Skip to main content

Posts

பாராவின் *50 நாள் மொழி விளையாட்டு* - 2

நாட்குறிப்பு 21/50 - முதல் அத்தியாயம் எனது அலுவலகம் இருப்பது  நகரின் மையத்தில். எதிரில் கப்பன் பூங்கா , அடுத்த தெருவில் சட்டமன்றக் கட்டிடம். பக்கவாட்டில் கிரிக்கெட் மைதானம், MG ரோடு, சர்ச் ஸ்ட்ரீட். காலையில் எளிதில் தென்படும் காட்சி கல்யாண போட்டோஷூட். குறிப்பாக சர்ச் வீதியிலும் விதான் சௌதாவின் முன்னரும்.  கொஞ்சம் மேல்தட்டு என்றால் சர்ச் வீதி pub-முன் ஷூட்.  மிடில் கிளாஸ் என்றால் இன்றுபோல் விதான்சௌதா முன்னால் , பசவண்ணர் வெண்கலக் குதிரைச் சிலை தெரிய நடக்கும்.  தெரு விளக்குக் கம்பியில் மணமகன் ஒருகால் ஊன்றி நிற்க, பெண் சேலை நுனி பிடித்து நடந்து வர வேண்டும். முதல் மூன்று டேக் தோல்வியில் முடிந்தது. பையன் பொறுமை இழக்க ஆரம்பித்திருந்தார். போட்டோக்காரர்கள் விடுவதாக இல்லை , சிக்கலாகத் தெரிந்தது. நான்காவது டேக்கில் மணப்பெண்ணுக்கு முதலில் இருந்த சிரிப்பு இல்லை. நானும் வந்துவிட்டேன், ஷூட்டும் முடிந்திருக்கும் . நாட்குறிப்பு  22/50 ஒரு எறும்பாவது... சாயங்கால ரயில், மேடையில் மண்புழு போல் ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. என் போன்ற எறும்புகள் மனதினுள் தள்ளுமுள்ளிற்கு ஆயத்தமாகின. புழு...

பாராவின் *50 நாள் மொழி விளையாட்டு* - 1

*50 நாள் மொழி விளையாட்டு* "வணக்கம். நேற்று அறிவிப்பதாகச் சொல்லியிருந்த அடுத்தப் பயிற்சி விளையாட்டை இன்று அறிவிக்கிறேன். தலைப்பு: இன்றைய டைரி` நிபந்தனைகள்: 1. அன்றன்று உங்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்களில் முக்கியமானதென்று நீங்கள் கருதும் ஒன்றனைக் குறித்து மட்டும் விரித்து எழுத வேண்டும். நேற்று நடந்தது, என்றோ நடந்ததெல்லாம் கூடாது. அன்றன்று நடப்பவை மட்டும். குறிப்பிடும்படி ஒன்றுமே நடவாத நாள்களில் அன்று சாப்பிட்டது, அன்றைய உறக்கத்தில் வந்த கனவு போன்றவை குறித்தும் எழுதலாம். ஆனால் அடிக்கடி கனவு, உணவு குறித்தே எழுதித் தப்பிக்க நினைக்கக் கூடாது. 2. நீங்கள் எழுதத் தேர்ந்தெடுக்கும் சம்பவத்தைப் புனைவு மொழியில் எழுத வேண்டும். கட்டுரைத் தொனி வரக்கூடாது. சிறப்பாக எழுதியிருந்தாலும் கட்டுரை மொழியில் இருந்தால் ஏற்கப்படாது. 3. ஒவ்வொரு நாள் குறிப்பிலும் அதிகபட்சம் பதினைந்து முற்றுப் புள்ளிகள் மட்டுமே இருக்கலாம். அதற்குமேல் கூடாது. 4. ஒவ்வொரு சொற்றொடரிலும் அதிகபட்சம் ஏழு சொற்கள் மட்டுமே இருக்கலாம். அதற்குமேல் கூடாது. .... -பாரா இன்றைய டயரி - 01/50 1 எழுந்ததும் மனதில் விழுந்த சொல் - பறக்கும் மலை.  அர...

