Skip to main content

Posts

விடையேறி நங்கள் பரமன், IBM 1620(சிறுகதை)

how about விடையேறி நங்கள் பரமன், IBM 1620 ----------------------------------------------- ஜூலை 19 1963. 'புரொபஸர் ஹாரி ஹஸ்கி சார்ட்டர்ட் பிளைட் டெல்லி வந்தாச்சு..கஸ்டம்ஸ்ல சின்னச் சிக்கல்ன்னு காலம்பற ட்ரங்க் கால்'  பேராசிரியர் ராஜாராமன் கேசவனிடம் சொல்லிக்கொண்டிருக்கையில் நான் அறையில் நுழைந்தேன்.. 'டாக்குமெண்ட்ஸ் ஷிப் பண்ண மறந்துட்டாராம்...பைனான்ஸ் செக்ரடரிய லைன்ல பிடிங்கோ ... அவா சப்போர்ட் கமிட் பண்ணிருக்கா' நாக்பூர் IIT ஆசிரியர்களின் அறை வெள்ளிக்கிழமை அன்று விழித்துக்கொண்டது. ராஜாராமனும் அவரது மாணவர்கள் நாங்கள் எதிர்பார்த்திருப்பது IBM 1620. நான் அதில் மின்பொறித்துறையின் மாணவன். 'சார் , நீங்க சொன்ன மாதிரி இருபது பேர் டீம் ரெடி' என்றேன். இன்று இந்தியாவில் மொத்தம் பத்து கணிப்பொறிகள் இருந்தால் அதிகம்.  இந்தக் கதையை ராஜாராமன் வகுப்பில் சொல்லியிருக்கிறார். 'நாம இன்னிக்கு கம்ப்யூட்டர் பாக்கணும்னா கல்கத்தா இந்தியன் ஸ்டாடிஸ்டிக்ஸ் இன்ஸ்டிடூட் போகணும்..மஹலனோபிஸ் டீம்ல BTM HEC-2M மெஷின் ...1954 பிரிட்டிஷ் இம்போர்ட்டட்...அப்புறமா நாலு வருஷம் கழிச்சு வந்த URAL-1 ரஷ்யன்...

பிறந்த நாள் குறிப்புகள்

 பிறந்த நாள் குறிப்புகள்  [1] (முன்னறிவிப்பு  : இது ஒரு படத்தொகுப்பு போலவோ  , இல்லை உதிர்ந்த பூக்கள் போலவோ இருக்கலாம். அப்படி இருந்தால் என் மனநிலையை சரியாய் பிரதிபலித்தது என்று கொள்வேன்) 'முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ...' https://www.youtube.com/watch?v=I2f66z7dUU0 இன்று இந்தப் பாட்டு காதில் படுவது தற்செயல் என்று கடந்து போகலாம். இப்போது இது காதில் விழ ஒரு சங்கிலித் தொடர் இருக்கிறது. அதை ஒதுக்கித் தள்ள மனம் இல்லை. இரண்டு நாள் பின்னோக்கிப் போக வேண்டும். நடை பாதையில் செர்ரிப்  பூக்கள் நுரை போல் இன்னும் பூத்துக் கொண்டிருக்கின்றன.  செங்கொன்றைகள் தலை காட்ட ஆரம்பித்துள்ளன. குடியிருப்பின் மாந்தோட்டம் பூத்துத் தள்ளுகிறது.  வண்டுகள் அமர்ந்த இலைகள் கரும்புள்ளிகள் கொண்டிருக்கிறது.  இரண்டு நாள் முன் பெய்த மழையில் மாவடுக்கள் நிலத்தில் உதிர்ந்திருக்கிறன்றன. சிறு சேவலோ கோழியோ போல கிளிமூக்கு மாங்காய் தோன்றும் எனக்கு. 'அம்மா இருந்தா பொறுக்கி மாவடு போடுவாங்க ' என்றாள் அவள். 'சரி , பொறுக்குவோம் ' என்றேன்.  இருவ...

ஏற்றம் (சிறுகதை)

ஏற்றம்                                                                                          (1) சிவாவின் கார் கத்திப்பாரா மேம்பாலத்தை நெருங்கியிருந்தது. அழுத்திப் போய்க்கொண்டிருந்தான்.  ஐம்பது லட்சம் SUV. தோளில் சுமந்து போனால் விரைவில் போகலாம். இன்னும் நாலைந்து சிக்னல்கள். நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் பக்கத்தில் சக்தி பேசுகிறான் என்று படித்தான். எப்படியும் சக்தியை கூட்டம் ஆரம்பிப்பதற்குள் தனியாய்ப் பார்த்து விட வேண்டும். சக்தியும் அவனும் மூன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாய்ப் படித்தவர்கள்.  வண்டியை மண்டபத்தின் கீழ் தளத்தில் நிறுத்தி மேலே வந்தான். கோயில் போகும் தெரு பார்த்து கை உயர்த்திக் கும்பிட்டான். பணக்கவலை இல்லாமல் செய்ததற்கு ஒரு முறை. நடு வயதில் நீரிழிவு பிடிக்குள் இருக்கவேண்டி இன்னொன்று  என்று முனகினான். விழா முடிந்ததும் கோவில் பக்கம் போகவேண்டும...

