள் கட்டிப்போட்டு விடுகிறாள். ஒரு பெண் அன்பால் நீலியாய், பித்தனாய் ஆக்கினாள். இதன் மறுமுனை மனைவி இயலாமையின், வெறுப்பின் உச்சத்தில் நீலியாகிறாள். மாமா இறந்து போய் பின் தொழில் சரிந்து , சாப்பிட வழியில்லாமல் , சரிவிலே வீட்டிலே இருக்க முடியாமல், இவர் தினமும் நாகராஜா கோவிலில் போய் உட்கார்ந்து,  சும்மா இருந்து பொழுது கழிக்கிறார். ஒரு நாள் காலையில் கோவிலுக்கு புறப்பட்டு  போகும்போது மனைவி பேசுவது குத்தி விடுகிறது. பீஸ் கட்டணும் என்கிறாள் . இவன் கேட்காமல் செல்கிறான். ஒரு தாசியா போகவும் வழி இல்லயே என்கிறாள். இத்தனை நாள் குத்தல் பேச்சை கேட்டவர் ...

சைக்கிள் பதிவுகள் -5 - சாலைப்பறவைகள்

வாரத்தில் இரண்டு நாட்கள் காலை 9:30 க்கு மீட்டிங் இருக்கிறது . கொஞ்சம் கிளம்ப தாமதம் ஆனால் சைக்கிளை விரட்ட வேண்டியுள்ளது. சைக்கிளை விரட்டு நம்மை விரட்டுவது தான். டீக்கு நிறுத்தாமல் போவது போன்ற சமரசங்களுடன் சென்று நேரத்தில் சேர்வேன். இது கோடை காலம் ஆதலால், உடுப்பை மாற்றி , கொஞ்சம் மேக்கப் முடித்து தான் உள்ளே செல்ல முடியும்.   அன்று நான் சென்று கொண்டிருக்கும் போது, முன்னே ஒரு பெரியவர் ஹீரோ ஹோண்டா splendor-ல் போய்க்கொண்டிருந்தார்.  splendor -ஐ இப்போது vintage என்றே சொல்ல வேண்டும். இவரைப் போல் ஆட்கள் இல்லாவிட்டால் , வண்டிகளுக்கென்று வேறு ம்யூசியம் உண்டா என்று தெரியவில்லை. பின்னால் இருந்து அவர் அணிந்து இருக்கும் கண்ணாடி சட்டம் தெரிந்தது. அரைக்கை சட்டை, அடர் பழுப்பு கால்ச்சட்டை. பாட்டா தோல் செருப்பு, இதுவும் இப்போதெல்லாம் வருவதில்லை. தேடித்தான் வாங்கியிருப்பார். நேராய் நிமிர்ந்து ஒரு தேர்ந்த சாரதி போல் ஒட்டிச் சென்று கொண்டிருந்தார். அவர் பார்வை முழுதும் சாலையிலேயே இருந்தது.  நாம் நகரத்தின் மையத்திற்குள் செல்லச் செல்ல சாலையில் பள்ளங்களின் வீரியம் குறைந்த வண்ணம் இருக்கும். வீ...

வாழ்வின் மெய்யறிதல் : பண்பு எனப்படுவது (அ) மனிதன் என்பவன்...ஆர்தர் ஷோப்பனோவர் கட்டுரைகள் -3/1

சென்ற பகுதியில் ஒருவரின் தனிப் பண்பு என்பது அவரிடம் இருக்கும் செல்வத்தையும், புகழையும் விட மகிழ்ச்சிக்கு எவ்வளவு அவசியம் என்று அறிந்தோம். அதுவே அவரை இறுதி வரை தொடர்ந்து வரும். இதுவே பார்க்கும் விஷயங்களில் நிறங்களை உருவாக்கும். ஒருவர் பாரிஸில் மகிழ்ச்சியாய் இருந்தேன் என்று சொன்னால், உண்மையில் இதன் பொருள் என்ன?. இவர் பாரிஸில் 'தான்' மகிழ்ச்சியாய் இருந்தார் என்றே சொல்கிறார். பாரிஸ் என்ற  இடம் இரண்டாம் பட்சம், 'அவரே' முதல் இடம். வாயிலே புண் உள்ள ஒருவருக்கு அமுதமே ஆனாலும் சுவை இருக்காது. வாழ்வில் மகிழ்வும், துயரமும் அதை சந்திக்கும் விதத்திலும், அது எவ்வளவு தூரம் நம்முள் செல்கிறது என்பதிலேயே அடங்கி இருக்கிறது. இவ்விஷயம் ஒன்றுதான் நம் மகிழ்ச்சியை நேரடியாகப் பாதிக்கும். மற்ற இரண்டும் (பேர் , புகழ்)   மறைமுகமாகவோ , மற்ற பொருளின் வழியோ  அல்லது பிற மனிதர்களின் வாயிலாகவோ தான் நம்மை அடைய முடியும். மகிழ்ச்சி குணம் சார்ந்து இருப்பதனாலேயே தான் பிறரிடம் பார்க்கும் நல்ல குணங்கள் நம்மை பொறாமை கொள்ள வைக்கின்றன. நம் கெட்ட குணங்களை பிறரிடம் இருந்து மறைக்க வேண்டும் என நினைக்கிறோம். ...