சில கவிதைகள்

 மரணத்தை நடித்தல்  -------------------------- அற்ப வயதில் ஒருவரைப்   பறிகொடுத்த அந்த  வீட்டிற்கு வந்தவர்கள் எல்லோரும்  முடிவின்மையின் சுவரில் மோதி   செய்ய ஒன்றும் இல்லாமல்  நடித்துப் பார்க்கிறார்கள்  கணவர்கள்  கணவராய்  மனைவிகள் மனைவியாய்  அன்னைகள் அன்னையாய்  தந்தையர் தந்தையாய்  அந்த உடலாய்   அதன் நோயாய்  ஒத்திகை முடிந்து  இழப்பின் அருகில்  இருக்கும் அவர் கை பிடித்து ஓரிரு சொல்லில் மற்றோர் முறை  சொல்லிற்கு அப்பால்  மற்றுமோர் முறை அவ்வுடல்  உச்சிக் கிளையின் பறவை  ----------------------------- அந்தப் பறவை  உச்சிக் கிளையில்  அமர்ந்திருந்தது  கீழிருந்து  நீரில் மிதக்கும் பறவைகள்    உற்றோர் உறவோர்  வங்கி கடன்  கூடல் பிரிவு பயம் துணிவு   தயவு தாட்சண்யம் உண்டு இல்லை  என இன்னும் பல  நாளும் பொழுதும்  கூறிய படி இருந்தன  கிளையில் இருந்த பறவை பெரும்பாலும் மொழியில்லாமல்  தலையை மட்டும் ஆட்டிக் கேட்டது  பின் ஒரு கணம்  வி...

ஒரு செல்லின் பார்வையில்

ஒரு செல்லின் பார்வையில்  ----------------------------------                                                                                      [1] இன்று நீங்கள் கால் கீழே ஒரு எறும்புப் புற்றையோ அல்லது ஒரு கரையான் புற்றையோ மிதித்தோ , இல்லை பார்த்தும் பார்க்காமலோ என்றும்  போல் கடந்து சென்றிருப்பீர்கள். எப்போதும் மலையை வியக்கிறீர்கள், இது எனக்கு விளங்கவில்லை . மாபெரும் மலையும் யுகம் யுகமாய் பெருகிக் கரையும் ஒரு புற்றே, இல்லையா.? நீங்கள் வியப்பதை மலைத்தல் என்கிறீர்கள். எப்போதும் மேலே பார்த்துத்தான் மலைக்க வேண்டுமா? உங்கள் உடம்புக்குள்ளே , உங்கள் கால் கீழே, பூமியின் உள்ளே மலைகள் இல்லையா? அதைத்தான் நான் இன்று சொல்லியாக வேண்டும். மார்கழி டிசம்பரில் சங்கீத, கலை கச்சேரி நடுவில் இப்படி ஒரு உபதேச வார்த்தைகள் சொருகினால் எடுபடாதா என்ற ஆசையும் தான். செல் என்றதும் நீங்கள் உடனே ச...

ஷீரான்னம்

ஷீரான்னம் ------------ இப்போது மார்கழி மாதம் நடுவில் நிற்கிறது. பெங்களூரின் நிலைமையில் டிவி வழியாகத்தான் மார்கழி தெரியவர வேண்டும். டிவி இல்லாமல் பல வருடங்கள் தாண்டி இப்போது சில மாதங்களாய் டிவி வீட்டில் புகுந்திருக்கிறது. நடு வீட்டில் அது சிலுவையில் தூக்கி அறைந்தது போல் பரிதாபமாக நிற்கும்போது எப்போதாவது போட்டுப் பார்த்தே ஆக வேண்டியிருக்கிறது. மதுரையில் இருந்தால் மார்கழி தெரிவது வேறு விதம். காதில் யானைக் காதை குளிருக்கு மாட்டிப் பலர் நடமாடுவார்கள். அதிகாலை வீரமணியின் குரல் குழல் ரேடியோவில் கேட்கிறது. அய்யப்ப பக்தர்கள் சிறு கோவில்களை குத்தகைக்கு எடுத்து வேட்டி துண்டு காயவைத்து ,குளித்து சாப்பிட்டு கோயிலில் இருந்து கொண்டு வீட்டிற்கும் அவ்வப்போது போய் வருகிறார்கள்.  திருப்பரங்குன்ற முருகனும், அன்னை மீனாட்சியும் அய்யப்ப பக்தர்களுக்கும் , முருக பக்தர்களுக்கும் முழு நேர அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்கிறார். உள்ளூர்க்காரர்கள்இந்த இடைவெளி அறிந்து போகிறார்கள்.  ராஜகுலராமனின் மார்கழி இன்னும் வேறு விதம். மார்கழி முதல் தேதி ஆரம்பித்து பொங்கல் முடியும் வரை காலை மாலை குழல் ரேடியோ ஒலிக்கும். ச...