சுந்தரிக்கு யார் பொறுப்பு? (சிறுகதை)

சுந்தரிக்கு யார் பொறுப்பு? --------------------------------- 'இந்த நாய்க்கு ஏற்கனவே நியூட்ரலைஸ் பண்ணியிருக்கா , இல்லையா ' வேலை விட்டு வந்து சோபாவில் கால் நீட்டி அமர்ந்தேன். இந்த வாட்சப் கேள்வி தூக்கி வாரிப்போட்டது.  இரண்டு மூன்று ஸ்க்ரோலில் விஷயம் தெளிவாகியது. நியூட்ரலைஸ் என்றால் என்ன என்று மனைவியைக் கேட்டேன். விரைநீக்கம் என்றாள்.  கொஞ்சம் நிம்மதி. நான் நினைத்தது சுட்டுத் தள்ளுவது. சுந்தரி பெண் நாயல்லவா ? என்னுடைய சந்தேகம் இதற்கு எப்படி விரை நீக்கம்.  டெஸ்டோஸ்டெரோன் ஆண் தொடர்பான விஷயம் அல்லவா?. சுந்தரியை மனதில் நினைத்தால் எனக்கு ஒரு இளம் பன்றியின் நினைவு எழும், உடலின் சில இடங்களில் மேகம் போல் வெள்ளைத் தீற்றல். மற்றபடி பன்றியைப் போல் குனிந்தவாறு நடக்கும். பின்னால் கை கட்டி நடக்கும் ஒரு மூதாட்டியைப் போல். என் மகளைப் பார்த்து ஓடி வரும். CCTV -ல் படாமல் பிஸ்கட் துண்டு போடுவாள். பிரட் தின்பதில்லை. உணவு போட்டால் தரையில் சோற்றின் தடம் CCTV  காட்டிக் கொடுக்கலாம். அடுத்த அடுத்த கொத்து கொத்தாய் சுந்தரியைப் பற்றிய  வாட்சப்கள்.      'இந்த நாய ஒண்ணா வெளிய விரட...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -3 - எழுத்தை முன்வைப்பது

எழுத்தாளர்  சமூக வலைத்தளங்களை பயன்படுத்தலாமா?  ஆமெனில் எப்படிப் பயன் படுத்துவது? பொதுவாக பெரிய எழுத்தாளர்கள் அந்தப் பக்கம் போகாதே என்று தான் சொல்கிறார்கள்.பாராவின்  இந்தப் பகுதி  பதிவர் ஆக எண்ணம் இருப்பவர்களுக்குச் சொல்வது என்று நினைத்தேன்.அவர் சொல்லியது தலைகீழ். கண்டிப்பாக சமூக வலைத்தளங்களை எழுதுபவர் பயன்படுத்த வேண்டும்.  ஆனால் நிபந்தனைகளுக்கு  உட்பட்டு. என் அம்மாவிற்கு AI , LLM போன்ற இக்காலகட்ட முக்கிய வார்த்தைகள் தெரிகின்றன. மனிதமூளை ஆராய்ச்சி இல்லை என்றால் இன்றைய AI/LLM தொழில்நுட்பம் இருந்திருக்காது. ஆனால் மருத்துவத்துறையின் விளிம்பில் இருக்கும் ஆராய்ச்சிகள் பற்றி யாருக்கும் தெரிவதில்லை ஏன் இப்படி? . LLM ஆட்கள் சமூக வலைதளங்களில் ஓயாமல் பேசுகிறார்கள். கொண்டுபோய் சேர்த்திருக்கிறர்கள். மருத்துவத்துறையினர்  பேசுவதில்லை. அவர்கள் மொழியும் கவிதைபோல் இன்னும் எட்டாமல் நிற்கிறது. இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தங்கள் குறையாக இந்த பொதுவெளி  உரையாடல் அவர்களிடம் இல்லாமல் இருப்பது. டாக்டர்.Pal(ழனியப்பன் மாணிக்கம்)  என்றொரு டாக்டர் இதைச் செய்கிற...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -2 - எழுத்தின் செயல்முறை

'எல்லாரும் வந்தாச்சா ஆரம்பிக்கலாமா ?'.  அடுத்த பத்து நிமிஷத்திற்குள் இந்த இரண்டு விஷயங்களை எதாவது ஒரு இடத்தில் சொல்லிவிடுவார். 'எழுதுறது நூறு சதவீதம் இன்ஜினியரிங்...உட்கார்ந்தா அதுவா வரும்னு சொல்லுவாங்க..அதெல்லாம் பொய்...வேற யாரும் நுழையக்கூடாதுன்னு சொல்றது...என்னளவில் எழுத்து ஒரு  தொழில் நுட்பம்..நுணுக்கங்களைக் தெரிந்து கொண்டால் எல்லோரும் எழுத முடியும்.' நானும் நல்ல எழுத்து அரை போத நிலையில் வருவது என்று எண்ணியிருந்தேன். கப்பல் நீரில் மிதப்பது போல். போத நிலையில் எழுத்தாளரின் உணர்ச்சி மேலிடுகிறது. அந்த இடத்தின் பாத்திரங்களின் உணர்ச்சியே அவருள் வர வேண்டும். அவர் எல்லோருக்கும் ஒரே உணர்ச்சியை காட்டிக்கொண்டிருக்க முடியாது. இதை எப்படிச் செய்வது என்று சொற்களால்வகுப்பது கடினம். படைப்பாற்றல் தெய்வக் கொடுப்பினையா? கற்றுக்கொள்ளவே முடியாதா?  படிப்பு தான் எழுத்தின் முதுகெலும்பு. அதில் பின்னித்தான் இதயமும், மூளையும், காலும், கையும் ரத்தத்தைப் பெறுகின்றன. நல்ல எழுத்து சுவாசம் என்றால் , வேண்டாத எழுத்து வெளியேறும் சுவாசம். செய்யும் வேலையைப் பொறுத்து உறுப்புகள் ஊட்டம் பெறுகின்றன. நெடுநாள...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...