அசைபோடுதல்

இதில் வந்த 'rumination' என்ற வார்த்தை தான் என்னை  இப்புத்தகத்தை( Stop Overthinking : Nick Trenton ) படிக்கத் தூண்டியது. இந்த வார்த்தை தான் எருமை மாட்டை நினைக்க வைத்தது. அப்பா எப்போதாவது கடிந்து கொள்ளும் போது 'எருமைப் பால் குடிச்சு வளந்தா?' என்பார். இல்லை 'எருமைமாட்ல மழை பெஞ்ச மாதிரி' என்பார். பாட்டி வீட்டில் மாடுகள் உண்டு. தாத்தா மழை வந்தால் எப்போதும் பசு மாடுகளை உள் கொட்டத்தில் பிடித்துக் கட்டுவார். ஆனால் எருமையை வெளியேயே நனைய விட்டு விடுவார். என்ன மழைக்கும் எழுந்து கூட நிற்காது. அதிக பட்சம் கண்களை உருட்டிப் பார்க்கும். வலது பக்கம் தாத்தாவின் வைக்கோல் போரும் , எதிர்த்தாற்போல் பக்கத்துக்கு வீட்டு மாடுகளும் , வைக்கோல் போரும் இருக்கும். இரண்டு வைக்கோல் போர்களின் நடுவே உள்ள வெற்றிடத்தை பார்த்தவாறு அசை போட்டவாறே இருக்கும். பசுமாடு தோலின் மேல் கொஞ்சம் தண்ணீர் விழுந்தால் தோலை மட்டும் தோகையைப் போல் சிலிர்த்து , வாலை ஒரு முறை ஒடித்து தன் முதுகில் லேசாய் அடித்துக் கொள்ளும். எருமை தோல் சிலிர்ப்பது அரிது  ,  அதைப் பார்ப்பது அதிலும் அரிது.      அதிகாலையில் மாடுகளை தெரு...

வாழ்வின் மெய்யறிதல் : அறிபவர் என்பவர்...ஆர்தர் ஷோப்பனோவர் கட்டுரைகள் -2

அறிபவர் என்பவர்...                                                 அரிஸ்டாடில் வாழ்வின் நமக்கு நடப்பதை மூன்றாகப் பிரிக்கிறார். 1.நமக்கு வெளியில் இருந்து வருபவை  2.மனதில் நடப்பவை  3. உடலில் நடப்பவை  நான் பார்த்த வரை எல்லா மனிதர்களையும் பின்வரும் மூன்று வகையில் வேறுபடுத்திப் பார்க்கலாம். (1). அந்த மனிதர் யார் : ஒருவரின் ஆளுமை என்ன என்பது இதில் அடங்கும். உடல்நலம், அவரின் பலம்,அழகு,மன வலிமை, அவர் போற்றும் அறம்,அறிவுத்திறன், கல்வி போன்ற எல்லாம் சேர்ந்தது. (2). அவரிடம் இருப்பது என்ன : சொத்துகள் போன்ற எல்லா வகையான உடைமைகள். (3). அடுத்தவர் பார்வையில் இந்த மனிதர் யார்: பிறர் கண்களில் இவர் எவ்வாறு அளக்கப்படுகிறார், இவரைப் பற்றி அடுத்தவர் அபிப்ராயம் என்ன, இவர் பட்டங்கள் யாவை, வரிசை என்ன, புகழ் யாது.  இதில் முதல் பத்தியில் வரும் விஷயங்கள் இயற்கையால் ஒவ்வொரு மனிதருக்கும் அளிக்கப்படுபவை. அவருடைய மகிழ்ச்சியோ , துக்கமோ மற்ற இரண்டு பத்தியில் வரும...