யோசிக்கும் வேளையில் - 1

யோசிக்கும் வேளையில்  - 1 --------------------------------- சென்ற சில நாட்களாய் யோசிப்பதைப் பற்றி படித்தும் , யோசித்தும் பொழுது போய்க்  கொண்டிருக்கிறது. எழுதிவைத்தால் வசதி என்று நினைத்து எழுதுகிறேன். நான் பிறந்து வாழ்ந்த வீடு மிக நீளமானது. தெருவின் எல்லா வீடுகளும் அவ்வளவு நீளம் தான். ஐம்பது மீட்டர் இருக்கும். ஒரு நாளில் எவ்வளவு முறை வாசலும் புறமும் கடக்க வேண்டியிருக்கும் என்று எண்ணிக் கொள்கிறேன். எல்லோருக்கும் கால்களில் வலு இருந்திருக்கிறது. தெரிந்தோ என்னவோ தலை வாசலில் ஒரு திண்ணை உண்டு. சரியாக உடம்பின் அளவே இருக்கும் திண்ணை அது.இதைப் போல் புறவாசலில் ஒரு துவைக்கும் கல் இருந்தது. அதை ஒட்டியவாறு கிணறு. கிணற்றை சுற்றிக் கட்டிய சுவர் முடியும் இடத்தில் இன்னொரு உயர்ந்த கருங்கல் மேடை இருந்தது. பின்னால் எங்கும் கண் முட்டும் அளவுக்கு பச்சை நெல் வயல்கள், வாழைத் தோட்டங்கள் இருந்தன. அருகில் ஓங்கி அடர்ந்து வளர்ந்த முள் மரங்கள், மஞ்சணத்தி, முருங்கை, அகத்தி மரங்கள் உண்டு. மூன்றாவது வீட்டு சம்சாரியின் ஒரு காளையும் , எருமையும் அதன் நிழலில் அசை போட்டுக் கொண்டிருக்கும். அருகில் மலைபோல் ஒரு வைக்கப்...

அறுசுவை அரசர்

அறுசுவை அரசர்  --------------------- நல்ல உணவு என்பது எப்போதும் எஞ்சி நிற்கும் அதன் நினைவு மட்டுமே. எப்போதோ ஒரு முறை கிருஷ்ணகிரி முன்னால் இருக்கும் முருகன் இட்லிக்கடையில் ஒரே ஒரு பொடி தோசையை தின்று விட்டு இப்போது அந்த வழியில் போனாலும் வண்டியை அங்கு நிறுத்த முடியுமா என்று கேட்கிறார். இப்போது ஏழாவது படிக்கிறார், மேலே சொன்ன சம்பவம் நடந்தது ஒரு ஐந்து வருடம் முன்பு. அந்த ஒரு தோசை வாழ்நாளில் அவருக்கு மறக்காது என்றே நினைக்கிறேன்.  அதே போல் இந்த ஒரே ஒரு தோசை சொல் வழியாகவும் பெருகும். நாலு பேர் சேர்ந்து , எல்லோர் வயிற்றிலும் பசியும் இருந்து விட்டால் ஆண்ட தோசை சிறகு முளைத்துப் பறக்கும். பேசிப் பேசி பெருக்குவார்கள். வயிற்றில் பசி இருக்கும்போது உணவைப் பற்றிய பேச்சு அவ்வளவு ஏக்கமும், இனிதாகவும் ஆகி விடுகிறது. வயிற்றில் இருக்கும் நீர் உறிஞ்சி கனலாய், கொழுந்தாய் , தனலாய் எரிந்து முடியும் வரை. பேச்சு அதன் ஊதுகுழல் போல, இல்லை உடன் வரும் பாடல் போல, அதை இன்னும் கனன்றெழச் செய்கிறது. பெங்களூர் வந்த புதிதில், சனி ஞாயிறுகளில் நண்பர்களுடன் சேர்ந்து உண்பது மறக்க முடியாத அனுபவம். ஐந்து பேர் core மெம்பர...